Showing posts with label cir2013. Show all posts
Showing posts with label cir2013. Show all posts

26.11.13

PGBEA - PGBOU circular 5/2013 dated 25.11.2013


Pandyan Grama Bank Employees Association
Pandyan Grama Bank Officers Union

சுற்றறிக்கை எண் : 5/2013                    நாள்: 25.11.2013

அருமைத்தோழர்களே!

வணக்கம்.

பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டது.  அவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை  எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட நமது தோழர்கள் வருகையால் அரங்கம் நிறைந்து, உட்கார இடமில்லாமல் வெளியே நின்று, விழாவினை ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தனர். வங்கியின் சேர்மன் திரு.கார்த்திகேயன், அன்றைய தினம் முக்கிய அலுவல்கள் காரணமாக வர இயலாததைத் தெரிவித்து வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார். பொதுமேலாளர்களும் அனுப்பி இருந்தனர். அழைப்பிதழ்களில் இடம் பெறாவிட்டாலும், AIRRBEAவின் தலைவர் ராஜீவன் அவர்களும், Joint secretary  தோழர் மதனன் அவர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர். AIRRBEAவின் vice-president நாகபூஷண் ராவ்,  விருதுநகர் மாவட்ட சி.பி.எம் செயலாளர்  தோழர்.சேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.பாலசுப்பிரமணியன், நமது அட்வகேட் தோழர்.கீதா மற்றும் CITU, BEFI, AIIEA சங்கத்தலைவர்களும், தோழர்களும் வந்திருந்தனர்.

கரிசல் குயில் திருவுடையான் பாடல்களோடு ஆரம்பித்த நிகழ்ச்சி, இசையின் வழியாக காலங்களை அசை போட வைத்தது. PGBEA தலைவர் தோழர்.சங்கரசீனிவாசன் தலைமை தாங்க, PGBOU  தலைவர் தோழர்.சாமுவேல் ஜோதிக்குமார் முன்னிலை வகிக்க நிகழ்ச்சி ஆரம்பித்தது. தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும், அவரது துணைவியாரையும் மேடைக்கு அழைத்து உட்கார வைத்த கணம், மொத்த அரங்கமும் அன்பின் மிகுதியால் ஆரவாரித்தது.

தோழர் சோலை மாணிக்கத்தை, அவரது பணிகளை  பலரும் நினைவுகூர்ந்து பேசினர்.  சமரசமற்ற அவரது போர்க்குணம்,  சலிப்பற்ற அவரது பயணம், எதிர்பார்ப்பற்ற அவரது நடவடிக்கைகள் அவரவர் அனுபவங்களால் முன்வைக்கப்பட்டன. குடும்ப  வாழ்வுக்கும், சங்க வாழ்வுக்குமிடையில் ஒரு தொழிற்சங்க முன்னணி ஊழியர்  கழித்த நாட்கள் சாதாரணமானவையல்ல. அது  ஒரு தனிமனிதனின் சாதாரண வாழ்வாக மட்டுமில்லாமல், ஒரு இயக்கத்தின் உயிர்த்துடிப்பு மிக்க காலமாகவும் இருந்ததை அறிய முடிந்தது.

தோழர்.சோலைமாணிக்கம் தனது ஏற்புரையில்,  தன்னை `first servant of PGBEA` என அறிமுகப்படுத்திக்கொண்டார்.  இந்த தொடர்  ஓட்டத்தில் தனது கரங்களில் இருந்து, தீபத்தை ஏந்திச் செல்ல இளைய கரங்கள் வந்துவிட்டன என்னும் சந்தோஷமும், திருப்தியும் தனக்கு இருப்பதாக நம்பிக்கையோடு குறிப்பிட்டார். வங்கியின் பணிகளிலிருந்து மட்டுமே விடைபெறுகிறேன், உங்களிடமிருந்து அல்ல, என்று சொல்லி `workers unity zindabad, working class unity zindabad' என்னும் தன் கம்பீரமான குரலால் கோஷங்கள் எழுப்ப, அனைவரும் அதைத் திருப்பிச் சொல்ல உணர்ச்சிப் பெருக்கில் நிறைந்திருந்தனர் அனைவரும். இது ஒரு காட்சி. 

இப்படி வங்கியில் பணிபுரியும் தோழர்களின் மனநிலையில், உயர்ந்து நிற்கும் தோழர் சோலைமாணிக்கத்தை அவமானப்படுத்தவும், களங்கப்படுத்தவும், தண்டனை வழங்கவும் துடித்துக் கொண்டு இருக்கிறது நிர்வாகம். அது இன்னொரு காட்சி.

தோழர் சோலைமணிக்கத்தைப் பழிவாங்கும் நோக்த்துடன் இந்த நிர்வாகம் 2010ம் ஆண்டு ஆரம்பித்த ஒழுங்கு நடவடிக்கைக்கு இன்னும் Final Order கொடுக்கவில்லை. இந்த நிலையில் தோழர்.சோலைமாணிக்கத்தின் சேமிப்புக்கணக்கை ஆராய்வதற்கு நிர்வாகம் ஆய்வாளர்கள் பலரை இறக்கிவிட்டு இருக்கிறது. நேர்மையான, நியாயமான, சமரசமற்ற ஒரு தொழிற்சங்கத்தலைவரின் பணி ஓய்வு என்பது நிம்மதியாக இருக்கக்கூடாது என நிர்வாகம் நினைக்கிறது. அவரது ஓய்வூதியச் சலுகைகளை நிறுத்துவதற்கு திட்டமிடுகிறது.

இந்த நேரத்தில் நாம் அனைவரும் தோழர்.சோலைமாணிக்கம் பக்கம் நிற்பதுவும், அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்புவதும் அவசியம். பணி ஓய்வு விழாவில் பேசிய நமது அட்வகேட் கீதா அவர்கள் இதனை குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் இத்துடன் நாம் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு அனுப்ப வேண்டிய  கடிதத்தின் நகல் இந்த சுற்றறிக்கையோடு இணைக்கப்படுகிறது. தோழர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, கீழ்க்கண்ட முகவரிக்கு கிளை வாரியாக உடனடியக அனுப்பு வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Com.J.Mathavaraj
General Secretary - PGBEA
Pandyan Grama Bank
Soolakkarai Medu
Virudhunagar Dist

தோழர்களே, நமக்காக உழைத்த ஒரு தொழிற்சங்கத் தலைவரோடு நாம் நிற்கிறோம் என்பதை நிர்வாகத்துக்கு நாம் உணர்த்த வேண்டிய நேரம் இது. நிர்வாகத்தின் அராஜகமான, அநியாயமான நடவடிக்கைகளை எதிர்த்து ஒன்றுபட்டு நிற்கிறோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது.

இந்த சுற்றறிக்கை படித்தவுடன் தாங்கள் செய்கிற முதல் வேலையாக, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடிங்களில் தங்கள் கிளைகளில் உள்ள தோழர்கள் கையெழுத்திட்டு, தபாலில் அனுப்பி வைக்கிற காரியமாக இருக்கட்டும்.

நமது  கையெழுத்தின் வலிமையை உணர்த்துவோம்.
(தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்)

தோழமையுடன்


                                                                                                                                                                                 
(J.மாதவராஜ்)                                                                                       (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                                  பொதுச்செயலாளர் - PGBOU     
____________________________________________________________________________
கடித நகல்:


From

Name:
Post:
Roll no:
Pandyan Grama Bank
Branch:



To

The chairman
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar


Respected sir,

I would like to place on record the service rendered by Mr. Solai Manickan as the General Secretary and President of Pandyan Grama Bank Employees Association in the past years which enabled the smooth functioning of the Bank.  He was a leader who stood by his ideologies and principles and looked forward for the welfare of the employees and the Bank.  

I hereby urge the Management of the Pandyan Grama Bank to permit Mr. Solaimanickam, Vice President of Pandyan Grama Bank Employees Association who is due to retire from service on 30.11.2013, to retire peacefully and with the satisfaction of serving the Management, by withdrawing all the Disciplinary proceedings initiated against him and not to harass him further by initiating any fresh disciplinary proceedings.

Thanking you


Yours faithfully



( )


Date :
Place:
___________________________________________________________________________

தோழர் சோலைமாணிக்கம் பணிநிறைவு விழாக் காட்சிகளை கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்:




25.11.13

Joint Forum of All Trade unions Circular 2/2013



Joint Forum of All Trade Unions in Pandyan Grama Bank
(PGBOU, PGBOA, PGBSEWA, PGBWU, PGBEA)
Virudhunagar

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நிர்வாகம் அப்ரைசர்களுக்கு கிளை மாறுதல் செய்திருப்பது குறித்து சென்ற சர்க்குலரில் நமது நிலைபாட்டை தெரியப்படுத்தி இருந்தோம். அதிகாரபூர்வமற்ற முறையில், வாய்மொழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருப்பதை விமர்சித்து இருந்தோம். சட்டத்திற்கும், விதிமுறைகளுக்கும் எதிராக நிர்வாகம் கடைப்பிடித்து வரும் நடைமுறை கண்டனத்திற்குரியது. இதனை எதிர்த்து, `அப்ரைசர்களுக்கு கிளை மாறுதல்` குறித்து எழுத்துபூர்வமாக நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும், அதுவரை புதிய அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள்  வழங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தி இருந்தோம். நமது அறைகூவலை ஏற்று, பல கிளைகளில் புதிய அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில், நமது ஐந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் மீண்டும் 23.11.2013 அன்று நிர்வாகத்தை சந்தித்து பேசினோம். நமது வேண்டுகோளை ஏற்று வங்கியின் சேர்மன், வங்கியின் நிர்வாகக்குழுவை 29.11.2013 அன்று ஐந்து சங்கங்களின் பிரதிநிதிகளும் சேர்ந்து சந்தித்துப் பேசுவதற்கும், நமது நிலைபாட்டை நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவித்தார். அதுவரை நிர்வாகம் வாய்மொழி உத்தரவாக தெரிவித்தபடி, வேறு அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்க ஒத்துழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்த பிறகு, வங்கியின் நலனை கருத்தில் கொண்டு, 29.11.2013 வரையிலும், நமது கிளை மேலாளர்கள் நிர்வாகத்துக்கு எழுத்து பூர்வ்மாக ஒரு  கடிதம்  எழுதிவிட்டு, வேறு அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்குவார்கள் என தெரிவித்திருக்கிறோம். கடிதத்தின் நகல் இத்துடன் இணைக்கப்படுகிறது. இந்தக் கடிதத்தை எழுதிவிட்டு, நமது மேலாளர்கள் 25.11.2013 அன்று முதல் நிர்வாகத்தால் வாய்மொழி உத்தரவுப்படி அனுப்பப்பட்ட அப்ரைசர்களை வைத்து நகைக்கடன்கள் வழங்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

29.11.2013 அன்று நிர்வாகக்குழுவை சந்தித்து நமது ஐந்து சங்கப் பிரதிநிதிகளும், அப்ரைசர்களுக்கு இடமாற்றம் வேண்டாம் என்னும் நம்கருத்தை முன்வைத்து விவாதிப்பது எனவும் முடிவு செய்திருக்கிறோம். 29.11.2013 நிர்வாகக்குழுவை சந்தித்து பேசியபிறகு, மேற்கொண்டு நாம் என்ன செய்வது என்பதை முடிவு செய்து அறிவிக்கிறோம்.

கடித நகல்:

-------------------------------------------------------------------
From

Manager
Pandyan Grama Bank
_________________ Branch



To

The Regional Manager
Pandyan Grama Bank
Regional Office
______________________


Sir

Sub: Engagement of Appraisers

As per the oral/Telephonic instructions given by the Regional Office,                                                      we engage Sri.                                                  , regular appraiser of the                                                   branch to appraise the jewels for the jewel loans granted by our branch from 25.11.2013.

This is for your kind information and our records.

Thanking you

Yours faithfully


Branch Manager

Date:
Place

-------------------------------------------------------------------

தோழர்களே!

அப்ரைசர்கள் பிரச்சினையில் நமது ஐந்து சங்கங்களும் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். இது ஆரம்பமே.

20.11.2013 அன்று கூடிய நமது சங்கங்கள்,  இவ்வங்கியில் அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகள் இருப்பதை விவாதித்தோம். முக்கியமாக தலைமையலுவலகத்தை புனரமைப்பது, ஒழுங்கு நடவடிக்கைகளில் காணப்படும் ஒழுங்கீனங்கள், பணி ஓய்வு பெறுகிறவர்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் பணத்தை அபகரிப்பது மற்றும் லீவுகளில் நடத்தப்படும் கெடுபிடிகள் குறித்து ஒருமித்த கருத்து உருவாகியிருக்கிறது. விரைவில் அவைகளை முன்வைத்து நமது ஒற்றுமையால் வென்றெடுப்பது என முடிவு செய்திருக்கிறோம்.

விரிவான செய்திகளுடனும், முடிவுகளுடனும் விரைவில்.

தோழமையுடன்
GS-PGBOU                   GS-PGBOA             GS-PGB SEWA       GS-PGBWU                 GS-PGBEA





19.11.13

Joint Forum of All Trade unions Circular 1/2013



இந்த வங்கியில் அலுவலர்களுக்கு, ஊழியர்களுக்கு விரோதமாக இந்த நிர்வாகம் தொடர்ந்து பல வழிகளிலும் செயல்பட்டு வந்தது. இதுகுறித்து சங்கங்களிடையே தனித்தனி பார்வைகள் இருந்தாலும், அவை இந்த நிர்வாகத்தின் முறையற்ற, மனிதாபிமானமற்ற நடைமுறைகளுக்கு எதிராக இருந்தன. முணுமுணுப்பாக  இருந்த அதிருப்தியும், விமர்சனங்களும் இப்போது ஒருமித்த கருத்தாக எழுந்திருக்கின்றன. அப்ரைசர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கும் கோபத்தில் அனைத்து ஊழியர்களின் நலன்களும், உரிமைகளும் அடங்கியிருக்கின்றன. அதன் ஆரம்பமே இந்த சுற்றறிக்கை:-
______________________________________________________________________________

Joint Forum of All Trade Unions in Pandyan Grama Bank
(PGBOU, PGBOA, PGBSEWA, PGBWU, PGBEA)
Virudhunagar


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

கடந்த சில தினங்களாக `அப்ரைசர்களுக்கு டிரான்ஸ்பர்` என்னும் செய்தி அடிபட்டுக் கொண்டு இருந்தது. அதுகுறித்து நிர்வாகம் சங்கங்களோடு கலந்தாலோசித்து முடிவெடுக்கும் என நாம் நம்பியிருந்தோம். ஆனால், நிர்வாகம் எதுபற்றியும் கவலைப்படாமல், சிலரது ஆலோசனைகளையும், தவறான வழிகாட்டுதல்களையும் நம்பி, அவசரம் அவசரமாக அப்ரைசர்களை உடனடியாக டிரான்ஸ்பர் செய்வது என முடிவெடுத்தது.

சென்ற சனிக்கிழமை (16.11.2013) அன்று, மண்டல அலுவலகங்களில் இருந்து ஒவ்வொரு கிளைக்கும் போன் செய்து, அவர்களது அப்ரைசரை வேறொரு கிளைக்கு டிரான்ஸ்பர் செய்திருப்பதாகவும், 18.11.2013 அன்று  இன்னொரு கிளை அப்ரைசர் அவர்களது கிளைக்கு வருவார்கள் என்றும் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. அப்ரைசர்கள் தங்கள் வாழ்வும், எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டு விட்டதாய் பரிதவித்தனர்.

எந்தக் கேள்வியும் கேட்காமல், சொல்வதையெல்லாம் கேட்கவேண்டிய அவலநிலையில் நமது அப்ரைசர்கள் தொடர்ந்து இருந்து வருகின்றனர். கிளைகளில் அவர்கள் ஆற்றிவரும் பணிகள் பல்வேறு வழிகளில் வங்கிக்கு உதவிகரமாக இருந்தபோதிலும், அவர்களை இந்த நிர்வாகம் மரியாதையோடு நடத்துவதிலை என்பதற்கு இந்த மாறுதல்கள் இன்னுமோர் உதாரணம். வாய்மொழியாகவே அப்ரைசர்களை  பணிநியமனம் செய்வது, பணி நீக்கம் செய்வது, மாறுதல் செய்வது என்பது தவறான நடைமுறை. இது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல, பல மோசமான அனுபவங்களுக்கு வழிவகுக்கவே செய்யும். வங்கியின் வணிகமும் பெரிதும் பாதிக்கும்.

இந்த நிலையில், பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அனைத்து சங்கங்களும் அப்ரைசர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து, ஒருமித்த கருத்தோடு இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்பது என முடிவுக்கு வந்தன.  18.11.2013 அன்று வங்கியின் சேர்மனை, அனைத்துச் சங்கங்களின் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர்.

அப்ரைசர்களை இடமாற்றம் செய்வது என்பது நிர்வாகக்குழுவின் முடிவு என்றும், இதை அமல்படுத்துவதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை,  எனவே நிலைமையைப் புரிந்துகொண்டு சங்கங்கள் ஒத்துழைக்க வேண்டும் என சேர்மன் வேண்டுகோள் விடுத்தார்.

நாம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அனைத்துச் சங்கங்களும் இணைந்து ஒரு மெமோரெண்டம் கொடுக்கிறோம் என்றும், அதனை நிர்வாகக்குழுவில் வைத்து இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும், அதுவரை அப்ரைசர்கள் அவரவர்களுக்குரிய கிளைகளிலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.

நிர்வாகத்தரப்பில், மெமொரெண்டத்தை நிர்வாகக்குழுவிற்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய சம்மதிப்பதாகவும், அதுவரை அப்ரைசர்கள் புதிய கிளைகளில் பணிபுரிய வேண்டும் எனவும் வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

நிர்வாகத்தின் இந்த நிலைபாட்டிற்கு நமது வருத்தங்களையும், அதிருப்தியையும் தெரிவித்தோம். `எழுத்துபூர்வமான மாறுதல் உத்தரவு இல்லாமல்  அப்ரைசர்களை புதிய கிளையில் பணிபுரிய அனுமதிக்க மாட்டோம் எனவும், அதுவரை அப்ரைசர்கள் இல்லாமல் நகைக்கடன்கள் எதுவும் வழங்க மாட்டோம்` என்றும் நமது முடிவைத் தெரிவித்தோம்.

தோழர்களே!

இதுதான் நிலைமை. இன்று அப்ரைசர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால், நாளை இதே நிலைமை நமக்கும் வரும். இங்கு எதற்கும் கேள்வி கேட்க முடியாத அராஜகங்கள் அரங்கேறும். சகலமும் இங்கு வாய்மொழியாகவே அமலாக்கப்படும் என்றால், அதைவிட மோசமான நடைமுறை எதுவும் இருக்க முடியாது. எனவே நம் தோழர்கள் அனைவரும் இவ்விஷயத்தில் ஒன்றுபட்டு உறுதியாக நிற்போம்.

எழுத்துபூர்வமான மாறுதல் உத்தரவு இல்லாமல் அப்ரைசர்களை புதிய கிளைகளில் அனுமதிக்க வேண்டாம். அப்ரைசர்கள் இல்லாமல் நகைக்கடன்கள் அளிக்க வேண்டாம். மேலாளர்களே நகைக்கடன்கள் போட்டு வம்புகளில் மாட்டிக்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கிறோம்.

அநீதிகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்போம்.  தவறான நடைமுறைகளை சரிசெய்வோம். நம் அனைவரின் நலன்களையும்  தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் ஒரு நல்ல ஆரம்பமாக இது அமையட்டும்.

தோழமையுடன்
 
 
 
GS-PGBOU                   GS-PGBOA             GS-PGB SEWA       GS-PGBWU                 GS-PGBEA





13.11.13

PGBEA - PGBOU circular 4/2013 dated 11.11.2013

சுற்றறிக்கை: 4/2013         நாள்: 11.11.2013

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

அகில இந்திய கோரிக்கைகளை முன்வைத்தும், ஸ்தலக் கோரிக்கைகளை முன்வைத்தும், நவம்பர் 22ம் தேதி தலைமையலுவலகம் முன்பாக நடக்க இருக்கும் தர்ணாவை விளக்கியும் மையக் கூட்டங்கள் நடத்தி வருகிறோம். இதுவரை இராமநாதபுரம், திருநெல்வேலி மையங்களில் கூட்டங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. தோழர்கள் எழுச்சியோடு கலந்துகொண்டது மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் மீதான தங்கள் விமர்சனங்களையும், அதிருப்தியையும் தெரிவித்தனர். நமது சங்கம் மிகுந்த பொறுமையை கடைப்பிடிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அடிக்கடி இதுபோன்ற கூட்டங்கள் நடத்த வேண்டும் எனவும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை இயக்கங்களை தொடரவேண்டும் எனவும் கருத்துக்களைத் தெரிவித்தனர். அடுத்து காரைக்குடி, மதுரை மையங்களில் கூட்டங்கள் நடக்க இருக்கின்றன.

தற்காலிக  ஊழியர்களின் பணிநிரந்தரம் குறித்த வழக்கு:

நமது வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதற்கு நம் சங்கம் 2008ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்பது தோழர்களுக்குத் தெரியும். அவர்களுக்கென்று பிரத்யேகமான மாநாடு, போராட்டங்கள், பேரணி, வழக்கு என நாம் இடைவிடாத முயற்சிகள் செய்து வருகிறோம். இந்த நிலையில் லேபர் கோர்ட்டில் நாம் தொடுத்த தொழில் தாவா failure ஆகியதும், மத்திய அரசின் தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டதும் ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். இப்போது மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகத்திலிருந்து சென்னையில் டிரியூப்னலுக்கு விசாரித்து தீர்ப்பினை வழங்க அனுப்பப்பட்டு இருக்கிறது. நமது தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராவார்கள். 12.11.2013 அன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. விரைவில் நமது தற்காலிக ஊழியர்களுக்கு ஆதரவான தீர்ப்பு வரும். நம்பிக்கையோடிருங்கள்.

தோழர்.சோலைமாணிக்கத்திற்கு வழங்கப்பட இருக்கும் தீர்ப்பும்
நமது சங்கத்தின் மீதான தாக்குதலும்:

நமது சங்கத்தில் பொதுச்செயலாளராகவும், அகில இந்தியத் தலைவர்களில் ஒருவராகவும் இருந்த தோழர்.சோலைமாணிக்கம் இந்த நவம்பர் மாதத்தில் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.

அவருக்கு 2010ம் ஆண்டு ஒரு சார்ஜ ஷீட் வழங்கப்பட்டு இருந்தது. அப்போதைய நிர்வாகத்தின் அடக்குமுறைகளை எதிர்த்து போராட்ட வெப்பம் பற்றி இருந்த காலக்கட்டத்தில் இந்த சார்ஜ்ஷீட் வழங்கப்பட்டது. 900 நாட்களுக்கு மேலாக லீவு எடுத்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. தோழர்.சோலைமாணிக்கம் இந்த வங்கியில் பணிபுரியும் தொழிலாளர் நலன்களுக்காகவும், அகில இந்திய அளவில் கூட்டங்களில் கலந்து கொண்டதற்காகவும் அதிகமான லீவு எடுத்தார் என்பது இந்த வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

எனவே அந்த சார்ஜ் ஷீட்டை நிர்வாகத்தின் தொழிற்சங்க விரோதமான நடவடிக்கை என அறிவித்து நாம் அப்போதே நமது எதிர்யுபைத் தெரிவித்தோம். நிர்வாகம் தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சார்ஜ் ஷீட்டை வாபஸ் பெற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தோம். நிர்வாகத் தலைமை மாறிய பிறகு, ‘என்கொயரி முடித்து வாருங்கள், சுமூகமாக முடித்துக் கொள்ளலாம்' என முந்தைய சேர்மன் அவர்கள் சொன்னார்கள்.

2013 பிப்ரவரியில் என்கொயரி நடந்து முடிந்தது. நிர்வாகத்தரப்பில் வாதங்கள் முன்வைக்க மூன்று மாதங்களுக்கும் மேல் கால அவகாசம் எடுக்கப்பட்டது. நாம் நம் தரப்பில் உடனடியாக வாதங்களை சமர்ப்பித்தோம். பிறகு என்கொயரி ஆபிசர் தனது findingsஐ செப்டம்பர் மாதம்தான் சமர்ப்பித்தார். அந்த findings-ஐ அப்படியே குற்றம் சாட்டப்பட்டவருக்கு அனுப்பி கருத்துக்கள் கேட்க வேண்டியதுதான் AIVDயின் பணி. இதற்கு AIVD ஒரு மாதம் தேவையில்லாமல் கால அவகாசம் எடுத்துக்கொண்டது. 18.10.2013 நமக்கு findings கொடுக்கப்பட்டது. நாம் உடனடியாக அதற்கு பதிலளித்தோம். அதன் மீது show cause notice கொடுப்பதற்கும் நாம் இரண்டு முறை சேர்மனிடம் பேச வேண்டி இருந்தது.

இந்த நிலையில், இன்று 11.11.2013 அன்று தோழர் சோலை மாணிக்கம் மீதான குற்றச்சாட்டிற்கு  GM(A) கையெழுத்திட்டு show cause notice  அனுப்பப்பட்டு இருக்கிறது.  அதில் 'உங்களுக்கு ஏன், இரண்டு வருடத்திற்கு  ஒரு stage  Reduce செய்யும்' தண்டனை வழங்கக் கூடாது என விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கு பதில் அளித்த பிறகு Final order  வழங்கப்படும்.

தோழர்களே!

நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை நாம் எதிர்பாராதது. சுமூகமாக முடித்து விடுவோம் என சொன்ன நிர்வாகத்தின் வார்த்தைகளுக்கு எதிரானது. இந்த வங்கியில் தோழர்.சோலைமாணிக்கத்தை விட அதிகமாக லீவு எடுத்தவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்காமல், பிரமோஷன் கொடுத்ததும் நடந்திருக்கிறது. அதிகமாக லீவு எடுத்த பலருக்கும் எந்த தண்டனையும் இல்லாமல் சுமூகமாக நிர்வாகம் முடித்திருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் போது, முற்றிலும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காகவே லீவு எடுத்த தோழர்.சோலை மாணிக்கத்திற்கு வழங்கப்பட இருக்கும் இந்த தண்டனையை நாம் எப்படி புரிந்து கொள்வது? இது நமது தொழிற்சங்கத்தின் மீதான தாக்குதலாகவே கருதுகிறோம். இன்னும்  2006ம் வருடத்திலிருந்து தோழர்.சோலைமாணிக்கத்திற்கு லீவு regularize  செய்யப்படவில்லை. இன்கிரிமெண்ட்டும் வழங்கப்படவில்லை. அதன்பின்னரே Retirement benefitகள் கணக்கிட முடியும்.

எனவே நமது எதிர்ப்பை உடனடியாகத் தெரிவித்து தலைமையலுவலகத்தின் முன்பு, நமது போராட்ங்ககளைத் தொடர வேண்டும் என வேகத்தோடு தோழர்கள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில் வங்கி சேர்மன் அவர்கள். அமைதி காக்கும்படியும், தோழர்.சோலைமாணிக்கம் மீதான நடவடிக்கையை சுமூகமாக முடித்து விடலாம் என தான் நம்புவதாகவும் சொல்லியிருக்கிறார்.

நாமும் அதனையே விரும்புகிறோம்.

நிர்வாகத்துடன் பேசிவிட்டு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்போம். மீண்டும் விரைவில் சந்திப்போம்.


தோழமையுடன்



   
(J.மாதவராஜ்)                                            (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                     பொதுச்செயலாளர் - PGBOU


PGBEA - PGBOU circular 3/2013 dated 31.10.2013


அருமைத் தோழரே!

வணக்கம்..

நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் Working Committee Meeting  26.10.2013 அன்று கோழிக்கோட்டில் நடந்தது. AIRRBEAவின் joint secretary தோழர்.மாதவராஜ் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

 கிராம வங்கிகளின் எதிர்காலத்தையே  சிதைத்து தனியார்மயமாக்கும் விதமாக மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் RRBs Act Amendment Bill, 2013 எந்த நேரமும் பராளுமன்றத்தில் நிறைவேற்றப்படலாம் என்னும் ஆபத்து நம்மை சூழ்ந்திருக்கிறது. இந்த தருணத்தில் கிராம வங்கி ஊழியர்களின், அலுவலர்களின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்துவதென முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.

கோரிக்கைகள்:

1.    Scrap RRBs Act Amendment Bill, 2013 aimed at privatization of Gramin Banks.
2.    Implement Pension Parity and agreement dated 29-10-1993 in RRBs.
3.    Establish State Level Rural Banks, one for NE States, under NRBI
4.    Regularize all Part Time/Casual/Daily Waged workers.
5.    Allow participation of Workman/Officers in the Board of RRBs.
6.    Recruit adequate staff, promote staff in time and effect massive branch expansion.
7.    Allow Special Leave to T.U. Leadership at par with those in Banking Industry.
8.    Relax service period for promotion of all cadres of staff including Office Attendant at par with Banking Industry.

இயக்கங்கள்:

1. 22-11-2013·  அன்று தலைமையலுவலகங்களின் முன்பு தர்ணா
2. 29.11.2013 அன்று நபார்டு/ ஸ்பான்ஸர் வங்கிக்கு சங்கங்களின் சார்பில் டெபுடேஷன்
3. 10-12.2013 டெல்லியில் தர்ணா
4.RRB Act Amendmentஐ பாராளுமன்றத்தில் கொண்டு வரும் பட்சத்தில் உடனடியாக Flash Strike.

29.10.2013 அன்று நமது சங்க அலுவலகத்தில் கூடிய நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் அகில இந்திய சங்கத்தின் முடிவினை அமல்படுத்துவது என்றும், இயக்கங்களை வெற்றிகரமாக நடத்துவது என்றும் தீர்மானித்திருக்கின்றன. அதன்படி, 22.11.2013அன்று நமது பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக தர்ணா நடத்துவது என்று முடிவு செய்து இருக்கின்றன. கோரிக்கைகளையும், இயகங்களையும் விளக்கி நான்கு மையங்களில் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதெனவும் திட்டமிடப்பட்டு இருக்கின்றன.

1. 6.11.2013 - இராமநாதபுரம்
2. 9.11.2013 - திருநெல்வேலி
3. 12.11.2013 - காரைக்குடி
4. 16.11.2013 - மதுரை

இக்கூட்டங்களுக்கான அழைப்புகள் பிரத்யேகமாக தோழர்களுக்குத் தெரிவிக்கப்படும். தோழர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறோம்.

நமதி வங்கியில் நிலவும் பிரச்சினைகளும், எழுந்துள்ள கோரிக்கைகளும்:

வங்கியில் தொழில் அமைதியைப் பேணும் விதமகவும், வங்கியின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளும் விதமகவும் சேர்மன் நம்மோடு பேசுகிறார். அவரது எண்ணங்கள் புரிகின்றன. ஆனால் நிலைமைகளும், நடக்கும் விஷயங்களும் அதற்கு நேர்மாறாக இருக்கின்றன. ஊழியர்கள், அலுவலர்களின் மத்தியில் கடும் அதிருப்தியும், மன உளைச்சல்களுமே நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. குறைந்த பட்ச மனிதாபிமானமும், நேர்மைத் திறனும் அற்ற நிகழ்ச்சிகளும் செய்திகளையுமே தொடர்ந்து கேள்விப்பட வேண்டியிருக்கிறது.

இந்த வங்கியில் ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் தொடரும் நிர்வாக வன்முறைகள் எல்லைகளை மீறிகொண்டு இருகிறது. ஓய்வு பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு குற்றப்பத்திரிகைகள் அளிக்கப்பட்டு ஓய்வுகால சலுகைகளை இழந்து வாழ்க்கையே பெரும் அவலமகிப்போனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கிறது. சஸ்பென்ஷன்கள் செய்யப்பட்டு  பல மாதங்களாகியும் குற்றப்பத்திரிக்கைகள் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஒரு பக்கம் நீள்கிறது. குற்றப்பத்திரிக்கைகள் அளிக்கப்பட்டு, என்கொயரி நடந்து முடிந்தாலும் உரிய நேரத்தில் findings அளிக்கப்படாமல் வைத்திருப்பது தொடர்கிறது.  findings அளிக்கப்பட்டாலும், அதன் மேல் நடவடிக்கைகள் உடனடியாக எடுக்காமல் இழுத்தடிப்பது வாடிக்கையாகி இருக்கிறது. அப்படி அளிக்கப்படும் findings  பெரும்பாலும் நேர்மைத்திறனற்று Enquiry Officerகளால் ‘proved' என்றுதான் முடிவு எழுதப்படும்.  அத்திப் பூத்தாற்போல், நேர்மைத் திறனோடு ஒரு என்கொயரி ஆபிஸர் இங்கு ‘not proved' என எழுதியிருக்கிறார். ஓய்வு பெற்ற தோழர் MLR மோகன் மீது நடத்தப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் இப்படி ஒரு நியாயமானத் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், என்கொயரி ஆபிஸரின் findingsஐ தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அந்த குற்றங்கள் அனைத்தும் 'not proved'  என்று Disciplinary Authority தீர்ப்பினை திருத்தி எழுதுகிறார். அப்படியென்றால் இந்த என்கொயரி எதற்கு? இவ்வளவு காலக் கொடுமை எதற்கு? இந்தத் தீர்ப்பை அப்போதே கொடுத்து  தோழர் MLR.மோகன் அவர்களை தண்டித்திருக்க வேண்டியதுதானே. தாங்கள் எழுப்பிய குற்றங்கள் எப்படியானாலும் நிருபிக்கப்பட வேண்டும் என்னும் திமிரும், ஆணவமும் கொண்ட AIVDயின் பெருமூளைக்கரர்களால்  நியாயங்களும், நீதிகளும் இப்படி தொடர்ந்து கொன்று குவிக்கப்பட்டால் ஊழியர்களும், அலுவலர்களும் எப்படி நிம்மதியாக பணிபுரிவார்கள்? வங்கி எப்படி வளரும்?

அடுத்ததாக, ஊழியர்கள் பிரசினைகளில் நிர்வாகம் கையாளும் மிதமிஞ்சிய கால தாமதம் சகிக்க முடியவில்லை.  இங்கு பணிபுரிபவர்களது நலனை ஒரு பொருட்டாகவே இந்த நிர்வாகம் மதிக்கவில்லை என்றேத் தோன்றுகிறது. கடந்த போர்டு மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்ட Staff Housing Loan மற்றும்  Staff Vehicle Loan  சர்க்குலர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களில் ஏறத்தாழ இன்னும் 20 பேருக்கு ஒரிஜினல் சர்டிபிகேட்கள் கொடுக்கப்படவில்லை. அதுபோல அவர்களின் graduation increment-ற்கு நாம் சொன்ன வாதங்களின் அடிப்படையில், நபார்டுக்கு சாதகமான கடிதம் எழுதுவதாகச் சொன்னது. இன்று வரை எழுதப்படவில்லை. Lightining strike சென்ற 65 தோழர்களுக்கு ஒப்புக்கொண்டபடி இன்னும்  leave regularise செய்யப்படவில்லை. பெருமாள்மலை எனும் ஒரே ஒரு கிளைகு hill and Fuel allowance வழங்கப்படவில்லை. இப்படி எவ்வளவோ இருகின்றன. அனைத்தையும் கோரிக்கைகளாக முன்வைத்து இயக்கம் நடத்துவது நமது இரு சங்கங்களின் சப்கமிட்டிகளும் முடிவு செய்திருக்கின்றன.

1.Revamping of  Administrative Office
2. Time Bound  and Honest Disciplinary Actions
3.Two Graduate increments to Newly recruited Office Asistantsas per Bi-partite settlement
4. Transfer Policy
5. Defining of Duties and Responsiblities of each cadre
6.Regularise Temporary mesengers
7. Posting Of Officers as per categaorisation of Branches
8. Regularisation of Leave to all
9.Staff Housing Loan and Staff Vehicle Loan on par with sponsor Bank
10.Following allowances on par with sponsor Bank:
a) Transport allowance b) House Maintanence Allowance c) Petrol Allowance d) Boarding and Lodging Facilities e) Compensatory Allowance for Working in Holidays f) Hill and Fuel Allowance
11. LFC/LTC  on Par with Sponsor Bank
12.Medical Reimbursement as per settlements in Banking Industry
13. Staff Medical Insurance should be with Public Sector Insurance Company only
14.Enhancement of Local charges, Sweeping charges
15.Sanction of Joining Time and Lumpsum for probationers during Transfers
16. Activating SC/ST Cell and Women Cell
17. TA to Defence Representatives
18 Compiling of all neccesary Old circulars for the reference of New Branches and New Staff
19. Replacement of  all Old Computers, Printers, Generators, Counting Machines
20. Seperate Toilets for Women Staff
21. Air conditioning of All Branches
22.Medical Reimbursement to Retired Staff
23. Repayment of recoveries made from Retired Staff
24.Auto Credit System of Salary from Head Office
25. Introduce Technogy updation as per comercial Banks in handling NRGES accounts

கோஷங்களையும், குரல்களையும் இந்த  கோரிக்கைகளுக்காகவும் எழுப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. தலைமையலுவலகத்தின் முன் நவம்பர் 22ம் தேதி நாம் நடத்த இருக்கிற தர்ணவில், அகில இந்திய கோரிக்கைகளோடு இந்த கோரிக்கைகளையும் முன்வைப்பது என தீர்மானித்திருக்கிறோம்.

பாதை தெரிகிறது.....
முன்னேறிச் செல்வோம்...

தோழமையுடன்