Showing posts with label disciplinary actions. Show all posts
Showing posts with label disciplinary actions. Show all posts

28.1.15

PGB நிர்வாகத்தின் காட்டு தர்பார்!

பணி ஓய்வு பெறுகிறவர்கள் மீது நிர்வாகம் தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டே இருக்கிறது.

24.1.15

முகங்கள் மாறினாலும், நிர்வாகத்தின் இதயம் மாறுவதில்லை!

2009ம் ஆண்டில், தற்காலிக ஊழியர்களை நிரந்தரப்படுத்தும் கோரிக்கையை முன்வைத்து அப்போது PGBEAவும், PGBOUவும் இயக்கங்களை ஆரம்பித்தது தோழர்களுக்கு நினைவிலிருக்கும். முதலில் தோழர்கள் காமராஜும், அண்டோ கால்பர்ட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

18.5.14

ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனுக்கு கொம்பு முளைத்து விட்டது!


சில முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (17.05.2014)  பாண்டியன் கிராம வங்கி ஜெனரல் மேனேஜர் மிஸ்டர்.ராமநாதனை PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜும், இணைப்பொதுச்செயலாளர் தோழர் அருண்பிரகாஷ் சிங்கும் சந்தித்துப் பேசினர்.

இப்போது ராயவரம் கிளையில் பணிபுரிந்து வரும் தோழர்.ராமசாமி, காரைக்குடி கிளையில்  ஒரு நகைக்கடன் பெற்றிருக்கிறார். அது AJL ஆக இருப்பதால் பிரச்சினை. மாஸ்டர் அடிக்கும்போது தவறுதலாக AJL  அடிக்கப்பட்டு இருக்கிறது என சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் கொடுத்துவிட்டார். நடந்த தவறுக்கு நான் பொறுப்பல்ல, இதனால் ஏற்படும் வட்டி இழப்பை சரி செய்து விடுகிறேன் என தோழர் ராமசாமியும் எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டார்.  கடந்த காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடந்தபோது இதே போன்று விளக்கம் அளித்து முடிக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தமுறை இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட் இதனை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதற்கிடையில் காரைக்குடி கிளை மேலாளர், அந்த நகையை திருப்புவதற்கு அனுமதியளிக்கவில்லை. தலைமையலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால்தான் அனுமதிப்பேன் என்கிறார். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விஷயத்தை நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ‘இதோ முடித்து விடுகிறோம்’, ’இரண்டு நாளில் முடித்து விடுகிறோம்’ என்றார்கள். நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். நாம், “முதலில் அந்த நகையைத் திருப்புவதற்கு அனுமதியுங்கள். கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மீதான உங்கள் முடிவை பிறகு கூட எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றோம். ‘அதானே, நகையை திருப்ப அனுமதிக்கலாமே, காரைக்குடி கிளைக்குச் சொல்லி விடுகிறோம்’ என்றார்கள். நடந்தபாடில்லை. நாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

AJL வைத்ததால் வங்கிக்கு வட்டி இழப்பு என்றால், இப்படி 2013 அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட நகையைத் திருப்ப அனுமதிக்காததால் தோழர்.ராமசாமிக்கு ஏற்படும் வட்டி இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்த பிரச்சினையை நாம் இன்றும் பேச ஆரம்பித்தோம். உடனே ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஸாரி, நான் Disciplinary Proceedings குறித்த விஷயங்களை உங்களோடு விவாதிக்கத் தயாரில்லை “ என்றார்.

“இதில் என்ன இருக்கிறது. ஏன் நீங்கள் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டும்?” என்றோம் நாம்.

“இல்ல சார், இனிமேல் எந்த Disciplinary proceedings மேட்டராக இருந்தாலும் டிஸ்கஸ் பண்னுவதில்லை என்றிருக்கிறேன்.” என்றார்.

நாம் உடனே ”நாங்கள் சங்கத்திலிருந்து பேசத்தான் செய்வோம். represent பண்ணத்தான் செய்வோம். முடியாது என்று தாங்கள் சொல்ல முடியாது” என்றோம்.

“நீங்கள் தாராளமாய் represent செய்யுங்கள். ஆனால் அதுகுறித்து discuss செய்ய மாட்டேன்” என்றார்.

“ஏன் டிஸ்கஸ் செய்ய மறுக்கிறீர்கள்?”

“நான் Disciplinary Authorityயாக இருப்பதால் மறுக்கிறேன். Decision எடுத்த பிறகு appeal செய்யும்போது நீங்கள் விவாதித்துக் கொள்ளுங்கள்.”

“எப்போது decision எடுப்பீர்கள்?”

“அதையெல்லாம் சொல்ல முடியாது. வரும்போது வரும். You have to wait. இதனை அப்படியே வெளியில் சொல்லிக் கொள்ளுங்கள்.I am not bothered" என்றார்.

இத்துடன் அந்தப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. ஆனால் விஷயம் முடியவில்லை. இதுகுறித்து பொது வெளியில் நாம் விவாதித்தாக வேண்டி இருக்கிறது.

Disciplinay Authority  என்றவுடன் தான் வானத்திலிருந்து குதித்தவர் போலவும், கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர் போலவும், ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன் ஒரு கருத்தாக்கத்தை இங்கே கட்டியமைக்க முயல்கிறார். கடந்த காலங்களில் இதே மிஸ்டர் ராமநாதன் பல முறை நம்மோடு Disciplinary Proceedings  குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விவாதித்து இருக்கிறார். இப்போது திடுமென கொம்பு முளைத்து இருக்கிறது. இதுதான் விஷயம்.

இங்கே நாம் முதலில் ஒரு விஷயத்தை நம் தரப்பில் தெளிவுபடுத்திக் கொள்வோம். Disciplinary Proceedings குறித்து  PGBEAவுக்கும், PGBOUவுக்கும் தெளிவான பார்வையும் புரிதலும்  உண்டு.

1. அன்றாடப் பணிகளில் நடக்கும் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனை வழங்குவது மூலமே தவறுகள் சரிசெய்யப்படும் என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
2. ஒரு தவறு தொடர்ந்து நடக்கும்போது, அந்தத் தவறில் சம்பந்தப்பட்ட  தனிமனிதர்களுக்கு இருக்கும் பங்கையும் பொறுப்பையும் ஆராய்வதை விட அந்த அமைப்பில் (System) இருக்கும் கோளாறையும் குறைகளையும் கண்டுபிடித்து சரிசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை விட்டு, தனிமனிதர்களை தண்டிப்பதன் மூலம், தவறுகளை சரிசெய்வது என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
3. ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கும்போது அதிகபட்சம் மனிதாபிமானமும், இரக்கமும்  வேண்டும்.
4.ஒழுங்கு நடவடிக்கைகள்  உரிய காலத்துக்குள்  தொடங்கி முடிக்கப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது பெரும் மன உளைச்சலையும், அவஸ்தையையும் ஏற்படுத்தும். அதுவே ஒரு தண்டனையாய் இருந்துவிடக் கூடாது.
5.தவறுகளை சரிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரும்போது அதற்கான வாய்ப்புகள் தர வேண்டும்.
6. தீர்ப்புகளிலும், தண்டனைகளிலும் பாரபட்சம் இருக்கக் கூடாது.
7. ஒழுங்கு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

இதனை PGBEAவும், PGBOUவும் தொடர்ந்து வலியுறுத்துவோம். பொறுப்பிலிருப்பவர்களோடு விவாதிக்கவேச் செய்வோம். இதில் முரண்பட்ட நிலையை நிர்வாகம் எடுக்கும்போது நிச்சயம் எதிர்ப்போம்.  சரி செய்ய முயல்வோம். அது யாராயிருந்தாலும் சரி.

இதன் அர்த்தம் Disciplinary Authorityயின் சுதந்திரத்துக்குள்ளோ, அதிகார வரம்புக்குள்ளோ, சுயமான முடிவுகளுக்குள்ளோ நாம் தலையிடுவது ஆகாது.  ஒழுங்கு நடவடிக்கையின் முறைகளும் முடிவுகளும் சரியானவையாய், நேர்மையாய், பாரபட்சமற்று இருப்பதற்காகத்தான் நாம் டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இந்த வங்கியையே நாசமாக்கிக்கொண்டு இருக்கிறது ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையில் இயங்கும் ஒரு குரூப். ஒழுங்கு நடவடிக்கைகளில் இந்த குரூப் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், கீழே அலுவலர்கள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான வெறுப்பையும், வெறுமையையும் ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில் காலதாமதம் அளவுக்கு மிஞ்சி இருக்கிறது. தாமதப்படுத்தப்படும் போது நீதியும் அநீதிதான். எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ரிடையர் ஆன பல தோழர்களின் எதிர்காலத்தை ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் இரக்கமில்லாமல் சிதைத்து போட்டு இருக்கிறது நிர்வாகம்.

விளக்கக் கடிதங்கள் கேட்டு பதில் பெற்ற நிலையில் பல நடவடிக்கைகள் இருக்கின்றன. ரிடையர் ஆவதற்கு முன் ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பித்து முடிப்பதற்கான அவகாசத்தை வேண்டுமென்றே தர மறுக்கிறது நிர்வாகம்.

சஸ்பென்ஷன் செய்து வருடக்கணக்காகியும் சார்ஜ்ஷீட் கொடுக்காமல்  இருக்கிறது நிர்வாகம்.

என்கொயரிகள் நடத்தி முடிப்பதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்வதில்லை நிர்வாகம்.

என்கொயரி முடிந்து வருடக்கணக்கான பிறகும், தீர்ப்புகள் கொடுக்காமல் இருக்கிறது நிர்வாகம்.

ஆனால் இந்த வங்கியில் ஓரே நாளில் Reply to charge sheet பெற்று,  show cause notice வழங்கி, அதே நாளில் அதற்கான பதிலையும் பெற்று, personal hearing எதுவும் இல்லாமல்  அதே ஒரே நாளில் Final orderஐ இதே ஜெனரல் மேனேஜர் வழங்கியதில்லையா? அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த வேகம் தோழர்கள் கிருஷ்ணசாமிக்கும், வள்ளி நாயகம் பிள்ளைக்கும், எம்.எல் ஆர்.மோகனுக்கும், செல்வராஜுக்கும் ஏன் காட்டவில்லை.

தன் பக்கம் நியாயம் இருந்தால் யாராலும், எங்கும் பேச முடியும். மனசாட்சி உள்ளவர்களுக்கும்  நேர்மையாக இருப்பவர்களுக்கும் அந்தத் திராணி இருக்கும். மடியில் கனமிருப்பவனுக்குத்தான்  வழியில் பயமிருக்கும். அதுதான் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன்  டிஸ்கஸ் செய்ய மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியும்.

அதற்காக நாம் டிஸ்கஸ் பண்ணாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் இங்கு விவாதிக்க இருக்கிறோம். எல்லாவற்றையும் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொன்றிலும் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையின் கீழ் இயங்கும் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டின் வன்மங்களும், வக்கிரங்களும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் இனி வெளிவரும்.

வாருங்கள் தோழர்களே, நாம் டிஸ்கஸ் செய்வோம்.

29.11.12

Oneday fasting against PGB management's disciplinary actions!

PGBEA மற்றும் PGBOU சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் தலைமையலுவலகத்தில் ஒருநாள் உண்ணாவரதம் இன்று (29.11.2012) மேற்கொண்டனர்.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ‘ஒழுங்கு நடவடிக்கைகளை’ எதிர்த்து நாம் தொடர்ந்து இயக்கம் நடத்தி வருகிறோம்.

ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில், ஈவிரக்கமின்றி ஊழியர்களையும், அலுவலர்களையும் வேட்டையாடுவதை கடுமையாக கண்டித்திருந்தோம். எந்த நியதிகளுமற்று, ஆதாரங்களுமற்று நிர்வாகம் நடத்தும் Enquiry proceedings ஐ, அம்பலப்படுத்தியிருந்தோம். என்கொயரி ஆபிஸர்களின் பாரபட்ச அணுகுமுறையை கடுமையாக தோலுரித்துக் காட்டியிருந்தோம். இதற்கெல்லாம் காரணமான, மிஸ்டர் சங்கர நாராயணனையும், ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக தலைமையலுவலகத்தை விட்டு அப்புறப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆர்ப்பாட்டங்கள், வாயிற்கூட்டங்கள், தர்ணா, ஐ.ஓ.பி மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்பாட்டங்கள் என நாம் நமது இயக்கத்தை வலுப்படுத்தியிருந்தோம். இதற்கிடையில் ந்ரிவாகத்தின் சில நடவடிக்கைகளில் சாதகமான சமிக்ஞைகள் தென்பட்டன. நல்லது நடக்கும் என நம்பினோம்.

ஆனால், நேற்று தோழர்.சுந்தர வடிவேலுவை டிஸ்மிஸ் செய்தும், தோழர்.குருநாதனை compulsory retirement செய்தும் நிர்வாகம் தனது கோர முகத்தை, கொடூர குணத்தை காட்டியிருக்கிறது.

உடனடியாக நமது இரு சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து, தலைமையலுவலத்தில்  இன்று உண்ணாவிரதம் நடத்துவது எனவும், செயற்குழு உறுப்பினர்கள் மட்டும் அதில் பங்கேற்பது எனவும் தீர்மானித்தோம். அதன் அடிப்படையில்,  அழுத்தமான உணர்வோடு நமது தோழர்கள் உண்ணாவிரதம் இருந்த காட்சிகள் இங்கே. விரிவான சுற்றறிக்கை விரைவில்.....














27.10.12

தோழர்கள் பழனியப்பன், ஜீவா இருவரும் மீண்டும் பணிக்குத் திரும்புகிறார்கள்!



சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருந்த தோழர்கள் ஜீவலிங்கம், பழனியப்பன் இருவரும் reinstate செய்யப்பட்டு இருக்கிறார்கள். நேற்று நிர்வாகம் அனுப்பிய reinstatement கடிதம் இன்று அவர்களுக்கு கிடைத்திருக்கிறது!

அவர்கள் இருவருக்கும் நமது சங்கங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிர்வாகத்தின் ஒழுங்கற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக நாம் நடத்திக்கொண்டு இருக்கும் இயக்கத்தின் விளைவே இது. நாம்தான் தொடர்ந்து ‘நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறு ஆய்வு செய்யவேண்டும்’ என கோரிக்கை வைத்து இருந்தோம். நமது சர்க்குலர்களில், ‘வங்கிக்காக உழைத்தவர்களை பயன்படுத்தி, பாராட்டிவிட்டு, பிறகு பழிவாங்குகிறது நிர்வாகம்’ எனக் குறிப்பிட்டு இருந்தோம். நமது ஆர்ப்பாட்டங்களில், இந்த இரு தோழர்களையும் குறிப்பிட்டு, “அவர்களை முதலில் இந்த நிர்வாகம், நபார்டு எல்லாம் பாராட்டியதையும், பிறகு விதிகளை மீறிவிட்டார்கள் என சஸ்பெண்ட் செய்ததையும் விவரித்து கடுமையாக சாடியிருந்தோம்.

நமது சங்கத்தின் நடவடிக்கைகளை தொடர்ந்து, சரியாக கவனித்து வருபவர்களுக்கு, நாம் கடந்த சில சர்க்குலர்களில் குறிப்பிட்ட கீழ்க்கண்ட வரிகளின் அர்த்தங்கள் புரியும்.

"கடந்த சில வருடங்களாக, நிர்வாகத்தரப்பில் ஏராளமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நிலுவையில் இருக்கின்றன. அவற்றை நியாயமான முறையில் விரைந்து முடிப்பது, வங்கியில் ஒரு புதிய சூழலையும், இங்கு பணிபுரிபவர்களின் மனோநிலையில் மாற்றங்களையும் ஏற்படுத்தும்".

“நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.”

"இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. Negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி,capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது.”

நமது மெமொரெண்டங்களில், இவ்விஷயங்களை தெளிவாக சுட்டிக்காட்டி, நிர்வாகம், நிலுவையிலிருக்கும் அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். சென்ற முறை சேர்மனை சந்தித்தபோது, நமது மெமொரண்டத்தை ஐ.ஓ.பிக்கு அனுப்பியதோடு மட்டுமில்லாமல், ஐ.ஓ.பியின் உயரதிகாரிகளோடு அதுகுறித்து விவாதித்ததையும் குறிப்பிட்டார். அதன் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதற்கான அறிகுறிகளும் தென்பட்டன.

இப்போது நல்லது நடந்திருக்கிறது. இது ஒரு நல்ல துவக்கமாக இருக்க வேண்டும் என கருதுகிறோம். ஒழுங்கு நடவடிக்கைகள் நேர்மையாகவும், மனிதாபிமானத்தோடும் இருக்க வேண்டும், ஒழுங்கு நடவடிக்கைகள் தவறுகளை சரிசெய்வதற்காக இருக்க வேண்டுமே தவிர தண்டிப்பதற்காக இருக்கக் கூடாது என்பதே நமது குரலும் கோரிக்கையும்.

நமது இயக்கதின் நோக்கமும் இதுதான். அது நல்ல திசையில் நகர்ந்திருப்பதாகவே கருதுகிறோம்.நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை நாம் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம்.  இது தொடர வேண்டும் என விரும்புகிறோம். அதுவரை நமது இயக்கமும் தொடரும்!

அவர்கள் இருவரும் நமது சங்கத்தில் இல்லையென்றாலும், இந்த நம்பிக்கையான காலம் அவர்களுக்கு நம்மால் வந்தது என்பதுதான் உண்மை.

மீண்டும் வாழ்த்துகிறோம்!

16.10.12

video: 10.10.2012 dharna before Pandyan Grama Bank



அர்த்தமும், ஆக்ரோஷமும் மிக்க நமது கோஷங்களின் வீடியோ காட்சிகளை இங்கு காணலாம். நமது அடையாளங்களை இங்கு பதிவு செய்திருக்கிறோம்.  பாண்டியன் கிராம வங்கியில் நமது குரல்கள் இவை.


15.10.12

PGBEA - PGBOU circular 16/2012 dt 15.10.2012


சுற்றறிக்கை: 16/2012         நாள்: 15.10.2012

அருமைத் தோழர்களே!


10.10.2012 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நமது இரு சங்கங்களின் தர்ணா, 1980களின் நினைவுகளை மீட்டெடுத்து, அந்த உணர்வுகளில் சஞ்சரிக்க வைத்த ஒரு எழுச்சிமிக்க அனுபவமாக இருந்தது. மிக நீண்ட பந்தலும், திரளான தோழர்களின் வருகையும், பங்கேற்பும் PGBEA, PGBOUவின் பாரம்பரியத்தையும் அடையாளங்களையும் உறுதிப்படுத்துவதாக இருந்தது.

நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எழுந்திருக்கும் நமது எதிர்ப்பியக்கத்தின் முக்கிய அத்தியாயங்களில் ஒன்று இந்த தர்ணா. இந்த எதிர்ப்பு உணர்வோடு உழியர்களும் அலுவலர்களும் திரண்டுகொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவித்த நிகழ்ச்சி இந்த தர்ணா. அதை சரியாக புரிந்துகொண்டு, நிர்வாகம் தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை எச்சரிக்கை செய்த களமே இந்த தர்ணா.

கோஷங்களின் ஆர்ப்பரிப்போடு,  PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் தர்ணாவுக்கு தலைமை தாங்கினார். “பாண்டியன் கிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்து,  44 நாட்கள் நடந்த  வீரஞ்செறிந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதற்காக, நான் இந்த நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நாள் இது. அதன் 25வது வருடம் இது.” என அவர் தர்ணாவை துவக்கியபோது எழுந்த ஆரவாரத்தில் தர்ணாப் பந்தல் களைகட்டியது.

AIRRBEA மாநில அமைப்பின் தலைவர் தோழர்.பிச்சைமுத்து, AIRRBEA மாநில அமைப்பின் organising secretary தோழர்.T.கிருஷ்ணன், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், PGBOU பொருளாளர் தோழர்.பெருமாள்சாமி, PGBEA துணைப்பொதுச்செயலாளர் தோழர்.அண்டோ கால்பட், PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் ஆகியோர் தர்ணாவின் நோக்கத்தையும், நமது போராட்டத்தையும் விளக்கிப் பேசினர். அதில் முக்கியமான விஷயங்கள்:

இந்த போராட்டம் ஒரு பக்கம் நிர்வாகத்தை சரிசெய்வதும், இன்னொரு பக்கம் நம்மை சரிசெய்வதுமாகும். நிர்வாகத்தை எதிர்ப்பதும், நம்மைத் தற்காத்துக் கொள்வதுமே இதன் அர்த்தம்.

இந்த நிர்வாகம் பணிநிலைமைகளையும், அவரவர் கடமைகளையும் இங்கு முறைப்படுத்தவில்லை. ஒவ்வொரு பதவியிலும் அவரவர்க்கான duties and responsibilities  குறித்து இதுவரை ஒரு சர்க்குலர் இல்லை.  Joint custodian குறித்தும், key handling குறித்தும் வரையறைகள் இல்லை. கடைநிலை ஊழியர்கள் இல்லாத  singleman கிளைகளில் fundsக்கு போவதற்கான நெறிமுறைகள் வகுக்கப்படவில்லை. Net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என்று சர்க்குலர்கள் இல்லை. தலைமையலுவலகத்தை தொடர்பு கொண்டால், எதற்கும் முறையான பதில் இல்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

மொத்தத்தில் எதிலும் ஒரு system என்பதே இல்லை. இந்த ஆக்கத்தில், துரிதமான வாடிக்கையாளர் சேவை என்றும் வங்கியின் பிஸினஸ் என்றும்  நிர்வாகம் கொடுக்கிற நெருக்கடிகளுக்கு மட்டும் குறைச்சலே இல்லை. அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளுக்குமான துவக்கப் புள்ளி  இதுதான். தன் பக்கம் இருக்கும் குறைகளையும், குளறுபடிகளையும் சரிசெய்யாமல், தன் காரியங்களை சாதித்துக்கொண்டு, நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் நம் தோழர்களை வங்கியை விட்டு வெளியேற்ற துடிக்கிறது. இதை நாம் அனுமதிக்க முடியாது.

இதனைக் கையாளுகிறவர்களாக AIVDயின்  சீனியர் மேனேஜர் மிஸ்டர் சங்கர நாராயணனும், Vigilance cellன்  முக்கிய அங்கமாக மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும் இருக்கிறார்கள். Cental Vigilance commission, Chief Vigilance officer என்கிற இந்த ஏற்பாடுகள் ஏறத்தாழ இருபது வருடங்களாக இருக்கவே செய்கின்றன. வங்கித்துறையில் அவர்களின் தலையீடுகள் 2000ம் வருடத்திலிருந்தே அதிகமாகி இருக்கின்றன. ஆனால், நமது வங்கியில், மிஸ்டர் சங்கர நாராயணன் மற்றும் மிஸ்டர் ரூபன் விக்டோரியா காலத்தில்தான்,  ‘எல்லாவற்றுக்கும்  CVO' என்ற நிலைமையும், மிக அதிகமாக தோழர்களுக்கு capital punishment என்பதும் உருவாகியிருக்கின்றன. எனவே, அந்த இரு நபர்களை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றுவதிலிருந்து, நிர்வாகம் தனது பக்கம் மாற்றங்களைத் துவக்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம். இந்த வங்கியில் அமைதியும், சகஜமான நிலைமையும் திரும்புவதற்கு அதுதான் வழிவகுக்கும்.

நம் தரப்பில் சரிசெய்ய வேண்டியது, இருக்கும் அரைகுறையான விதிகளையாவது முழுமையாக கடைப்பிடித்து பணிபுரிய வேண்டியதாக இருக்கிறது. அவரவர் பாஸ்வேர்டுகளை அவரவர் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். கடைநிலை ஊழியர்கள் இல்லாத  singleman கிளைகளில் fundsக்கு  போவதென்றால், வட்டார அலுவலகங்களை தொடர்புகொண்டு உரிய ஏற்பாடுகளை செய்யுங்கள். எவ்வளவு கூட்டமாயிருந்தாலும், மேலாளரும், கேஷியருமே நகை எடுக்கச் செல்லுங்கள். KYC norms இல்லாமல் Account openingஐ செய்யவே செய்யாதீர்கள். இதில் தவறு நடந்தால், அது எந்த நேரமும் நம் தலையின் மேல் தொங்கும் கத்தி என்பதை புரிந்து கொள்ளுங்கள். நாம் விதிப்படி வேலை செய்ய ஆரம்பித்தால் இங்கு தவறுகள் அனைத்தும் சரிசெய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் உறுதியும், ஒற்றுமையும் வேண்டும்.

தலைவர்களின் பேச்சுக்கள் இந்த திசையில் இருந்தன. அரசு ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட தலைவர் தோழர்.சிவகுமார், பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் தலைவர் தோழர்.சங்கரராமன், BEFI-TN இணைச்செயலாளர் தோழர்.செந்தூர் நாதன் ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். PGBOU பொதுச்செயலாளர் தோழர். சங்கரலிங்கம் நன்றி சொல்ல, தர்ணா  நிறைவடைந்தது.

இந்த தர்ணாவில் பங்கேற்ற நமது பெருமைக்குரிய தோழர்கள் ஒரு செய்தியை இந்த மொத்த வங்கிக்கும் தெரிவித்து இருக்கின்றனர். அது மிக முக்கியமானது. “இதோ, நாங்கள் இருக்கிறோம். இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல... ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க... நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை எதிர்த்து நிற்க.... நாங்கள் சமரசமின்றி போராடுவோம்” என்பதுதான் அது.

நமது அடுத்தக்கட்ட போராட்டம்:

தர்ணா முடிந்த பிறகு, நாம் பொது மேலாளரை சந்தித்து, நிலைமைகளை விளக்கினோம். நிர்வாகம், மிஸ்டர் சங்கர நாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்திலிருந்து மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தோம். சேர்மன் பம்பாயிலிருந்து வந்த பிறகு அவரிடம் நம் தரப்பை எடுத்துச் சொல்வதாகச் சொன்னார். நிர்வாகத் தரப்பில் மாற்றங்கள் இல்லாத பட்சத்தில் நமது போராட்டம் மேலும் தீவீரமடையும் எனபதையும் தெரிவித்து இருக்கிறோம்.

இந்த நிலையில், நமது அடுத்தக்கட்ட போராட்டமாக, மதுரை ஐ.ஓ.பி மண்டல அலுவலகத்தின் முன்பு 19.10.2012 (வெள்ளிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பட்டம் நடத்துவது எனவும், மண்டல மேலாளரிடம் மெமொரெண்டம் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆர்ப்பாட்டம் முடிந்ததும்,  ராஜா அண்ணாமலை திருமண மஹாலில் (சினிப்ரியா தியேட்டர் அருகில்) நமது மதுரை மண்டல கூட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

தற்காலிக ஊழியர்களின் சிறப்பு மாநாடும், பேரணியும்:

23.9.2012 அன்று நடந்த நமது இரு சங்கங்களின் கூட்டுக்குழுவில் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்கும் நமது முயற்சிகளை தீவிரப்படுத்துவது என விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாக லேபர் கமிஷனர் முன்பு பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது. வரும் 19ம் தேதி மதுரையில் வைத்து அடுத்த பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், நமது வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களைத் திரட்டி நவம்பர் 4ம் தேதி அவர்களுக்கென ஒரு சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், மாநாட்டின் முடிவில் பேரணி நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. அரசியல் கட்சியைச் சார்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் மாநில அளவிலான முக்கிய தொழிற்சங்கத் தலைவர்களை மாநாட்டிற்கும், பேரணிக்கும் அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கப்பட்டு விட்டன.

இந்த வங்கியில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் முன்னிறுத்தி, சோர்வும் ஓய்வுமின்றி நமது பயணத்தைத் தொடருவோம். அது இங்கு நம்மால் மட்டுமே சாத்தியம்.




தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                      பொதுச்செயலாளர் - PGBOU

12.10.12

10.10.2012 Dharna against the Disciplinary Actions of PGB management!



1985ம் ஆண்டு நினைவுகளை மீட்டெடுத்து, அந்த உணர்வுகளில் சஞ்சரிக்க வைத்த ஒரு எழுச்சி மிக்க அனுபவமாக இருந்தது, 10.10.2012 அன்று தலைமையலுவலகத்தின் முன்பு நடைபெற்ற நமது இரு சங்கங்களின் தர்ணா. 

அதிக அளவில் தோழர்களின் பங்கேற்பும், அவர்களிடம் இருந்த ஈடுபாடும், வேகமும் ஒரு விஷயத்தை உறுதிப் படுத்தி விட்டது. “இதோ, நாங்கள் இருக்கிறோம். இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல... ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்க... நிர்வாகத்தின் உழியர் விரோதப் போக்கை எதிர்த்து நிற்க.... நாங்கள் சமரசமின்றி போராடுவோம்” என்பதுதான் இந்த தர்ணா  அனைவருக்கும் தெரிவித்து விட்டது.

தர்ணா குறித்த செய்திகள், தலைவர்களின் பேச்சுக்கள், நமது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த சர்க்குலர் விரைவில் வெளியாகும். இங்கு, தர்ணாவின் காட்சிகள்....

கோஷங்கள் எழும்ப தர்ணா துவங்குகிறது....

தர்ணாவுக்குத் தலைமை தாங்க தோழர். போஸ்பாண்டியனை (President- PGBOU) 
தோழர். சோலைமாணிக்கம்  முன்மொழிகிறார்...

தோழர்.போஸ்பாண்டியன்...


தோழர்கள்.....

தோழர்.மாதவராஜ் (president - PGBEA)

தோழர்கள்...

தோழர்கள்....

அரசு ஊழியர் சங்கத்தின் ஆதரவும், வாழ்த்துக்களும்...

தோழர்.பெருமாள்சாமி (Treasurer - PGBOU)

தோழர்கள்.....

தோழர்.T.கிருஷ்ணன் (Organising Secy - AIRRBEA-TN)

மதிய உணவு நேரம்

தோழர்கள்....

தோழர்கள்....

மதிய உணவுக்குப் பின்

தோழர்.சங்கரராமன் (பல்லவன் கிராம வங்கி ஆபிஸர் யூனியன் தலைவர் )

தோழர்கள்....

தோழர்.சோலை மாணிக்கம் (Gen. Secy, PGBEA)

BEFI TN சார்பில்.....

தோழர்.சங்கரலிங்கம் நன்றியுடன்....


3.10.12

PGBEA - PGBOU circular 15/2012 dt 01.10.2012



சுற்றறிக்கை: 15/2012         நாள்: 1.10.2012

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி நமது இரு சங்கங்களும் இயக்கம் நடத்துவது என முடிவு செய்து சுற்றறிக்கை விட்டிருந்தோம். இப்படி ஒரு அசாதாரண சூழலுக்குக் காரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். பொதுமேலாளரிடம் பேசியிருந்தோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருந்தோம். மேலும் நமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது என இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு முடிவு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில், "உங்களுக்கு compulsory Retirement முடிவு செய்திருக்கிறோம். உங்கள் பதில் என்ன?" என்று கேட்டு கோட்டையூர் கிளையில் பணிபுரியும் தோழர்.குருநாதன் அவர்களுக்கு 27.9.2012 அன்று நிர்வாகம் show cause notice அனுப்பியிருக்கிறது. எந்த தவறும் செய்யாத, அப்பழுக்கற்ற ஒரு அலுவலருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை கண்டு மொத்த வங்கியுமே அதிர்ச்சியடைந்திருக்கிறது. கேள்விப்பட்ட நண்பர்களும், தோழர்களும் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கடும் ஆத்திரம் கொண்டிருக்கின்றனர்.

2006ம் ஆண்டில், கீழக்கரைக் கிளையில் நகைகள் காணாமல் போனதாக நிர்வாகம் சுமத்திய குற்றச்சாட்டுக்களுக்கு ஏற்கனவே தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு dismissalக்கான show-cause notice  சில வாரங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது. அதற்கு உடந்தையாய் இருந்தார் என தோழர்.குருநாதனுக்கு இப்போது compulsory retirement கொடுக்க முடிவு செய்திருக்கிறது. என்கொயரில், அப்படி எந்த நகைகளும் அங்கு காணாமல் போகவில்லை என்பது ஆதாரங்களுடனும், சாட்சியங்களுடனும் நிருபீக்கப்பட்டு இருக்கிறது. இந்த கேஸ் குறித்த முழு விபரங்களையும் அப்படியே நமது வெப்சைட்டில் ஏற்கனவே வெளியிட்டு இருக்கிறோம்.

அடிப்படை ஆதாரங்கள் சாட்சியங்கள் எதுவுமில்லாவிட்டாலும் என்கொயரி ஆபிஸர் மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி குற்றச்சாட்டுக்கள் நிருபீக்கப்பட்டதாக கண்மண் தெரியாமல் ஒரு தீர்ப்பை எழுதுகிறார். அதுவும் உலகத்தில் யாருக்கும் விளங்காத ஒரு ஆங்கில பாஷையில் வார்த்தைகளைக் கொட்டித் தீர்க்கிறார்.  "என்கொயரி ஆபிஸரின் findings சரியில்லை, defence தரப்பிலான எந்த வாதத்தையும் கணக்கிலெடுக்காமல், அவர் இஷ்டத்திற்கு ஒரு கதையை எழுதி இருக்கிறார், வெறும் சந்தேகங்களாலும், ஊகங்களாலும் நீதி எழுதப்படக்கூடாது" என Disciplinary Authorityகளிடம் முறையிடப்பட்டது. ஆனால்,"மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி சொல்வதுதான் சரி, குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டன"  என்று அவர்களும் சொல்லிவிட்டார்கள்.

ஒன்று தெளிவாகிறது. இந்த என்கொயரிகள் அனைத்தும் ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இங்கு முடிவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஊகங்களும், வதந்திகளும், சந்தேகங்களும் இருந்தால் போதும். நிர்வாகம் எந்தக் குற்றச்சாட்டையும் யார் மீதும் சுமத்தி, என்கொயரி என்ற பேரில் ஒன்றை நடத்தி, ஊழியர்களையும், அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றாகிறது. பயத்தையும் பதற்றத்தையும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் விதைக்கிறது.

இதுதான் நடைமுறை என்றால், இதுதான் விதி என்றால், இனி வருங்காலத்தில் பல அப்பாவித் தோழர்கள் இதுபோல வங்கியை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள். இதை நாம் அனுமதிக்க முடியாது. 27.9.2012 அன்று இரவே அவசரம் அவசரமாகக் கூடிய செயற்குழு, போராட்டத்தைத் தீவீரப்படுத்துவது எனவும், அடுத்த நாள் 28.9.2012 அன்று மாலை தலைமையலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்தது.

ஒரே ஒருநாள் அவகாசம் இருந்த போதிலும், அரையாண்டின் இறுதி வேலை நாளாக இருந்த போதிலும், 70 தோழர்களுக்கும் மேலாக திரண்டனர்.  தோழர்கள் எழுப்பிய கோஷங்கள் ஆவேசமாய் இருந்தன.  தோழர்கள் மாதவராஜ், சங்கரலிங்கம், டி.கிருஷ்ணன், சோலைமாணிக்கம் ஆகியோரது பேச்சுக்கள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன.

"தோழர். குருநாதனுக்கு அளிக்கப்பட்ட இந்த முறையற்ற show-cause notice மூலம் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இதுதான் மற்றவர்களுக்கும் என்னும் ஒரு எச்சரிக்கையை, அபாயச் சங்கை ஓலித்திருக்கிறது. அதற்கான பதிலே இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதன் மூலம், தோழர்.குருநாதனின் பின்னால் இந்த வங்கியின் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் திரண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிவிக்கிறோம்.  தவறு செய்யாதவர்களுக்கு capital punishment  அளிக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தெருவிலிறங்கிப் போராட சித்தமாயிருக்கிறோம் எனபதையும் அறிவிக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை இனி இந்த வங்கியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்"  இதுதான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசிய கருத்துக்களின் மையப்புள்ளியாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இரண்டு சங்கங்களின் சார்பிலும் வங்கியின் சேர்மன் அவர்களை சந்தித்துப் பேசச் சென்றோம். சேர்மனும் நம்மை அழைத்து, நம் கருத்துக்களை அமைதியாகக் கேட்டார்.

தொடர்ந்து இந்த வங்கியில், அலுவலர்களும், ஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் கடுமையாக பாதிக்கப்படுவதையும், ஒரு தவறும் செய்யாத குருநாதன் போன்றவர்களுக்கு capital punishment கொடுக்கப்படுவதையும் எடுத்துரைத்தோம். இத்தனை வருடமாக இந்த வங்கியிலும், வெளியிலும் ஒருவர் சம்பாதித்த பேர் அனைத்தையும் ஒரு காகிதத்தைக் கொடுத்து அழிப்பதில் இருக்கும் வலியையும் வேதனையையும் விளக்கினோம்.

இதற்கு பதிலளித்த சேர்மன் அவர்கள், இதில் தனக்கு எந்த பங்கும் இல்லையென்றார். இந்த கேஸ்கள் எல்லாம் 2007ம் ஆண்டில், அப்போதிருந்த நிர்வாகத்தால் எடுக்கப்பட்டவை என்றார். “இந்த கேஸ் vigilance சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஓ.பியில் இருக்கும் CVO (Chief Vigilance officer)வின் ஆலோசனைகள், பரிந்துரைகள்படிதான் நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது என்றார். Vigilance சம்பந்தப்பட்ட கேஸ்கள் என்றால், முதலில் investigation  நடத்தப்பட்டவுடன், அதுகுறித்த விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து first stage reportஐ நமது வங்கி CVOவுக்கு அனுப்பி வைக்கும். அதை ஆராய்ந்து CVO குறிப்பிட்ட கேஸ், major penaltyக்கு உரியதா, minor penaltyக்கு உரியதா என்று முடிவு செய்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரைப்பார். என்கொயரி முடிந்து, அது சம்பந்தமான அனைத்து டாக்குமெண்ட்களையும் திரும்பவும் இரண்டாவது முறையாக, second stage report ஐ வங்கியிலிருந்து CVOவுக்கு அனுப்பி வைப்போம். அவற்றையெல்லாம் பார்த்து CVO ஏற்கனவே (first stage) எடுத்த முடிவை confirm செய்து தெரிவிப்பார். அதன்படிதான் நாங்கள் முடிவு எடுக்கிறோம். vigilance கேஸ்களைப் பொறுத்த வரையில், நாங்கள் CVOவின் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நாங்கள் முடிவெடுப்பவர்களாக இல்லை” என்று தங்கள் தரப்பை விளக்கினார்.

"என்கொயரி ஆரம்பிப்பதற்கு முன்பே, investigation reportன் அடிப்படையிலேயே, major penalty என தீர்மானிக்கப்படுமானால், எதற்கு enquiry? எதற்கு defence Counsel? எதற்கு Disciplinary Authority? எதற்கு Staff service Regulation எல்லாம்?"  எனக் கேட்டோம்.

"அந்த கேஸில் உள்ள நிலைமைகளை கண்டறிவதற்குத்தான் என்கொயரி." என்றார் சேர்மன்.

"தோழர்.குருநாதன் கேஸில் உண்மைகள் வேறாக இருக்கின்றனவே. குறிப்பிட்ட நகைகள் காணாமல் போகவே இல்லையே. அதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.  இருந்தாலும், காணாமல் போகாத நகைகளை சுந்தரவடிவேலு safeலிருந்து எடுத்துவிட்டதாகச் சொல்வது எப்படி சார்?  அதற்கு குருநாதன் உடந்தை எனச் சொல்வது எதன் அடிப்படையில் சார்? இதை எப்படி ஒரு என்கொயரி ஆபிஸர், 'proved' எனச் சொல்ல முடிகிறது. அதையும் Disciplinary authorityயான நீங்கள் எப்படி ஒப்புக்கொண்டு இப்படி ஒரு தண்டனையளிக்கிறீர்கள்?" என்றோம்.

இதற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து பதில் இல்லை.

 "அடுத்ததாக, யாருக்கும் புரியாத ஒரு ஆங்கிலத்தில் என்கொயரி ஆபிஸர் ஒரு findings எழுதுகிறார். அது புரியவில்லை, தெளிவாகவில்லை என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு விளக்கம் அளித்துத் தானே தாங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் அதையும் விளக்கமளிக்காமலேயே, நாங்கள் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து ஆராயாமலேயே தாங்கள் ஒப்புக்கொண்டு விடுகிறீர்களே?" என வருத்தப்பட்டோம்.

இதற்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து பதில் இல்லை.

ஆனால், "CVOவின் முடிவை அமல்படுத்தக் கூடியவர்களாகத்தான் தாங்கள் இருக்கிறோம்" என்பதே திரும்ப திரும்பச் சொல்லப்பட்டது.  "Appellate authorityயாக இருக்கக் கூடிய போர்டுக்கும் கூட CVOவின் முடிவை மாற்றுவதில் சிரமங்கள் இருக்கின்றன.  Major penalty என்று CVO சொல்லிவிட்டால், அந்த major penaltyக்குரிய punishmentற்குள் வேண்டுமானால் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் major penaltyக்குரியதை minor penaltyக்குரியதாக போர்டு கூட மாற்ற முடியாது. அப்படித்தான் நியதிகள் இருக்கின்றன" என சேர்மன் மேலும் விளக்கினார்.

"இதுதான் நிலைமை என்றால்,  விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தண்டனை குறித்து வைக்கப்படுமானால், அடிப்படை நீதியும், நியாயமும் இங்கு ஒருவருக்கு மறுக்கப்படுகிறது என்பதே அர்த்தமாகிறது. எனவே, எங்கள் போராட்டம் இந்த நிர்வாகத்துக்கு எதிராக மட்டுமல்ல, CVOவுக்கு எதிராகவும் அமையும்" என நாம் உறுதிபடத் தெரிவித்து, சேர்மனிடமிருந்து விடைபெற்றோம்.

தோழர்களே!

நாமும் central vigilance commission, chief vigilance officer குறித்த நெறிமுறைகள், விதிகளையும் முழுமையாகப் படித்து விவாதம் செய்தோம். அதிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறோம்.

1.Vigilance கேஸ்களுக்கு, Investigating reportதான் அடிப்படையாய் இருக்கிறது. வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்களுடனும், நேர்மையுடனும் Investigation இருந்தால் பல குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லாமல் போகும்.  ஆனால், CVOவின் கடுமையான முடிவுகளுக்கு ஏதுவாக ரிப்போர்ட்டை தயார் செய்வது நமது வங்கிதான். First stage reportல் அனுப்பப்பட வேண்டியவைகளில் ' A self-contained note clearly indicating the facts on which the commission's advice is sought' என்பது முக்கியமானது. அதை இங்கு எழுதி வைப்பவர்களாக மிஸ்டர் சங்கர நாராயணனும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.

2. CVOவின் முடிவால் பல என்கொயரி ஆபிஸர்கள் மண்டையில் ஆரம்பத்திலேயே major penalty தான் என்பது ஏற்றி வைக்கப்படுகிறது. எனவே அவர்கள் கண்மண் தெரியாமல் எதையாவது சொல்லி, 'proved' என முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தாங்கள் மனிதர்களின் வாழ்க்கையோடு, குடும்பங்களின்  எதிர்காலத்தோடு விளையாடுகிறோம் என்கிற

சிந்தனை மரத்துப் போனவர்களாகிறார்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் எத்தனை குற்றச்சாடுக்கள் 'not proved' என எழுதப்பட்டு இருக்கின்றன என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் அவர்கள் தங்கள் தீர்ப்பினை எழுத வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் வலுவாகிறது.

3.CVO வின் முடிவு, மொத்த விசாரணையின் மீதும் நிர்ப்பந்தங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அடிப்படை நியாயங்களையும், உரிமைகளையும் மறுப்பதாக இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டி, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் நமது சங்கங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.

4. இவற்றையெல்லாம் மீறி,  நியாயங்களும், அடிப்படை ஆதாரங்களும் இருந்தால் CVOவின் முடிவுகளிலிருந்து Disciplinary Authority  மாறுபடலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது.  நமது சேர்மன், அந்த உரிமையையும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம்.

தோழர்களே!
நமது இயக்கம் தொடர்கிறது.

அக்டோபர் 10ம் தேதி ஒருநாள் தர்ணாவை, சகோதரத் தொழிற்சங்கங்களையும் திரட்டி ஒரு மகத்தான பிரச்சார மேடையாக்குவோம்.

அதே நேரத்தில் கிளைகளில் நமது விதிப்படி வேலையை தீவீரப்படுத்துவோம்.

(1) அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லீவு எடுத்தால் தங்கள் பாஸ்வேர்டை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
(2) KYC norms கடைப்பிடிக்கப்படாமல் புதுக்கணக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாமல் jewel loan கொடுக்க வேண்டாம்.
(3) Jewel loan document அடிக்கப்பட்டு, transaction முறையாக பதிவு செய்து வவுச்சர் வந்த பிறகே கடனுக்கான தொகையை கொடுங்கள்.
(4)மேலாளரும், காசாளரும் மட்டுமே jewel எடுக்கச் செல்லுங்கள்.
(5) messengerகள் இல்லாத single man கிளைகளில் Funds போவதற்கு சாத்தியங்கள் இல்லை. Nodal officesக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்கள் அறிவுறுத்துகிற ஏற்பாட்டை கடைப்பிடியுங்கள்.

இந்த விதிமுறைகளில் எந்த ஊசலாட்டமும், சஞ்சலங்களும் வேண்டாம். அதுதான் நமது குரலுக்கு மதிப்பளிக்கும்.
நியாயங்கள் கிடைக்கும் வரை நமது முயற்சிகள் ஓயாது.
வெற்றி நமதே!

தோழமையுடன்



   
(M.சோலைமாணிக்கம்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                      பொதுச்செயலாளர் - PGBOU

30.9.12

28.9.2012 கண்டன ஆர்ப்பாட்டமும், சேர்மனுடன் நமது பேச்சுவார்த்தையும்



தோழர்.குருநாதனுக்கு Compulsory Retirementக்கு show cause notice கொடுத்ததை எதிர்த்து PGBOUவும், PGBEAவும் 28.9.2012 வெள்ளிக்கிழமை மாலை தலைமையலுவலகத்தின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்தன. ஒரே ஒருநாள் அவகாசம் இருந்த போதிலும், அரையாண்டின் இறுதி வேலை நாளாக இருந்த போதிலும், 70 தோழர்களுக்கும் மேலாக திரண்டனர்.  தோழர்கள் எழுப்பிய கோஷங்கள் ஆவேசமாய் இருந்தன.  தோழர்கள் மாதவராஜ், சங்கரலிங்கம், டி.கிருஷ்ணன், சோலைமாணிக்கம் ஆகியோரது  பேச்சுக்கள் உணர்ச்சிகரமாக அமைந்திருந்தன.

“தோழர். குருநாதனுக்கு அளிக்கப்பட்ட இந்த முறையற்ற show-cause notice மூலம் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இதுதான் மற்றவர்களுக்கும் என்னும் ஒரு எச்சரிக்கையை, அபாயச் சங்கை அறிவித்திருக்கிறது. அதற்கான பதிலே இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதன் மூலம், தோழர்.குருநாதனின் பின்னால் இந்த வங்கியின் அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் திரண்டு இருக்கிறார்கள் என்பதை நாம் தெரிவிக்கிறோம்.  தவறு செய்யாதவர்களுக்கு capital punishment  அளிக்கப்படும் அநீதிகளை எதிர்த்து தெருவிலிறங்கிப் போராட சித்தமாயிருக்கிறோம் எனபதையும் அறிவிக்கிறோம். நியாயம் கிடைக்கும் வரை இனி இந்த வங்கியில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்”  இதுதான் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தலைவர்கள் பேசிய கருத்துக்களின் மையப்புள்ளியாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இரண்டு சங்கங்களின் சார்பிலும் வங்கியின் சேர்மன் அவர்களை சந்தித்துப் பேசச் சென்றோம். சேர்மனும் நம்மை அழைத்து, நம் கருத்துக்களை அமைதியாகக் கேட்டார்.

தொடர்ந்து இந்த வங்கியில், அலுவலர்களும், ஊழியர்களும் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பேரில் கடுமையாக பாதிக்கப்படுவதையும், ஒரு தவறும் செய்யாத குருநாதன் போன்றவர்களுக்கு capital punishment கொடுக்கப்படுவதையும் எடுத்துரைத்தோம். இத்தனை வருடமாக இந்த வங்கியிலும், வெளியிலும் ஒருவர் சம்பாதித்த பேர் அனைத்தையும் ஒரு காகிதத்தைக் கொடுத்து அழிப்பதில் இருக்கும் வலியையும் வேதனையையும் விளக்கினோம்.

இதற்கு பதிலளித்த சேர்மன் அவர்கள், இதில் தனக்கு  எந்த பங்கும் இல்லையென்றார். இந்த கேஸ்கள் எல்லாம் 2007ம் ஆண்டில், அப்போதிருந்த நிர்வாகத்தால் எடுக்கப்பட்டவை என்றார். இந்த கேஸ் vigilance சம்பந்தப்பட்டு இருப்பதால், ஐ.ஓ.பியில் இருக்கும் CVO (Chief Vigilance officer)வின் ஆலோசனைகள், பரிந்துரைகள்படிதான் நாங்கள் செயல்பட வேண்டியிருக்கிறது என்றார். Vigilance சம்பந்தப்பட்ட  கேஸ்கள் என்றால், முதலில் investigation  நடத்தப்பட்டவுடன், அதுகுறித்த விபரங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து first stage reportஐ நமது வங்கி CVOவுக்கு அனுப்பி வைக்கும். அதை ஆராய்ந்து CVO குறிப்பிட்ட கேஸ், major penaltyக்கு உரியதா, minor penaltyக்கு உரியதா என்று முடிவு செய்து ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள பரிந்துரைப்பார். என்கொயரி முடிந்து, அது சம்பந்தமான அனைத்து டாக்குமெண்ட்களையும் திரும்பவும் இரண்டாவது முறையாக, second stage report ஐ வங்கியிலிருந்து CVOவுக்கு அனுப்பி வைப்போம். அவற்றையெல்லாம் பார்த்து CVO ஏற்கனவே (first stage) எடுத்த முடிவை confirm செய்து தெரிவிப்பார். அதன்படிதான் நாங்கள் முடிவு எடுக்கிறோம். vigilance கேஸ்களைப் பொறுத்த வரையில், நாங்கள் CVOவின் முடிவுகளை செயல்படுத்தக் கூடியவர்களாகத்தான் இருக்கிறோம். நாங்கள் முடிவெடுப்பவர்களாக இல்லை  என்று தங்கள் தரப்பை விளக்கினார்.

“என்கொயரி ஆரம்பிப்பதற்கு முன்பே, investigation reportன் அடிப்படையிலேயே, major penalty என தீர்மானிக்கப்படுமானால், எதற்கு enquiry? எதற்கு defence Counsel? எதற்கு Disciplinary Authority? எதற்கு Staff service Regulation எல்லாம்?"  எனக் கேட்டோம்.

“அந்த கேஸில் உள்ள நிலைமைகளை கண்டறிவதற்குத்தான் என்கொயரி.” என்றார் சேர்மன்.

“தோழர்.குருநாதன் கேஸில் உண்மைகள் வேறாக இருக்கின்றனவே. குறிப்பிட்ட நகைகள் காணாமல் போகவே இல்லையே. அதற்கான ஆதாரங்களும் சாட்சியங்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டு இருக்கின்றன.  இருந்தாலும், காணாமல் போகாத நகைகளை  சுந்தரவடிவேலு safeலிருந்து எடுத்துவிட்டதாகச் சொல்வது  எப்படி சார்?  அதற்கு  குருநாதன்  உடந்தை எனச் சொல்வது எதன் அடிப்படையில் சார்? இதை எப்படி ஒரு என்கொயரி ஆபிஸர், ‘proved' எனச் சொல்ல முடிகிறது. அதையும் Disciplinary authorityயான நீங்கள் எப்படி ஒப்புக்கொண்டு இப்படி ஒரு தண்டனையளிக்கிறீர்கள்?” என்றோம்.

இதற்கு நிர்வாகத்தரப்பில் இருந்து பதில் இல்லை.

 “அடுத்ததாக, யாருக்கும் புரியாத ஒரு ஆங்கிலத்தில் என்கொயரி ஆபிஸர் ஒரு findings எழுதுகிறார். அது புரியவில்லை, தெளிவாகவில்லை என நாங்கள் சொல்கிறோம். எங்களுக்கு விளக்கம் அளித்துத் தானே தாங்கள் முடிவுக்கு வர வேண்டும். ஆனால் அதையும் விளக்கமளிக்காமலேயே, நாங்கள் முன்வைத்திருக்கும் ஆதாரங்கள் குறித்து ஆராயாமலேயே தாங்கள் ஒப்புக்கொண்டு விடுகிறீர்களே?” என வருத்தப்பட்டோம்.

இதற்கும் நிர்வாகத்தரப்பிலிருந்து பதில் இல்லை.

ஆனால், “CVOவின் முடிவை அமல்படுத்தக் கூடியவர்களாகத்தான் தாங்கள் இருக்கிறோம்” என்பதே திரும்ப திரும்பச் சொல்லப்பட்டது.  “Appellate authorityயாக இருக்கக் கூடிய போர்டுக்கும் கூட CVOவின் முடிவை மாற்றுவதில் சிரமங்கள் இருக்கின்றன.  Major penalty என்று CVO சொல்லிவிட்டால், அந்த major penaltyக்குரிய punishmentற்குள் வேண்டுமானால் மாற்றங்கள் செய்யலாம். ஆனால் major penaltyக்குரியதை minor penaltyக்குரியதாக போர்டு கூட மாற்ற முடியாது. அப்படித்தான் நியதிகள் இருக்கின்றன” என சேர்மன் மேலும் விளக்கினார்.

 “இதுதான் நிலைமை என்றால்,  விசாரணை நடைபெறுவதற்கு முன்பே தண்டனை குறித்து வைக்கப்படுமானால், அடிப்படை நீதியும், நியாயமும் இங்கு ஒருவருக்கு மறுக்கப்படுகிறது என்பதே அர்த்தமாகிறது. எனவே, எங்கள் போராட்டம் இந்த நிர்வாகத்துக்கு எதிராக மட்டுமல்ல, CVOவுக்கும் எதிராக அமையும்” என நாம் உறுதிபடத் தெரிவித்து, சேர்மனிடமிருந்து விடைபெற்றோம்.

தோழர்களே!

நாமும் central vigilance commission, central vigilance officer குறித்த நெறிமுறைகள், விதிகளைப் படித்து விவாதம் செய்தோம். அதிலிருந்து கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வந்திருக்கிறோம்.

1.Vigilance கேஸ்களுக்கு, Investigating reportதான் அடிப்படையாய் இருக்கிறது. வெறும் சந்தேகங்களின் அடிப்படையில் இல்லாமல், ஆதாரங்களுடனும், நேர்மையுடனும்  Investigation இருந்தால் பல குற்றச்சாட்டுகள் ஆரம்பத்திலேயே ஒன்றுமில்லால் போகும்.  ஆனால், CVOவின் கடுமையான முடிவுகளுக்கு ஏதுவாக ரிப்போர்ட்டை தயார் செய்வது நமது வங்கிதான். First stage reportல் அனுப்பப்பட வேண்டியவைகளில் ‘ A self-contained note clearly indicating the facts on which the commission's advice is sought' என்பது முக்கியமானது. அதை இங்கு எழுதி வைப்பவர்களாக மிஸ்டர் சங்கர நாராயணனும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவும்தான் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இருவரையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் அர்த்தமுள்ளதாகிறது.

2. CVOவின் முடிவால் என்கொயரி ஆபிஸர்கள் மண்டையில் ஆரம்பத்திலேயே major penalty தான் என்பது ஏற்றி வைக்கப்படுகிறது. எனவே அவர்கள் கண்மண் தெரியாமல் எதையாவது சொல்லி, ‘proved' என முடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். தாங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையோடு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தோடு விளையாடுகிறோம் என்கிற சிந்தனை மரத்துப் போனவர்களாகிறார்கள். கடந்த சில வருடங்களில் மட்டும் எத்தனை குற்றச்சாடுக்கள் 'not proved' என எழுதப்பட்டு இருக்கின்றன என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும். ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் அடிப்படையில் அவர்கள் தங்கள் தீர்ப்பினை எழுத வேண்டும் என்னும் நமது கோரிக்கை மேலும் வலுவாகிறது.

3.CVO வின் முடிவு, மொத்த  விசாரணையின் மீதும் நிர்ப்பந்தங்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அடிப்படை நியாயங்களையும், உரிமைகளையும் மறுப்பதாக இருக்கிறது. இந்த ஏற்பாட்டில் இருக்கிற குறைகளைச் சுட்டிக்காட்டி, சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கவும் நமது சங்கங்கள் ஆலோசனை செய்து வருகின்றன.

4. இவற்றையெல்லாம் மீறி,  நியாயங்களும், அடிப்படை ஆதாரங்களும் இருந்தால் CVOவின்  முடிவுகளைலிருந்து Chairman / Disciplinary Authority  மாறுபடலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. அதை தெளிவுபடுத்த வாய்ப்பும் அளிக்கப்பட்டு இருக்கிறது.  நமது சேர்மன், அந்த உரிமையையும் வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் எனவும் நாம் கோரிக்கை வைக்கிறோம்.


தோழர்களே!

நமது இயக்கம் தொடர்கிறது.

அக்டோபர் 10ம் தேதி ஒருநாள் தர்ணாவை, சகோதரத் தொழிற்சங்கங்களையும் திரட்டி ஒரு மகத்தான பிரச்சார மேடையாக்குவோம்.


அதே நேரத்தில் கிளைகளில் நமது போராட்டத்தை தீவீரப்படுத்துவோம்.
கிளைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளில் எந்த ஊசலாட்டமும், சஞ்சலங்களும் வேண்டாம். அதுதான் நமது குரலுக்கு மதிப்பளிக்கும்.


மேலும், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகளை அழைத்து ஒரு மாபெரும் கருத்தரங்கம் நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

நியாயங்கள் கிடைக்கும் வரை  நமது முயற்சிகள் ஓயாது.

வெற்றி நமதே!

28.9.12

தோழர் குருநாதனுக்கு கட்டாய ஓய்வாம்! PGB நிர்வாகத்தின் அட்டூழியம்!!



“உங்களுக்கு compulsory Retirement முடிவு செய்திருக்கிறோம். உங்கள் பதில் என்ன? “ என்று கேட்டு கோட்டையூர் கிளையில் பணிபுரியும் தோழர்.குருநாதன் அவர்களுக்கு நேற்று நிர்வாகம் show cause notice அனுப்பியிருக்கிறது. எந்த தவறும் செய்யாத, அப்பழுக்கற்ற ஒரு அலுவலருக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை கண்டு மொத்த வங்கியுமே அதிர்ச்சியடைந்திருக்கிறது. கேள்விப்பட்ட நண்பர்களும், தோழர்களும் நிர்வாகத்தின் நடவடிக்கை மீது கடும் ஆத்திரம் கொண்டிருக்கின்றனர்.

நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி நமது இரு சங்கங்களும் இயக்கம் நடத்துவது என முடிவு செய்து சுற்றறிக்கை விட்டிருந்தோம். இப்படி ஒரு அசாதாரண சூழலுக்குக் காரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் தலைமையலுவலகத்தை விட்டு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். பொதுமேலாளரிடம் பேசியிருந்தோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருந்தோம். மேலும் நமது குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வது என இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு முடிவு செய்து அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அறிவித்திருந்தோம்.

இந்த நிலையில், தோழர்.குருநாதனுக்கு அனுப்பியிருக்கும் Compulsory Retirementக்கான show cause notice மூலம் இந்த வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் நிர்வாகம் சொல்கிற செய்தி தெளிவானது.  "நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள், நாங்கள் தொடர்ந்து ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடருவோம்” என்பதுதான் அது. ஊழியர்களின், அலுவலர்களின் குரலுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல், மனிதாபிமானமும் இரக்கமும் சிறிதும் இல்லாமல்,  நிர்வாகம் நடத்தும் காட்டு தர்பார் இது.

தோழர்.குருநாதன் அப்படி என்ன தவறு செய்துவிட்டார்? அவருக்கு ஏன் இப்படி ஒரு capital punishment? தோழர்கள் இதுபற்றி தெரிந்துகொண்டால்தான் நிர்வாகத்தின் அடாவடித்தனமும், அராஜகமும், அட்டூழியமும் புரியும்.

2006ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, மிஸ்டர் முருகேசனை நிர்வாகம் கீழக்கரை கிளைக்கு snap audit  என்று அனுப்பி வைக்கிறது.   “அந்தக் கிளையில் இரண்டு நகைகள் காணாமல் போனதா?” என அங்கிருக்கும் அலுவலர்கள் ஊழியர்கள் அனைவரிடமும்  அவர் விசாரணை நடத்துகிறார். நகை காணாமல் போனதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும், புகார்களும் இன்றி அவர் விசாரணை நடத்தினார் என்பது இங்கு முதலில் கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.

அந்தக் கிளையின் மேலாளராக அப்போது தோழர்.குருநாதன் இருந்தார். அவருக்கு மேலகரம் கிளைக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு இருந்தது. புதிய மேலாளராக திரு.சுந்தர்சிங் சார்ஜ் எடுத்துக்கொண்டு இருந்தார். அந்த வங்கியில் தோழர்.முத்துசிவன் அலுவலராக இருந்தார். கிளர்க்குகளாக தோழர்கள் சுந்தரவடிவேலு, வெங்கடாச்சலம், சுப்பிரமணியம் ஆகியோர் இருந்தனர். அனைவரிடம் மிஸ்டர் முருகேசன் விசாரணை நடத்தினார். தோழர்.சுந்தரவடிவேலுவின் மனைவி பேரில் வைக்கப்பட்டு, 28.6.2006ல் திருப்பப்பட்ட இரண்டு நகைகள் குறித்தே அவரது கேள்விகள் இருந்தன.

திரு.சுந்தர்சிங் அவர்களிடம், சார்ஜ் எடுப்பதற்காக நகைகள் எண்ணப்பட்ட போது சரியாக இருந்தனவா என கேள்வி கேட்கப்பட்டது. அவர் அதற்கு கீழ்க்கண்டவாறு எழுதிக்கொடுத்தார்.

“As per PAD order, I joined duty on 26.6.2006 at our keelakkarai branch. When I was counting the jewel pockets in the presence of the then manager Mr.Gurunathan on 26.6.2006, there was a difference of two pockets in AJL a/cs. Then I move to online of computer work for AJL. On 29.6.06 again I verified in the presence of Mr.Gurunathan with concerned loan a/cs computer sheet and found correct."

(26.6.2006 அன்று கீழக்கரை கிளையில் AJL அக்கவுண்ட் கம்ப்யூட்டரில் ஆன்லைன் செய்யப்படவில்லை என்பதும், இரண்டு நாள் கழித்து  கம்ப்யூட்டர் ஷீட்டோடு  சரிபார்க்கப்பட்டபோது, நகைகளின் எண்ணிக்கை சரியாக இருந்தன என்பதும் இந்த வாக்குமூலத்திலிருந்து புரிய வருகிறது. மேலும் திரு.சுந்தர்சிங்,நகைகளின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்ததாகச் சொல்கிறாரே தவிர எந்த இரண்டு நகைகள் காணாமல் போயின என்று சொல்லவில்லை. குறிப்பிட்ட நகைகள் இல்லை என்று சொன்னால் மட்டுமே ‘நகைகள் காணவில்லை’ என்பது ஊர்ஜிதமாகும்.)

அடுத்து தோழர்.குருநாதன் அவர்கள் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்:

“I hereby inform you that no discrepancy was noted in jewel pockets when completion of handling over charge to my successor Mr.sundersing, senior manager. This is for your kind information."

(சார்ஜ் கொடுத்து முடிக்கும்போது  எந்த குறைபாடுகளும்  நகைக்கணக்குகளில் இல்லை என்கிறார் குருநாதன்.)

அலுவலராக இருக்கும் திரு.முத்துசிவன் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்:

“நகையை சரிபார்க்கும்போது நான் எனது பணியைச் செய்து கொண்டிருந்தேன். நகை வித்தியாசம் பற்றி என்னிடம் தெரிவிக்கவில்லை.”

காசாளராக பணியாற்றி வந்த வெங்கடாச்சலம் அவர்களிடம் நகைகளை எடுக்க யார் செல்வார்கள் என்றும், 28.6.2006 அன்று திருப்பப்பட்ட தோழர்.சுந்தரவடிவேலுவின் மனைவியின் பெயரில் இருந்த நகைகளை யார் எடுக்கச் சென்றது என்று கேள்விகள் கேட்கப்பட்டன. அவர் கீழ்க்கண்டவாறு எழுதித் தந்தார்.

“கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் யாராவது இருவர் ரிடம்சன் நகைகளை எடுத்து வருவார்கள். நான் பணம் பட்டுவாடா செய்துகொண்டிருப்பதால் எனது சாவியை மற்றவர்களிடம் கொடுத்து அனுப்புவேன். அந்த நாளில் நகை எடுக்க நான் செல்லவில்லை.”

(இவரது வாக்குமூலத்தில், ‘யாராவது இருவர் ரிடம்சன் நகைகளைச் செல்வார்கள்’ என தெளிவாய் சொல்லப்படுகிறது. எனவே யாரும் தனியாக நகைகளை எடுக்கச் செல்வதில்லை என்பதும் இதன் மூலம் தெரிய வருகிறது.)

அடுத்து, திரு சுப்பிரமணியன் கீழ்க்கண்டவாறு எழுதித் தருகிறார்:

“மேற்கண்ட நகைகளை நான் சேப்பிற்கு சென்று எடுத்துத் தரவில்லை. திருமதி.மணிமேகலை சுந்தரவடிவேலுவின் மனைவி என்பது பற்றியும் எனக்குத் தெரியாது. நான் AJL tally செய்து, online சம்பந்தமான வேலையில் இருந்ததால் மேற்கண்ட விபரங்கள் என் கவனத்திற்கு வரவில்லை.”

(இவரது வாக்குமூலத்தில், அவர் நகைகளை எடுக்கச் செல்லவில்லை என்றதோடு இன்னொரு முக்கியமான விஷயமும் சொல்லப்படுகிறது. AJL அக்கவுண்ட் tally ஆகாமல் இருந்ததுவும், அதை tally செய்து online செய்ய பணிகள் நடந்துகொண்டு இருந்ததுவும் சொல்லப்படுகிறது.)

Investigation Officer திரு.முருகேசன், கீழக்கரை கிளையில் நகைக்கடன் டாக்குமெண்ட்களை, வருகைப்பதிவேட்டை, cash transactionகளை ஆராய்ந்தார். பிறகு இராமநாதபுரம் கிளைக்குச் சென்று அங்கும் நகைக்கடன் டாக்குமெண்ட்களை பார்த்தார். அங்கு யாரிடமும் விசாரிக்கவில்லை.  சந்தேகங்களின் அடைப்படையில் கீழ்க்கண்டவாறு முடிவுக்கு வந்தார்.

“திரு சுந்தரவடிவேலு அவரது மனைவியின் பேரில் கீழக்கரை கிளையில் வைக்கப்பட்ட இரண்டு நகைக்கடன் பாக்கெட்டுகளை safeலிருந்து எடுத்து, இராமநாதபுரத்தில் கொண்டு போய், சுந்தரவடிவேலுவின் உறவினரான திருமதி.விமலாவதி என்பவர் பேரில் மீண்டும் நகைக்கடன் வைத்திருக்கிறார். அதற்கு மேலாளர் திரு.குருநாதன் உடந்தையாக இருந்திருக்கிறார்.”

இதன் அடிப்படையில் நிர்வாகம் தோழர்கள்.சுந்தரவடிவேலு அவர்களுக்கும், குருநாதன் அவர்களுக்கும் சார்ஜி ஷீட்களை வழங்கியது. என்கொயரி நடத்தப்பட்டது. என்கொயரி ஆபிஸர் யாரென்றால் மாபெரும் அறிவாளியான மிஸ்டர் முகைதின் பிச்சைமணி. பிரசெண்டிங் ஆபிஸர் மிஸ்டர் முருகன். தோழர்கள் சுந்தரவடிவேலுவுக்காக தோழர்.மாதவராஜ் defence counsel ஆகவும், தோழர்.குருநாதனுக்காக தோழர்.செல்வகுமார் திலகராஜ்  defence counsel ஆகவும் இருந்தனர்.

என்கொயரியில், investigation officer திரு முருகேசனிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணையின் மிக முக்கியப் பகுதிகள்:

கேள்வி: தாங்கள் தங்களது reportல் குறிப்பிட்டு இருக்கும் நகைகள் குறித்து ஏதேனும் எழுத்துப்பூர்வமான complaint பெறப்பட்டு அதன் அடிப்படையில் தங்கள் ஆய்வை நடத்தினீர்களா?”
பதில்: எந்தவிதமான complaintம் வரவில்லை. Departmentக்கு வந்ததா என்று தெரியாது.

*****
கேள்வி: “jewel loan பாக்கெட் ரிஜிஸ்டரை verify செய்தீர்களா?  அதில் ஏதும் discrepancies இருந்ததா?
பதில்: “நினைவில் இல்லை.”

***
கேள்வி: jewel loan pockets counting செய்யும்போது எண்ணிக்கையில் ஏதேனும் மாறுபாடு இருந்தால் முதற்கட்டமாக கிளையில் அதை trace செய்ய முயற்சிப்பார்களா? அல்லது தலைமையலுவலகத்திற்கு எந்த முயற்சியும் செய்யாமல் தெரிவிப்பார்களா?
பதில்: எண்ணிக்கையில் மாறுபாடு இருந்தால் documentடனும், ledger printout உடனும் சரிபார்க்கப்பட வேண்டும். அப்படியும் மாறுபாடு இருந்தால் தலைமையலுவலக்த்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
கேள்வி: சில சமயங்களில் AJL  பாக்கெட்டுகள் தெரியாமல் JLO பாக்கெட்டுகள் உள்ள trayவிலோ, JL பாக்கெட்டுகள் AJL trayவிலோ வைக்கப்பட்டு, அதனாலும் கூட எண்ணிக்கையில் வித்தியாசம் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதல்லவா?
பதில்: இருக்கலாம். ஆனால் குறைகிறது என்று தெரிய வந்தால், உடனே சரிசெய்யப்பட வேண்டும்.
கேள்வி: தாங்கள் மேலே கூறியுள்ளபடி டாக்குமெண்ட்களோடு சரிபார்ப்பது, டிரேக்களில் பாக்கெட்டுகள் மாறி இருப்பது, இவை அனைத்தையும் 26.6.2006 அன்று கீழக்கரை கிளையில், AJL பாக்கெட்டில் வித்தியாசம் வரும்போது அதிகாரிகள் செய்து விட்டிருந்தனரா?
பதில்: அது எனக்குத் தெரியாது.

*****
கேள்வி: இராமநாதபுரம் கிளையில் நகைக்கடன் பெற்ற திருமதி.விமலாவதி, திரு.சுந்தரவடிவேலு அவர்களுக்கு உறவினர் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறீர்களா?
பதில்: இல்லை.

*******

கேள்வி: கீழக்கரையில் திருப்பபட்ட நகைகளும், இராமநாதபுரத்தில் வைக்கப்பட்ட நகைகளும் ஒரே மாதிரியானவை என்று உங்கள் ரிப்போர்ட்டில் குறிப்ப்ட்டு இருக்கிறீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரங்களை ரிப்போர்ட்டில் குறிப்பிட்டு இருக்கிறீர்களா?
பதில்: தங்கள் கேள்வியில் சொன்னபடி ரிப்போர்ட்டில் குறிப்பிடப்படவில்லை.

(இந்தக் கேள்வி பதில்களில் மொத்த விஷயங்களும் தெளிவாகியிருக்கும். Investigation officer  எந்த ஆதாரங்களின் அடிப்படையிலும் ரிப்போர்ட் கொடுக்கவில்லை. ஊகங்களின், சந்தேகங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. மேலும், jewel loan register பிரகாரம் எவ்வளவு நகைகள் இருந்திருக்க வேண்டும். டாக்குமெண்ட்களின் பிரகாரம் எவ்வளவு இருந்தன, trayவில் எவ்வளவு இருந்தன என்பது போன்ற அடிப்படையான விஷயங்கள் கூட மொத்த விசாரணையிலும் சொல்லப்படவே இல்லை.)

அடுத்து திரு.சுந்தர்சிங் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், பதிலும் இந்த மொத்த குற்றசாட்டையும் ஆதாரமற்றதாக்குகிறது.

கேள்வி: 26.06.2006 ஆம் தேதியன்று, AJL பாக்கெட்டுகளை எண்ணும்போது, எண்ணிக்கையில் இரண்டு பாக்கெட்டுகள் குறைந்ததாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். எந்தெந்த பாக்கெட்டுகள் என்று பார்த்தீர்களா?
பதில்: எந்தெந்த பாக்கெட்டுகள் என்று தெரியாது.

எந்தெந்த பாகெட்டுகள் என்று தெரியாவிட்டால் நகைகள் காணாமல் போயின என்று சொல்வதற்கு இடமில்லாமல் போகிறது. நகைகள் காணவில்லை என்றால் தோழர்.சுந்தரவடிவேலுவின் மனவியின் பேரிலுள்ள நகைகள் யாருக்கும் தெரியாமல் எடுக்கப்படவில்லை என்றாகிறது.

எப்போதும் யாராவது இருவர் ரிடம்சன் நகைகளை எடுக்கச் செல்வார்கள் என்று திரு.வெங்கடாச்சலம் சொல்வதால், தோழர்.சுந்தரவடிவேலு மட்டும் தனியாக இரண்டு சாவிகளையும் கொண்டு போய் நகைகளை எடுக்க வாய்ப்பில்லை என்றாகிறது.

மூன்றாவது இராமநாதபுரத்தில் நகைகளை வைத்த விமலாவதி என்பவர் தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு உறவினர் என்று நிர்வாகம் சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இராமநாதபுரத்தில் வைக்கப்பட்ட நகைகளும், கீழக்கரையில் திருப்பப்பட்ட நகைகளும் எண்ணிக்கைகளில், எடையில், காரட்டில் வித்தியாசமானவை. அதற்கு இரண்டு கிளை நகைக்கடன் பத்திரங்களே ஆதாரங்களாய் இருக்கின்றன.

இவைகளின் அடிப்படையில் நாம் தோழர்.சுந்தர வடிவேலுவின் மீதான மொத்தக் குற்றச்சாட்டையும் மறுத்து வாதிட்டோம். அதுபோல், இதில் தோழர்.குருநாதனுக்கு எந்த ரோலும் இல்லை. அவர் பக்கம் எந்தத் தவறும் இல்லை என்பதையும் ஆதாரங்களுடன் முன்வைத்தோம்.

ஆனாலும் என்கொயரி  ஆபிஸர் மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி என்னும் அறிவாளி, நமது தரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்கள் எதையும் கணக்கிலெடுக்காமல் கீழ்க்கண்டவாறு தனது findings ஐ எழுதுகிறார். அதனை ஒரு  எழுத்து மாறாமல் அப்படியே இங்கு தருகிறோம். (படித்து யாராவது புரிந்து அர்த்தம் சொன்னால், அவரையும் ‘அறிவாளி’ லிஸ்ட்டில் சேர்க்கலாம்.)

“Hence it is proved that to what the incoming manager of the regular manager of keelakkarai branch found missing of TWO AJL packets, and to what Mr.A.Subramanian denied of getting the subjected 2 jewels from the safeon 26.6.2006, and to what Mr.N.Venkatachalam, denied the access of safe due to heavy customer rush, was unauthorisedly and clandestinely removed, from the keelakarai branch and pledged with (R) branch. The fact was came to light when Mr.M.Sundersingh took over charge from Mr.K.Gurunathan, Had discussions, among themselves made known to all staff, arranged for moke closure, money given from manager cabin -entries inserted in cash scroll & receiving counter cash book. All the matter was closed."

இத்தகு தெளிவான, மிக ஆழமான, பண்டித்துவம் பெற்ற வார்த்தைகளோடு மிஸ்டர்.முகைதின் பிச்சைமணி  ‘மிக நேர்மையான’  findingsஐ கொடுத்தார்.

என்கொயரி ஆபிஸரின் findings சரியில்லை, defence தரப்பிலான எந்த வாதத்தையும் கணக்கிலெடுக்காமல், அவர் இஷ்டத்திற்கு ஒரு கதையை எழுதி இருக்கிறார், வெறும் சந்தேகங்களாலும், ஊகங்களாலும் நீதி எழுதப்படக்கூடாது என நாம் நிர்வாகத்திடம் முறையிட்டோம்.

ஆனால், நிர்வாகம் அறிவாளியான மிஸ்டர் முகைதீன் பிச்சைமணி சொல்வதுதான் சரி, குற்றச்சாட்டுகள் நிருபீக்கப்பட்டன  என்று தோழர்.சுந்தரவடிவேலுவுக்கு இரண்டு வாரங்களுக்கும் முன்பு dismissalக்கான show cause notice கொடுத்தது. நேற்று தோழர்.குருநாதனுக்கு compulsory retirementக்கான show cause notice  கொடுத்திருக்கிறது.


மனிதாபிமானமற்ற, இரக்கமற்ற இந்த வங்கியின் அதிகாரிகள் சிலரால், அவர்களைப் சீராட்டி வளர்க்கும் இந்த நிர்வாகத்தால் இங்கு அப்பாவித் தோழர்கள் வங்கியை விட்டு வெளியே அனுப்பப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

ஒன்று தெளிவாகிறது. இந்த என்கொயரிகள் அனைத்தும் ஒப்புக்கு நடத்தப்படுகின்றன. ஆதாரங்கள், சாட்சியங்கள் அடிப்படையில் இங்கு முடிவுகள் தீர்மானிக்கப்படுவதில்லை. ஊகங்களும், வதந்திகளும், சந்தேகங்களும் இருந்தால் போதும். நிர்வாகம்  எந்தக் குற்றச்சாட்டையும் யார் மீதும் சுமத்தி, என்கொயரி என்ற பேரில் ஒன்றை நடத்தி, ஊழியர்களையும், அலுவலர்களையும் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றாகிறது. பயத்தையும் பதற்றத்தையும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் விதைக்கிறது.

இதுதான் நடைமுறை என்றால், இதுதான் விதி என்றால், இனி வருங்காலத்தில் பல அப்பாவித் தோழர்கள் இதுபோல வங்கியை விட்டு வெளியே அனுப்பப்படுவார்கள்.

இதை நாம் அனுமதிக்க முடியாது.

நேற்று இரவே  நமது இரு சங்க செயற்குழுக்களும் அவசரம் அவசரமாகக் கூடி விவாதித்தன.

PGBEAவும், PGBOUவும் நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் முழுமூச்சோடும், முழு வீச்சோடும் களமிறங்குவதென முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே நாம் அறிவித்திருக்கும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று (28.9.2012) மாலை  தலைமையலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

மேலும் நமது இயக்கத்தைத் தீவீரப்படுத்தி இரண்டொரு நாட்களில் நமது முன்னணி ஊழியர்கள் களமிறங்குவார்கள்.

இனி-
எந்த சமரசமுமில்லை.

25.9.12

PGBEA - PGBOU circular 14/2012 dt 25.09.2012



சுற்றறிக்கை எண்: 14/2012 நாள்: 25.9.2012

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

டீசல் விலையை மேலும் ரூ.5/-க்கு ஏற்றியதோடு, சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதியும் அளித்து, "நாம் பெரும் மாற்றங்களை சந்திக்கும் நேரம் வந்துவிட்டது!' என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் நமது பாரதப் பிரதமர் திருவாளர் மன்மோகன்சிங். இதுவரை எந்த மக்களவைத் தேர்தலிலும் நின்று ஜெயிக்காமல், நமது நாட்டின் பிரதமராகத் தொடர்ந்து நீடிக்கும் பாக்கியம் பெற்று இருக்கும் மன்மோகன்சிங்  "இந்தியா எனும் நமது தேசம், இங்கு வாழும் சாதாரண, எளிய மக்களுக்கானது அல்ல" என்று தெளிவுபடுத்திவிட்டார். கொதித்தெழுந்த இடதுசாரிக் கட்சிகளும், இதர எதிர்க்கட்சிகளும் செப்டம்பர் 20ம் தேதி விடுத்த 'பந்த்திற்கு' பேராதரவு கிட்டியிருக்கிறது. மக்களின் எதிர்ப்பை சிறிதும் மதிக்காமல், 'நான் பின் வாங்க மாட்டேன்' என வீர சபதம் செய்கிறார் மன்மோகன்சிங். மக்களை மதிக்காதவர்கள் மகுடம் தரித்துக்கொண்டு எப்படி இருக்க முடியும் என மக்கள் கேள்வி எழுப்ப வேண்டிய நேரம் நெருங்கியிருக்கிறது.இந்த தேசத்தின் தொழிலாளர்கள் அனைவரும் ஓரணியில் நின்று, இந்த அரசின் இறுதி அத்தியாயத்தை நிச்சயம் எழுதுவார்கள்.

நமது வாயிற்கூட்டம்:

நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு எதிராக நமது இரு சங்கங்களின் வாயிற் கூட்டம் 21.9.2012 அன்று தலைமையலுவலகம் முன்பு நடந்தது. மிகக் குறைந்த அவகாசத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் திரண்டிருந்தார்கள். நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான ஆவேசம் அனைவரிடமும் தென்பட்டது. "workers unity zindabad!" "working class unity zindabad!" என PGBEA  பொதுச்செயலாளர் தோழர் சோலைமாணிக்கம் முதற்குரல் எழுப்ப, தொடர்ந்து முழங்கிய தோழர்களின் குரல்கள் தலைமையலுவலகம் முழுவதும் எதிரொலித்தன.

PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் வாயிற்கூட்டத்திற்கு தலைமை தாங்கி, நிர்வாகத்தின் சமீபத்திய ஒழுங்கு நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன என்பதை விளக்கினார். அதிகாரத்தின் கோரப்பசி, சார்ஜ் ஷீட்களும், சஸ்பென்ஷன்களும், டிஸ்மிஸ்ஸலுமாக பாண்டியன் கிராம வங்கியில் தாண்டவமாடுவதை அம்பலப்படுத்தினார். அதிலிருந்து அலுவலர்களையும், ஊழியர்களையும் காப்பாற்றுவதே நமது சங்கங்களின் நோக்கம் என்பதை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய PGBEA தலைவர் தோழர்.மாதவராஜ், "இப்போதெல்லாம் ஒரு கிளையின் ஒட்டுமொத்த ஊழியர்கள், அலுவலர்கள் மீதும் சார்ஜ் ஷீட்கள் பாய்கின்றன. மேலப்பாளையம், கூடன்குளம், தென்கலம், செட்டிக்குளம், கீழவெளி வீதி, மூலக்கரைப்பட்டி, கீழக்கரை, மைக்கேல்பட்டினம் ஆகிய கிளைகளில் நடந்ததாகச் சொல்லப்படும் தவறுகளுக்காக மட்டும் இருபத்தைந்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சார்ஜ் ஷீட்கள் வழங்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இதுதான் நிலைமை என்றால், இந்த வங்கியில் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கைகள் பாய்வதற்கு வாய்ப்பிருக்கிறது" என எச்சரித்தார். "இந்த நிர்வாகம்தான் அலுவலர்களையும், ஊழியர்களையும் விதிகளை மீற வைக்கிறது, பிறகு விதிகளை மீறியதற்காக ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கிறது. Negligence of duty போன்ற தவறுகளையும் பூதாகரமாக்கி,capital punishment கொடுத்து வீட்டுக்கு அனுப்புவது நிர்வாகத்தின் வாடிக்கையாகி இருக்கிறது. ஒட்டு மொத்த ஊழியர்களும் ஒரு அச்சம் கலந்த, பதற்றமான சூழலில் பணி புரிய வேண்டும் என்பதே நிர்வாகத்தின் நோக்கமாய் இருக்கிறது" என தெளிவு படுத்தினார். மேலும் நிர்வாகத்திற்கு விசுவாசமாய் இருக்க வேண்டும் என்பதற்காக எதையெடுத்தாலும் proved என எழுதும் என்கொயரி ஆபிஸர்களின் நேர்மையற்ற findingsஐ கடுமையாகச் சாடினார். இனி இந்த என்கொயரி ஆபிஸர்களின் யோக்கியதைகளையும், என்கொயரிகளை அவர்கள் நடத்தும் விதங்களையும் ஆதாரங்களோடு நமது வெப்சைட்டில் வெளியிடுவோம்" எனச் சொன்னபோது தலைமையலுவலகம் அதிரும்படி தோழர்கள் ஆரவாரித்தனர்.

அடுத்து பேசிய PGBOU பொதுச்செயலாளர் தோழர்.சங்கரலிங்கம், "ஒழுங்கு நடவடிக்கைகள் எடுப்பவர்களுக்கு ஒரு யோக்கியதை வேண்டும். அது இங்கு இல்லை." என ஆரம்பித்து அதற்கான ஆதாரங்களை அம்பலப்படுத்தினார். சுற்றறிக்கையில் நாம் சொல்லியிருப்பது போல சம்பந்தப்பட்ட இரு அதிகாரிகளை தலைமையலுவலகத்திலிருந்து மாற்றும் வரை நமது போராட்டங்கள் தொடரும் என உறுதிபட தெரிவித்தார்.

இறுதியாக நிறைவுரையாற்றிய PGBEA பொதுச்செயலாளர் தோழர். சோலைமாணிக்கம், கிளைகளில் அலுவலர்களும் ஊழியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு இடையில் பணிபுரிவதையும், அதை மதிக்காமல் நிர்வாகம் இங்கு வெறியோடு ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அராஜகங்கள் செய்வதையும் குறிப்பிட்டார்.  இதே நிலைமை தொடர்ந்தால் , இனி வங்கி ஸ்தம்பிக்கும், வங்கியின் வணிகம் பாதிக்கும் என கடுமையாக எச்சரித்தார்.  23.9.2012 அன்று நடக்கவிருக்கும் நமது இரு சங்கங்களின் கூட்டு செயற்குழு அடுத்தக் கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து, அறைகூவல் விடுக்கும் என அறிவித்தார்.

மீண்டும் கோஷங்கள் முழங்க, வாயிற் கூட்டம் நிறைவு பெற்றது. நாம் நிர்வாகத்திடம் கொடுப்பதற்கு நமது நிலைபபாட்டை விளக்கி மெமொரெண்டம் ஒன்று தயார் செய்திருந்தோம். தலைமையலுவலகத்தில் சேர்மன் இல்லாததால், பொதுமேலாளர் திரு.சிதம்பரம் அவர்களிடம் அளித்தோம்.

நமது கூட்டுச் செயற்குழு முடிவுகள்:





23.9.2012 அன்று நமது இரு சங்கங்களின் கூட்டுச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அகில இந்தியச் செய்திகள், system generated NPA, revamping of Head office, demands, transfers, disciplinary actions போன்ற முக்கிய அஜெண்டாக்களின் மீது விவாதங்கள் நடத்தப்பட்டன. சில தெளிவான முடிவுகள் எடுக்கப்பட்டன.

(a) System Generated NPA:

இன்று நமது வங்கியில் ஒரு பெரும் பிரச்சினையாக System Generated NPA முன்வந்திருக்கிறது. அனைத்து கிராம வங்கிகளிலும் இது ஒருபெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இப்படி ஒரு நிலைமை வரும் என நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி அவர்கள் 17.1.2012 அன்றே எச்சரித்திருந்தார்.   "கிராம வங்கிகளில் CBS அமல்படுத்தப்பட்டபோது, அனைத்து head களும் tally ஆகியது மட்டுமே பார்க்கப்பட்டது. NPAவை கணக்கிடுவதற்கான gestation period, Harvesting season, number of instalments போன்றவை முறையாக சரிசெய்யப்பட வில்லை.‘இதனால் கிராம வங்கிகளில் system generated NPA பெரும் அளவுக்கு அதிகரிக்கும். கடும் விளைவுகள் ஏற்படும். எனவே வரும் 2012ம் ஆண்டில் மட்டுமாவது கிராம வங்கிகளை systmen generated NPAவிலிருந்து விலக்கி, சரிசெய்வதற்கான அவகாசம் அளிக்க வேண்டும்' என நபார்டுக்கும், வங்கித்துறைக்கும் கடிதம் எழுதியிருந்தார். AIRRBEAவின் கருத்தை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் விளைவை இன்று கிராம வங்கிகள் எதிர்கொண்டு வருகின்றன.

நமது வங்கியில் செப்டம்பர் 2011வரை CBSக்கு மாறுவதற்கு அவகாசம் அளிக்கப்பட்டிருந்தும், தனக்கு பேர் வேண்டும் என்பதற்காக முந்தைய சேர்மன் மார்ச் 2011க்குள் CBSக்கு மாற்ற அவசரம் காட்டினார். இந்த வேகம் சரியல்ல, குழப்பங்கள் ஏற்படும் என்று நாம் எச்சரிக்கை செய்தோம். இன்று அதன் விளைவுகள், system generated NPAஎன பூதாகரமாக வந்திருக்கிறது. இந்த நிலைமைக்கு நமது வங்கியின் அலுவலர்களும், ஊழியர்களும் எவ்விதத்திலும் பொறுப்பல்ல.

கடந்த காலத்தில் 'NPAவை குறைத்துக் காட்டுங்கள், NPAவை குறைத்துக் காட்டுங்கள்' என வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்தவர்களே, இன்று அதிகரித்திருக்கும் NPAவை சமாளிக்க வியூகங்கள் அமைக்கிறார்கள். இவர்களின் குளறுபடிகளுக்கும், குழப்பமான செயல்களுக்கும், இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களும் அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள்.  மொத்தத்தில் தெளிவற்ற, ஒரு தொலை நோக்குப் பார்வையற்ற நிர்வாகமே பொறுப்பு. இப்போதும் system generated NPAவை சரிசெய்ய நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளில் நமக்கு விமர்சனங்கள் இருக்கின்றன. இன்றைய பிரச்சினையை, நாளைக்கு கடத்தி விடுகிற காரியங்கள்தான் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஒரு நிலையான, கொள்கை பூர்வமான நியதிகளை உருவாக்கி அதை அமல் செய்யும் முனைப்புகள் இல்லை. ஒவ்வொரு வருடமும், நாம் உழைத்துச் சம்பாதித்துக் கொடுத்த லாபத்திலிருந்து எடுத்து NPAவை NIL  என ஆண்டறிக்கையில் காட்டி மார் தட்டியவர்கள், கடந்த நான்கைந்து வருடங்களில் அந்த நிதியிலிருந்து வராத கடன்களை write off செய்ய எப்படி, எவ்வளவு பயன்படுத்தினார்கள் என்பது மிகப் பெரும் கேள்வி. இப்படி பல கேள்விகள் முன்னுக்கு வருகின்றன.

இப்போது அவசரம் அவசரமாக Rescheduling நடக்கிறது. அதற்கென அலுவலர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒன்றிரண்டு நாளில் கம்ப்யூட்டரில் மாற்றியமைக்கப்படுகிறது. அத்தோடு பிரச்சினை முடிந்து விடாது. சம்பந்தப்பட்ட கடன் பெற்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இந்த Reschedule தெரிவிக்கப்பட்டு, கடன் பத்திரங்களிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும். அது ஓரிரு நாட்களில் நடப்பதற்கு சாத்தியமே இல்லை. போதிய கால அவகாசம் வேண்டும். நிர்வாகம் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாது. நாம்தான் கவலைப்பட வேண்டும். எனவே அந்தந்த கிளையின் மேலாளர்கள் கீழ்க்கண்டவாறு ஒரு கடிதத்தை தலைமையலுவலகத்திற்கு அனுப்பி தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என சங்கம் அறிவுறுத்துகிறது.


To

The General Manager (o)
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar
Sir
Rescheduling of loan accounts in regard to System Generated NPA
With reference to the above, we wish to inform the following for your kind perusal and favourable consideration.
The following loan accounts were rescheduled in our branch:
Sl no. Type of loan Date of Reschedule No.of Accounts
1.
2.
3.

In this regard, we request your goodselves to grant adequate time to our branch to inform the concerned borrowers and get the consent from them. 
Thanking You
Yours faithfully,


(b) Revamping of Head Office:

தலைமையலுவலகத்தில் சில நபர்களுக்கே தொடர்ந்து பல முறை மாறுதல்கள் அளிக்கப்படுவதும், சில நபர்களே தொடர்ந்து பல வருடங்களாக பணிசெய்ய அனுமதிப்பதும் ஆரோக்கியமான நடைமுறை அல்ல என எச்சரித்திருக் கிறோம். ஆனால் நிர்வாகம் இவ்விஷயத்தில் கடுமையான பிடிவாதத்தை கடைப்பிடிக்கிறது. எதோ அந்த நபர்கள் இல்லாவிட்டால், தலைமையலுவலகமே ஸ்தம்பித்துவிடும் என்பது போலவும்,  அவர்கள்தான் நிர்வாக நடைமுறைகளை கவனிப்பதற்கென்றே  பிறந்தவர்கள் போலவும் பிரஸ்தாபிக்கிறது. இன்று வங்கியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு 'மாற்றமில்லா தலைமையலுவலகம்'தான் காரணமாக இருக்கிறது.

இது நபர் சார்ந்த பிரச்சினையல்ல. நாம் அப்படிப் பார்க்கவுமில்லை. ஒரு சில நபர்களே தலைமையலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிப்பது, நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் புதுமைகளையும், துடிப்பையும், தேவையான மாற்றங்களையும் அனுமதிக்க மறுப்பது ஆகும். நிர்வாக இயந்திரத்தில் துருப்பிடித்திருக்கும் கோளாறுகளையும், பலவீனங்களையும் சரிசெய்யாமல் தொடர்ந்து அவை நீடிப்பதற்கு வழி செய்யும். வறட்டுப் பிடிவாதங்களுக்கும், கரடு தட்டிய வழக்கங்களுக்குமான இடமாக தலைமையலுவலகம் மாறிப்போகும். இதனை நாம் இப்போது கண்கூடாக பார்க்க முடிகிறது.

இன்றுவரை net connectivity போனால் என்ன செய்ய வேண்டும் என ஒரு சர்க்குலர் இல்லை. Singleman கிளைகளில் funds செல்வதற்கு என்ன ஏற்பாடு என்று சர்க்குலர் இல்லை. இப்படி பல முக்கியப் பிரச்சினைகளில் நிர்வாகத்தின் நெறிமுறைகள் வெளியிடப்படுவதில்லை. அப்படியே வெளியிடப்படும் சர்க்குலர்கள் பலவும் தப்பும் தவறுமாகவும் அரையும் குறையுமாகவும் இருக்கின்றன. NEFTக்கு கமிஷன் பிடிக்கும் சமீபத்திய சர்க்குலரிலிருந்து, தலைமையலுவலகம் வெளியிட்டு இருக்கும் பல சர்க்குலர்கள் இப்படிப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவரவர் இஷ்டத்திற்கு interpret செய்வதற்கு இடமளிப்பதாக இருக்கின்றன. அடுத்ததாக, தலைமையலுவலகத்தின் கடிதங்களுக்கு கிளைகளிலிருந்து உடனடியாக பதிலை எதிர்பார்க்கும் இவர்கள், கிளைகளில் இருந்து வரும் கடிதங்களுக்கு உடனடியாக பதிலளிப்பதில்லை. இவைகளைச் சுட்டிக் காட்டினால் டிபார்ட்மெண்ட் குட்டிச்சாத்தான்களுக்கு அதை சரிசெய்கிற மனோபாவமில்லாமல் எரிச்சலும், வன்மமும்தான் வருகிறது. கேள்விகள் கேட்க மட்டுமே தாங்கள் பிறந்தவர்களாகவும், தங்களை யாராவது கேள்வி கேட்டால் இதயமும், முகமும் சுருங்கிப் போகிறவர்களாகவும் ஒரு அதிகாரத் திமிர் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. இதுதான் மொத்த சீர்கேடுகளின் ஆரம்பம்.

இதனை சரிசெய்ய வேண்டுமென்றால் தலைமையலுவலகத்தை புனரமைக்க வேண்டும். எனவேதான் நாம் revamping of head officeஐ வலியுறுத்துகிறோம். நிர்வாகம் இதில் மேலும் பிடிவாதமோ, காலதாமதோ செய்யுமானால், நிலைமைகள் மேலும் மோசமாகும் என எச்சரிக்கிறோம்.

(c) Demands:

இந்த நிர்வாகம், நாம் முன்வைத்த பல கோரிக்கைகளில் சிலவற்றை அமல்படுத்தியிருக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம். அதே வேளையில் பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே இருக்கின்றன என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(1) அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல பெட்ரோல் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.
(2)அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் வணிக வங்கியில் வழங்கப்படுவது போல house maintanence allowance  வழங்கப்பட வேண்டும்.
(3) Housing loan மற்றும் vehicle loanக்கு கடன் தொகை உயர்த்தப்பட வேண்டும்.
(4) Net connectivity இல்லாமல் போவதால், பணிகள் தாமதமாகின்றன. பணிநேரம் நீட்டிக்கப்படுகிறது. அது போன்ற சமயங்களில் அனைவருக்கும் over time allowance  வழங்கப்பட வேண்டும்.
(5) 2009 டிசம்பரில் சங்கத்தின் அறைகூவலை ஏற்று வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்டதால் சஸ்பென்ஷன் செய்யப்பட்ட அலுவலர்த் தோழர்களுக்கு இன்னும் லீவு regularise செய்யப்படவில்லை.  சஸ்பென்ஷனில் இருந்த நாட்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவை சரிசெய்யப்பட வேண்டும்.
(6) வணிக வங்கிகளில் உள்ளது போல ஒரு முறையான டிரான்ஸ்பர் பாலிசி அவசியம் வேண்டும்.
(7) 2008ல் பணிக்குச் சேர்ந்த  எழுத்தர் தோழர்களுக்கு probationary periodல் கம்ப்யூட்டர் அலவன்சு  வழங்கப்படவில்லை.
(9) 2008ல் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கு maternity leave with pay வழங்கப்படவில்லை. மேலும் probationary period extend செய்யப்பட்டு இருக்கிறது. இது நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.
(10) 31.3.2012 மற்றும் 7.4.2012 ஆகிய இரு தினங்களுக்கும் ஓவர்டைம் அலவன்சு வழங்கப்பட வேண்டும்.
(11)வணிக வங்கியில் உள்ளது போல அலுவலர்களுக்கு reimbursement of Lodge expenses  வழங்கப்பட வேண்டும்.
(12) தொழிற்சங்கப்பணிகளுக்காக லீவு எடுத்த சங்கத் தலைவர்களுக்கு, அதிகநாள் லீவு எடுத்துவிட்டதாக சார்ஜ் ஷீட் கொடுத்து இருப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வருடக்கணக்கில் அவர்களுக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் இன்கிரிமெண்ட்களை உடனடியாக வழங்க வேண்டும்.

இவைகள் குறித்து கடிதங்கள் மூலம் நமது நிலைபாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறோம். பலமுறை நிர்வாகத்திடம் பேசியும் இருக்கிறோம். நிர்வாகம் இவைகளை சாதகமாகத் தீர்த்து வைக்க முன்வராத பட்சத்தில் நாம் போராட்டத்தில் இறங்க வேண்டி வரும் என்பதை எச்சரிக்கிறோம்.

(d) Transfers:

அலுவலர்களுக்கு பதவி உயர்வு நடந்து முடிந்து மாதங்கள் பலவாகிவிட்டன. நிர்வாகம் இன்னும் டிரான்ஸ்பர்களுக்கு ஏர்பாடு செய்யவில்லை. system generated NPAவை காரணம் காட்டி தள்ளிப் போட்டது. அக்டோபர் முதல் வாரத்தில் டிரான்ஸ்பர்கள் கண்டிப்பாக இருக்கும் என சேர்மன் ஒப்புக்கொண்டு இருக்கிறார். அவை நியாயமாகவும், பாதிப்புகளை சரி செய்யும் விதமாகவும் இருக்கும் என நம்புகிறோம்.கடந்த ஏப்ரலில் கிளரிக்கலிலிருந்து ஆபிஸராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு விருப்ப மாறுதல்கள் அளிக்கப்பட வேண்டும்.

(e) Disciplinary Actions:

வங்கியில் யார் யார் மீது என்ன ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன என ஒரு பட்டியல் தயாரிக்கபட்டு அது செயற்குழுவின் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஏறத்தாழ இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களில் 15பேருக்கு ஒருவர் குற்றஞ்சாட்டப்பட்டவராய் இருக்கிறார் என்னும் உண்மை அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. jewel loan சம்பந்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளாகவே பெரும்பாலும் இருந்தன. நிர்வாகத்தின் ஒழுங்கற்ற ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்த்து நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி எடுத்த நிலைபாட்டை கூட்டுச் செயற்குழு அங்கீகரித்ததோடு மேலும் போராட்டத்தை தீவீரப்படுத்த வேண்டும் என முடிவு செய்திருக்கிறது.

விதிகளை ஒருபுறம் ஒப்புக்கு அறிவித்துவிட்டு, ஆனால் நிஜத்தில் அவைகளை மீறுகிற நிர்ப்பந்தங்களை நிர்வாகமே இன்னொரு புறம் கொடுத்துக்கொண்டு இருக்கிறது. துரிதமான வாடிக்கையாளர் சேவை தர வேண்டும், வங்கியின் வணிகத்தை உயர்த்த வேண்டும் என்கிற வேகத்தில் விதிகள் மீறப்படுகின்றன. அதை கண்டும் காணாத நிர்வாகம், பாதிப்புகள் நிகழ்ந்தால் மட்டும், "ஏன் விதிகளை மீறினாய்?' என குற்றச்சாட்டுகளை சுமத்தி கையை முறுக்குகிறது. இங்கு முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி யாரென்றால், அது PGB நிர்வாகமே! எனவேதான் கீழ்க்கண்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறோம்.

1. இவைகளுக்கு மூலகாரணமான மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ஜோசப் ரூபன் விக்டோரியாவையும் உடனடியாக Inspection Departmentலிருந்து மாறுதல் செய்ய வேண்டும்.

2. நிர்வாக முறையில் உள்ள தவறுகளுக்கு தனிநபர்களை பொறுப்பாக்கி அவர்களுக்கு தண்டனை வழங்குவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பொருட்டு, அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

3. இருதரப்பு ஆதாரங்கள், சாட்சியங்கள், வாதங்களின் அடிப்படையில் ஆராயாமல், கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் ‘Proved'  என்று  சொல்வதே வழக்கமாகியிருக்கிறது. நிர்வாகத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் செயல்படாமல், சுதந்திரமாகவும் திறந்த மனதோடும் பணியாற்றுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

இது குறித்து தெளிவாக பொதுமேலாளரிடம் பேசியிருக்கிறோம். சர்க்குலர் வெளியிட்டு இருக்கிறோம். வாயிற்கூட்டம் நடத்தி மெமொரெண்டம் கொடுத்திருக்கிறோம். ஆனால் நிர்வாகத்தின் தரப்பில் எந்த அசைவும் இல்லை. எனவே நாம் இங்கு பெரும் அசைவுகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது.

வங்கிக்காக, வங்கியின் வளர்ச்சிக்காக என்று விதிகளை மீறி வேலை பார்த்து பார்த்து நமக்கு நாமே குழி தோண்டிக்கொண்டது போதும்.  நாம் முதலில் நம்மை காப்பாற்றிக்கொள்வோம் . இனி இந்த வங்கியில் விதிகளை முழுமையாக பின்பற்றுவது என முடிவுக்கு வருவோம்.

நாம் கடைப்பிடிக்க வேண்டிய பல விதிகள் இங்கு வெறும் வார்த்தைகளாகவே இருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக அவைகளை நடைமுறைக்கு அர்த்தப்படுத்தி பின்பற்றத் தயாராவோம். இந்த சர்க்குலரில் ஒரு சில முக்கிய விதிகளை மட்டுமே தெரிவிக்கிறோம்.

(1) அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் பாஸ்வேர்டை வேறு யாரும் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லீவு எடுத்தால் தங்கள் பாஸ்வேர்டை உபயோகிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
(2) KYC norms கடைப்பிடிக்கப்படாமல் புதுக்கணக்குகள் ஆரம்பிக்க வேண்டாம். வங்கியில் சேமிப்புக் கணக்கு இல்லாமல் jewel loan கொடுக்க வேண்டாம்.
(3) Jewel loan document அடிக்கப்பட்டு, transaction முறையாக பதிவு செய்து வவுச்சர் வந்த பிறகே கடனுக்கான தொகையை கொடுங்கள்.
(4)மேலாளரும், காசாளரும் மட்டுமே jewel எடுக்கச் செல்லுங்கள்.

(5) messengerகள் இல்லாத single man கிளைகளில் Funds போவதற்கு சாத்தியங்கள் இல்லை. Nodal officesக்கு தெரியப்படுத்திவிட்டு, அவர்கள் அறிவுறுத்துகிற ஏற்பாட்டை கடைப்பிடியுங்கள்.

தோழர்களே,  முதற்கட்டமாக இவைகளை கடைப்பிடிப்போம். அடுத்தக் கட்டத்தை விரைவில் அறிவிப்போம். நாம் இப்படி விதிப்படி வேலை செய்வதால் வாடிக்கையாளருக்கு சேவை செய்வதில் காலதாமதங்களும் சிரமங்களும் ஏற்படலாம். அதற்கு இந்த நிர்வாகம்தான் பொறுப்பு. இதனை தெரிவிக்கும் விதமாக கீழ்க்கண்ட வாசகங்களுடன் கூடிய போஸ்டர்கள் கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வங்கியில் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு அதனை ஒட்டி வையுங்கள்.


அன்புமிக்க எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்களே!
எங்கள் வங்கியின் கிளைகளில் போதுமான நிரந்தர ஊழியர்கள் இல்லை. கம்யூட்டர்களை இயக்குவதற்கு தேவையான பாஸ்வேர்டுகள் இல்லை. இவைகளை சரிசெய்ய எங்கள் நிர்வாகம் தயாரில்லை. எனவே வாடிக்கையாளர்களாகிய தங்களுக்கு சேவை செய்வதில் ஏற்படும் அசௌகரியங்களுக்கும், காலதாமதங்களுக்கும்
பொறுத்தருளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்


இந்த போஸ்டர்களைப் போலவே, நோட்டீஸ்களும் அச்சடித்து கிளைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு வினியோகியுங்கள். விஷயங்களைத் தெரிவியுங்கள்.

வட்டாரக்கூட்டங்களுக்கான தேதிகள் மற்றும் இடம் குறித்து கிளைகளுக்கு தபால்கள் வரும். விதிகளை பின்பற்றி வேலைபார்ப்பது குறித்து விவாதிப்போம்.  தெளிவு பெறுவோம்.

தோழர்களே!

நமது போராட்டத்தின் அடுத்தக் கட்டமாக, அக்டோபர் 10ம் தேதி தலைமையலுவலகம் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்த கூட்டு செயற்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த நிர்வாகத்துக்கு எதிராக பெருங்குரல் எழுப்பி முழக்கமிடுவோம், வாருங்கள். இந்த நிர்வாகத்தின் சீர்கேடுகள் அனைத்தையும் தெருவில் வைத்து அம்பலப்படுத்துவோம், வாருங்கள்.

இந்தப் பிரச்சினைகள் நம் அனைவரையும் பாதிப்பவை என்பதால், நமது போராட்டத்திற்கு சங்க வித்தியாசமின்றி அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.

கேள்விகளும் வரைமுறைகளும் அற்று, அதிகாரம் மட்டுமே செலுத்துவது நிர்வாகம் என்றால் அதனை நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நிர்வாகம் தனது மவுனத்தையும், இறுக்கத்தையும் களைந்து, நமது கோரிக்கைகளை ஏற்று, வங்கிக்கும், இங்கு பணிபுரிபவர்களுக்கும் சாதகமான நிலைபாட்டை எடுக்கும் வரை நாம் ஓயப்போவதில்லை.

தோழமையுடன்


   
(M.சோலைமாணிக்கம்)                                   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                           பொதுச்செயலாளர் - PGBOU