Showing posts with label Bipartite Talks. Show all posts
Showing posts with label Bipartite Talks. Show all posts

13.11.14

PGB நிர்வாகத்தின் கெடுபிடிகளை மீறி நவம்பர் 12 வேலைநிறுத்தம் வெற்றி!

10 வது இருதரப்பு ஒப்பந்தப்படி, நியாயமான ஊதிய உயர்வு, 2012ம் ஆண்டு நவம்பர் மாதமே வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வருடங்கள் காலதாமதமாகியும், அரசும், IBAவும் சேர்ந்து இழுத்தடிக்கின்றன. இந்த தேசத்தில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சலுகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. உழைப்புக்கு உண்டான ஊதியத்தை பெறுவதற்கு மட்டும், உழைப்பாளர்கள் எப்போதுமே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.

11.11.14

நவம்பர் 12 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!

வங்கித்துறையில் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான ஊதிய விகிதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, IBAவுக்கும், சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 9 இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மூலம், நாம் இன்று பெற்றுவரும் ஊதியமும், சலுகைகளும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.

18.6.14

PGBEA News - 18.06.2014


10 வது இருதரப்பு பேச்சுவார்த்தை:

சென்ற 13.6.2014 அன்று IBAவுக்கும்  United Forum of Bank unions (UFBU) வுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. 11% க்கு மேல் ஊதிய உயர்வு இல்லை என IBA பிடிவாதமாக இருந்திருக்கிறது.

7.6.14

PGBEA News 7.6.2014


AIRRBEA representation to Prime Minister:

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்து, கிராம வங்கி ஊழியர்களின் பிரச்சினைகளை விளக்கி AIRRBEA சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

20.1.14

9.5 சதவீத உயர்வுக்கு UFBU ஒப்புக்கொண்டா இருக்கிறது?


ஊதிய உயர்வினை வேண்டியும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நாடு முழுவதும் ஜனவரி 20 மற்றும் 21ம் தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பான UFBU (Un ited Forum of Bank Employees Unions)  அறைகூவல் விடுத்திருந்தது. அதனைத் தொடர்ந்து கிராம வங்கிகளில் உள்ள அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பான UFRRBU (United Forum of RRB unions) தாங்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வதென அறிவித்தன. பத்து லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆயத்தமான வேலையில், 17.1. 2014 அன்று மும்பையில், IBAவுக்கும், UFBUவுக்கும் இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், IBA 9.5% ஊதிய உயர்வினை முன்வைத்ததை அடுத்து UFBU, வேலைநிறுத்தத்தை ஒத்தி வைப்பதாகவும், அடுத்த சுற்று பேச்சுவார்த்தையை 27.1.2014ல் தொடருவதாகவும் அறிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் இணையத்திலும், நேரிலும் சில தோழர்கள் 9.5 சதவீத உயர்வுக்கு ஒப்புக்கொண்டு வேலைநிறுத்தத்தை தள்ளி வைத்தது சரியல்ல என்றும், வங்கி ஊழியர்கள் ஊதிய விகிதங்களில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும் கருத்து தெரிவித்து உள்ளனர். நம் வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் இதுகுறித்து சில அடிப்படையான விளக்கங்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகப் படுகிறது.

முதலில், IBA  முன்வைத்த 9.5 சதவீத உயர்வை UFBU  எங்குமே ஒப்புக்கொண்டதாக சொல்லப்படவில்லை. UFBU தரப்பில் 30 சதவீத உயர்வு என்பதுதான் கோரிக்கை. IBA 5 சதவீதத்திற்கு அதிகமாக உயர்த்தவே முடியாது என  பிடிவாதம் பிடித்தது. மேலும், தாங்கள் வைத்திருக்கும் எதிர்க் கோரிக்கைகள் குறித்து பேசுவதில் முனைப்பாக இருந்தது. நம் கோரிக்கைகள் குறித்து பேசாமல் இழுத்தடித்தது.  நம் தரப்பு கோரிக்கைகளை பேசி இறுதிப் படுத்திய பிறகே, IBAவைக்கும் கோரிக்கைகள் குறித்துப் பேசுவது என்பது UFBUவின் நிலைபாடு. இந்த நிலையில், இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படாமல், காலம் தாழ்த்தப்பட்டுக்கொண்டே வந்தது. IBA  பேச்சுவார்த்தை தேதிகளையும் தள்ளிப் போட்டு, பேச்சுவார்த்தையை மதிக்காத அலட்சியப் போக்கை காட்டியது.

பேச்சுவார்த்தைக்கு IBA மதிப்பளிக்காத நிலையில், UFBU போராட்டங்களை அறிவித்தது. டிசம்பர் 18ம் தேதி நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்தை நடத்தியது. அப்போதும் IBA தரப்பில் மாற்றங்களும், அசைவுகளும் தென்படவில்லை. எனவே அடுத்தக் கட்டமாக, ஜனவரி 20, 21 தேதிகளில் 48 மணி நேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. வணிக வங்கி ஊழியர்களோடு கிராம வங்கி ஊழியர்களும் இணைந்துகொள்ள, வங்கி ஊழியர்கள் மத்தியில் மேலும் ஒற்றுமையும், எழுச்சியும் ஏற்பட்டது.

IBA இந்தமுறை இறங்கி வந்தது. ஜனவரி 29ம் தேதிதான் அடுத்தப் பேச்சுவார்த்தை என இழுத்தடித்த IBA  17.1. 2014ல் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது.. பேச்சுவார்த்தையில், தனது பிடிவாதத்திலிருந்து இறங்கி, 5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் உயர்வினை முன்மொழிந்திருக்கிறது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்ப்பதற்கு தயாராகி இருக்கிறது. வங்கி ஊழியர்களின் உறுதியும், ஒற்றுமையும் IBAவை அசைத்திருக்கிறது. னவே UFBUவும் பேச்சுவார்த்தைக்கு மதிப்பளித்து வேலை நிறுத்தத்தை தள்ளி வைத்திருக்கிறது. அவ்வளவுதான். 9.5 சதவீத உயர்வை ஒப்புக்கொண்டல்ல, என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் UFBU நிச்சயம் மேலும் ஊதிய உயர்வு வேண்டும் என தன் தரப்பை வலியுறுத்தும். 25 சதவீத ஊதிய உயர்வுக்குக் குறைந்து UFBU ஒப்புக்கொள்வதில்லையென உறுதியாய் இருக்கிறது. IBA  திரும்பவும் முரண்டு பிடிக்கலாம்.  UFBU திரும்பவும் வேலைநிறுத்த அழைப்பு விடுக்கலாம். ஒவ்வொரு கட்டமாகத்தான் நாம் முன்னேற முடியும்.,சளைக்காத, சமரசமற்ற முயற்சிகளால் மட்டுமே வெற்றி கிட்டும். இதை முதலில் நாம் தெளிவாகிக்கொள்ள வேண்டும்.  ஒரே நாளில், ஒரே சுற்றுப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுவிடும் என நினைப்பதில்தான் குழப்பங்கள் ஏற்படுகின்றன.

IBAவோடு இன்னும் பேசித்தீர்க்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன. compassionate appointment, shifting DA pattern from the year 1961 to 2001, Five days week போல முக்கிய கோரிக்கைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் நமக்கு சாதகமாக்கிக்கொள்ள பெரும் பிரயத்தனங்கள் செய்ய வேண்டும். போராட்டங்கள் இன்றி சாத்தியமில்லை.  போராட்டத்திற்கு ஊழியர்கள் எப்போதும் தயாராக இருப்பதன் மூலமே, UFBU  பேச்சுவார்த்தையை நமக்கு சாதகமானதாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எப்போது வேண்டுமானாலும் போராட முடியும் என்கிற நம்பிக்கையோடு UFBU  பேச்சுவார்த்தைக்கு செல்கிறதே தவிர, இனி எப்போதும் இல்லை என போராட்டத்தை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டு அல்ல. அதுதான் நம் அனைவரின் நம்பிக்கை. இப்போதைய UFBU  முடிவின் சூட்சுமமும் கூட.

நம்பிக்கையோடு பயணிப்போம்.

6.1.14

PGBEA - PGBOU Circular dated 6.1.2014

சுற்றறிக்கை: 1/2014                                         நாள்: 6.1.2014

அருமைத் தோழர்களே!

அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

போராட்ட அறைகூவலோடு துவங்குகிறது இந்த புத்தாண்டு.

வங்கித்துறையில் 9 வது இருதரப்பு ஒப்பந்தம் 31.10.2012 அன்றோடு முடிந்துவிட்ட நிலையில், 10வது இருதரப்பு ஒப்பந்தம் உருவாகி 1.11.2012 முதல் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது IBA. இந்த நிலையில் வங்கித்துறையில் இருக்கும் அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of Banks Union) ஏற்கனவே டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதும் நடத்தியிருந்தது. 10 வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக நடத்தி முடித்து, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான புதிய ஊதிய விகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றும், வங்கித்துறையில் சீர்த்திருத்தங்கள் என்னும் பெயரில் தனியார் மயமாக்குவதையும், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் UFBU முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்திருந்தது.  இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், மத்திய அரசும், IBAவும் அசைந்து கொடுக்காத நிலையில், UFBU ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு சென்ற டிசம்பர் இறுதியில் அறைகூவல் விடுத்திருந்தது.

வங்கித்துறையில் 10 வது இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு, புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டால்தான், கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அந்தப் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்படும். இதுதான் முறையாக இருந்து வருகிறது. எனவே வங்கித்துறையில்  ஊதிய உயர்வை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கையும் கூட. அதை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் போராடும்போது, கிராம வங்கி ஊழியர்கள் `யாருக்கோ வந்தது`  என வேடிக்கை பார்க்க முடியாது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும் இணைந்து நிற்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். வேலை நிறுத்தத்திற்காக UFBU சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் strike noticeல், கிராம வங்கிகளில் அரசின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வேலைநிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் கலந்து கொள்வது என்னும் யோசனை எழுந்தது.

அதன் அடிப்படையில் கிராம வங்கிகளில் இருக்கும் அகில இந்திய சங்கங்கள் (United Forum of RRB unions)  அனைத்தும் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து இருக்கின்றன. AIRRBEA, NFRRBE, NFRRBO, AIRRBOF, AIGBEA, AIGBOA, AIGBWO, AIGBEC, AIGBOC, NCRRBE ஆகிய அனைத்துச் சங்கங்களும் கூட்டாக கையெழுத்திட்டு strike noticeஐ  3.1.2014 அன்று மத்திய அரசுக்கு கொடுத்து இருக்கின்றன.  எனவே, AIRRBEA, NFRRBE, NFRRBO  அகிய சங்கங்களின் உறுப்புச் சங்கங்களாய் இருக்கும் PGBEAவும், PGBOUவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. நம் வங்கியில் செயல்பட்டு வரும் சகோதரத் தொழிற்சங்கங்களையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.

இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி UFRRBUஅறைகூவலின்படி கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானித்திருக்கிறோம்.

1) அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் தனித்தனியாக கையெழுத்திட்டு பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் கடிதம் அனுப்புவது. (அதற்கான படிவங்கள் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டு இருக்கின்றன.)

2) 10.1.2014 அன்று மாலை பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பட்டம் நடத்துவது.

3) இந்த வேலை நிறுத்தத்தையொட்டி நகர் மையங்களில், வணிக வங்கி ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் கலந்து கொள்வது.

4) 17.1.2014 அன்று கோரிக்கைகளை விளக்கி பேட்ஜ்கள் அணிவது. (அதற்கான பேட்ஜ்கள் கிளைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.)

5) ஜனவரி  20,21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது.

Probation period ல் இருக்கும் புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வேலை நிறுத்தம் தவிர மற்ற போரட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபெறலாம்.

தோழர்களே!

இது நமது ஊதிய உயர்வுக்கான போராட்டம்.
இது இந்தியாவின் வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம்.
எனவே நாம் இதில் கலந்துகொள்கிறோம்.
போராடாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை.
எந்தக் கதவும் தட்டாமல் தானாகவே திறப்பதில்லை.
தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஆவேசம் நம்மையும் பற்றிக்கொள்ளட்டும்.
வாருங்கள், ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய சித்தமாவோம்.
ஜனவரி 20, 21 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

0000

நமது இரு சங்கங்களும் இணைந்து அக்டோபர் மாதத்தில் இந்த நிர்வாகத்திடம் கொடுத்த 26 கோரிக்கைகளில், Staff Housing Loan மற்றும் பெருமாள் மலை கிளைக்கு Hill and Fuel Allowance  ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இடைவிடாமல் தொடர்ந்த நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.

அதேவேளையில் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாய் நீடிக்கிறது. கோரிக்கைகள் மீது, நமது இரு சங்கங்களும் தனித்தனியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன.

பொருளாதாரக் கோரிக்கைகள் குறித்து ஐ.ஓ.பிக்கு எழுதி இருப்பதாகவும், பதில் வரவில்லையென்றும் வழக்கமான பதிலையே சொல்கிறது நிர்வாகம். இப்படியே வருடக்கணக்கில் காலதாமதம் செய்வது, ஊழியர் நலனில் இந்த நிர்வாகம் கையாளும் மெத்தனப் போக்கு என்றே நாம் கருதுகிறோம்.

கிளைகளில் பணிநெருக்கடியை குறைக்கும் தொழில்நுட்ப வசதிகளை இந்த நிர்வாகம் செய்யத் தயாராக இல்லை. NREGS மற்றும் OAP அக்கவுண்ட்களை கையாளுவதற்கான smart card கொடுக்கப்படவே இல்லை. ஒன்றரை வருடங்களாக வரும், வரும் என சொல்லப்படும் ATM  வசதி வரவில்லை. ஆனால் புதிதாக Money Transfer பிஸினஸ் துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இருக்கின்ற குழப்பங்களை இங்கு சரி செய்யாமல், புதிதாக நமக்கு சுமைகளை ஏற்றும் வேலைகள் மட்டும் மும்முரமாக நடக்கின்றன.

நமது வங்கியின் தொலைபேசி வசதியும், நெட்வொர்க் வசதியும் BSNL மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் திடுமென Aircel தொலைபேசிகள் பல கிளைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கேட்டால் BSNL  சரியில்லை என்றும், Aircelல் கிளைகளுக்குள் பேசிக்கொண்டால் free  என்றும், 'PGB welcome'  என தானியங்கிக் குரல் அழைக்கும் வசதி Aircelல் இருப்பதாகவும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இந்த வசதிகள் BSNLலிலும் உண்டு. மெல்ல மெல்ல அனைத்துக் கிளைகளிலும் Aircel ஐ புகுத்திவிட்டு, BSNLலிருந்து வெளியேற இருப்பதாகவும் தெரிய வருகிறது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். வேண்டுமானால் BSNL  நெட்வொர்க்கிற்கு  Aircel ஒரு substitute  ஆக இருக்கட்டும். அதற்காக ஒரு பொதுத்துறை நிறுவனமான BSNLலிருந்து விலகுவது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கிறோம்.

Universal sampo என்னும் தனியார் நிறுவனத்தோடு போட்ட medi claim ஒப்பந்தப்படி, நமது தோழர்களுக்கு வரவேண்டிய தொகை மாதக்கணக்கில் நிலுவையில் இருக்கிறது. மேலும் மிகவும் குறைவாகவே  reimburse  செய்யப்படுகிறது. அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என பலமுறை சொல்லிவிட்டோம். நிர்வாகம் அதிலிருந்து வெளியேறாமல் இழுத்தடிக்கிறது. இந்த வங்கியில் கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், ஜெனரேட்டர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனைச் சரிசெய்யுங்கள் என்றால், சோம்பல் முறிக்கிறது நிர்வாகம். இவைகளில் காட்டாத அக்கறையும், வேகமும் ஏன் Aircelஐக் கொண்டு வருவதில் இருக்க வேண்டும் என்பது புதிராக இருக்கிறது. இதுகுறித்து ஆராய்வோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில், நிர்வாகம் கையாளும் முறை இரக்கமற்றதாகவும், அதீத காலதாமதாகவும் இருக்கிறது. சஸ்பென்ஷன் செய்துவிட்டு வருடக் கணக்கில் சார்ஜ் ஷீட் கொடுக்காமல் இருப்பது, சார்க் ஷீட் கொடுத்து பதில் பெற்ற பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது, என்கொயரி முடிந்து findings கொடுத்த பிறகு வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பது என்பதே AIVDயின் வாடிக்கையாய் இருக்கிறது. ஒவ்வொரு ஃபைலிலும் ஒரு சக மனிதனின் வாழ்க்கை இருப்பதையும், காலதாமதமாகிற ஒவ்வொரு நாளும் அந்த மனிதர்கள் சித்திரவதை அனுபவிப்பதையும் AIVD உணர மறுக்கிறது. பல தோழர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்காலமே நிலைகுலைந்து போயிருப்பது குறித்து துளியும் கவலையற்று இருக்கிறது AIVD.


கோரிக்கைகள் பல நிறைவேறவில்லை. நமது பணி நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் பெரும் அராஜகம் தொடர்கிறது. நிர்வாகம் இவைகளில் கவனம் செலுத்தி
சரிசெய்ய முன்வர வேண்டும். இவைகளில் மேலும் காலதாமதம் ஆகுமானால் நாம் இவைகளை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கிறோம்.

0000

வங்கியின் வணிகம் திருப்திகரமாக இல்லை என்றும், Advances குறைந்துகொண்டு இருக்கிறது என்றும் நிர்வாகம் கவலைப்படுகிறது. நாமும் கவலைப்படுகிறோம். வங்கியின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் இங்கு ஒரு சில விஷயங்களை சொல்லியாக வேண்டியிருக்கிறது. இத்தகைய சரிவுக்கு இந்த வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பொறுப்பல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறான முடிவுகளும், மோசமான அணுகுமுறையுமே காரணம்.

கரடு தட்டிப் போனவர்கள், புதிய சிந்தனைகள் வற்றிப் போனவர்கள், ஊழியர்களையும் அலுவலர்களையும் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறவர்கள்தாம் தலைமையலுவலகத்தின் முக்கியப் பொறுப்பில் தொடர்ந்து இருக்கிறார்கள். தலைமையலுவலகத்தை புனரமையுங்கள் என்று அனைத்துச் சங்கங்களும் குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல் போனதன் விளைவுதான் இது.

ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அலுவலர்களை மிரட்டுவது, ஓய்வுகாலச் சலுகைகளில் கைவைப்பது தொடருமானால், மெல்ல மெல்ல அலுவலர்கள் `ஏன் கடன் கொடுக்க வேண்டும், கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும்` என்கிற இயல்பான மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என எச்சரித்தோம். அதைக் கேட்காமல் போனதன் விளைவுதான் இது.

இந்த வங்கியில் உழைக்கிறவர்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதால் ஊழியர்களும், அலுவலர்களும் உற்சாகம் இழந்து போயிருக்கிறார்கள், அதைச் சரி செய்யும் நடவடிக்கைகள் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இது.

இவைகளில் ஒரு மாற்றம் இல்லாத பட்சத்தில், வங்கியின் நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும். நிர்வாகம் தனது தவறுகளை சரிசெய்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் துணியுமானல், PGBEAவும், PGBOUவும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தி கொள்கிறோம்.


தோழமையுடன்

                                                
(J.மாதவராஜ்)                                                        (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                         பொதுச்செயலாளர் - PGBOU   




18.12.13

18.12.2013 வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வெல்லட்டும்!


நாடு முழுவதும் உள்ள வணிக வங்கி ஊழியர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்ய இருக்கின்றனர்.

10 வது இருதரப்பு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை விபரங்களை ஏற்கனவே தெரியப்படுத்தி வந்திருக்கிறோம். IBA எதிர்க்கோரிக்கைகள் வைத்தும், எத்தனை சதவீதம் ஊதிய உயர்வு என்பதை தெரியப்படுத்தாமலும் இருந்து வருவதை, அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமமைப்பு (United Forum of Bank Unions) அம்பலப்படுத்தி, ஊழியர்களை போராட்டத்திற்கு தயாராகுமாறு அறைகூவல் விடுத்திருந்தது. ஆர்ப்பாட்டங்கள்,  வாயிற்கூட்டங்கள் நடத்தி, ஊழியர்களை திரட்டி வந்தது. டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த நிலையில், 14.12.2013 அன்று IBAவோடு பேச்சுவார்த்தை நடந்தது. IBAதரப்பில், வங்கியின் லாபம் ஈட்டுவதில் இருக்கும் சிரமங்களும், பென்ஷனுக்கான செலவு அதிகரித்திருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டு, அதனால் ஊதிய உயர்வுக்கான சாத்தியங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சங்கங்களின் தரப்பில், அதிகரித்து வரும் லாபங்களும், கடுமையான விலைவாசியும் சுட்டிக்காட்டப்பட்டு தேவையான ஊதிய உயர்வு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்த விவாதங்களுக்குப் பிறகு,  5% சதவீதம் ஊதிய உயர்வு ( ஓய்வுகாலச் சலுகைகள் நீங்கலாக )  கொடுக்க முடியும் என IBA  தரப்பில் சொல்லப்பட்டு இருக்கிறது.

மேலும், இந்த பேச்சுவார்த்தைகள் Scale III அலுவலர்கள் வரைதான் பொருந்தும் என IBA  தெரிவித்திருக்கிறது. ஐந்து நாட்கள் வேலை என்னும் ஊழியர்கள் கோரிக்கைக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் சொல்லியிருக்கிறது. கருணை அடிப்படையில் வேலை குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதையும் தெரிவித்திருக்கிறது.

சங்கங்களின் எதிர்பார்ப்புகளுக்கும், கோரிக்கைகளுக்கும் IBA கொஞ்சம் கூட நெருங்கி வரவில்லை. எனவே 18.12.2013 வேலை நிறுத்தத்தை தொடர்வது என UFBUமுடிவு செய்து, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய தீவீரமாக இறங்கியுள்ளன.

23.12.2013 அன்று, UFBU மீண்டும் கூடி அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்கப் போவதாகவும் அறிவித்திருக்கின்றன.

இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்கள் பங்கு பெறவில்லையென்றாலும், AIRRBEA தார்மீக ஆதரவைத் தெரிவித்திருக்கிறது. வணிக வங்கி ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தங்களும், தொடர் போராட்டங்களும் நிச்சயம் மரியாதையான ஒரு ஊதிய உயர்வை சாத்தியமாக்கும். அந்த ஊதிய உயர்வு கிராம வங்கி ஊழியர்களுக்கும் அமல்செய்யப்படும். எனவே, இந்த போராட்டங்களால், பயனடையப் போவதில்  கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் உண்டு.

தோழர்களே!
நமக்காகவும் வணிக வங்கி ஊழியர்கள் போராடுகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவர்களது அடுத்தக் கட்டப் போராட்டங்களில் நாமும் களமிறங்குவோம் என்று உறுதி கொள்ளுங்கள். இந்த வேலை நிறுத்தம் வெல்லட்டும் என முழங்குங்கள்.

18.10.13

10th Bipartite Talks for wage revision - updates 2


During the earlier discussion held on 12.08.2013 there was development in the following two issues.

1)    It is decided that wage revision will be effective from 01.11.2012. (i.e. all existing employees & employees retiring after 01.11.2012 will given arrears and pension, gratuity etc.,will be on new scale of pay)

2)     D.A. merger: D.A. on 4440 points (60.15%) will be merged with basic Pay.
(D.A. percentage will become 0.10% instead of 0.15% from 01.11.2012)
But there was no percentage of increase offered by IBA.

On 11.10.2013 , another round of bipartite discussions was held today in Mumbai between IBA and UFBU on our demands for wage revision.  IBA was represented by its Core Committee led by Shri R K Dubey, CMD, Canara Bank and UFBU was represented by all the Nine Constituent Unions.

D.A. Formula:  Revision of Dearness Allowance formula has been discussed at length since the CPI points under 1960-series are no longer compiled and published.  The DA payable is being arrived at after duly converting the Consumer Price Index (CPI) points compiled under 2001-series.  UFBU has impressed upon the need to switch over to CPI 2001-series for payment of DA and revision of DA on monthly basis.  IBA said that they have to examine the matter in detail before responding.

Reimbursement of Hospitalisation Expenses:  Management wanted to know the response of the UFBU on introduction of Medical Insurance Scheme.  UFBU constituents after elaborate discussions among the unions decided to have improvements in the present scheme and have it in-house rather than switching over to insurance especially in view of the difficulties faced wherever the insurance scheme is in operation.  Hence, UFBU conveyed to IBA its disinclination towards introduction of Medical Insurance Scheme in place of the existing scheme for Reimbursement of Hospitalisation Expenses.  However, the IBA suggested that whatever difficulties that are being envisaged could be discussed and sorted out and requested the UFBU to consider its view point.

Compassionate Appointments:  UFBU sought to know the developments in regard to Compassionate Appointments, since a long time has elapsed after sending recommendations of IBA on the Scheme to the Ministry of Finance, Government of India.  IBA informed that the matter is still pending with the Government.  UFBU exhorted upon the need to finalise the matter immediately as it has been lingering on for many years without any resolution.

Superannuation Cost:  UFBU demanded that the cost on superannuation and welfare measures should not be included in the cost of wage revision.  IBA said that they would examine the matter.

Five-day Week: UFBU has insisted for introduction of 5-day week in the banking industry for the reason that after introduction of technology, various alternate channels like ATMs, Net Banking, etc. are widely available and being utilized by the customers and hence, it would not cause any inconvenience.  Besides it is a common and growing phenomenon globally to have 5-day week to ensure better quality of life.  IBA assured to examine the matter.

Introduction of concepts of Cost-to-Company (CTC) and Variable Pay:  UFBU has conveyed unequivocally its opposition for the introduction of concepts of CTC and Variable Pay in the banking industry.

Wage Revision of officers:  Responding to the earlier stand taken by IBA to restrict negotiations in case of officers from Scale-I to Scale-III alone excluding officers from Scale-IV to VII, UFBU demanded that the negotiations should be held with the negotiating unions on wages and service conditions of all officers from Scale-I to Scale-VII as hitherto especially in view of the service conditions being common for all the categories and also to ensure relativity between the Scales.

Directions to work on Holidays declared under N.I. Act:  Most of the holidays declared for festivals in various States under N.I. Act differ from State to State resulting in most of the festivals days would happen to be a working day in one State or the other.  After introduction of Cheque Truncation System (CTS) on grid basis, since there is no common holiday in the respective States connected under any grid, bank employees and officers are forced to work on festival days foregoing the holiday as well as the traditional rituals to be performed on those festival days adversely affecting their sentiments and social obligations.  UFBU exhorted the need to delink the operations of CTS of a particular State from the Grid on the day in which it is declared a holiday under N.I. Act to enable the employees to follow their customs and perform the rituals as per their religions.

Similarly, on other holidays/Sundays, the Banks are directed to keep open their branches quoting the reason of continuous holidays or for accepting the Government challans/Tax payments.  UFBU impressed upon IBA that in the present technological environment, with the availability of alternate channels like ATMs, Net Banking, etc. the necessity to keep open branches on holidays is obviated.  Besides, it is becoming unproductive as the business that is being transacted is too low in relation to the expenditure being incurred by banks to work on a holiday.

IBA has appreciated the difficulties of the employees/officers and the reasons adduced by UFBU and assured to take up the matter with the authorities concerned.

Wage Revision and Increase in Wages:  UFBU wanted to know the response of IBA on the wage load and the offer of IBA on wage increase.   IBA expressed its inability to respond in the absence of mandate from the authorities concerned.  UFBU expressed its concern in not holding the meetings on regular basis at frequent intervals and undue delay in the process of wage negotiations.  UFBU expressed its dissatisfaction and insisted for expeditious wage settlement.

Since there is no satisfactory progress towards revision of wages and it is unduly delayed, the Constituents of UFBU decided to exhibit their dissatisfaction.  UFBU has, accordingly, decided to express its dissatisfaction by conducting demonstrations throughout the country in all State Capitals and other Major Centres on 22nd October 2013 demanding expeditious wage settlement.

14.6.13

10th Bipartite Talks for wage revision - updates 1



வங்கித் துறையில், ஊழியர்களுக்கும் ஆபிசர்களுக்குமான ஊதிய உயர்வுக்கான காலம் இது. ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தம் 31.10.2012ம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. வணிக வங்கியில் உள்ள சங்கங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் United forum of bank Unions (UFBU)க்கும் Indian bankers Association ( IBA) க்கும் சில கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கின்றன. சங்கங்கள் நமது தரப்பு கோரிக்கைகளை வைக்க, IBA நிர்வாகத் தரபபு கோரிக்கைகள் வைக்க பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

அதன் ஒரு பகுதியாக, 7.6.2013 அன்று மும்பையில், சமீபத்தில் ஒரு சுற்று பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது. அதுகுறித்த விபரங்களை, Bank Employees Federation of India (BEFI) வெளியிட்டு இருக்கிறது. வணிக வங்கி ஊழியர்களின் ஊதியமே, நமக்கும் வழங்கப்படுவதால், நமக்கும் இந்த பேச்சுவார்த்தைகள் முக்கியமானவையாக இருக்கின்றன. எனவே BEFIயின் சர்க்குலரை அப்படியே இங்குத் தருகிறோம்.

Bank Employees federation Of India
NARESH PAUL CENTRE
53 Radha Bazar Lane, (1st Floor), Kolkata – 700 001
e-mail : pradipbefi@yahoo.co.in Website : http://www.befi.in/
(Ph):033- 2225-4414/2236-5108 (M) 94331 44271 Fax: 033-2236-5109/2242-0690

Circular No: 19/2013                                                                                               7th June 2013
To All Affiliates/Office Bearers/CC/GC Members

Dear Comrades,

Talks with IBA

Another round of talks was held between UFBU and IBA in Mumbai today.

On behalf of UFBU it has been demanded that there should be time bound progarmme to complete
the negotiation process and arrive at a settlement on wage revision without much delay. IBA also
expressed eagerness for an early settlement.

On issue proper, 3 points were raised by UFBU: (1) Effective date of settlement should be 01st
November 2012, (2) Merger of DA should be at 4876 points of price index i.e. average figure
of July to September 2012 quarter, (3) IBA should make their offer on percentage increase
of wages.

IBA expressed their inability to make any commitment without consulting the appropriate
authorities of the Central Government and told that they will inform their position on the issues
raised by us in the next round of discussions, however, on merger of DA with BP, they suggested
index figure of last quarter of 2009. UFBU rejected this proposal.

IBA further made presentation on their intention to introduce Cost to Company and variable pay
concept, increased mobility of workmen and rationalization of special pay. UFBU expressed its
reservations on all these issues and opined that discussions on the same can be at later stage. On
our part, we have suggested to UFBU not to enter into discussion on management’s issues so long
employees’ issues are not clinched.

During today’s talks UFBU contended that cost on pension, other superannuation benefits and
reimbursement of hospitalization expenses should not be included in the load for wage revision.
IBA stated that they will inform UFBU the date for next round of talks shortly after their meeting
with Government authorities likely to be held in the next week.

UFBU will have its next meeting on 04th July 2013 in Chennai.

With greetings,

Yours comradely,

(Pradip Biswas)
General Secretary