26.11.2014 அன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த பென்ஷன் வழக்கில், court proceedings- யின் நகலை இங்கு அப்படியேத் தருகிறோம்!
Showing posts with label Legal. Show all posts
Showing posts with label Legal. Show all posts
27.11.14
Pension case hearing on 26.11.2014
கடந்த ஓராண்டுக்கும் மேலே வாய்தா மேல் வாய்தாவாக சுப்ரீம் கோர்ட்டில் இழுத்தடிக்கப்பட்டு வந்த நமது பென்ஷன் வழக்கில், கடந்த ஒரு மாதத்தில் 29.10.2014 , 13.11.2014 , 20.11.2014 ஆகிய தினங்களில் தொடர்ந்து வாதங்கள் நடக்க ஆரம்பித்தன.
30.10.14
பென்ஷன் வழக்கு: Hearing on 29.10.2014
நாடு முழுவதுமுள்ள லட்சக்கணக்கான கிராம வங்கி ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் பென்ஷன் வழக்கு 28.10.2014 அன்று உச்சநீதிமன்றத்தில் ஹியரிங்குக்கு வந்தது. மதியத்திற்கு மேல்தான் நமது வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் மீண்டும் வாய்தா கேட்கப்பட்டது. நமது தரப்பில் வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து இருக்கிறார்கள், மேலும் ஒத்தி வைக்க முடியாது என மாண்புமிகு நீதிபதி அவர்கள் வழக்கை 29.10.2014 அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்து இருக்கிறார்.
8.3.14
AIRRBEA முயற்சியால் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்!
கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வங்கித்துறையில் கம்ப்யூட்டரை புகுத்தியதையொட்டி, 1992ல் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தத்தில் அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் ஒரு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என்று கையெழுத்தாகியிருந்தது.
இந்த ஒப்பந்தத்தை கிராம வங்கியில் ஊதிய உயர்வு அமல்படுத்துகிறபோது, கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க மறுத்து ஆணை வெளியிட்டது மத்திய அரசு. அந்த ஒப்பந்தப்படித்தான், நமக்கு பென்ஷனும் வங்கப்படவில்லை. இதனை எதிர்த்து நமது அகில இந்திய சங்கம் AIRRBEA தான் போராடியது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. கர்நாடகா ஹை கோர்ட்டில் தொடுத்த வழக்கில் ‘பென்ஷன் நமக்கு வழங்கப்பட வேண்டும்’ என்று வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பில்தான் ’கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும்’ என்கிற தீர்ப்பும் அடங்கியிருந்தது..
இதனை எதிர்த்து மத்திய அரசு அப்பீல் செய்திருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் , மத்திய அரசுவின் அப்பீல் நிராகரிக்கப்பட்டது. இதற்குப் பிறகு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என்கிற கட்டாயம் எழுந்திருப்பதால், மத்திய அரசின் நிதியமைச்சகம் நபார்டுக்கு ஒரு கடிதம் எழுதி, கிராம வங்கிகளுக்கு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்டை prospective effectஆக (இப்போதிலிருந்து) கொடுப்பது குறித்து சில விபரங்களைக் கேட்டு இருக்கிறது. நபார்டு, அந்த விபரங்களை ஸ்பான்ஸர் வங்கிகளுக்கு கேட்டு கடிதம் எழுதி இருக்கிறது. அந்தக் கடிதத்தின் நகலை சென்ற சனிக்கிழமை (1.3.2014) நமது அகில இந்திய சங்கம் நமக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து அந்தந்த கிராம வங்கி நிர்வாகங்களுடன் பேசி, சாதகமான பதிலைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று அறிவுறுத்தி இருந்தது.
அதன்படி, நாம் நமது வங்கியின் சேர்மன், பொது மேலாளார் ஆகியோரோடு உடனடியாக பேசினோம். ‘அப்படி விபரங்கள் கேட்டு கடிதம் இன்னும் தங்களுக்கு வரவில்லை. வந்தால் நிச்சயம் சாதகமான பதிலை எழுதுகிறோம்’ என நம்பிக்கை தெரிவித்தார்கள். தொடர்ந்து followup செய்வோம். விரைவில் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் அனைத்து கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைப்பதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றன.
இதே நேரத்தில், நமது பாண்டியன் கிராம வங்கியில் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்டிற்கு நாம் எடுத்துள்ள முயற்சிகளையும் தோழர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியுள்ளது. 1992லிருந்து கம்ப்யுட்டர் இன்கிரிமெண்ட் வழங்க வேண்டும் என PGBEA , லேபர் கமிஷனர் முன்பு தாவா ஏற்படுத்தியது. இருதரப்பிலும் நடந்த வாதங்களுக்குப் பிறகு, அந்தப் பேச்சுவார்த்தை failure ஆனது. அந்த ரிப்போர்ட் தொழிலாளர் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிறகு டிரியூப்னலுக்கு அந்த வழக்கு refer செய்யப்பட்டது. அங்கு நடந்த விசாரனைகளுக்குப் பிறகு 2004ம் ஆண்டு,, பாண்டியன் கிராம வன்கியில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் retrospective effect ஆக (1992லிருந்தே) கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வெளியானது. நமது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இந்தத் தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீலுக்குச் சென்றது. கோர்ட்டில் 15 லட்சம் mount கட்டச் சொன்னார்கள். நமது நிர்வாகம் 15 லட்சம் mount தொகை கட்டி வழக்கு நடத்திக்கொண்டு இருக்கிறது. அதிலும் நமக்கு சாதகமான தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது என்பதையும் இந்த நேரத்தில் நினைவு படுத்திக் கொள்கிறோம்.
ஆக, கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் பெற்றுத்தருவதற்கான அனைத்து வழிகளிலும், முயற்சிகளிலும் ஈடுபட்டது AIRRBEAவும், PGBEAவும் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளுங்கள்.

2.3.14
Two graduation increments to New Office Assistants
2013ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மிக ரகசியமாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் ஒரு அநீதியை இழைத்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இரண்டு graduation incrementகள் (ரூ.400 + ரூ.400) குறைக்கப்பட்டு, ரூ.8000/-த்திற்கு பதிலாக ரூ..7200/-ஆக அடிப்படை ஊதியம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த புதிய தோழர்களுக்காக graduation increment வாங்கித்தர கடுமையாக முயற்சித்து வந்தோம்.
கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொருமுறை வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் IBAவுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படும்போதெல்லாம் . மத்திய அரசு கிராம வங்கி ஊழியர்களுக்கும் அந்த இருதரப்பு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதன்படி, 24.7.2010ம் ஆண்டு மத்திய அரசு 9 வது இருதரப்பு ஒப்பந்தப்படி கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்தது. ஆனால் 11.2.2013ம் தேதி நபார்டு திடுமென கிராம வங்கி சேர்மன்களுக்கு தன் இஷ்டத்திற்கு ஒரு கடிதம் எழுதி graduation incrementஐ நிறுத்த ஏற்பாடு செய்தது. நிர்வாகத்திடம் பேசினோம். நபார்டு 11.2.2013 தேதியிட்டா கடிதத்தில். அனைத்து கிராம வங்கிகளுக்கும் ”இவ்விஷயத்தை நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும், நிதியமைச்சகத்திலிருந்து பதில் வரும் வரை கிராம வங்கி நிர்வாகங்கள் காத்திருக்க வேண்டும்’ என எழுதியிருப்பதை காட்டியது. கிரம வங்கி நிர்வாகங்களும் நபார்டை கைகாட்டிவிட்டு தங்களுக்கு இதில் பொறுப்பில்லை என நழுவிக்கொள்ளலாம்.
இது கிராம வங்கி நிர்வாகங்கள், நபார்டு, நிதியமைச்சகம் ஆகிய அனைவரின் குள்ளநரித்தனமான வேலை. இப்படி ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதைக் காரனம் காட்டி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இந்த இரண்டு இன்கிரிமெண்ட்கலை நிறுத்திவிடலாம் என்னும் சூழ்ச்சி இது
PGBEA இவ்விஷயத்தில் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அகில இந்திய சங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நிதியமைச்சகத்தோடு தொடர்பு கொள்ள வைத்தோம். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நபார்டு, நிதியமைச்சகத்திலிருந்து RTI Act மூலம் கேட்டு வாங்கி சேகரித்தோம்.
இறுதியாக , சென்னை ஹைகோர்ட்டு மதுரை கிளையில் PGBEA சார்பில் வழக்குத் தொடர்ந்தோம். நபார்டு எழுதிய கடிதம் செல்லாது எனவும், PGB நிர்வாகம் உடனடியாக 2013ல் வங்கியில் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கும் இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். 25.2.2014ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. PGB, NABARD, Govt of Indiaவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றன. நபார்டு தரப்பில், சொல்வதற்கு எந்தவித காரணமும், முகாந்திரமும் இல்லாததால், இவ்வழக்கு மிக விரைவில் நமக்கு சாதகமாக முடிவாகும்.
அதுவரை புதிதாக பணிக்குச் சேர்ந்த Office Assistantகள் ஓவ்வொரு மாதமும் basic pay ரூ.800 + அதற்குரிய DAவையும் மாதாமாதம் RDயில் போட்டு வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். 2013ல் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கு மட்டுமல்ல, இனி இந்த வங்கியில் பணிக்குச் சேரவிருக்கிற அனைத்து புதிய Office Assistant களுக்கும் இரண்டு graduation incrementகள் உறுதி செய்யப்படுகிறது.
PGBEA எப்போதும் தோழர்களுக்காக துணை நிற்கும். தோழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்!
24.1.12
Stay Oder: jewel appraiser's case
பாண்டியன் கிராம வங்கியில் அப்ரைசர்களிடம் லட்சக்கணக்கில் டெபாசிட் வசூலிக்க நிர்வாகம் முடிவெடுத்து சர்க்குலர் வெளியிட்டு இருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்து, ‘என்ன பாவம் செய்தார்கள் அப்ரைசர்கள்’ என அதுகுறித்து நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
இப்போது அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. சி.ஐ.டி.யூ வில் இணைந்திருக்கும் பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அப்ரைசர்கள் சங்கமானது, தங்கள் அப்ரைசர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. டெபாசிட்டைக் கட்ட முடியாத அப்ரைசர்களை, வெளியேற்றிவிட்டு குறிப்பிட்ட டெபாசிட்டைக் கட்டக் கூடிய புது அப்ரைசர்களை நியமிக்க வேண்டும் எனனும் நிர்வாகத்தின் சர்க்குலரைத் தடை செய்யக் கோரியது. அப்ரைசர்கள் சங்கத்தின் தலைவரான சி.ஐ.டி.யூ தோழர் பிச்சை சார்பில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் உள்ள நியாயம் உணர்ந்த நீதிமன்றம், இருக்கும் அப்ரைசர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என நிர்வாகத்தின் சர்க்குலருக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
( View/ Download )
இதன் மூலம் டெபாசிட் கட்ட முடியாத அப்ரைசர்கள் யாரையும் நிர்வாகம் வெளியேற்றிவிட முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது எனவும் அப்ரைசர்கள் தோழர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் தோழர்.கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Subscribe to:
Posts (Atom)