ஜூன் 25ம்
தேதி மும்பையில் பென்ஷன் கமிட்டியோடு நமதுAIRRBEA சார்பில் அகில இந்தியத் தலைவர்கள்,
தோழர்கள் சையீது கான், வெங்கடேஷ்வரரெட்டி, நாகபூஷண்ராவ், மதனன், ராஜீவன் ஆகியோர் சந்தித்துப்
பேசியிருந்தனர்.
அது குறித்த விஷயங்களை நம் தோழர்களுக்கு ஜூன் 28ம் தேதி வாட்ஸ்-அப்பில் பகிர்ந்திருந்தோம்.
ஜூலை 12ம் தேதி PGBOU மாநாட்டில் கலந்து கொண்ட
தோழர் மதனன், பென்ஷன் குறித்த விபரங்களையும் தெளிவாக்கினார்.
வணிக வங்கிக்கு
இணையான பென்ஷனை கிராம வங்கிகளுக்கு வழங்குவதற்கு பென்ஷன் கமிட்டி சம்மதித்திருப்பதாகவும்,
ஆனால் கிராம வங்கிகள் 9 சதவீதம் CRR (Cash reserve Ratio)-ஐ தக்க வைத்துக் கொள்ள வேண்டும்
என்ற நிபந்தனையை விதித்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் கிராம வங்கிகள் அவைகளுடைய
Reserveயிலிருந்து பென்ஷன் கொடுப்பதற்கு ஒதுக்க முடியாது. பென்ஷன் திட்டம்
1.4.2010 முதல் அமல் செய்யப்படும் எனவும் சொல்லப்பட்டு இருக்கிறது.
மேலும்,
கிராம வங்கிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்கு 7560 கோடி தேவைப்படுவதாகவும், PF அலுவலகத்தில்
2000 கோடி போல இருப்பதாகவும், மீதுமுள்ள 5560 கோடி பற்றாக்குறையாக இருப்பதாகவும் பென்ஷன்
கமிட்டி தெரிவித்துள்ளது.
இந்த பற்றாக்குறையை
சமாளிக்க பென்ஷன் கமிட்டி சில திட்டங்களை முன் வைத்திருக்கிறது. அதில் ஒன்று, கிராம
வங்கிகள் தங்களது லாபத்தில் 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதத்தை ஒதுக்கிக்கொண்டே வரவேண்டும்.
இன்னொன்று, கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் தங்கள் பங்காக 30 சதவீதத்திலிருந்து
40 சதவீதம் வரை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் எந்த முறையைக் கடைப்படித்தாலும், சில
கிராம வங்கிகளே உடனடியாக பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த முடியும். பல கிராம வங்கிகள்
ஆறேழு வருடங்கள் காத்திருக்க வேண்டியதிருக்கும்.
பென்ஷன்
கமிட்டியோடு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட அத்தனை சங்கங்களும் இதனை எதிர்த்திருக்கின்றன. பென்ஷனும், PFயும் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டவை,
வணிக வங்கியில் உள்ளது போல அடிப்படை சம்பளத்தில், அதிக பட்ச வரைமுறை இல்லாமல் 10 சதவீதத்தை
ஆரம்பத்திலிருந்தே PF பிடித்தம் செய்யப்பட வேண்டும். அப்படி செய்திருந்தால்தான், உண்மையான
பற்றாக்குறையை கணக்கிட முடியும் என நமது தலைவர்கள் கூறியுள்ளனர்.
பென்ஷன்
கமிட்டி எதன் அடிப்படையில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளது என்கிற விபரங்களைத் தந்தால்,
சங்கங்கள் மேற்கொண்டு ஆலோசனைகளையும், மாற்று வழிகளையும் முன்வைக்க வசதியாக இருக்கும்
என தெரிவித்திருக்கின்றன. பென்ஷன் கமிட்டி ஒப்புக்கொண்டு உள்ளது.
இதுதான்
பென்ஷன் கமிட்டியோடு ஜூன் 25ம் நடந்த பேச்சுவார்த்தையின்
சாராம்சம்.
ஆனால் பென்ஷன்
கமிட்டி, மேற்கொண்டு சங்கங்களை ஆளோசிக்காமல், சில நாட்களுக்கு முன்பு தனது பரிந்துரைகளை
மத்திய அரசுக்கு சமர்ப்பித்து விட்டது. நீதிமன்றங்களின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லையெனத்
தெரிகிறது. மத்திய அரசு எழுப்பியிருந்த விஷயங்களுக்கு பதில்களாகவும் பரிந்துரைகளாகவும்
அனுப்பியிருப்பதாகவும் தெரிய வருகிறது. சங்கங்களின் சார்பில் எழுப்பிய ஆட்சேபணைகள்
கருத்தில் கொள்ளப்படவில்லை. முழுமையான விபரங்கள் தெரியவில்லை.
மத்திய அரசு,
இதன் அடிப்படையில், உச்ச நீதிமன்றத்தில் affidavit- ஐ தாக்கல் செய்யும். அப்போது முழு
விபரங்கள் தெரிய வரும்.
I saw a lot of blogs, and your design is really good.
ReplyDeleteBest regards
Toby, Ideals