Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
Showing posts with label PGBWU. Show all posts
Showing posts with label PGBWU. Show all posts
2.6.17
குற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்!
Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
5.9.16
கடமலைக்குண்டு கிளை விவகாரத்தில் முதல் குற்றவாளி நிர்வாகமே!
கடமலைக்குண்டு கிளையில்
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு, probation periodல் இருந்த ஒரு ஆபிஸர் டெபுடேஷன்
வந்த ஒரு வாரத்தில் 78 நகைக்கடன்கள் வழங்கி
இருக்கிறார். அதில் repledge செய்த நகைக் கடன்களின், நகைப் பாக்கெட்டுகளில் பெரும்பாலும்
நகைகள் காணாமல் போயிருக்கின்றன. Safeல் வைத்த நகைப் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறையவில்லை.
21.1.16
PGBWU circular 1/2016 dated 20.1.2016
இன்று நம் சங்கத்தின் சுற்றறிக்கை தயாராகி இருக்கிறது. திங்கட்கிழமை கிளைகளுக்கு கிடைக்கும். அதற்கு முன்பு படிப்பதற்காக:
6.8.15
New Pay and Arrears to Clerical cadre
10 வது இருதரப்பு ஒப்பந்தப்படி , பல கிராம வங்கிகளிலும் புதிய ஊதியம் அமல் செய்யப்பட்டு வருகிறது.
5.4.15
16.7.14
PGBEA - PGBWU இணைப்பு மாநாடு!
13.7.2014,!
ஞாயிற்றுக்கிழமை!!
நமது தொழிற்சங்க இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாளாகி விட்டிருந்தது. மாநாடு நடந்த ‘ஆரியாஸ் மஹாலின்’ ஒவ்வொரு பகுதியிலும் சந்தோஷமும், நட்பும் ததும்பி இருந்தது. ஏக்கங்கள் எல்லாம் கலைந்து, ஒரு கனவு மெய்ப்பட்ட சிலிர்ப்போடு தோழர்கள் அனைவரும் காணப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை!!
நமது தொழிற்சங்க இயக்க வரலாற்றில் மிக முக்கியமான நாளாகி விட்டிருந்தது. மாநாடு நடந்த ‘ஆரியாஸ் மஹாலின்’ ஒவ்வொரு பகுதியிலும் சந்தோஷமும், நட்பும் ததும்பி இருந்தது. ஏக்கங்கள் எல்லாம் கலைந்து, ஒரு கனவு மெய்ப்பட்ட சிலிர்ப்போடு தோழர்கள் அனைவரும் காணப்பட்டனர்.
3.8.13
பயிலரங்கம் ஒத்திவைக்கப்படுகிறது!
நாளை (4.8.2013)ம் தேதி, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்காக நாம் பயிலரங்கம் ஒன்று நடத்துவதாக இருந்தது. அதே 4ம் தேதி, நமது பாண்டியன் கிராம வங்கியின் சார்பில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்குபெறும் கிரிக்கெட் விளையாட்டு நடக்க இருப்பதை தெரிவித்து, இந்த ‘பயிலரங்கத்தை’ இன்னொரு தேதியில் நடத்தலாமா என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்து பயிலரங்கம் நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து விரைவில் PGBEAவிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும். அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த பயிலரங்கம் குறித்து சுவாரசியமான ஒரு செய்தி:
நாம் எது நடத்தினாலும், போட்டிக்கு உடனடியாக அதுபோல ஒன்றை நடத்துவதை PGBWUஇப்போது வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டுள்ளது. அதுபோல நாம் பயிலரங்கம் நடத்துவது என முடிவு செய்து, புதிய தோழர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்திருந்தோம். அவ்வளவுதான். சிலிர்த்து எழுந்த PGBWU, அதே 4ம் தேதி தாங்களும் புதிய தோழர்கள் அழைத்து எதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டனர். புதிய தோழர்களை வீடு வீடாக கார்களில் சென்று சந்தித்து, டிரெய்னிங்கின்போது லாட்ஜ்களில் தங்கவைத்து, உணவு வரை ஏற்பாடு செய்து இதுவரை இரண்டரை லட்சம் செய்திருக்கிறோம், பத்தாயிரம் ருபாய்ச் செலவில் பயிலரங்கம் நடத்தி PGBEA அவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என கொந்தளித்தனர். ஆனால் அவர்களுக்கு எதாவது தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ‘பயிலரங்கம்’ போல ஒன்றை நடத்த முடியும். இந்தச் சிக்கலில் தவித்தவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று 'get to-gether' ஒன்று நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனை கேள்விப்பட்ட PGBEA உதவித்தலைவர் தோழர்.சுப்பிரமணியன் (பழைய பேட்டை) அவர்கள், PGBWUவின் தலைவர்களில் ஒருவரைப் பார்த்து இப்படி கேட்டாராம்:
“ஆமாம்ப்பா, நாங்க மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் கிளாஸ் நடத்துனா, போட்டியா நாங்களும் நடத்துறோம்னு வர்றீங்க. நாங்க புதுசா சேர்ந்தவங்களுக்கு training class நடத்துனா, போட்டியா நாங்க ‘get together' நடத்துவோம்னு வர்றீங்க. சரி. நாளைக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டமோ, தர்ணாவோ நாங்க நடத்துவோம். அப்பமும் போட்டிக்கு இப்படி வருவீங்களா?”
இதற்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்?
இந்த பயிலரங்கம் குறித்து சுவாரசியமான ஒரு செய்தி:
நாம் எது நடத்தினாலும், போட்டிக்கு உடனடியாக அதுபோல ஒன்றை நடத்துவதை PGBWUஇப்போது வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டுள்ளது. அதுபோல நாம் பயிலரங்கம் நடத்துவது என முடிவு செய்து, புதிய தோழர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்திருந்தோம். அவ்வளவுதான். சிலிர்த்து எழுந்த PGBWU, அதே 4ம் தேதி தாங்களும் புதிய தோழர்கள் அழைத்து எதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டனர். புதிய தோழர்களை வீடு வீடாக கார்களில் சென்று சந்தித்து, டிரெய்னிங்கின்போது லாட்ஜ்களில் தங்கவைத்து, உணவு வரை ஏற்பாடு செய்து இதுவரை இரண்டரை லட்சம் செய்திருக்கிறோம், பத்தாயிரம் ருபாய்ச் செலவில் பயிலரங்கம் நடத்தி PGBEA அவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என கொந்தளித்தனர். ஆனால் அவர்களுக்கு எதாவது தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ‘பயிலரங்கம்’ போல ஒன்றை நடத்த முடியும். இந்தச் சிக்கலில் தவித்தவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று 'get to-gether' ஒன்று நடத்தப் போவதாக அறிவித்தனர்.
இதனை கேள்விப்பட்ட PGBEA உதவித்தலைவர் தோழர்.சுப்பிரமணியன் (பழைய பேட்டை) அவர்கள், PGBWUவின் தலைவர்களில் ஒருவரைப் பார்த்து இப்படி கேட்டாராம்:
“ஆமாம்ப்பா, நாங்க மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் கிளாஸ் நடத்துனா, போட்டியா நாங்களும் நடத்துறோம்னு வர்றீங்க. நாங்க புதுசா சேர்ந்தவங்களுக்கு training class நடத்துனா, போட்டியா நாங்க ‘get together' நடத்துவோம்னு வர்றீங்க. சரி. நாளைக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டமோ, தர்ணாவோ நாங்க நடத்துவோம். அப்பமும் போட்டிக்கு இப்படி வருவீங்களா?”
இதற்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்?
23.7.13
EA circular 2/2013 dated 22.7.2013
சுற்றறிக்கை எண்: 2/2013 நாள்: 22.7.2016
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நமது வங்கியின் புதிய சேர்மனாக திரு.கார்த்திகேயன் பொறுப்பேற்று இருக்கிறார். நமது வங்கியில் ஏற்கனவே பொதுமேலாளராய் இருந்து நம் வங்கியையும், இங்குள்ள அனைவரையும் அறிந்தவர் அவர். வெளிப்படையான, பாரபட்சமற்ற, நேர்மையான, நட்புமிக்க அணுகுமுறையோடு பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை அவர் தலைமையேற்று நடத்திட விரும்புகிறோம். வங்கியின் வளர்ச்சி குறித்த சிந்தனைகளில், திட்டங்களில் ஊழியர்கள் நலனையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.
பல்வேறு விஷயங்கள் நிர்வகத்திடம் பேச வேண்டி இருந்தன. நேற்று நமது வங்கியின் பொதுமேலாளரை சந்தித்துப் பேசினோம்.
1. Drought Relief Loan: ஐந்து வருடத்திற்கும் குறைவான சர்வீஸ் உள்ளவர்களுக்கு Drought relief Loan-ன் முழுக் கடன் தொகை கொடுக்கப்படாமல், சர்வீசுக்கு ஏற்றாற் போல் குறைக்கப்பட்டு வந்தது. நாம் முழுத்தொகை கொடுக்க வேண்டும், instalment தொகையை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளுங்கள் என நிர்வாகத்திடம் பேசி வந்தோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கிளரிக்கலிலிருந்து, ஆபிசராக பதவியேற்று, இன்னமும் கிளரிக்கலாகவே இருக்கும் தோழர்களுக்கு Drough Relief Loanம் - கிளரிக்கலுக்கு உள்ளது போல ரூ.50000/- கொடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. நாம் ரூ.75,000/- கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகம் இந்த இரண்டு விஷயங்களிலும் நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிவித்தார். நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
2. சில தோழர்களுக்கு லீவு எடுத்ததற்கு சம்பளப்படித்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலசெவல் கிளையில் பணிபுரியும் தோழர்.செல்வராஜ் இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு ரொம்ப காலமாக லீவு ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்து வருகிறது. தொடர் விடுப்பில் சென்றிருந்த ஒரு தோழர் மீண்டும் பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை. கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்ற தோழர்.புதியம்பூ ராஜா அவர்களை ஒருவருடம் முடிந்த பிறகும் கன்பர்ம் செய்யாமல் இருந்தது நிர்வாகம். நாம் இவைகள் குறித்து பேசினோம். அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓரிரு நாட்களில் சாதகமான முடிவுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
3. Transfers: இந்த வருடத்திற்கான பொது மாறுதல்கள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஏப்ரல் மாதம் பேசும்போது, clerical recruitment-உடன் சேர்த்து போடுகிறோம், அரசு recruitmentக்கு அனுமதி வழங்கவில்லை என்றது நிர்வாகம். மே மாதம் இறுதியில், அரசு ஒப்புக்கொண்டு விட்டதாகவும், உடனடியாக சங்கத்தின் சார்பில் டிரான்ஸ்பர் லிஸ்ட் கொடுங்கள் என்றது நிர்வாகம். நாம் 1.6.2013 அன்று நம் சங்கத்தின் சார்பில் லிஸ்ட் கொடுத்தோம். ஆனால் ஜூன் மாதங்களில் நடந்து முடிந்த recruitment-உடன் நிர்வாகம் சொன்னது போல டிரான்ஸ்பர் போடப்படவில்லை. தொலைதூரங்களில் அவதிப்படும் நம் தோழர்கள் தங்கள் வேதனைகளை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வந்தனர். நாம் நிர்வாகத்திடம் சென்று, அனைவருக்கும் உடனடியாக டிரான்ஸ்பர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். பொதுமேலாளர், சேர்மன் இருவரையும் சந்தித்துப் பேசினோம். இப்போது clerical -ல் waiting list வெளியிடும்போது, தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களின் பாதிப்புகளை சரி செய்வதாக நிர்வாகம் சொல்லி வருகிறது. ஜூலை 6ம் தேதிதான் waiting listலிருந்து புதிய கிளரிக்கல் அப்பாயிண்ட்மெண்ட்டிற்கான லிஸ்ட் இறுதிபடுத்தப்பட வேண்டிய நாள். ஆனாலும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. நாம் பொது மேலாளரிடம் நம் வருத்தங்களை தெரிவித்தோம். அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள், பெரும்பாலும் மாறுதல்கள் இருக்கும் எனவும் பொதுமேலாளர் தெரிவித்தார்.
Graduation increment and original certificates to new Clericals:
ஆடிக்கு ஒரு சர்க்குலர், அமாவாசைக்கு ஒரு சர்க்குலர் போடும் PGBWU சங்கம் சமீப காலமாக வேக வேகமாக உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதவும், சர்க்குலர்கள் போடுவதுமாக இருக்கிறது.
நாம் புதிய தோழர்களுக்கு graduation increments கொடுக்காமல், குறைத்து ஊதிய நிர்ணயம் செய்து இருப்பதை அம்பலப்படுத்தி, அதுகுறித்து பிரச்சினைகள் எழுப்பிய உடனே, அதுவரை பேசாமல் இருந்த PGBWU சட்டென்று விழித்துக்கொண்டு, உடனே தாங்களும் அப்பிரச்சினை குறித்து பேசுவதாக புதிய தோழர்களுக்கு கடிதம் எழுதியது.
மெஸஞ்சர்த் தோழர்களுக்கு நாம் பதவி உயர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம், கலந்துகொள்ளுங்கள் என அந்தத் தோழர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தோம். அடுத்த நாளே நாங்களும் அதே நாட்களில் பயிற்சி வகுப்பு நடத்துகிறோம் வாருங்கள் என கடிதம் எழுதியது PGBWU.
புதிய தோழர்களின் அப்பாயிண்ட்மெண்ட்டின் போது original certificateகளை வாங்கிய நிர்வாகம் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதை சமீபத்தில் அறிந்தோம். இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்பதை நாம் இணையதளத்தில் எழுதினோம். சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு கடிதம் எழுதி, original certificateகளை விரைவில் வாங்கித் தருவோம் என நம்பிக்கையளித்திருந்தோம். அடுத்த நாளே, நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என PGBWU கடிதம் எழுதியது.
நம்மால், PGBWUவும் ஒரு தொழிற்சங்கமாக செயல்பட முயற்சிகள் செய்வது ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும், பிரச்சினைகள் குறித்த அடிப்படை அறிவும், தெளிவும் இல்லாமல் அவர்கள் இவ்விஷயங்களில் தலையிடுவது ஆபத்தானதாகவும் படுகிறது.
நபார்டிலிருந்து வந்த கடிதத்தை PGBWU தலைவர்களுக்கு நமது நிர்வாகம் காட்டியதாம். நிர்வாகம் பதிலுக்கு நபார்டுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், விரைவில் கிடைத்துவிடும் என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டதாம். அதை அப்படியே தங்கள் சுற்றறிக்கையில் இவர்கள் எழுதுவார்களாம். புதிய தோழர்கள் இனி இரண்டு இன்கிரிமெண்ட் குறித்து கவலைப்படாமல் அவர்கள் பாட்டுக்கு வேலை பார்க்கலாமாம். என்னய்யா ஜீபூம்பா வேலை இது!
24.7.2010ம் தேதி, மத்திய அரசு ஒரு ஆணை வெளியிடுகிறது. அதில் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தம் வழங்குவதற்கான ஒப்புதல் இருக்கிறது. அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டு இருக்கிறது:
“Pay scales and Dearness allowances of RRB employees as on 1.11.2007 would be equal to the corresponding categories of employees of the nationalised commercial banks. Pay for the purpose of DA, HRA and superannuation benefits shall mean basic pay, stagnation increments, specail pay, graduation pay, professional qualification pay and officiating pay, if any."
இந்த அரசு ஆணையை குறிப்பிட்டுத்தான் நமது வங்கியில் PAD/31/2010-11 எண்ணுள்ள சர்க்குலர் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்டு, நம் வங்கியில் உள்ள அனைவருக்கும் 9வது இருதரப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 2008, 2011ம் ஆண்டு இங்கு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay வாக இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இப்போது 2013ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எப்படி கொடுக்காமல் இருக்க முடியும் என்பதுதான் நமது கேள்வி. மத்திய அரசிலிருந்து 24.7.2010ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஆணையை மீறி, இன்னொரு ஆணை வெளியிடப்பட்டதாக எந்த அறிகுறியுமில்லை. நம் வங்கியிலும் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்ட சர்க்குலரை மீறி இதுகுறித்து வேறு சர்க்குலர்கள் வெளியாகவில்லை. பிறகு எப்படி இந்த நிர்வாகத்தால் முறையான அறிவிப்பு இல்லாமல் திடுமென graduation payவை நிறுத்த முடியும்? இங்கே இடையில் நபார்டு எங்கே வரும், எப்படி வரும்? மத்திய அரசின் ஆணையை விட , ஒரு நபார்டின் கடிதத்திற்கு சக்தி அதிகமா? இந்தக் கேள்விகளைத் தானே நாம் எழுப்புகிறோம்.
சரி. அந்த நபார்டு கடிதத்தில் என்ன இருக்கிறது? ‘graduation pay குறித்து சில கிராம வங்கி நிர்வாகங்கள் விளக்கங்கள் கேட்டு வருவதாகவும், அதுகுறித்து நபார்டு ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை காத்திருங்கள்' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. இதற்கு ஏன் graduation payவை நிறுத்த வேண்டும். மற்ற கிராம வங்கி நிர்வாகங்கள் நபார்டின் இந்தக் கடிதத்தை கண்டு கொள்ளாமால், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay கொடுத்திருக்கிறார்களே! நம் வங்கியில் மட்டும் ஏன் கொடுக்கவில்லை? இந்தக் கேள்வியைத்தானே நாம் எழுப்புகிறோம்.
இதுபோலத்தான் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் original certificateகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த நிர்வாகம் இன்னமும் கொடுக்காமல் இருப்பதுவும். PGBWUவிலிருந்து நிர்வாகத்தை சந்தித்துப் பேசினார்களாம். அடுத்த பயிற்சி வகுப்பின்போது நிர்வாகம் அனைவரும் திருப்பிக்கொடுக்கிறோம் என்றதாம். அதை அப்படியே சர்க்குலரில் போட்டுவிட்டு, ‘இனி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் அனைவரும் கவலைப்படாமல் அவர்கள் வேலையைப் பார்க்கலாம்” என அருள்வாக்கு வேறு.
இந்தப் பிரச்சினையில் இருக்கிற தார்மீக நெறிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தில் original certificate களை கொடுக்காமல் வைத்துக்கொண்டால், அந்த நிறுவனம் அந்த ஊழியர்களை bonded labor ஆக நடத்துகிறது என்பதுதான் சட்டரீதியான விளக்கமாகும். பெருத்த அநியாயம் என்னவென்றால், இந்த original certificateகளை வாங்கி வைத்துக்கொண்ட நிர்வாகம், அதற்கான acknowledgementஐக்கூட புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கவில்லை. இதுவா முறை?
நாம் இப்போதும் சொல்கிறோம். ஒருநாள் கூட நிர்வாகம் இந்த original certificateகளை தங்களிடம் வைத்திருக்க உரிமையில்லை. அதிகாரமில்லை. சட்ட ரிதியாக அனுமதியுமில்லை. எல்லாவற்றையும் புரிந்துகொண்டு நிர்வாகம் இதனை சரிசெய்யும் என விரும்புகிறோம். நிர்வாகத்திற்கு தர்மசங்கடங்கள் எதையும் நாங்கள் கொடுக்க விரும்பவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது செயற்குழுக் கூட்டமும் முடிவுகளும்:
அகில இந்தியச் செய்திகள், BEFIயின் நடவடிக்கைகள், மாநாடு குறித்த பரீசீலனைகள் என பல அஜெண்டாக்களில் விவாதங்கள் நடந்தன. அவைகளில் முக்கிய முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.
பணிச்சுமையும், பணி நெருக்கடிகளும்:
ஏறத்தாழ அனைத்துத் தோழர்களும் பங்கெடுத்த அர்த்தமுள்ள, ஆரோக்கியமான விவாதமாக இருந்தது. புதிய தோழர்களின் பார்வையில் இருந்த தெளிவும், நுட்பமும் வெளிப்பட்டது. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. தலைமையலுவலகத்தில் இருக்கும் பணிச்சூழல், ஒரே கிளையில் 10 business corespondent இருப்பது, கோடிக்கணக்கில் பணத்தை இரு பெண் ஊழியர்கள் மட்டும் பல கீ.மீ பயணம் செய்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்,கேஷ் பார்த்துக்கொண்டு NRGES அக்கவுண்டுகளுக்கு Batch posting போட வேண்டிய நிர்ப்பந்தம், Jewel loan திருப்புவதற்கு ஒருநாளைக்கு 250க்கும் மேற்பட்ட நோட்டிஸ் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் என பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. புதிதாக பணிக்கு ஒருபக்கம் ஆளெடுத்தாலும், புதிய புதிய பணிகள் கிளைகளில் கூடி, ஆள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாவதும் உணரப்பட்டது. நிர்வாகம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் வங்கியின் வணிகம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்துவது சரியல்ல என்பதும் புரிந்தது. இந்நிலையில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, முதலில், அவரவர்க்கான ‘Duties and responsibilities'ஐ வரையறுத்து நிர்வாகம் சர்க்குலர்கள் வெளியிட வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
மாறுதல்கள்:
மாறுதல்களில் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள், நிர்வாகம் காலதாமதம் செய்யும் போக்கு அனைத்தும் விவாதிக்கப்பட்டது. தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களுக்கும், பாதிக்கப்பட்ட தோழர்களுக்கும் உடனடியாக மாறுதல்கள் செய்ய வலியுறுத்துவது, இல்லையென்றால், உடனடியாக, எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதே வேளையில், இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் முறையான ஒரு டிரான்ஸ்பர் பாலிசியை வரையறுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைத்து, நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. நம் தரப்பில் ஒரு பாலிசியை முன்வைப்பதற்கு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழர்கள் சங்கர சீனிவாசன், மாதவராஜ், சோமசுந்தரம், சுப்பிரமணியன், கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் இருப்பார்கள்.
கோரிக்கைகள்:
கீழ்கண்ட கோரிக்கை சாசனம் ஒன்றை உருவாக்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.
பொருளாதரக் கோரிக்கைகள்:-
1)புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு இரண்டு graduation இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும்.
2) Transport Allowance வணிக வங்கிகளில் உள்ளது போல ரூ.225/-, 275/- கொடுக்க வேண்டும்.
3) வணிக வங்கிகளில் உள்ளது போல Housing Loan வழங்க வேண்டும்.
4) வணிக வங்கிகளில் உள்ளது போல வாகனக் கடன் வழங்க வேண்டும்.
5) இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் உள்ளது போல, Petrol reimbursement, House maintenance allowance வழங்க வேண்டும்.
6) LFC/LTC ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல உயர்த்தப்பட வேண்டும்.
7) 5 மணிக்குப் பிறகு வேலை பார்ப்பதற்கு Overtime allowance வழங்கப்பட வேண்டும்.
8) 2012, 2013 வருடக்கணக்கையொட்டி லீவு நாட்களில் வேலை பார்த்த தினங்களுக்கு compensatory allowance வழங்க வேண்டும்.
9) 2008ம் வருடம் பணியில் சேர்ந்த office Assistantகளுக்கு probation period -ல், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்க வேண்டும்.
10) 2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு maternity leaveக்குரிய salary வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு தவறுதலாக probation period extend செய்யப்பட்டதும் சரிசெய்யப்பட வேண்டும்.
11) தற்காலிக கடைநிலை ஊழியர்களின் தினசரி ஊதியம், நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தில் 1:30 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
12) Local chargesஐ கூட்ட வேண்டும்
13) Sweeping chargesஐ கூட்ட வேண்டும்.
கொள்கை ரீதியான கோரிக்கைகள்:
14) கிளரிக்கல், மெஸஞ்சர்த் தோழர்களின் Duties and responsibilities வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.
15) வணிக வங்கியில் இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி ஒரு முறையான Transfer policy வரையறுக்கப்பட வேண்டும்.
16) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் வாங்கி வைத்திருக்கும் ஒரிஜினல் சர்டிபிகேட்களை உடனடியாக நிர்வாகம் அவரவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
17) ஒரு கிளர்க்/கேஷியர், ஒரு நாளைக்கு அதிக பட்சமாக எத்தனை வவுச்சர்கள் / டிரான்சாக்ஷன்கள் Post செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக வரையறுக்க வேண்டும்.
அடிப்படை வசதிக்கான கோரிக்கைகள்:
18) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக திறந்த கிளைகளுக்கும் Ready Referenceஆக முக்கிய பழைய சர்க்குலர்களை தொகுத்து வெளியிட வேண்டும்.
19) அனைத்துக் கிளைகளிலும் ஏ.சி வசதி செய்யப்பட வேண்டும்.
20அனைத்துக் கிளைகளிலும், பெண் ஊழியர்களுக்கு என்று தனி கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
21 தலைமையலுவலகத்தில் பெண் ஊழியர்/அலுவலர் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவதற்கு, அரசு விதிப்படி, உடனடியாக Women cell அமைக்கப்பட வேண்டும்.
22 பழுதான பிரிண்டர்கள், கவுண்டிங் மெஷின்கள், கள்ள நோட்டு கண்டு பிடிக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டும்.
Regional Committee:
சங்கத்தின் நடவடிக்கைகளை பரவலாகக் கொண்டு செல்ல நான்கு Regional committee கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி:
1. தோழர்.சுகுமார், தருவைக்குளம் (கன்வீனர்)
2. தோழர். சோமசுந்தரம், ஆறுமுகனேரி
3. தோழர். கனகராஜ், எட்டையபுரம் ரோடு
4. தோழர்.அருளானந்தம், பொட்டகவயல்
5. தோழர். சதீஷ் , பழையகாயல்
6. தோழர்.சந்தான செல்வம், கீழக்கரை
7. தோழர். காளிராஜன் , முதுகுளத்தூர்
விருதுநகர்:
1. தோழர். ராஜ்குமார், காரியாப்பட்டி (கன்வீனர்)
2. தோழர். சங்கர், சங்கரலிங்கபுரம்
3. தோழர்.சுப்பிரமணியன், எம்.ரெட்டியாப்பட்டி
4.தோழர்.ராமநாதன், கீழடி
5.தோழர்.ராஜா கார்த்திகேயன், கன்னிவாடி
6. தோழர்.கணேசன், திருத்தங்கல்
7.தோழர்.சமுத்திரக்கனி, ராஜபாளையம்.
சிவகங்கை:
1. தோழர்.கலைசெல்வன், புதுக்கோட்டை (கன்வீனர்)
2. தோழர்.சுவாமிநாதன், தேவகோட்டை
3. தோழர்.அழகப்பன், திருவாடனை
4. தோழர்.வைரவன், அன்னவாசல்
5. தோழர்.வெள்ளைச்சாமி, கல்லுப்பட்டி
6. தோழர்.பழனியப்பன், ராயவரம்
7. தோழர்.வள்ளியப்பன், பெருமாள்மலை.
திருநெல்வேலி:
1. தோழர்.அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம் (கன்வீனர்)
2. தோழர். சுப்பிரமணியன், பழைய பேட்டை
3. தோழர். மகரபூஷணம்
4. தோழர்.ராஜமனோஹர், அம்பாசமுத்திரம்
5. தோழர்.சகிதாராமன், வள்ளியூர்
6. தோழர்.ஓ.சண்முகம், ராதாபுரம்
7. தோழர். செல்வகுமரேசன், பரப்பாடி.
வங்கியில் நிலவும் மந்த நிலையும்,
ஊழியர்கள் அலுவலர்களின் மனோநிலையும்:
பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மிகுந்த வருத்தத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். நடந்து முடிந்த clerical to officers பதவி உயர்வில் மொத்தம் 103 இடங்களுக்கு, 13 பேரே எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டதையும், இது ஆரோக்கியமான நிலைமை இல்லையே என ஆதங்கப்பட்டார். நாமும் அதே கருத்தைத்தான் தெரிவித்தோம். இதுகுறித்து நமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம்.
ஆபிஸர் பதவி என்பது கிளரிக்கலாக பணிபுரியும் பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு பொருளாதார ரீதியான உயர்வு மட்டும் காரணமில்லை, சமூக ரீதியான அந்தஸ்தும் முக்கியமான காரணம். இந்த ஆபிஸர் பதவிக்கு இதே வங்கியில் எவ்வளவோ போட்டிகள் நடந்திருக்கின்றன. நாலு பேர் தன்னை ‘கிளர்க்' எனச் சொல்வதை விட, ‘ஆபிஸர்' எனச் சொல்லும்போது கிடைக்கும் மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏங்கிய மனோபாவம் அது. ஒருமுறை கிளர்க் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “நமக்காக இல்லை என்றாலும், நம் குழந்தைகளுகாகவாது ஆபிஸர் ஆகணும். அவர்களது திருமண அழைப்பிதழில் தன் தந்தை ஆபிஸர் என குறிப்பிட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். இப்பேர்ப்பட்ட ஆபிஸர் பதவி வேண்டாமென்று பலரும் இன்று ஒதுங்கி நிற்க என்ன காரணம்?
ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறவருக்கு, அந்த வேலை மீது ஒரு பற்றும், பிடிப்பும் இருக்கும். அந்த வேலை தரும் ஆத்ம சுகம், திருப்தி, அந்த வேலை மூலம் தன் வாழ்வில் மேலும் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை என எதோ ஒருவகையில், அந்த ஊழியருக்கு வேலை பார்ப்பதற்கான உந்துசக்தி ஒன்று இருக்கும். இந்த உந்துசக்தி அவரின் வளர்ச்சிக்கு மட்டுமில்லை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது. வேலைபார்ப்பதில் ஈடுபாட்டையும், திறனையும் வளர்ப்பதற்கு இந்த உந்துசக்தியே அடிப்படையாகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு என்பதெல்லாம் அந்த உந்துசக்தியின் சில வடிவங்கள் அல்லது அடையாளங்களாய் இருக்கின்றன. ஆபிஸர் பதவி வேண்டாமென்று புறக்கணிப்பதன் மூலம், பலருக்கும் இந்த வங்கியில் உந்துசக்தியாக எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது. ஒருவகையான வெறுமையின் குறியீடாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிற விஷயமாகவும் இருக்கிறது.
“என்ன வேலை பார்த்து என்ன?”, “ இருக்கிற வரைக்கும், இப்படியே இருந்து எந்த பொல்லாப்பும் இல்லாம சீக்கிரம் ரிடையர் ஆயிரணும்”, “முழுசா என் கிராஜுவிட்டியை நான் வீட்டுக்கு கொண்டு போக முடியுமான்னு தெரியல..” “லோன் கொடுத்தாலும் தப்பு, கொடுக்கலன்னாலும் தப்பு...” “பிராஞ்ச்சில் என்ன நடக்குமோ, எது நடக்குமோன்னு தினம்தினம் கழிக்க வேண்டியிருக்கு..”, “வேலை பாக்குறவங்களுக்கு என்ன மரியாதை இருக்கு?” இப்படியான குரல்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் பின்னணியில் நாம் மேலே குறிப்பிட்ட ‘வெறுமை'க்கான அர்த்தங்கள் விளங்குகின்றன.
இந்த வங்கியில் பணிபுரிகிற ஊழியர்களையும், அலுவலர்களையும் motivate செய்வதற்கு பதிலாக இந்த நிர்வாகம் அவர்களை terroriseசெய்து கொண்டு இருக்கிறது. Friendlyயான சூழல் இல்லை. எல்லாமும் எல்லோரும் நெகடிவ்வாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், வெறுமைதான் சூழும். இதனால் வங்கியின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கி விடும்.
புதியவர்கள் நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற சூழலில், இங்கு ஏற்கனவே வேலை பார்ப்பவர்கள் சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தால்தான், அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். புதியவர்களுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.
சகலத்தையும் அடைத்துக்கொண்டு, இறுகிப்போய் இருக்கிற போக்குகளை விட்டொழித்து தலைமையலுவலகம் தன்னை புனரமைத்துக் கொள்ளாவிடில், நிலைமை இன்னும் மோசமாகும். நட்பும், பிரியமுமாய் மனம் இருந்தால்தான் உறவுகள் விரிவடையும். உந்துசக்திகள் ஏற்படும். இல்லையென்றால் யாருக்கோ வந்ததாய் ஒரு பிடிப்பற்ற, விட்டுப்போன மனோபாவாங்களே தலைதூக்கும். மரங்கள் துளிர்க்கும் இடங்களில் வெறுமை சூழ்வதில்லை. இதை எச்சரிக்கையாக மட்டுமில்லை, மிகுந்த வருத்தத்தோடும் சொல்லிக் கொள்கிறோம்.
ஒரு சந்தோஷமான, உற்சாகமான மனநிலையை இங்கு பணிபுரிகிறவர்களுக்கு ஏற்படுத்துவது குறித்து தீவீரமாக யோசிக்க வேண்டிய நேரமிது.
தோழமையுடன்
(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்
22.4.12
PGBEA - PGBOU circular 5/2012 dt 22.4.2012
சுற்றறிக்கை எண் : 5/2012 நாள்:22.04.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
அண்ணல் அம்பேத்கரின் 121வது பிறந்த தினமாக ஏப்ரல் 14 வந்திருக்கிறது. காலம் காலமாக இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக அவரது வாழ்க்கை நிறைந்திருக்கிறது. இந்த தேசத்தின் மனசாட்சியை பிடித்து உலுக்கியவர் அவர். புழுதியில் எறியப்பட்டு இருந்த மக்களைத் திரட்டி அதிகார பீடங்களுக்கு எதிராக நிற்கச் செய்தவர் அவர். வருண பேதங்களை போற்றிய அத்தனை புனிதங்களையும் தன் கேள்விச் சம்மட்டிகளால் நொறுக்கியவர் அவர். அவரது கலகக்குரல் மேலும் மேலுமாய் உயர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரளவும், தங்கள் மீதான கொடுமைகளை எதிர்த்துப் போராடவும் அவரே உத்வேகமளித்துக் கொண்டு இருக்கிறார். அவரை நினைப்பதும், வழி நடப்பதுவும் மனிதருக்குள் இருக்கும் பேதங்களை அகற்றும் மகத்தான காரியத்தை தீவீரப்படுத்தும். அண்ணல் அம்பேத்கரை போற்றுவோம்!
கம்யூட்டர்களுக்கு மின்சாரம் உண்டு; மனிதர்களுக்கு இல்லை!
கோடை உக்கிரமடைந்திருக்கிறது. மின்வெட்டு என்பது தமிழகத்தின் சாபமாய் பீடித்திருக்க, கிளைகளில் படும் துயரத்தை முதலில் சொல்லியாக வேண்டும். யுபிஎஸ் மூலம் கம்ப்யூட்டர்களுக்கு மட்டும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க, பழுதடைந்த, காலாவதியான ஜெனரேட்டர்களோ மனிதர்களுக்கு மின்சாரத்தைத் தர முடியாமல் மூலையில் முடங்கிக் கிடக்கின்றன. வேர்வை வழிய, வெக்கையிலும் புழுக்கத்திலும் அவிந்து கிடந்து நாம் வேலை பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்பிக்கொண்டு வரும் கஸ்டமர்களும் இதே அவஸ்தைப்பட மாறி மாறி ஒருவருக்கொருவர் வார்த்தைகளில் எரிச்சலைத் தீர்த்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. கடிதங்கள் மூலமும், தொலைபேசி மூலமும் ஜெனரேட்டரை மாற்ற வேண்டும், சரி பண்ண வேண்டும் என தகவல் தெரிவித்த பின்னும் தலைமையலுலவகத்தில் யாருக்கோ வந்தது என இருக்கிறார்கள். மேலே இருப்பவர்களுக்கு நமது அன்றாடப் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை. தெரிந்தாலும் பொருட்டில்லை. நமது உழைப்பை உறிஞ்சுவதில் கறாராக இருக்கும் இந்த புண்ணியவான்களுக்கு, நமக்கு ஒரு ஆரோக்கியமான பணிச்சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் அக்கறை இல்லை. தலைமையலுவலகத்தில் ஏசியும், மின்விசிறியும் வேலை செய்யாவிட்டால் இந்த உயரதிகாரிகள் எப்படி துடிதுடித்துப் போயிருப்பார்கள். மண்ணென்ணெய், பெட்ரோல், காதைக்கிழிக்கும் சத்தம் இல்லாத இன்வெண்டர் வசதியை அனைத்துக் கிளைகளுக்கும் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இல்லையென்றால் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்துப் பணியாற்றும் சூழல் ஏற்படும். நவீனத்துவமும், தொழில்நுட்பமும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் சரியான அணுகுமுறை.
இப்படி நமது எரியும் பிரச்சினைகளைப் பேசினால், 'யாரும் இங்கே நிம்மதியாக இருக்கக் கூடாது' என்றும், 'தொழிற்சங்கம் என்பதை மறந்து நாம் நிர்வாகம் போல செயல்படுகிறோம்' என்றும் PGBWU நம்மைப் பழித்துச் சர்க்குலர் போடும். நமது பிரச்சினைகளை நாம் பேசினால் தப்பா? அதற்குத்தானே தொழிற்சங்கம். 'எல்லோரும் இன்புற்று இருப்பதையன்றி யாமொன்றையும் அறியோம் பராபரமே' என இருக்க நாமென்ன சன்மார்க்க சங்கமா? எவ்வளவு அடித்தாலும் தாங்கிக்கொண்டு சிரிக்க, நாமென்ன அவர்களைப் போல காமெடிப் பீஸா?
தலைமையலுவலகத்திற்கு வந்த அனாமதேய இ-மெயில்!
சில நாட்களுக்கு முன் தலைமையலுவலகத்திற்கு ஒரு அனாமதேய இ-மெயில் வந்துள்ளது. CPPC, LRD, ARD, Advances என தலைமையலுவலகத்தின் பல துறைகளில் இருக்கும் உள்ள சீர்கேடுகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. இதனை உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சுட்டிக்காட்டி, "சரி பண்ணுங்கள்' என்று வேண்டுகோள் வைக்கப்பட்டு இருக்கிறது. ரகசியமாக வந்த மெயிலை, 'நான் ஒரு திறந்த புத்தகம்' என்று நிர்வாகம் தலைமையலுவலக்த்தின் நோட்டீஸ் போர்டில் அனைவரின் பார்வைக்கும் வைத்தது. அதன் போட்டோ நகலை நாம் நமது வெப்சைட்டில் வெளியிட்டு இருக்கிறோம்.
இந்த அனாமதேய இ-மெயிலில் காணப்படும் விஷயங்களில் சில அதிர்ச்சியளிப்பவையாய் இருக்கின்றன. சில முக்கியமானவையாய் இருக்கின்றன. அவை உண்மையாய் இருக்குமெனில், நிச்சயம் உடனடியாக அதனைத் தீர்ப்பதற்கு நிர்வாகம் முயல வேண்டும். எல்லோரின் பார்வைக்கும் இப்படி வைத்துவிட்டால் பிரச்சினை முடிந்துவிடாது. அதை சரிசெய்வதால் மட்டுமே, நேர்மையை பறைசாற்றிக்கொள்ள முடியும்.
நாம் இதுபோன்ற அனாமதேயங்களை எப்போதும் ஆதரிப்பதில்லை. எதையும் நிர்வாகத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, அதைத் தீர்ப்பதே, நேர்வழியென்று கருதுகிறோம். முகத்துக்கு நேராக பேச முடியாதவர்களே இதுபோன்ற காரியத்தில் இறங்குகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை, நமது சங்கத்தின் பார்வைக்கு கொண்டு வந்தால், இன்னும் அழுத்தமாக அம்பலப்படுத்தவும், தீர்க்கவும் நிச்சயம் முயலுவோம் நாம்.
அதிகரிக்கும் பணிச்சுமை தரும் அவஸ்தையும், ஆபத்துக்களும்!
சமீபமாக, கிளைகளில் பணிகள் சத்தமில்லாமல் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று No frill அக்கவுண்ட்! Business correspondentகள் மூலம் வந்து குவியும் SB account opening formகளை கம்ப்யூட்டரில் ஏற்றி மாள முடியவில்லை. இதுபோன்ற பணிகளைச் செய்வதற்கு கிளைகளில் கூடுதல் மனிதசக்தி தேவைப்படுகிறது. அதற்கு வழிசெய்யாமல், இருக்கும் ஊழியர்களை வைத்தே செய்ய வைப்பதில்தான் சிரமங்கள் கூடுகின்றன. மேலும் இந்த Business correspondentகள் கொண்டு வரும் அப்ளிகேஷன்கள் சிலவற்றில்தான் கையெழுத்து காணப்படுகின்றன. பெரும்பாலும் கைரேகைகள்தான். இந்த கைரேகைகளை கணிணியில் பதிவதற்கு HCL என்னும் பன்னாட்டு நிறுவனத்திடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அங்கு இருந்து வருகிறவர்கள் "ஆத்தைக் கண்டோமா, அழகரை சேவிப்போமா?" என இருக்கிறார்கள். அவர்கள் பிடிப்பதுதான் ரேகைகள். காட்டுவதுதான் வாடிக்கையாளர்கள். ஆள் மாறாட்டங்களுக்கும், ரேகை மாற்றங்களுக்கும் அதிக வாய்ப்பிருக்கிறது. அத்தனை பேரையும் போய் சரிபார்க்க இங்குள்ள அலுவலர்களுக்கு நேரம் இல்லை. வசதியும் இல்லை. எனவே இதில் ஏற்படும் முறைகேடுகளுக்கும், தவறுகளுக்கும் நமது ஊழியர்களும், அலுவலர்களும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை நாம் இங்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
அடுத்தது IBSA என்று ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்கள். அதற்கான வழிகாட்டும் விளக்கங்கள், பயிற்சியென எதுவுமில்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் IBSAவை போஸ்ட் செய்ய வேண்டும் என விதிகளும் இல்லை. 4.30 மணிக்கு மேலும் கேஷ் வாங்கி, சரிபார்த்து, அப்பாடா என கேஷை முடிக்க கிட்டத்தட்ட 6 மணி ஆகிவிடுகிறது. அப்போதுதான் வேறு ஒரு கிளையில் இருந்து வந்திருக்கும் IBSA transactionகளை வரிசையாய் கம்ப்யூட்டர் காட்டுகிறது. அதையெல்லாம் கணக்கு வழக்குப் பார்த்து Day end போட்டு முடித்து, சீட்டிலிருந்து எழுந்திருக்க சாதாரணமாக ஏழுமணி ஆகிவிடுகிறது.
இப்படி வேலை பார்த்தாலும் இங்கு மதிப்பில்லை. மரியாதையில்லை. எந்த நேரத்தில் என்ன தவறு நம்மையறியாமல் நடந்திருக்குமோ என பயமே ஆக்கிரமிக்கிறது. இதனால் ஏற்படும் stress நம் ஊழியர்களையும், அலுவலர்களையும் கடுமையாய் பாதிக்கிறது. அதுதான் வங்கியின் வளர்ச்சியிலும் எதிரொலிக்கிறது. இவ்விஷயத்தில் நமக்கு ஆதரவாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டிய நிர்வாகம் நம்மை எப்போதுமே எதிரிகளாய் பாவிக்கிறது. இது இன்றைய PGBயில் காணப்படும் பொதுவான மனநிலை. இதுகுறித்து தீவீரமாக உரையாடவும், தீர்ப்பதற்கான வழிகாணவும் வேண்டி இருக்கிறது.
இப்படியெல்லாம் நடைமுறை பிரச்சினைகளை விவாதித்தால், "வங்கி ஊழியர்கள் அனைவரும் நிம்மதியற்று நோய்நொடியுடன் வாழ வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு நாம் செயல்பட்டு வருவதாக' PGBWU சர்க்குலர் போடுகிறது. கொசுத்தொல்லை தாங்கமுடியவில்லை. ஊழியர்களும், அலுவலர்களும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றுதான் இதையெல்லாம் நாம் பேசுகிறோம். இது 'தொழிற்சங்க வியாதிகளுக்கு' ஒருபோதும் புரியப் போவதில்லை.
பதவி உயர்வு, பணிநியமனம், மாறுதல்கள்:
Offcers scale II மற்றும் Scale IIIக்கும் பதவி உயர்வு நடக்க இருக்கிறது. பங்குபெறும் அனைவரையும் நமது சங்கங்கள் வாழ்த்துகின்றன. குறிப்பிட்ட சிலவற்றைத் தவிர, பொதுவாக சென்ற முறை நடந்த பதவி உயர்வு நன்றாகவே இருந்தது. சீனியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் பதவி உயர்வு இருக்க வேண்டும் என்பதே நமது குரலாக எப்போதும் இருந்து வருகிறது. நிர்வாகம் அதனை கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம். மேலும் பதவி உயர்வுக்கான மதிப்பெண் பட்டியலை வெளியிட வேண்டுமென்று நாம் கோரிக்கை வைக்கிறோம். அது தேவையற்ற சந்தேகங்களை, வதந்திகளை தீர்ப்பதோடு வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர் பதவி உயர்வும், எழுத்தரிலிருந்து ஆபிஸர் பதவி உயர்வும் காலதாமதமாகும் என நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டது. எழுத்தர்களுக்கான புதிய பணிநியமனத்தையொட்டி, பதவி உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் புதிய பணி நியமனத்திற்கான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இதில் ஏற்படும் காலதாமதத்திற்கு நிர்வாகம் பொறுப்பில்லை. அரசுத்தரப்பில் இருந்து முடிவு எடுக்கப்படாமலும், பதில் வராமலும் இருக்கிறது. ஆனால் இந்தத் தாமதம் ஊழியர்களின் மனோநிலையையும், பணியையும் கடுமையாய் பாதிக்கும் என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.
பதவி உயர்வு, பணி நியமனம் போன்றவற்றில் இருக்கும் நிச்சயமற்ற தன்மை, மாறுதல்களிலும் எதிரொலிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களும், புதிய பணி நியமனம் பெற்றவர்களும், அருகாமையில் உள்ள கிளைகளுக்கு மாறுதல்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். சங்கத் தலைமைகள் இதுகுறித்து விவாதித்துக் கொண்டு இருக்கின்றன. நிர்வாகத்துடனும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். மிக விரைவில், சாத்தியமான முடிவுகள் எட்டப்படும்.
PGBWU என்னும் தொழிற்சங்க வியாதியை விரட்டுவோம், PGBEANகளை பாதுகாப்போம்!
பன்றிக்காய்ச்சலுக்கு எதிராக தமிழகம் முடக்கிவிடப்பட்டு இருக்கும் வேளையில், நாம் PGBயிலும் அதுபோல ஒரு ஆபத்தை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். PGBWU என்னும் அந்த நோய்க்கிருமி (வைரஸ்) பரவாமல் தடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. டிரான்ஸ்பர் என்னும் ஆசை காட்டி அந்த வைரஸ் பரவுகிறது. அந்த வைரஸ் பிடித்தால், எதிர்ப்பு சக்தியை மூளையிலிருந்து மெல்ல மெல்ல மழுங்கடித்துவிடும். நம் பிரச்சினைகளைப் பேசாமல், கோரிக்கைகள் வைக்காமல், அடிமை மனோபாவத்தை ஏற்படுத்திவிடும். நாமே நம் பிரச்சினைகளைத் தீர்க்கும் மனோவலிமை இழந்து 'அண்ணன் பார்த்துக்கொள்வார்', 'அண்ணன் செய்து முடிப்பார்' என பரிதாபமாக முடமாக்கிவிடும். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.
ஆறு பக்கத்திற்கும் மேலாக கிருமிகளை நிரப்பி சமீபத்தில் PGBWU ஒரு சர்க்குலர் விட்டிருக்கிறது. அதில் ஒரு வரி கூட, இந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் பிரச்சினைகளைப் பேசவில்லை. இதுதான் அவர்களின் லட்சணம். 30 வருடங்களாக இந்த வங்கிக்கு பணிபுரிந்து ஓய்வு பெறுகிறவர்களின் அவலம், கிளைகளில் வாட்டும் பணிச்சுமை, நிறைவேறாத பொருளாதாரக் கோரிக்கைகள் என எவ்வளவோ பிரச்சினைகள் நம்முன் இருக்கின்றன. அதுபற்றிப் பேசுவது நம் உடல்நலத்திற்கும், மனநலத்திற்கும் ஆகாது என்று உபதேசம் வேறு! நோய் வந்தால் "சிகிச்சை எடுக்காதே, மருந்து சாப்பிடாதே' என்று சொல்வதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம். அதனால்தான் PGBWUவை நாம் தொழிற்சங்கவியாதி என்கிறோம்.
நமக்கு AIRRBEA என்னும் அகில இந்திய சங்கம் இருப்பதுபோல், இவர்களுக்கு என்று ஒரு அகில இந்திய சங்கமே கிடையாது. கிராமவங்கிகளின் ஜீவாதாரமான பிரச்சினைகளை அகில இந்திய அளவில் பேசுவதற்கு ஒரு அமைப்பே கிடையாது. இதனால்தான் சவுத் மலபார் கிராம வங்கியில் உள்ள ஐ.என்.டி.யூ.சி இணைப்பிலுள்ள ஒரு குட்டிச் சங்கத்திலிருந்து (குட்டிச்சுவரிலிருந்து என்றும் வாசிக்கலாம். தப்பில்லை) காங்கிரஸ்காரரான கே.ராஜீவ் என்பவரை அழைத்து வந்து மாநாட்டில் பிலிம் காட்டியிருக்கிறார்கள். ஆனால் அரசியல் கட்சி என்றால் ஆகவே ஆகாது என்று ஜன்னி கண்டவர்கள் போல புலம்பவும் செய்வார்கள். அதுபோல மாநில அளவில் தங்களுக்கு இருக்கும் தொடர்பைக் காட்டுவதற்கு ஏ.கலியுல்லா என்று ஒருவரை வரவழைத்திருக்கிறார்கள். பல்லவன் கிராம வங்கியில் AIBEA இணைப்புச் சங்கத்தின் பொதுச்செயலாளர் அவர். இவர்களுக்கு மாநில அளவில் அமைப்பு இல்லாததால் கலியுல்லாவை வைத்து அடுத்த பிலிம் ஓட்டியிருக்கிறார்கள். அதுசரி. தியேட்டர் வைத்து, சினிமா வினியோகிப்பவர்களுக்கு அதுதானே தெரியும்!
அந்த கலியுல்லா, தங்களது AIBEA சங்கமோ, AIGBEA சங்கமோ கூட கிராம வங்கி ஊழியர்களின் பென்ஷனுக்காக போராடியதாகக் குறிப்பிடவில்லையாம். அகில இந்திய அளவில் பென்ஷனுக்கான அனைத்துப் போராட்டங்களிலும் இந்த சோட்டா PGBWU முன்னிற்பதைத்தான் பாராட்டினாராம். அய்யோ, அய்யோ. சமீபத்தில் பென்ஷனுக்காக நடந்த பிப்ரவரி 28 ஒருநாள் வேலைநிறுத்தத்தில் AIGBEA கூட பங்கு பெற்றதே, இந்த சோட்டா PGBWU பங்கு பெற்றதா? இதில் பெரும் வேடிக்கை என்ன வென்றால், இவர்களது ஆகப்பெரும் தலைவர் எல்.பாலசுப்பிரமணியன் சொன்னதாக அவர்களது சர்க்குலரிலேயே இப்படித்தான் குறிப்பிடப்படுகிறது: 'அகில இந்திய அளவில் தான் குரல் கொடுத்து, கிராம வங்கி ஊழியர்களுக்கு வங்கித்துறை ஓய்வூதியம் விரைவில் கிடைத்திட பாடுபடப் போவதாக கூறினார்'. ஆக, இனிமேல்தான் பாடுபடப்போகிறார்கள். இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள்.
அப்ரைசர்களுக்காக உளப்பூர்வமாகவும், செயல்பூர்வமாகவும் குரல் கொடுத்தது PGBOUவும் PGBEAவும். அவர்களுக்கு ஆதரவாக வழக்குத் தொடர்ந்து, நிர்வாகத்தின் சர்க்குலரை நிறுத்தி வைத்து, இன்று பணிபுரியும் அனைத்து அப்ரைசர்களின் எதிர்காலத்தையும், வாழ்வையும் காப்பாற்றியது சி.ஐ.டியூ சங்கம். அந்த வழக்குச் செலவைக் கூட, அப்ரைசர்களிடமிருந்து யாரும் பெறவில்லை. ஆனால் அவர்களுக்காக ஒரு துரும்பைக்கூட அசைக்காமல், கூச்சநாச்சமில்லாமல் பத்தாயிரம், ஐயாயிரம் என PGBWU மாநாட்டு வசூல் செய்ததைத்தான் நமது சென்ற சர்க்குலர்களில் சுட்டிக்காட்டியிருந்தோம். எதையுமே செய்யாமல் என்று நாம் குறிப்பிட்டதைப் பற்றிப் பேசாமல் மாநாட்டு நிதி வசூல் செய்வதை நாம் குறை சொன்னதாக தொழிற்சங்க வியாதி பொங்கி எழுந்திருக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் என்றால் அப்ரைசர்களுக்காக இதையெல்லாம் நாங்கள் செய்திருக்கிறோம் என சொல்லட்டுமே. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்!
அதை விட்டு விட்டு, நமது பொதுச்செயலாளர் உடல்நலக்குறைவுற்றிருந்த போதும், அவரது மகள் திருமணத்தின் போதும் உறுப்பினர்களிடமிருந்து மிரட்டி, ஏமாற்றி, நிர்ப்பந்தப்படுத்தி வசூல் செய்யப்பட்டதாம். அவர் வேண்டவே வேண்டாம் என மறுத்தும், அவர் மீது அன்பும், தோழமையும் கொண்ட உள்ளங்கள் தானாக முன்வந்து செய்த உதவியை இழிபுத்திகளால் மட்டுமே இப்படி கொச்சைப்படுத்த முடியும். நம் பொதுச்செயலாளரின் கால்தூசிக்கு பெறுவார்களா? தொழிற்சங்கத்துக்காக அவர் செய்திருக்கும் அர்ப்பணிப்பு, தியாகத்தில் ஒரு துளியையாவது கடைந்தெடுத்த அந்த சுயநலவாதிகளும், வியாபாரிகளும் தங்கள் வாழ்நாளில் செய்திருப்பார்களா?
நாம் சங்கமாக வைத்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள்தாம் முதலில் தனிநபர்கள் மீது அவதூறுகளை வீசியிருக்கிறார்கள். எனவே நாம் அவைகளை உண்மைகளால் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வங்கியில் பத்து வட்டி என்ற அடைமொழியோடு அழைக்கப்படுவது யாராம்? நல்லூர் கிளையில் சாதாரண கிளர்க்காய் இருந்த ஒருவருக்கு இன்று கோடிக்கணக்கான சொத்துக்களும், தியேட்டர்களும் எப்படி சொந்தமாயின? நேற்று வரை பஸ்ஸுக்கு நாற்பதும், ஐம்பதுமாய் கிளை மேலாளரிடம் கடன் வாங்கிக்கொண்டு இருந்த ஒருவர் இன்று பனிரெண்டு லட்சம் வேகன் வண்டியில் திடீரென்று வந்து இறங்குவது எப்படி? கையை கையைப் பிசைந்து கொண்டு இருந்த இன்னொருவர் இன்று தன் வீட்டில் மூன்றாவது காராக பதிமுன்று லட்சம் ஷைலோவை நிறுத்தி வைத்திருப்பது எப்படி? அவர்கள் எல்லாம் உழைப்பால் உயர்ந்த உத்தமர்களா? ஊரார் வயிற்றில் அடித்து, உலை வைத்ததால் வந்தவைதானே? அந்தக் கதைகளை எல்லாம் பேசுவோமா? சுயநலமே உருவான அவர்கள் எங்கே? இத்தனை வருடம் பணிபுரிந்தும் தனக்கென்று ஒரு சொந்த வீடு இல்லாமல், தொழிற்சங்கப் பணிகளுக்காய் ஆயிரம் நாட்களுக்கு மேல் லீவு போட்டு இழப்புகளை தாங்கிக்கொண்டு இருக்கும் நமது பொதுச்செயலாளர் எங்கே?
ஜாக்கிரதை. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது, நிலமோசடி செய்தது என பெரும் தலைகள் வழக்குகளை சந்தித்து வரும் காலமிது. போனால் போகிறது என இந்த தொழிற்சங்க வியாதிளை விட்டு வைத்திருக்கிறோம். இதற்கு மேலும் சீண்டினால், அவர்கள் குறித்த கணக்கு வழக்குகள் என ஆரம்பித்து, நமது வெப்சைட்டில் ஒவ்வொன்றாக வெளியிட வேண்டி வரும். அதுகுறித்து பகிரங்க விசாரணைக்குத் தயாரா?
இந்த வங்கியில் தொழிற்சங்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை எங்கள் பணியாக செய்து வருகிறோம். இங்கு பணிபுரியும் ஊழியர்கள், அலுவலர்களின் சுய மரியாதையையும், உரிமைகளையும் பேணி நிறுத்த வேண்டியது எங்கள் பொறுப்பாக உணர்ந்திருக்கிறோம். தொழிலாளர் வர்க்கத்தின் குரலாக எங்களை முன்னிறுத்தியிருக்கிறோம். நியாயங்களுக்காக எந்த சமரசமும் அற்றுப் போராடுவதை எங்கள் மூச்சாகக் கொண்டு இருக்கிறோம். அதற்காக எந்த தியாகத்தையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம். இதற்கு இடையூறாய் இருப்பவர்களையும், சமரசப் பார்வை கொண்டு தொழிற்சங்க இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறவர்களையும் வேரோடும், வேரடி மண்ணோடு வீழ்த்தவும் சித்தமாயிருக்கிறோம்.
கோடிக்கால் பூதமடா! கோபத்தின் ரூபமடா!!
தொழிலாளி வர்க்கமடா!!! - அது தோற்றதில்லை தெரியுமாடா?
பென்ஷனை முன்வைத்து நமது அகில இந்திய இயக்கம்:
(1) பென்ஷன் (2) தேசீய கிராமப்புற வங்கி (3) தற்காலிக ஊழியர்களின் பணிநிரந்தரம் (4) ஸ்பான்ஸர் வங்கி அலுவலர்கள் டெபுடேஷனை ரத்து செய்தல் (5) வங்கியின் நிர்வாகக்குழுவில் அலுவலர்கள், ஊழியர்களின் பிரதிநிதிகளுக்கு இடம் ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நமது அகில இந்திய சங்கம் AIRRBEA தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது.
முதற்கட்டமாக, நாடு முழுவதும் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதம் பெற்று நிதியமைச்சருக்கு சமர்ப்பிப்பது என முடிவு செய்யப்பட்டது. நாமும் பத்துக்கும் மேற்பட்ட எம்.பிக்களிடம் கடிதம் வாங்கி அனுப்பி இருக்கிறோம். அடுத்ததாக, மாநிலத் தலைநகரில் ரிசர்வ் வங்கி, நபார்டு அலுவலகங்களில் மெமோரெண்டம் அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. PGBEA , PGBOUவின் பொதுச்செயலாளர்கள் சென்னை சென்று மெமொரெண்டம் அளித்து வந்திருக்கின்றனர்.
வரும் 26ம் தேதி டெல்லியில் நமது அகில இந்திய சங்கம் தர்ணாவும், கருத்தரங்கமும் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாடு முழுவதும் இருந்து டெல்லி நோக்கி பல்லாயிரக்கனக்கில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் திரளும் மகத்தான போராட்டம் அது. தமிழகத்திலிருந்து 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள இருக்கிறோம். கிராம வங்கிகளின் வரலாற்றில், கிராம வங்கி ஊழியர்களின் வாழ்க்கையில் AIRRBEAவே காற்றாகவும், வெளிச்சமாகவும் இருக்கிறது!
இரண்டு நாளைக்கு முன் உடல்நலக்குறைவால் சிசிச்சை பெற்றிருக்கிறார் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.திலீப் குமார் முகர்ஜி. மருத்துவர்கள் அவர் திரவ உணவுதான் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் டெல்லி தர்ணாவுக்கு நான் வருவேன் என அவர் செய்தி அனுப்பியிருக்கிறார். ‘கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வாங்கித் தந்துவிட்டுத்தான் என் உயிர் போகும்' என்று சொல்கிறவர் அவர். உண்மையான தொழிற்சங்கத் தலைவர் அவர்!
தோழமையுடன்
(J.மாதவராஜ்) (P.S.போஸ்பாண்டியன்)
தலைவர் - PGBEA தலைவர்- PGBOU
Subscribe to:
Posts (Atom)





