Showing posts with label discussions. Show all posts
Showing posts with label discussions. Show all posts

5.9.16

கடமலைக்குண்டு கிளை விவகாரத்தில் முதல் குற்றவாளி நிர்வாகமே!



கடமலைக்குண்டு கிளையில் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு, probation periodல் இருந்த ஒரு ஆபிஸர் டெபுடேஷன் வந்த  ஒரு வாரத்தில் 78 நகைக்கடன்கள் வழங்கி இருக்கிறார். அதில் repledge செய்த நகைக் கடன்களின், நகைப் பாக்கெட்டுகளில் பெரும்பாலும் நகைகள் காணாமல் போயிருக்கின்றன. Safeல் வைத்த நகைப் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை குறையவில்லை.

27.9.14

மொட்டைகளின் ராஜ்ஜியம்!


பொதுவான பிரச்சினைகளை முன்வைத்து இந்த வங்கியில் அனைத்துச் சங்கங்களும் ஒன்றிணைந்து செயல்படுவது என்ற இணக்கம் ஏற்பட்ட சமயத்தில், வங்கியின் உயரதிகாரிகளை கடுமையாகத் தாக்கியும் இழிவுபடுத்தியும் ஒரு மொட்டைக் கடிதம் வந்திருப்பதாக நிர்வாகத் தரப்பில் முதன்முதலாகச் சொல்லப்பட்டது. வங்கியின் உயரதிகாரிகள் மிகுந்த வேதனைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

18.5.14

ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனுக்கு கொம்பு முளைத்து விட்டது!


சில முக்கியப் பிரச்சினைகளை முன்வைத்து நேற்று (17.05.2014)  பாண்டியன் கிராம வங்கி ஜெனரல் மேனேஜர் மிஸ்டர்.ராமநாதனை PGBEA பொதுச்செயலாளர் தோழர்.மாதவராஜும், இணைப்பொதுச்செயலாளர் தோழர் அருண்பிரகாஷ் சிங்கும் சந்தித்துப் பேசினர்.

இப்போது ராயவரம் கிளையில் பணிபுரிந்து வரும் தோழர்.ராமசாமி, காரைக்குடி கிளையில்  ஒரு நகைக்கடன் பெற்றிருக்கிறார். அது AJL ஆக இருப்பதால் பிரச்சினை. மாஸ்டர் அடிக்கும்போது தவறுதலாக AJL  அடிக்கப்பட்டு இருக்கிறது என சம்பந்தப்பட்ட அலுவலர் விளக்கம் கொடுத்துவிட்டார். நடந்த தவறுக்கு நான் பொறுப்பல்ல, இதனால் ஏற்படும் வட்டி இழப்பை சரி செய்து விடுகிறேன் என தோழர் ராமசாமியும் எழுத்து பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டார்.  கடந்த காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடந்தபோது இதே போன்று விளக்கம் அளித்து முடிக்கப்பட்டும் இருக்கின்றன. இந்தமுறை இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்ட் இதனை முடிக்காமல் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதற்கிடையில் காரைக்குடி கிளை மேலாளர், அந்த நகையை திருப்புவதற்கு அனுமதியளிக்கவில்லை. தலைமையலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்தால்தான் அனுமதிப்பேன் என்கிறார். கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த விஷயத்தை நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம். ‘இதோ முடித்து விடுகிறோம்’, ’இரண்டு நாளில் முடித்து விடுகிறோம்’ என்றார்கள். நாட்கள் கடந்துகொண்டே போனதுதான் மிச்சம். நாம், “முதலில் அந்த நகையைத் திருப்புவதற்கு அனுமதியுங்கள். கொடுக்கப்பட்ட விளக்கங்கள் மீதான உங்கள் முடிவை பிறகு கூட எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றோம். ‘அதானே, நகையை திருப்ப அனுமதிக்கலாமே, காரைக்குடி கிளைக்குச் சொல்லி விடுகிறோம்’ என்றார்கள். நடந்தபாடில்லை. நாமும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

AJL வைத்ததால் வங்கிக்கு வட்டி இழப்பு என்றால், இப்படி 2013 அக்டோபர் மாதத்திலிருந்து குறிப்பிட்ட நகையைத் திருப்ப அனுமதிக்காததால் தோழர்.ராமசாமிக்கு ஏற்படும் வட்டி இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்த பிரச்சினையை நாம் இன்றும் பேச ஆரம்பித்தோம். உடனே ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன், “ஸாரி, நான் Disciplinary Proceedings குறித்த விஷயங்களை உங்களோடு விவாதிக்கத் தயாரில்லை “ என்றார்.

“இதில் என்ன இருக்கிறது. ஏன் நீங்கள் அப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டும்?” என்றோம் நாம்.

“இல்ல சார், இனிமேல் எந்த Disciplinary proceedings மேட்டராக இருந்தாலும் டிஸ்கஸ் பண்னுவதில்லை என்றிருக்கிறேன்.” என்றார்.

நாம் உடனே ”நாங்கள் சங்கத்திலிருந்து பேசத்தான் செய்வோம். represent பண்ணத்தான் செய்வோம். முடியாது என்று தாங்கள் சொல்ல முடியாது” என்றோம்.

“நீங்கள் தாராளமாய் represent செய்யுங்கள். ஆனால் அதுகுறித்து discuss செய்ய மாட்டேன்” என்றார்.

“ஏன் டிஸ்கஸ் செய்ய மறுக்கிறீர்கள்?”

“நான் Disciplinary Authorityயாக இருப்பதால் மறுக்கிறேன். Decision எடுத்த பிறகு appeal செய்யும்போது நீங்கள் விவாதித்துக் கொள்ளுங்கள்.”

“எப்போது decision எடுப்பீர்கள்?”

“அதையெல்லாம் சொல்ல முடியாது. வரும்போது வரும். You have to wait. இதனை அப்படியே வெளியில் சொல்லிக் கொள்ளுங்கள்.I am not bothered" என்றார்.

இத்துடன் அந்தப் பேச்சுவார்த்தை முடிந்திருக்கிறது. ஆனால் விஷயம் முடியவில்லை. இதுகுறித்து பொது வெளியில் நாம் விவாதித்தாக வேண்டி இருக்கிறது.

Disciplinay Authority  என்றவுடன் தான் வானத்திலிருந்து குதித்தவர் போலவும், கேள்விகளுக்கும் விமர்சனத்திற்கும் அப்பாற்பட்டவர் போலவும், ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன் ஒரு கருத்தாக்கத்தை இங்கே கட்டியமைக்க முயல்கிறார். கடந்த காலங்களில் இதே மிஸ்டர் ராமநாதன் பல முறை நம்மோடு Disciplinary Proceedings  குறித்த விஷயங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விவாதித்து இருக்கிறார். இப்போது திடுமென கொம்பு முளைத்து இருக்கிறது. இதுதான் விஷயம்.

இங்கே நாம் முதலில் ஒரு விஷயத்தை நம் தரப்பில் தெளிவுபடுத்திக் கொள்வோம். Disciplinary Proceedings குறித்து  PGBEAவுக்கும், PGBOUவுக்கும் தெளிவான பார்வையும் புரிதலும்  உண்டு.

1. அன்றாடப் பணிகளில் நடக்கும் தவறுகள் திருத்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். தண்டனை வழங்குவது மூலமே தவறுகள் சரிசெய்யப்படும் என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
2. ஒரு தவறு தொடர்ந்து நடக்கும்போது, அந்தத் தவறில் சம்பந்தப்பட்ட  தனிமனிதர்களுக்கு இருக்கும் பங்கையும் பொறுப்பையும் ஆராய்வதை விட அந்த அமைப்பில் (System) இருக்கும் கோளாறையும் குறைகளையும் கண்டுபிடித்து சரிசெய்வதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதை விட்டு, தனிமனிதர்களை தண்டிப்பதன் மூலம், தவறுகளை சரிசெய்வது என்பது சரியான ஒழுங்கு நடவடிக்கை ஆகாது.
3. ஒழுங்கு நடவடிக்கைகளில் தண்டனை வழங்கும்போது அதிகபட்சம் மனிதாபிமானமும், இரக்கமும்  வேண்டும்.
4.ஒழுங்கு நடவடிக்கைகள்  உரிய காலத்துக்குள்  தொடங்கி முடிக்கப்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது பெரும் மன உளைச்சலையும், அவஸ்தையையும் ஏற்படுத்தும். அதுவே ஒரு தண்டனையாய் இருந்துவிடக் கூடாது.
5.தவறுகளை சரிசெய்துகொள்ள சம்பந்தப்பட்டவர்கள் முன்வரும்போது அதற்கான வாய்ப்புகள் தர வேண்டும்.
6. தீர்ப்புகளிலும், தண்டனைகளிலும் பாரபட்சம் இருக்கக் கூடாது.
7. ஒழுங்கு நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.

இதனை PGBEAவும், PGBOUவும் தொடர்ந்து வலியுறுத்துவோம். பொறுப்பிலிருப்பவர்களோடு விவாதிக்கவேச் செய்வோம். இதில் முரண்பட்ட நிலையை நிர்வாகம் எடுக்கும்போது நிச்சயம் எதிர்ப்போம்.  சரி செய்ய முயல்வோம். அது யாராயிருந்தாலும் சரி.

இதன் அர்த்தம் Disciplinary Authorityயின் சுதந்திரத்துக்குள்ளோ, அதிகார வரம்புக்குள்ளோ, சுயமான முடிவுகளுக்குள்ளோ நாம் தலையிடுவது ஆகாது.  ஒழுங்கு நடவடிக்கையின் முறைகளும் முடிவுகளும் சரியானவையாய், நேர்மையாய், பாரபட்சமற்று இருப்பதற்காகத்தான் நாம் டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இந்த வங்கியையே நாசமாக்கிக்கொண்டு இருக்கிறது ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையில் இயங்கும் ஒரு குரூப். ஒழுங்கு நடவடிக்கைகளில் இந்த குரூப் கடைப்பிடிக்கும் நடைமுறைகள், கீழே அலுவலர்கள் மத்தியிலும், ஊழியர்கள் மத்தியிலும் கடுமையான வெறுப்பையும், வெறுமையையும் ஏற்படுத்தி வருகிறது. எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கைகளில் காலதாமதம் அளவுக்கு மிஞ்சி இருக்கிறது. தாமதப்படுத்தப்படும் போது நீதியும் அநீதிதான். எனவேதான் நாம் இதை டிஸ்கஸ் செய்கிறோம்.

ரிடையர் ஆன பல தோழர்களின் எதிர்காலத்தை ஒழுங்கு நடவடிக்கை என்ற பேரில் இரக்கமில்லாமல் சிதைத்து போட்டு இருக்கிறது நிர்வாகம்.

விளக்கக் கடிதங்கள் கேட்டு பதில் பெற்ற நிலையில் பல நடவடிக்கைகள் இருக்கின்றன. ரிடையர் ஆவதற்கு முன் ஒழுங்கு நடவடிக்கை ஆரம்பித்து முடிப்பதற்கான அவகாசத்தை வேண்டுமென்றே தர மறுக்கிறது நிர்வாகம்.

சஸ்பென்ஷன் செய்து வருடக்கணக்காகியும் சார்ஜ்ஷீட் கொடுக்காமல்  இருக்கிறது நிர்வாகம்.

என்கொயரிகள் நடத்தி முடிப்பதற்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயம் செய்வதில்லை நிர்வாகம்.

என்கொயரி முடிந்து வருடக்கணக்கான பிறகும், தீர்ப்புகள் கொடுக்காமல் இருக்கிறது நிர்வாகம்.

ஆனால் இந்த வங்கியில் ஓரே நாளில் Reply to charge sheet பெற்று,  show cause notice வழங்கி, அதே நாளில் அதற்கான பதிலையும் பெற்று, personal hearing எதுவும் இல்லாமல்  அதே ஒரே நாளில் Final orderஐ இதே ஜெனரல் மேனேஜர் வழங்கியதில்லையா? அதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்த வேகம் தோழர்கள் கிருஷ்ணசாமிக்கும், வள்ளி நாயகம் பிள்ளைக்கும், எம்.எல் ஆர்.மோகனுக்கும், செல்வராஜுக்கும் ஏன் காட்டவில்லை.

தன் பக்கம் நியாயம் இருந்தால் யாராலும், எங்கும் பேச முடியும். மனசாட்சி உள்ளவர்களுக்கும்  நேர்மையாக இருப்பவர்களுக்கும் அந்தத் திராணி இருக்கும். மடியில் கனமிருப்பவனுக்குத்தான்  வழியில் பயமிருக்கும். அதுதான் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதன்  டிஸ்கஸ் செய்ய மறுப்பதற்கான காரணமாக இருக்க முடியும்.

அதற்காக நாம் டிஸ்கஸ் பண்ணாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் இங்கு விவாதிக்க இருக்கிறோம். எல்லாவற்றையும் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொன்றிலும் ஜெனரல் மேனேஜர் மிஸ்டர் ராமநாதனின் தலைமையின் கீழ் இயங்கும் இன்ஸ்பெக்‌ஷன் டிபார்ட்மெண்டின் வன்மங்களும், வக்கிரங்களும், மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளும் இனி வெளிவரும்.

வாருங்கள் தோழர்களே, நாம் டிஸ்கஸ் செய்வோம்.

2.5.14

Officers Reruitment in PGB: 'All the applicants will be called for interview'


கடந்த மூன்று நான்கு நாட்களாக நாம் எழுப்பிய பிரச்சினை இன்று ஒரு சுமூகமான தீர்வுக்கு வந்திருக்கிறது,

பாண்டியன் கிராம வங்கியில்  Officers Recruitmentல் இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை பின்பற்றப்படவில்லை. இவ்விஷயத்தை நாம் அறிந்ததும், நிர்வாகத்திற்கு நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். அதுகுறித்து தொடர்ந்து நமது வெப்சைட்டில் செய்திகள் வெளியிட்டு வந்தோம்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், பாண்டியன் கிராம வங்கியில் இட ஓதுக்கீடு முறையாக அமல்படுத்த வேண்டும் என குரல் எழுப்பியது. வங்கியின் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது.

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம், மற்றும், பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் சார்பில் வங்கியின் சேர்மனை சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினோம்.

நிர்வாகமோ 3.5.2014ம் தேதி இண்டர்வியூவை நடத்த திட்டமிட்டு வந்தது. இந்நிலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சமூக நீதியை மறுக்கும் பாண்டியன் கிராம வங்கி என நகரெங்கும் போஸ்டர்கள் ஓட்டப்பட்டன. 2ம் தேதி மாலையில் பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தது.

PGBEAவும், PGBOUவும் நமது வங்கியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களுக்கும், இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தன. PGBWU, PGBOA, PGB SEWA சங்கங்கள் தங்கள் அதரவைத் தெரிவித்தன.

நிலைமையின் தீவீரம் உணர்ந்த நிர்வாகம், இன்று மதியம் நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாநிலச் செயலாளர் கணேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஞானகுரு, பாண்டியன் கிராம வங்கி ஆபிசர்ஸ் யூனியனின் துணைத் தலைவர்  பி.எஸ். போஸ் பாண்டியன்,  பொதுச் செயலாளர் சங்கரலிங்கம்,  பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாலர் ஜா. மாதவராஜ், எஸ்.சி/எஸ்.டி. நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் வை.ராஜேந்திர சோழன், பாண்டியன் கிராம வங்கி வொர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் பாலாஜி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகத் தரப்பில் முதன்மை மேலாளர்கள் ஞானப்பிரகாசம் மற்றும் சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலில் நிர்ணயிக்கப்பட்ட கட்-ஆப் மார்க்குகளை விடுத்து, General Categoryக்கு விதிக்கப்பட்ட 108 கட்-ஆப் மார்க்குகளுக்கு மேல் விண்ணப்பத்திருக்கும் 704 பேரையும் இண்டர்வியூக்கு அழைக்க நிர்வாகம் ஒரு தீர்வை முன்மொழிந்தது. ஆனால் நாம் ஒப்புக்கொள்ளவில்லை. அனைவருக்கும் ஒரே கட் ஆப் மார்க் என்பது தீர்வல்ல, General Categoryக்கும்  SC/ST Categoryக்கும் ஒரே கட்-ஆப் மார்க் என்பது இட ஓதுக்கீடு கொள்கைக்கு முரணானது என்றோம். நீண்ட விவாதங்களுக்குப் பிறகு ஆபிஸர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இண்டர்வியூ நடத்தி  அதில், இட ஓதுக்கீடு கொள்கையை முறையாக அமல்படுத்துகிறோம் என நிர்வாகம் உறுதி மொழி தந்தது. இப்போது அறிவித்திருக்கும் 254 பேருக்கு திட்டமிட்டபடி இண்டர்வியூ நடக்கும் என்றும், மிக விரைவில் மற்ற அனைவருக்கும் இண்டர்வியூ நடத்தி, அதன் பின்னரே ரிசல்டுகள் வெளியாகும் எனவும் உறுதி மொழியளிக்கப்பட்டது.

ஒரு தவறை சரி செய்ய நாம் கோரிக்கை வைத்தோம். அதை சரி செய்யும்போது  அதனையொட்டி வேறூ சில பிரச்சினைகள் எழும் என நிர்வாகம் ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் இண்டர்வியூ நடத்த முன்வந்திருக்கும் எனத் தோன்றுகிறது.

எது எப்படியானாலும், இட ஒதுக்கீடு கொள்கை பாண்டியன் கிராம வங்கியில் தவறாக அமல்படுத்த இருந்ததை நாம் தடுத்து நிறுத்தி இருக்கிறோம். முதலில் இது மிகப் பெரிய வெற்றி. இனி இந்த வங்கியில் இட ஒதுக்கீடு மிகச் சரியாக அமல்படுத்தப்படும் என்பதற்கு வழியமைத்து இருக்கிறோம். இதுதான் மகத்தான வெற்றி.

நம்மோடு இணைந்து ஆதரவு கொடுத்த தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு மிகப் பெரும் நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வோம்.

ஆதரவுக்குரல் எழுப்பிய அமைப்புகளுக்கும், சங்கங்களுக்கும் நமது நன்றி. பேச்சுவார்த்தையில் நம்மோடு இணைந்து நின்ற PGBWUவுக்கும், PGB SEWAவுக்கும் நம் நன்றி.

இண்டர்வியூவில் கலந்து கொள்ளும் புதிய இரத்தங்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும், வரவேற்பும்.

20.2.14

மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ரூபனையும் சஸ்பெண்ட் செய்க!


இன்றைய (20.2.2014) தினத்தந்தி பத்திரிகையில், `பாண்டியன் கிராம வங்கித் தலைவருக்கு பிடிவாரண்ட்` எனற செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. இலுப்பையூர் கிளையில் கிளர்க்காக பணிபுரிந்த தோழர்.கணேசனை பணி நீக்கம் செய்ததையொட்டி நடந்த வழக்கில், அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி இடைக்காலத்தடைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டதாகவும், பாண்டியன் கிராம வங்கி அந்த உத்தரவை அமல்படுத்தவில்லையென்றும், அதன் மேலான கோர்ட்டை அவமதிப்பு வழக்கில் இப்படியொரு நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

பாண்டியன் கிராம வங்கி மீது பிரியமும், பற்றும் கொண்ட  ஊழியர்களும், அலுவலர்களும் இந்தச் செய்தியால் மிகுந்த அதிர்ச்சியடைந்து இருக்கின்றனர்.  நமது இரு சங்கங்களும் தங்களது வருத்தங்களை அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறோம். இந்த வங்கியில் உள்ள அனைத்துத் தொழிற்சங்கங்களும் இதே மனநிலையில்தான் இருக்கின்றன. வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து நாம் விவாதிக்கப் போவதில்லை. ஆனால் சில பொதுவான விஷயங்களை பேச வேண்டி இருக்கிறது.

2003ம் ஆண்டிலிருந்து துவங்கிய இவ்வழக்கில், 2013ம் ஆண்டு பாண்டியன் கிராம வங்கியின் சேர்மனாக பொறுப்பேற்ற திரு.கார்த்திகேயன் பெரிய அளவில் சம்பந்தப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எல்லோரோடும் சினேகமும், பிரியமும் பாராட்டும் அவருக்கு இந்த வழக்கில் நேரிடையாக தொடர்பு இல்லை. ஆனால் தொடர்ந்து நிர்வாக முறையில் இருக்கும் தவறுகளுக்கும் கோளாறுகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய வேளையில் அவர் இந்த நிர்வாகத்தின் உயர்ந்த பொறுப்பு வகிக்க வேண்டியவராய் இருக்கிறார். இதுதான் அவரது துரதிர்ஷ்டம். ஆனால் இதுதான் விஷயம்.

நாம் கடந்த சில வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். AIVD துறை என்பது மனிதத்தன்மையற்றதாகவும், ஊழியர்களையும் அலுவலர்களையும் வேட்டையாடும் களமாக இருப்பதையும் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறோம். குறிப்பாக மிஸ்டர் சங்கரநாராயணனும், ரூபன் விக்டோரியாவும் சதாநேரமும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரையும் குற்றவாளிகளாகவே பாவித்து அவர்களுக்கு தண்டனை வழங்குவதிலேயே குறியாக இருக்கின்றனர் என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும் நடத்தியிருக்கின்றோம். ஆனால் அவர்கள் திருந்துவதாகவே இல்லை. தாங்கள் எழுதிய குற்றங்களை யார் இல்லையென்று சொல்ல முடியும் என்று ஆணவத்திலும், அதிகாரத்திலும் வெறிகொண்டு செயல்பட்டார்கள். அதன் விளைவுதான் இன்றைய தினத்தந்திச் செய்தி.

கத்தியும், சட்டமும் ஒன்றுதான். அவைகளை வைத்து ஆள முடியாது. நிர்வகிக்க முடியாது. மனிதாபிமானம்தான்  உலகை ஆளக் கூடியது.

இப்போதும், `இது வக்கீல்கள் தவறு என்று` பேசப்படுவதாகக் கேள்விப்படுகிறோம். தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் நம் மரியாதைக்குரிய சேர்மனுக்கு நேர்ந்த அவமானத்தைப் பற்றிக் கவலைப்படாமல் சிலர் டிபார்ட்மெண்ட்டைக் காப்பாற்றும் நோக்கில் வாதங்களை முன்வைப்பதாக கேள்விப்படுகிறோம். Technical  responsibility ஐப் பற்றிப் பேசாமல் moral responsibility ஐப் பேசுகிற நேர்மை ஏன் இவர்களுக்கு இல்லாமல் போனது?

நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் நம் தோழர்கள் காமராஜ் மற்றும் அண்டோ, இந்த வங்கியின் நற்பெயரைக் கெடுத்துவிட்டதாக சொல்லி சஸ்பெண்ட் செய்தார்கள். இத்தனைக்கும் பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிக ஊழியர்கள் அவதிப்படுகின்றனர் என்ற உண்மையை Bank Workers Unity  எனும் பத்திரிகையில் எழுதியதற்காக சஸ்பெண்ட செய்தார்கள். இன்று இந்த வங்கியின் மரியாதைக்குரிய சேர்மனுக்கு கைது வாரண்ட் பிறப்பித்த செய்தி `தினத்தந்தியில்` வரக்  காரணமான மிஸ்டர் சங்கரநாராயணன் மற்றும் மிஸ்டர் ரூபனை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை என்பதுதான் நமது கேள்வி.

இந்த வங்கியில் நிர்வாகம் செய்து வந்திருக்கும் தவறுகளை, குறிப்பாக AIVDயின் அட்டுழியங்களை எழுதினால், அது ஒரு பெரும் அராஜகத்தின் `மெகா சீரியலாக ஓளிபரப்பலாம். ஆவணங்களும், சாட்சியங்களும் குற்றங்களை நிருபீக்கமுடியவில்லையென்றாலும் வெறி பிடித்து குற்றங்கள் நிருபீக்கப்பட்டதாகச் சொல்ல இவர்கள் எடுத்த முயற்சிகள் நமக்குத் தெரியாதா? எத்தனை தோழர்களின் வாழ்க்கையை சிதைத்து, தெருவில் எறிந்திருக்கிறார்கள். தோழர்கள் குருநாதனிலிருந்து, தோழர்கள்.செல்வராஜ், கிருஷ்ணசாமி என விரிந்து, எம்.எல்.ஆர் மோஹன் வரை எத்தனை எத்தனை பேர். அவர்களின் சாபமும், அவர்களுக்கு இழைக்கப்பட்டு இருக்கும் அநீதியும் இந்த வங்கியை உலுக்கி எழுப்பிய  கேள்விதான் இன்றைய தினத்தந்தி செய்தி.

இது தவறுகளை சரி செய்ய வேண்டிய தருணம். மனசாட்சி என்னும் கூண்டில் தன்னை ஏற்றி நிர்வாகம் சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம். AIVD ஐ மற்றும் தலைமையலுவலகத்தை முழுமையாக புனரமைக்க வேண்டிய காலம். இப்போதும் நிர்வாகம் செய்யத் தவறினால், பெரும் சோதனைகள் வந்து சேரும் எனத் தோன்றுகிறது.

எதற்கெடுத்தாலும்,  CVC, CVO  என்று நாமாவளி சொல்லிக்கொண்டு இருந்தவர்களே, இந்த நெருக்கடியான வேளையில் CVC, CVO  எங்கே? நாம் மட்டும்தான் சேர்மன் பக்கத்தில் நிற்கிறோம்.

இந்த வங்கியில் உள்ள சங்கங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் இந்த வங்கிக்கு ஒரு சோதனை வந்தால் அனைத்து சங்கங்களும் ஒன்று சேர்ந்து நிற்கும். அப்படி ஒன்று சேர்ந்து எழுப்பும் குரல்தான், 'மிஸ்டர் சங்கரநாராயணனையும், மிஸ்டர் ரூபனையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதும், தலைமையலுவலகத்தை உடனடியாக புனரமைக்க வேண்டும்` என்பதும்.

விரைவில் அனைத்துச் சங்கங்களும் ஒன்று கூடி, பாண்டியன் கிராம வங்கியினை, அதன் பேரை காப்பாற்றும் பெரும் காரியத்தில் ஈடுபடும்.

17.2.14

வெளிப்படைத்தன்மையற்ற PGB நிர்வாகம்


பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மை குறித்து ஏற்கனவே வெப்சைட்டில் ஒன்றிரண்டு விஷயங்களை எழுதி இருக்கிறோம். மேலும் சில விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.

ஒரு நிறுவனம் அதிலும் குறிப்பாக பொதுத்துறை நிறுவனம் வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் Right To Information Act கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி, ஒரு நிறுவனம் அதனைப்பற்றிய சில தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டியது கட்டாயம். ஆனால் நமது பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை என்பதை, அதன் வெப்சைட்டில் வெளியிட்டு இருக்கும் தகவல்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம். முக்கியமாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரின்  duties and responsibilities குறித்து பொதுமக்களுக்குத்  தெரிவித்தாக வேண்டும். ஆனால் அவைகளை இங்கு பணிபுரியும் ஊழியர்கள் அலுவலர்களுக்கே தெரிவிப்பதில்லை இந்த நிர்வாகம். Right to information Act-ஐக் கூட மதிப்பதில்லை PGB நிர்வாகம்.

எழுதப்படிக்கத் தெரியாத காலத்தில் வாய்மொழி மூலம் விஷயங்களை மனிதர்கள் பகிர்ந்துகொண்டனர் என்பதுதான் வரலாறு. ஆனால் Information and Technology உலகையே ஆட்டிப்படைக்கிற இந்தக் காலத்திலும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் வாய்மொழி உத்தரவுகளையே பிறப்பித்துக் கொண்டு இருக்கிறது.  தலைமையலுவலகத்தில் இருந்து Regional Officesகளுக்கு வாய்மொழி உத்தரவு. Regional Officesகளிலிருந்து கிளைகளுக்கு வாய்மொழி உத்தரவுகள். பல முக்கியமான பணிகள் இங்கு எழுத்துபூர்வமாக இல்லாமலே நடந்து வருகின்றன. ஏனென்றால் நாளை ஒரு தவறு நடந்துவிட்டால் மேல் இருப்பவர்கள் தாங்கள் இதற்கு பொறுப்பு இல்லை என்று தங்களை கழற்றிக் கொள்ளவும், கீழ் இருப்பவர்களே பொறுப்பு என்று குற்றம் சுமத்தவும்தான். சமீபத்தில் நடந்த அப்ரைசர்கள் மாறுதலும் இப்படித்தான். கேட்டால் போர்டு முடிவு என்கிறார்கள். போர்டு முடிவும் வாய்மொழியாகவே அமல்படுத்தப்படுவது வெட்கக் கேடு இல்லையா?

இந்த வாய்மொழி உத்தரவுகள் மூலம் இன்னொரு முக்கியக் குற்றத்தையும் நிர்வாகம் செய்கிறது. ஏற்கனவே எழுத்தில் இருக்கும் நியதிகளையும், வரையறைகளையும் மீறி பணிபுரியுமாறு கட்டாயப்படுத்துகிறது. உதாரணத்திற்கு Document Master  அடித்து TXN no  வவுச்சரில் குறிப்பிட பிறகே கடன் தொகையை வழங்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால் இங்கு Master  அடிக்கும் முன்னாலேயே கொடுக்க வேண்டும் என கேஷியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.  கேட்டால்  Customer service  என்கிறார்கள். மேனேஜரே `pay cash'  அடித்து கொடுக்க உத்தரவிட்ட பிறகு, உங்களுக்கு என்ன ரிஸ்க் இருக்கிறது என்று வியாக்கியானம் வேறு. ஆனால் சமீபத்திய சில ஒழுங்கு நடவடிக்கைகளில், `மேனேஜர் சொன்னால் நீங்கள் செய்யலாமா?` என்பதுதான் கேள்வியாக எழுந்து இருக்கின்றன. ஆக, நிர்வாகத்தின் வெளிப்படையற்ற தன்மையினால் இங்கு பாதிக்கப்படுவது ஊழியர்களும், அலுவலர்களுமே.

மாறுதல்களிலும் வெளிப்படைத் தன்மை இல்லை.  ஏனென்றால் அதனை நிர்வாகம் தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான். ஒரு பாலிசி இருந்தால் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். `நான் இந்த கிளையில் பணிபுரிகிறேன். அடுத்த முறை என்னால் இந்த கிளைகளுக்கு மாறுதலில் செல்ல முடியும்` என்பது போன்ற வெளிப்படையான முறை வேண்டும்.  `ஏணி இருக்குமா, பாம்பு கடிக்குமா` என தெரியாமல் ஊழியர்களும், அலுவலர்களும் இங்கு ஒவ்வொரு முறை மாறுதல்களின் போதும் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அதனை ஒரு ஆயுதமாக வைத்துக்கொண்டு நிர்வாகம் பயமுறுத்தவும், பணிய வைக்கவும் முயல்கிறது.

பணி நியமனங்களில் சுத்தமாக வெளிப்படைத் தன்மை இல்லை. எப்போது பணி நியமனம், எப்படி பணி நியமனம் என்று எந்த நியதியும் கிடையாது. எவ்வளவு cut of mark, எத்தனை பேர் தகுதியானவர்கள், எத்தனை பேர் waiting list, அதில் இட ஓதுக்கீட்டு முறை என்ன என எதையும் வெப்சைட்டில் இந்த நிர்வாகம் அவ்வப்போது வெளியிடுவதில்லை. பணிக்குச் சேர்ந்த பிறகு resign  செய்வதால் ஏற்படும்  காலியிடங்கள் எவ்வளவு, அந்த இடங்களை waiting listலிருந்து எப்போது எடுக்கிறார்கள் என எதையும் தெரிவிப்பதில்லை. இவை ஒன்றும் சிதம்பர ரகசியங்கள் இல்லை. அனைவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டிய உண்மைகள். இவைகள் மறைக்கப்பட, மறைக்கப்பட  நிர்வாகத்தின் மீது நம்பகத்தன்மை குறையவே செய்யும்.

இந்த நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைகள் முழுவதும் இருட்டுதான் அப்பிக்கொண்டு இருக்கிறது. ஒருவர் மீது சாட்டப்படும் குற்றம் இன்னொருவர் மீது பாய்வதில்லை. ஒருவருக்கு கடும் தண்டனை. ஒருவருக்கு  சிறு தண்டனை. ஒருவருக்கு ஓரிரு நாட்களில் ஒழுங்கு நடவடிக்கைகள் முடிக்கப்படுகின்றன. இன்னொருவருக்கு நான்கைந்து ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்படுகின்றன.

இப்படி நிர்வாகத்தின் ஒவ்வொரு நடவடிக்கையிலும், ஒவ்வொரு துறையிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை நாம் பட்டியலிட்டுக்கொண்டே இருக்க முடியும். நேர்மையானவர்களே வெளிப்படையாய் இருக்க முடியும். தலைநிமிர்ந்தும் நிற்க முடியும். கேள்விகளுக்கு  நெஞ்சுறுதியோடு பதில் சொல்ல முடியும்.

நமது நிர்வாகத்திடம் கேள்விகள் கேட்டால் பிடிக்கவே பிடிக்காது.

(தொடரும்)

இவைகளையும் படிக்கவும்:

1. நிர்வாகம் என்றால் என்ன?
2. மனிதாபிமானமற்ற PGB  நிர்வாகம்

14.2.14

மனிதாபிமானமற்ற PGB நிர்வாகம்!


நேற்றைய தொடர்ச்சி....

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் குறித்து நமது இரு சங்கங்களும் தொடர்ந்து கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைத்து வருகிறோம்.

1. மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது
2.வெளிப்படைத்தன்மையற்றதாகவும், இறுக்கமானதாகவும் இருக்கிறது.
3.ஊழியர்களின் பணிநெருக்கடிகளுக்கு தீர்வு காணாமல் இருக்கிறது.
4.வங்கிப்பணிகளில் அவரவர்க்கான விதிகளை வரையறுத்து ஒரு ஒழுங்கை ஏற்படுத்தாமல், ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் நடத்தைகளில் மட்டுமே ஒழுங்கை பார்க்கிறது.
5.சம்பளப்பிடித்தம் என்றால் அதிவேகமாகச் செயல்படுகிறது. அதே வேளையில் உரிய சலுகைகளையும், உரிமைகளையும் வழங்குவதென்றால் காலம் தாழ்த்துகிறது, தட்டிக் கழிக்கிறது.
6. ஊழியர்களோடும், அலுவலர்களோடும் நட்பு ரீதியான நல்லுறவு வைத்துக்கொள்ளாமல், அனைவரையும் எதிரிகளாகவும், குற்றவாளிகளாகவும் பார்க்கிறது.
7.ஓய்வு பெறப் போகும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் அடிவயிற்றில் பயத்தையும், படபடப்பையும் உருவாக்கி, வங்கிப்பணியில் அவர்கள் இயல்பாகவும் சுதந்திரமாகவும் ஈடுபடுவதை குறைக்கிறது.
8.புதிதாக பணிக்குச் சேர்ந்த இளம் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை அரவணைத்து அவர்களுக்கு இந்த வங்கியின் மீது பிடிப்பையும் பற்றையும் உருவாக்குவதற்கு பதிலாக அதிகாரம் செலுத்தி இந்த வங்கியை விட்டு வெளியேறும் எண்ணத்தை  ஏற்படுத்துகிறது.

இந்த விமர்சனங்களை எதோ மேலோட்டமாக நமது சங்கங்கள் சொல்லவில்லை. அனுபவங்களிலிருந்துதான் நாம் இதனை முன்வைக்கிறோம். கடந்த காலமே இவைகளுக்கு சாட்சியாக இருக்கிறது. இந்த விமர்சனங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உதாரணங்களாக நம் தோழர்களின் வாழ்க்கையும், உண்மைக்கதைகளும் நிரம்பிக் கிடக்கின்றன. அவைகளை நினைவுபடுத்துவது அவசியம் என நினைக்கிறோம். எனவே ஒவ்வொன்றாக  பேசுவோம்.

1. பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் மனிதாபிமானமற்றதாக இருக்கிறது:

ஒரு நிர்வாகம் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும். அவர்களின் துயரங்களையும், காயங்களையும் புரிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் பாதிப்புக்குள்ளாகும்போது அதை பரிவுடன் கவனிக்க வேண்டும்.  அதனை சரிசெய்வதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும்.

ஆனால் நிர்வாகங்கள் அப்படி இருப்பதில்லை. சட்ட திட்டங்களால்தான் நிர்வகிக்க முடியும் எனவும், அங்கு கருணைக்கும் இரக்கத்திற்கும் இடமில்லை எனவும் உறுதியாய் இருக்கின்றன. ஏனென்றால் உழைக்கும் மக்களை அவர்கள் சகமனிதர்களாக கருதுவதேயில்லை.

பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் இவ்விஷயத்தில் விதிவிலக்கல்ல என்பது மட்டுமல்ல, சகிக்க முடியாத உதாரணமாய் மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிர்வாகம் மிக விரைவில் `மனிதாபிமானமற்ற` தன்மையில் முதலிடம் பெறுவதற்கான சாத்தியக் கூறுகளும் தென்படுகின்றன.

முதலில் தோழர்.கிருஷ்ணசாமியைப் பற்றி இங்கு சொல்ல வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் பணிபுரிந்துவிட்டு நம் வங்கியிலிருந்து 2013 பிப்ரவரி மாதம் ரிடையர் ஆனார். அதற்கு சில மாதங்கள் முன்புதான், தன் வாழ்நாளின் ஒரேயொரு பதவி உயர்வு பெற்று ஆபிஸராயிருந்தார். அவர் 2010ம் ஆண்டு கிளரிக்கலாயிருந்த போது ஒரு மூன்று நாட்கள் கூடலூர் கிளைக்கு டெபுடேஷன் போயிருந்தார். அப்போதுதான் CBS  ஆகியிருந்தது. ஒரு கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டிய தொகை வேறு கணக்கில் தவறுதலாக வைக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் நடந்தது. பின்னாளில் அது சரி செய்யப்பட்டுவிட்டது என்பது வேறு கதை. ஆனால் இந்த நிர்வாகம் அவர் பணி ஓய்வு பெற சில நாட்கள் இருந்தபோது இதுகுறித்து ஒரு சார்ஜ் ஷீட் கொடுத்தது. நாம் நிர்வாகத்திடம் உடனடியாக பேசினோம்.  உடனே ஒரு பதிலைக் கொடுங்கள், சாதகமாக முடித்து விடலாம் என்றது. நாம் பதிலை சில நாட்களிலேயே கொடுத்து விட்டோம். இதோ ஒரு வருடமாகப் போகிறது. இன்று வரை அந்த சார்ஜ் ஷீட் மீது நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வைத்திருக்கிறது.  ஆனால் சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டதை முன்னிறுத்தி அவருடைய ஓய்வு காலச் சலுகைகளை நிறுத்தி விட்டது. மூன்று நாட்கள் டெபுடேஷன் சென்றதற்காக, 12 மாதங்களாக அவர் கிராஜுவிட்டியையும், லீவு சரண்டரையும் பெறாமல் இருக்கிறார். 30 வருடங்களாக இந்த வங்கியில் உண்மையாக பணிபுரிந்தவருக்கு கிடைத்திருக்கும் மரியாதையா இது?

நிர்வாகத்துடன் நமது சங்கங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கின்றன. இதோ முடித்து விடுகிறோம், அதோ முடித்து விடுகிறோம் எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில்  ஒவ்வொரு நாட்களையும் எவ்வளவு வேதனையுடன் தோழர்.கிருஷ்ணசாமி கழித்திருப்பார்? பொருளாதார ரீதியாக என்ன சிரமங்களுக்கு ஆளாகியிருப்பார்?  ஆனால் நிர்வாகத்துக்கு அது புலப்படுவதேயில்லை.

அதுபோலத்தான் மேலசெவல் கிளையில் மெஸஞ்சராக பணிபுரிந்த தோழர்.செல்வராஜ் அவர்களின் நிலைமையும்.  2013 ஜூலை மாதம் அவர் பணி ஓய்வு பெற்றார். ஓய்வு பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் 2013 ஆரம்பத்தில் தொடர் விடுப்பில் இருந்ததாகவும், முறையாக தெரிவிக்கவில்லையென்றும் ஒரு சார்ஜ் ஷிட் கொடுத்தது. லீவு எடுக்கிற அந்தந்த மாதங்களிலேயே அது குறித்து விளக்கம் கேட்டு, பிரச்சினையை எப்போதோ முடித்திருக்க முடியும். ஆனால் நிர்வாகம் அவர் ஓய்வு பெற காத்திருந்திருக்கிறது.

நிர்வாகத்துடன் அப்போதும் பேசினோம். ‘சார் லீவு எடுத்ததற்கு இவ்வளவு பெரிய தண்டனையா?’ என கேட்டோம். நிர்வாகம்  “ஒரு பதிலைக் கொடுங்கள். அதை வைத்து சுமூகமாக முடித்து அவருக்கு கிராஜுவிட்டி கொடுக்கிறோம்’ எனச் சொன்னது. ஆனால் சொன்னது போல முடிக்கவில்லை. சாதாரண லீவு விஷயத்திற்கு என்கொயரி ஆர்டர் செய்தது. ஈவு இரக்கமில்லாமல் தன் கோரப்பல்லைக் காட்டியது. சார்ஜ் ஷீட்டைக் காரணம் காட்டி அவருடைய கிராஜுவிட்டி ஏழு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. எந்த வருமானமும் இல்லாமல், கிராஜுவிட்டியும் இல்லாமல், ஓய்வுக்குப் பிறகு அவருடைய நாட்கள் எப்படியிருக்கும்?

இதுபோல பல உதாரணங்களையும் கண்ணீர்க் கதைகளையும் சொல்ல முடியும். நிர்வாகத்தின் உயர் பொறுப்பிலிருப்பவர்களுக்கு இதயமே இல்லை என்பது மட்டும் நடக்கும் சம்பவங்கள் நிச்சயம் செய்கின்றன.

பல பெண் தோழர்கள்  குடும்பத்தைவிட்டு கைக்குழந்தைகளோடு தொலைதூரங்களில் பணிபுரிகிறார்கள். நாம் சென்ற வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அவர்களுக்கு மாறுதல்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறோம். நிர்வாகம் இரக்கமேயில்லாமல் இறுக்கமாய் இருக்கிறது. ஒவ்வொரு சனிக்கிழமை மதியங்களும் அவர்கள் நான்கைந்து மணி நேரங்கள் பயணம் செய்து தங்கள் குடும்பத்தைப் பார்த்துவிட்டு, திங்கட்கிழமை அதிகாலையில் வேதனையுடன் கிளைகளுக்கு புறப்படுவது இந்த நிர்வாகத்துக்கு ஒரு பொருட்டாகவேத் தெரிவதில்லை. சமீபத்தில் ஒரு பண்டிகையின் போது பஸ் கிடைக்காமல் கைக்குழந்தையோடு பல மணிநேரம் அல்லாடி வீட்டுக்கு வந்த ஒரு பெண் தோழர் போன் செய்து `சார் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன் சார். தாங்க முடியாமல்தான் போன் செய்கிறேன்` எனச் சொல்லும்போது வாய்விட்டு ஓவென்று கதறிவிட்டார். ஆனால் நிர்வாகத்தின் இரும்புக் காதுகளுக்கு இந்த அவலக்குரல்கள் கேட்பதேயில்லை.

போதிய பயிற்சிகள் இல்லாமல் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களையும், மெஸஞ்சராயிருந்து பதவி உயர்வு பெற்றவர்களையும் கேஷ் பார்க்க வைக்கிறது நிர்வாகம். கடுமையான வாடிக்கையாளர் கூட்டத்தை சமாளிக்க முடியாமல், அங்கங்கு தோழர்கள் பணத்தை விட்டு விடுகின்றனர். சமீபத்தில் நடந்த சில சம்பவங்களில் ரூ.50000/- வரை பணம் விட்டுவிட நேர்ந்திருக்கிறது. நிர்வாகம் அடுத்த நாளே சம்பந்தப்பட்ட தோழர்களிடம் பணத்தைக் கட்டுமாறு நெருக்கடி கொடுத்திருக்கிறது. சங்கத்திலிருந்து தலையிட்டுப் பேசினோம்.  நான்கைந்து தவணைகளில் கட்டி விடுவதாக யோசனையை முன்வைத்தோம். நிர்வாகம் ஒப்புக் கொள்ளவேயில்லை. அவர்கள் எங்கே ஒடிவிடப் போகிறார்கள். நம் ஊழியர்கள்தானே. வங்கிக்காக பணிபுரிந்தபோது ஏற்பட்ட இழப்புதானே. பாதிப்படைந்த தோழருக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் ஏன் நடந்துகொள்ளக் கூடாது? நிர்வாகம் ஏன் கனிவோடு அணுகக் கூடாது?

இப்படி லீவு சாங்ஷன் செய்யப்படுவதில், உயரதிகாரிகளின் தொலைபேசி அழைப்புகளில், சிறு தவறுகளையும் பெரும் குற்றங்களாக சித்தரித்து விளக்கம் கேட்பதில் பல நூறு விஷயங்களை சொல்ல முடியும்.

இந்த நிர்வாகத்தின் `மனிதாபிமானமற்ற` ஸ்தல புராணம் நீளமானது. அருவருப்பானது. கோரமானது. இதுதான் நிர்வாகத்தின் மனோபாவமாக இருந்தால் இங்கு பணிபுரிகிறவர்களுக்கு எப்படி இந்த வங்கியின் மீது பற்று ஏற்படும். பார்க்கும் வேலைகளில் உற்சாகம் இருக்கும்?

(தொடரும்)

13.2.14

நிர்வாகம் என்றால் என்ன?





நிர்வாகம் என்பது ஒரு நிறுவனத்தை அல்லது அமைப்பை நிர்வகிப்பது என புரிந்துகொள்ளலாம். நிர்வகிப்பது என்றால் அந்த நிறுவனத்தின்  சகல காரியங்களும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதாக பொருள். இந்த `கீழ்` என்கிற வார்த்தையை அழுத்தத்தோடு பார்க்க வேண்டியிருக்கிறது. அதாவது நிர்வகிப்பவர்கள் மேலேயும், நிர்வகிக்கப்படுகிறவர்கள் கீழேயுமாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதனால்தான் Management என்பதற்கு அர்த்தம் `மேலாண்மை` என்பதாக இருக்கிறது. `மேல்` என்று வந்துவிட்டாலே அதனோடு அதிகாரமும் மரியாதையும் சேர்த்து வைக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தையும், மேலான இடத்தையும் அவர்களுக்குத் தருவது முதலீடு. அதாவது மூலதனம். இந்த நிர்வாகிகள் முதலீட்டாளர்களின் சார்பானவர்களாக இருக்கிறார்கள். அவர்களே வேலை வாங்குபவர்களாகவும், லாபநட்டங்களை கணக்கிடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே சட்ட திட்டங்களை உருவாக்குபவர்களாகவும்,  கண்காணிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களே குற்றம் கண்டுபிடிக்கிறவர்களாகவும், தண்டனை வழங்குபவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது முதலீட்டை / மூலதனத்தை பாதுகாக்கிற, வளர்க்கிற கருவியே நிர்வாகம். அது மேலே இருக்கிறது.

கீழ் இருப்பவர்கள் நிர்வகிக்கப்படுகிறவர்கள். அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறவர்கள். அதாவது உழைப்பை செலுத்துகிறவர்கள். அவர்களுக்கு மரியாதையும், அதிகாரமும் கிடையாது. மேலிருப்பவர்கள் சொன்னதை அப்படியேச் செய்ய வேண்டியவர்கள். அவர்கள் மீது மேலும் மேலும் வேலைப்பளு சுமத்தப்படுகிறது. பணிபுரியும் இடங்களில் போதிய வசதிகள் செய்து தரப்படுவதில்லை. அவர்களுக்கு ஏற்படும் பணி நெருக்கடிகளை மேல் இருப்பவர்கள் கண்டு கொள்வதேயில்லை. அவர்களது முறையான ஊதியம் வழங்கப்படுவதில்லை. சலுகைகள் மறுக்கப்படுகின்றன. ஒழுங்கற்றவர்கள் என குற்றம் சாட்டப்பட்டு தண்டனைக்குள்ளாகிறார்கள். மொத்தத்தில் அடிமைகளாகக் கருதப்படுகிறவர்கள்.

இந்த மேல், கீழ் ஏற்றத்தாழ்வுதான் நாம் வாழும் அமைப்பின் விதியாக இருக்கிறது. அதுதான் இந்த  நிறுவனங்களில் பிரதிபலிக்கிறது. மூலதனம் அதிகாரம் கொண்டதாகவும், உழைப்பு அடிமைத்தனம் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இந்த விதி இயல்பானதாகவும், மாற்றமுடியாததாகவும் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்படுகிறது. எனவே இதனை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், நாம் என்ன செய்ய முடியும் என்றும் ஒரு மனோபாவம் ஏற்படுகிறது.

இந்த ஏற்றமும் தாழ்வும், அதிகாரமும் அடிமைத்தனமும் சரியல்ல என்று ஆவேசத்துடன் உருவானவைதான் தொழிற்சங்கங்கள். உழைக்கிறவர்கள் பக்கம் நின்று, எல்லோரும் சமம் என்னும் நியாயத்தை தொழிற்சங்கங்கள் பேச ஆரம்பித்தன. `எல்லாவற்றையும் மாற்ற முடியும்` என்னும் நம்பிக்கையோடு வேலைசெய்கிறவர்களின் நலன்களுக்காக போராட ஆரம்பித்தன. அவர்கள் வேலைக்கு உத்திரவாதமும், எதிர்காலத்திற்கு உறுதியும் செய்கிற சட்டங்களுக்காக பெரும் இயக்கங்கள் நடத்தின. 19ம் நூற்றாண்டில் பிற்பகுதிகளில் இரத்தம் சிந்தி நடத்தப்பட்ட மாபெரும் தியாகங்களின் மூலம் ஓரளவு வெற்றி கிட்டியது. அடிப்படையான உரிமைகள் நிலைநாட்டப்பட்டன.

ஆனால் இந்த அமைப்பும் அதன் கருவிகளாக இருக்கின்ற நிர்வாகங்களும் உழைப்பவர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் மெல்ல மெல்ல நீர்த்துப் போய் வைப்பதில் குறியாக இருந்தன. அவை சிரித்துக்கொண்டே கழுத்தையறுக்கும் தந்திரங்களை கற்றிருந்தன. `நமக்கு வேலை தருகிற நிறுவனம்`, `நமக்கு சோறு போடுகிற நிறுவனம்` `இது நமது நிறுவனம்` என்று சொல்லி உழைப்பவர்கள் முதலில் அந்த நிறுவனத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும், நன்றியோடு இருக்க வேண்டும் என்னும்  கருத்தை விதைக்க ஆரம்பித்தன. உழைப்பவர்களின் நிறுவனமாக இருந்தால், நிறுவனத்தின் நடைமுறைகளை செயல்திட்டங்களை வகுப்பதில் உழைப்பவர்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடம் கொடுப்பதே சரியானதாய் இருக்க முடியும். ஆனால் அதனை இந்த நிர்வாகங்கள் செய்ய தயாராயில்லை.  அடிமைத்தனத்தை விசுவாசம் என்ற பெயரில் நீருற்றி வளர்ப்பதுதான் அவர்களது நோக்கம். நிறுவனம் நன்றாக இருந்தால்தான் நாம் நன்றாக இருக்க முடியும் என்று திரும்பத் திரும்ப மந்திரம் போல சொல்லிக்கொண்டே இருந்தன. அதற்கு சாதகமான விளைவுகள் ஏற்பட்டன. நிர்வாகத்துக்கு ஆதரவான, சமரச குணம் கொண்ட தொழிற்சங்கங்கள் தோன்ற ஆரம்பித்தன. உழைப்பாளர்களிடையே பிரிவும், ஒற்றுமையின்மையும் ஏற்பட்டது. கூட்டுபேர உரிமை என்பது கரைய ஆரம்பித்தது. பெற்ற  உரிமைகளையும், சலுகைகளையும் உழைப்பாளர்கள் இழக்க ஆரம்பித்தனர். நிர்வாகங்கள் அதில் குளிர் காய்கின்றனர். உழைப்பாளர்களோ வெந்து புழுங்குகின்றனர்.

எனவேதான் நாம் இந்த அமைப்பு, இந்த நிர்வாகங்கள் குறித்த ஒரு தெளிவான புரிதல் கொண்டாக வேண்டியிருக்கிறது. தந்திரங்களும், சூழ்ச்சிகளும் செய்து உழைப்பாளர்களை பலவீனப்படுத்தும் நிர்வாகத்தை அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. நிர்வாகம் என்பதும் மனிதர்களால் ஆனதுதான். ஆனால் மனிதத்தன்மையற்று ஒரு இயந்திரம் போல செயல்படுகிறது. அதனால்தான் `நிர்வாக இயந்திரம்` என அழைக்கப்படுகிறது. உழைப்பவர்களின் நலனில் அக்கறை உள்ளது பாவனைகள் செய்கிறது. அவ்வப்போது எதாவது சின்னச் சின்னச் சலுகைகள் செய்து கொடுத்து மார் தட்டிக் கொள்கிறது. உழைப்பாளிகளில் காட்டிக் கொடுக்கும், தாஜா செய்யும் இழிந்த குணம் கொண்டவர்களை  அடையாளம் கண்டு தன் பக்கத்தில் வைத்துக் கொள்கிறது. உழைப்பவர்களின் பிரச்சினைகளைப் பற்றி பேசாமல், அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கே முன்னுரிமை கொடுக்கிறது.

தொழிற்சங்கங்களோ, நிர்வாகத்தின் சுய உருவத்தை அம்பலப்படுத்தி, உழைப்பவர்களின் நலன்களுக்கும், உரிமைகளுக்கும் முன்னுரிமை கொடுத்து செயல்படுகின்றன. ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. உழைக்கும் மக்களின் ஒற்றுமையை ஆயுதமாக்கி போராட்டத்துக்கு தயார் செய்கின்றன.

இந்த முரண்பாடுகள் உலகமெங்கும் வெளிப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. பாண்டியன் கிராம வங்கியில் இந்த முரண்பாடு எப்படி இருக்கிறது என்பதை இனி பார்ப்போம்.

 (தொடரும்)

22.1.14

Scale III to Scale IV பதவி உயர்வின் மர்ம முடிச்சு!


உலகமெங்கும் ஜனநாயக இயக்கங்களும், முற்போக்கு வாதிகளும்  வெளிப்படைத்தன்மை இல்லாத அரசையும், அமைப்பையும் கடுமையாகச் சாடியும், எதிர்த்தும் வந்திருக்கின்றன. வருகின்றன. எங்கே வெளிப்படைத் தன்மை (transparency) இல்லையோ அங்கே பாரபட்சங்களும், அநீதிகளும், தவறுகளும் தலைதூக்குகின்றன என்பது ஒரு எளிமையான சமூக விஞ்ஞானம். வரலாற்றின் பக்கங்களில் இருந்து இதனை நாம் அறிய முடியும். இங்கே பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்திடமும் நாம் திரும்பத் திரும்ப வலியுறுத்தும் விஷயங்களில் ஒன்றாக அதே  ‘வெளிப்படைத்தன்மை’ இருக்கிறது. வெளிப்படைத் தன்மையற்ற அணுகுமுறையை நமது நிர்வாகம் தொடர்ந்து போற்றி பாதுகாத்து வருகிறது.

வெளிப்படைத் தன்மையை ஏன் ஜனநாயகரீதியானது என நாம் சொல்கிறோம் என்றால், அதிகாரத்திலிருப்பவர்களின் ஒரு செயல் அல்லது சிந்தனை, அந்த அமைப்பின் கடைகோடியில் இருப்பவர்களுக்கும் தெரிய வரும். அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அனைவரும் தங்களை அதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியும். அந்த அமைப்பின் மீது நம்பகத்தன்மை அதிகரிக்கும். அமைப்பை ச் சார்ந்த அனைவரும் கூட்டாக பொறுப்பேற்று ஒரு காரியத்தை நிறைவேற்ற வைக்கும். உண்மையானவர்களுக்கும், திறமையானவர்களுக்கும் உரிய மரியாதையும் இடமும் கிடைக்கும்.

இதற்கு நேர் எதிரானது சர்வாதிகாரச் சிந்தனை. அது வெளிப்படைத்தன்மையற்றது. ஒரு முடிவு அல்லது காரியம் மேலே அதிகாரத்தால் இருப்பவர்களால் அறிவிக்கப்படும். ஏன் என்ற கேள்வி இல்லாமல், அனைவரும் அதற்கு உடன்பட வேண்டும். உடன்படாதவர்களை கலகக்காரர்கள் என்றும், துரோகிகள் என்றும் அந்த அமைப்பு சித்தரிக்கும்.  நேர்மையானவர்களை விட விசுவாசம் மிக்கவர்களே அங்கு போற்றப்படுவார்கள். திறமையானவர்களை விட அடிமைத்தனம் கொண்டோரே கொண்டாடப்படுவார்கள்.

இந்த அளவுகோலோடு, நமது வங்கியின் நிலைமைகளை ‘ஆடிட்’ செய்து பார்த்தால் , பல விஷயங்கள் சட்டென புரியும்.

நமது வங்கியில் நடைபெறும் பல காரியங்கள், எதோ எதிரிகள் நாட்டில் திடிரென புகுந்து தாக்குதல் நடத்துவதைப் போலவே அரங்கேற்றப்படும். யாருக்கும் தெரியாமல் திட்டமிட்டு, அதை பரம ரகசியமாக வைத்திருந்து, அதிவேகமாக அமல்படுத்த அறிவிப்புகள் வெளியாகும். ஏன், என்ன என யாரும் யோசித்துவிடக் கூடாது.

தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களானாலும் சரி, புதிதாக நம் வங்கியில் ஒருவர் பணிக்குச் சேர்கிறார் என்றாலும் சரி, ரகசியம் ரகசியம்தான். அவைகள் ஒவ்வொன்றையும் பற்றி தனித்தனியாக ஒவ்வொரு கட்டுரை எழுதலாம். இங்கே எழுத வேண்டியும் வரலாம். இப்போது தொடங்கிய பிரச்சினைக்கு வருவோம்.

இப்படி டிரான்ஸ்பர், அப்பாயிண்ட் மெண்ட், தொழில்நுட்ப விஷயங்கள், பிரமோஷன் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையற்றதாய் இந்த நிர்வாகம் இருந்தாலும், சில அடிப்படை விஷயங்களையாவது  ஒப்புக்காக பின்பற்றி வந்தது.  இந்த Scale III to IV பிரமோஷனில் அதையும் காற்றில் பறக்கவிட்டிருக்கிறது.

25.1.2014 அன்று நடக்க இருக்கிற Scale III to IV பிரமோஷனுக்கு இன்று வரை சர்க்குலர் வரவில்லை. கேட்டால் intranetல் போட்டு இருப்பதாக பதில் வருகிறது. ஏன் இந்த PAD சர்க்குலர் மட்டும் intranetல் போடப்படுகிறது என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது.

Intranetல், வெளியிடப்பட்டு இருக்கிற  PAD சர்க்குலரில், 19 இடங்களுக்குரிய பதவி உயர்வு  வரும் சனிக்கிழமை, 25.1.2014 நடைபெறும் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகி இருக்கிறது. எத்தனை பேர் eligble, யார் யார் அவர்கள் என்பதெல்லாம் இல்லை. இதில் என்ன ரகசியம் என்ற கேள்வி அடுத்து எழுகிறது.

ஒவ்வொரு வருடமும் அனைத்து கேடர்களுக்கான அறிவிப்புகள் சேர்த்து அறிவிக்கப்படும். இந்த  தடவை  Scale III to IV பதவி உயர்வு மட்டும் ஏன் தனியாக அறிவிக்கப்படுகிறது எனவும் யோசிக்க வேண்டி இருக்கிறது.

பதவி உயர்வுகளை நாம் வரவேற்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யும் நிர்வாகத்தை நாம் நிச்சயம் பாராட்டவேச் செய்கிறோம். Scale III to IV மட்டுமல்ல, Scale IV to V பிரமோஷனும் கொடுக்க வேண்டும், நமது வங்கியில் பணிபுரிபவர்களே நமது ஜெனரல் மேனேஜர்களாகவும், சேர்மன்களாகவும் உயர வேண்டும் என்பதே நமது நீண்ட கால கோரிக்கை. அவை நியாயமானதாகவும், வெளிப்படைத்தன்மையுள்ளதாகவும் இருக்க வேண்டும் என்பதே நமது விருப்பம்.

ஆனால், இந்த Scale III to IV பிரமோஷனில் இல்லாத வெளிப்படைத்தன்மை பல சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்புகிறது. அதை ஆராய்ந்து பார்த்தால் வெளிவரும் உண்மை மோசமானதாய் இருக்கிறது.

AIVD முதுநிலை மேலாளராய் இருக்கும் மிஸ்டர் சங்கரநாராயணன் இந்த மார்ச் மாதத்தில் பணி ஓய்வு பெறுகிறார். இந்த வங்கியின் ஊழியர்கள் அலுவலர்களின் பொது எதிரியான அவருக்கு பதவி உயர்வு கொடுப்பதற்காகவே இந்த Scale III to IV பிரமோஷன் ரகசியமாகவும், அவசரம் அவசரமாகவும் நடத்தப்படுகிறது. இவர் எந்த performanceம் செய்யவில்லை, இவருக்கு  scale III கொடுத்ததே தவறு, scale IIக்கு இறக்க வேண்டும் என சில வருடங்களுக்கு முன்பு சொன்ன இதே நிர்வாகம் இப்போது scale IV பிரமோஷன் கொடுக்க இருக்கிறது.  இந்த வருடங்களில் அப்படியென்ன பிரமாதமாய் perform  செய்துவிட்டார்?  இன்னும் இரண்டு மாதங்களே பணி ஓய்வு பெற இருக்கிறவருக்கு ஏன் இந்த பதவி உயர்வு?  பலரின் சாபங்களையும் வயிற்றெரிச்சலையும்  பெற்று பணி ஓய்வு பெற இருப்பவருக்கு இந்த நிர்வாகம்  செய்கிற மரியாதை இது.  வக்கிரமும், வன்மமும் கொண்ட,  மனிதாபிமானமற்ற அந்த நபரால் நமது வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் பலரின் வாழ்க்கை சிதைக்கப்பட்டு இருக்கிறது. அவரது கொழுப்பேறிய ஆங்கில வார்த்தைகளால் பக்கம் பக்கமாக எழுதிய குற்றச்சாட்டுகள் அழுகிப்போன இதயத்திலிருந்து உருவானவை.  அதற்குத்தான் இப்படி, இந்த பிரமோஷன்!


இதனையொட்டி உண்மையிலேயே சில அற்புதமான தோழர்களுக்கும் விரைவில் பதவி உயர்வு கிடைக்க இருக்கிறது என்பதுதான் இதில் ஒரு சந்தோஷமான விஷயம்!

28.12.13

PGBEA செயற்குழு (22.12.2013) முடிவுகள்



PGBEAவின் செயற்குழு கடந்த ஞாயிறு, 22.12.2013 அன்று விருதுநகரில், சங்க அலுவலகத்தில் நடந்தது. வங்கியில் ஊழியர்களின் இன்றைய நிலைமை, அவர்களது பிரச்சினைகள் மற்றும் நிர்வாகத்தின் போக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. பல்வேறு கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதம் ஒன்றை நிர்வாகத்துக்கு எழுதி, அதன் மேல் பேச்சுவார்த்தையை ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடத்தியிருந்தோம். PGBOUவுடன் இணைந்து ஒரு கோரிக்கை சாசனத்தை முன்வைத்து சர்ர்குலரில் தெரியப்படுத்தி இருந்தோம். அவைகளில் STaff Housing Loanஐத் தவிர வேறு எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்களின் நலன்களிலும் பிரச்சினைகளிலும் நிர்வாகம் மெத்தனமாக நடந்துகொள்வதாக செயற்குழு கருதியது. அந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி நிர்வாகத்துடன் பேசி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

2. இங்கு முறையான Transfer Policy ஒன்று இல்லாமலிருப்பதே, பல்வேறுவிதமான குழப்பங்களுக்கும், விதிமீறல்களுக்கும், பாரபட்சங்களுக்கும் காரணமாக அமைகிறது. நிர்வாகத்துடன் இதனை பலமுறை பேசியிருக்கிறோம். Transfer Policy ஒன்றை உருவாக்க ஒரு கமிட்டி அமைத்து, அனைத்துச் சங்கங்களுடனும் பேசி இறுதிப்படுத்தலாம் என நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ஒரு யோசனையை முன்வைத்தது. இன்றுவரை அப்படியொரு கமிட்டி அமைக்கப்படவில்லை. Transfer Policy ஒன்றை, வங்கித்துறையின் இருதரப்பு ஒப்பந்தங்களின் காணப்படும் அம்சங்களோடு உருவாக்க இயக்கம் நடத்த வேண்டும் என செயற்குழு தீர்மானித்தது.

3. கிளைகளில் NRGES மற்றும்  OAP அக்கவுண்டுகள் குவிந்து கிடக்கின்றன. அவைகளுக்குரிய Transactionகளை பார்க்க முடியாமல் ஊழியர்களும் அலுவலர்களும் திணறுகின்றனர். NRGESக்குரிய பணம், கிராமங்களில், மக்கள் வேலை செய்யும் இடங்களிலேயே பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என்பதுதான் அரசு விதி. Business Corespondentகள் அதற்குரிய வகையில் தொழில்நுட்பரீதியாக equip செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வருடங்களாகியும் நிலைமை சரிசெய்யப்படவில்லை. நிர்வாகத்துடன் பேசும்போதெல்லாம் பல்வேறு உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. ஆணால் நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதுதான் உண்மை. இந்த நிலைமையில் Money Transfer-ம் நம் வங்கியில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாய் அறிகிறோம். அதே வேளையில், ATM கொண்டு வருவதற்கான முயற்சிகள் நிறைவேறாமல் இருக்கின்றன. பொதுவாக ஊழியர்களுக்கு வேலையை அதிகரிக்கும் காரியங்கள் வேகமாகவும், வேலை ஓரளவுக்கு சமன்செய்யும் காரியங்கள் மந்தமாகவும் நடைபெறுகின்றன. செயற்குழு இந்தப் போக்கை கடுமையாக விமர்சித்ததுடன் இதனை சரிசெய்யும் இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும் என தீர்மானித்தது.

4. அறுபது வயதுக்கு மேல் ஓய்வு பெற்ற அலுவலர்களை பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம், குறிப்பிட்டப் பணிகளுக்காக பயன்படுத்துவதை செயற்குழு விவாதித்தது. இது ஆரோக்கியமான நடைமுறை இல்லை என்றே கருதியது. அறுபது வயதுக்கு மேல், ஒருவரது ஓய்வு நாட்களில், இப்படி பணிபுரிய பயன்படுத்துவதை எந்த சமூக நோக்குள்ள சங்கமும் எதிர்க்கவே செய்யும். இந்த சமூகத்தில் வேலையில்லாமல் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கான புதிய பணி வாய்ப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கவேச் செய்யும். மேலும் நமது Staff Service Regulationக்கும், Reserve Bank guidelinesக்கும் எதிரான காரியம் இது. எனவே நிர்வாகம் 60 வயதுக்கு மேலான அலுவலர்களை, வங்கிப்பணிகளுக்கு பயன்படுத்துவதை எதிர்ப்பது என்றும், தடுப்பது என்றும் செயற்குழு தீர்மானித்தது.

இந்தப் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அடுத்தக் கட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

வங்கிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற தோழரும், PGBEAவின் மகத்தான தலைவருமான தோழர்.சோலைமாணிக்கம் அவர்களை செயற்குழு பாராட்டியது. வங்கிப்பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக, PGBEAவின் உதவித்தலைவராக , செயற்குழு உறுப்பினராயிருந்த தோழர்.நாசர் (அடைக்கலப்பட்டிணம் கிளை) co-opt செய்யப்பட்டார். அதனால் உருவான செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தோழர்.ரெங்கநாதன் (கயத்தாறு கிளை) தேர்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

செயற்குழு முடிவுகளையடுத்து, நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றோம். தொடர்ந்து கிளைகள் திறக்கப்படுவதையொட்டி நிர்வாகத்தரப்பில் அதற்கான நேரம் ஒதுக்க முடியாமல் இருந்தது. இப்போது சேர்மனோடு பேச்சுவார்த்தை 31.12.2013 அன்று குறிக்கப்பட்டு இருக்கிறது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதன் விபரங்களை தோழர்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

செயற்குழுவின் முடிவின்படி, நிர்வாகத்துக்கு கடிதங்கள் எழுதப்பட்டு இருக்கின்றன. அவைகளை இங்கு தருகிறோம்.


----------------------------------------------------------------------------------------------------
(1) On demands:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Our demands- Reg

We wish to remind the Charter of demands submitted by us in the month of July, 2013 and the discussions had with the management. Except one or two demands like Staff Housing Loans and Transfers to General Secretary and President of PGBEA, none other demands are looked into so far.

Management had assured to implement some demands and take up some demands with sponsor Bank. But there was no development in the last few months.

We request your goodselves to concentrate on Staff Welfare measures which will boost the morale and job satisfaction of the employees.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(2) On Transfer Policy:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Transfer Policy

We recall our discussions with the management on the above subject several times. Management had assured to look into the matter, proposed to form a committee to examine a transfer policy and agreed to frame a transfer policy within Mar, 2014.

We remind the same and request your goodselves to take necessary steps in this regard.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(3) On NRGES and OAP:

Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,

Handling ‘NRGES’ and ‘OAP’ accounts - Reg

We come to understand that our management is going to introduce the business of ‘Money – Transfers’ in our bank. It will be good for the bank and we welcome the move. At the same time we have to point out our miserable experiences and observations in this regard.

As per the Govt guidelines, money should be given to the people at their working spot under ‘NRGES’. But our bank does not pave the way for it so far. So, our branches are filled up with the customers under ‘NRGES’ and ‘OAP’. Our employees and Officers are finding it very difficult to manage the transactions under ‘NRGES’ and ‘OAP’. Poor customers and agricultural labourers under ‘NRGES’ are waiting in the branches for a very long time and are suffering very much. When we brought the matter to the management, it was said there would be technological updating soon to handle them. Even after the lapse of one year, we regret to inform that there is no development. In all other banks, these accounts are being managed as per Govt norms with necessary technology. We also wish to point out here that management has not concentrated in the technology such as ‘ATM’ facilities, which will reduce the work load in the branches.


In these conditions, ‘Money Transfers’ shall not be an additional burden to our employees and Officers in the brnches. Hence, we request the management to give due priority for the technology updating to handle the ‘NRGES’ and ‘OAP’ accounts in the branches.


Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(4) On Engaging Retired Officers for Bank work:


Pandyan Grama Bank Employees Association
(360/RMD) (Affi: AIRRBEA & BEFI)
CO Colony,  (Near) RTO Office, Virudhunagar -626001

TO

The chairman
Pandyan Grama Bank
Administrative office
Virudhunagar


Sir,
Engaging Officers over and above the age of 60 for official Duties of the Bank

We come to understand that our management is engaging some officers who are above the age of 60 for some of the official work of the bank. We place our strong objection and protest in this regard.

Being a trade union with social outlook we see this practice will curtail the job opportunities for the unemployed youth of the society. Further, it will not be also fair to extract work from any person after the age of 60. We also point out that this practice is against our Staff Service Regulations, 2010 and RBI guidelines.

Hence, we request your goodselves to stop this practice and engage the regular employees of the bank for any official work.

Thanking you

Yours faithfully
Inline image 1
(J.Mathavaraj)
General Secretary:
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


2.9.13

PGBEA NEWS : 2.9.2013



Transfers:

Transfer குறித்த பணிகள் இன்னும் நிர்வாகத்தரப்பில் முழுமையடையவில்லை. வங்கியின் சேர்மன்  பூனாவுக்குச் செல்வதால், டிரான்ஸ்பர்கள் 4ம் தேதிக்குப் பிறகுதான் வெளியிடக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டது. நேற்று பொதுமேலாளரை சந்தித்துப் பேசிய PGBEA தலைவர்கள், தாங்கள் 4ம் தேதி கல்கத்தாவுக்குச் செல்லவிருப்பதால், அதுசமயம் டிரான்ஸ்பர்கள் போட வேண்டாமென்றும், கல்கத்தாவிலிருந்து திரும்பி வந்த பிறகு, 10ம் தேதிக்குப் பிறகு டிரான்ஸ்பர்கள் போடலாமே என்று தங்கள் கருத்தைத் தெரிவித்தனர். நிர்வாகமும் ஒப்புக்கொண்டு இருக்கிறது. எனவே, ஆபிஸர்கள், கிளர்க்குகள், மெஸஞ்சர்கள் அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக, செப்டம்பர் 10ம் தேதிக்குப் பிறகு டிரான்ஸ்பர் ஆர்டர்கள் வெளியிடப்படும்.

Training:

புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு செப்டம்பர்  2ம் தேதி முதல்  3 நாட்கள் தலைமையலுவலகத்தில் வைத்து Training  கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு Regionக்கும் 10 பேர் வீதம் மொத்தம் 40 பேருக்கு Training  கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த Training-ன் போது அவர்களது original certificate அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்க நிர்வாகம் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

Staff Housing Loan and Staff vehicle Loan:

ஸ்பான்ஸர் வங்கிக்கு இணையாக Staff Housing Loan மற்றும்  Staff vehicle Loan வழங்கப்பட வேண்டுமென தொடர்ந்து PGBEAவும், PGBOUவும் வலியுறுத்தி வந்தன. சமீபத்தில் நடந்த போர்டு மீட்டிங்கில் இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் கிளரிக்கல் தோழர்களுக்கு Staff Housing Loan 8 லட்சமும், ஆபிஸர்களுக்கு 12 லட்சமும் வழங்கப்படும். Confirm ஆன அனைவரும் இந்த கடன்களைப் பெற தகுதியுள்ளவராகின்றனர்.

Disciplinary Proceedings:

வரும் காலங்களில், ஒழுங்கு நடவடிக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு, வங்கியில் பணிபுரிவர்களிடம் ஒரு அச்சமற்ற மனநிலை உருவாக வழிவகுக்க வேண்டுமென Enquiry Officers, Presenting Officers மீட்டிங்கில் நிர்வாகத்தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையாய் இருக்க வேண்டுமென்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது.

Recruitment:

ஒவ்வொரு பதவியிலும் 2013ம் வருடத்திற்கான காலியிடங்கள் அடையாளம் காணப்பட்டு  Board meetingல் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இப்போது ஐ.ஓ.பிக்கு அனுப்பபட்டு இருக்கிறது. ஐ.ஓ.பியின் அனுமதி பெற்றவுடன்,  பதிய பணி நியமனத்திற்கான பணிகள் துவங்கப்படும் எனத் தெரிகிறது.

விளையாட்டு:

திருநெல்வேலியில் நடந்த கிரிக்கெட் போட்டியின் அனுபவத்தை, வங்கியின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நிர்வாகம் தீமானித்துள்ளதாக தெரிகிறது. அடுத்து காரைக்குடியில் கிரிக்கெட் போட்டியை ஒட்டி,  deposit campagin மற்றும் Marketingஐயும் இணைத்து நடத்தலாம் என ஆராய்ந்து வருகிறது.

(இனி அவ்வப்போது இதுபோல செய்திகள் வாசிக்கப்படும்.)

3.8.13

பயிலரங்கம் ஒத்திவைக்கப்படுகிறது!

நாளை (4.8.2013)ம் தேதி, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்காக நாம் பயிலரங்கம் ஒன்று நடத்துவதாக இருந்தது. அதே 4ம் தேதி, நமது பாண்டியன் கிராம வங்கியின் சார்பில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்குபெறும் கிரிக்கெட் விளையாட்டு நடக்க இருப்பதை தெரிவித்து, இந்த ‘பயிலரங்கத்தை’ இன்னொரு தேதியில் நடத்தலாமா என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்து பயிலரங்கம் நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து விரைவில் PGBEAவிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும். அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த பயிலரங்கம் குறித்து சுவாரசியமான ஒரு செய்தி:

நாம் எது நடத்தினாலும், போட்டிக்கு உடனடியாக அதுபோல ஒன்றை நடத்துவதை PGBWUஇப்போது வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டுள்ளது. அதுபோல நாம் பயிலரங்கம் நடத்துவது என முடிவு செய்து, புதிய தோழர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்திருந்தோம். அவ்வளவுதான்.  சிலிர்த்து எழுந்த PGBWU, அதே 4ம் தேதி தாங்களும் புதிய தோழர்கள் அழைத்து எதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டனர். புதிய தோழர்களை வீடு வீடாக  கார்களில் சென்று சந்தித்து, டிரெய்னிங்கின்போது லாட்ஜ்களில் தங்கவைத்து, உணவு வரை ஏற்பாடு செய்து இதுவரை இரண்டரை லட்சம் செய்திருக்கிறோம்,  பத்தாயிரம் ருபாய்ச் செலவில் பயிலரங்கம் நடத்தி PGBEA அவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என கொந்தளித்தனர்.  ஆனால் அவர்களுக்கு எதாவது தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ‘பயிலரங்கம்’ போல ஒன்றை நடத்த முடியும். இந்தச் சிக்கலில் தவித்தவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று  'get to-gether' ஒன்று நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட PGBEA உதவித்தலைவர் தோழர்.சுப்பிரமணியன் (பழைய பேட்டை) அவர்கள், PGBWUவின் தலைவர்களில் ஒருவரைப் பார்த்து இப்படி கேட்டாராம்:

“ஆமாம்ப்பா, நாங்க மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் கிளாஸ் நடத்துனா, போட்டியா நாங்களும் நடத்துறோம்னு வர்றீங்க. நாங்க புதுசா சேர்ந்தவங்களுக்கு training class  நடத்துனா, போட்டியா நாங்க ‘get together' நடத்துவோம்னு வர்றீங்க. சரி. நாளைக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டமோ, தர்ணாவோ நாங்க நடத்துவோம். அப்பமும் போட்டிக்கு இப்படி வருவீங்களா?”


இதற்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்?

23.7.13

EA circular 2/2013 dated 22.7.2013


சுற்றறிக்கை எண்: 2/2013 நாள்:  22.7.2016

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நமது வங்கியின் புதிய சேர்மனாக திரு.கார்த்திகேயன் பொறுப்பேற்று இருக்கிறார்.  நமது வங்கியில் ஏற்கனவே பொதுமேலாளராய் இருந்து நம் வங்கியையும், இங்குள்ள அனைவரையும் அறிந்தவர் அவர். வெளிப்படையான, பாரபட்சமற்ற, நேர்மையான, நட்புமிக்க அணுகுமுறையோடு பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தை அவர் தலைமையேற்று நடத்திட விரும்புகிறோம். வங்கியின் வளர்ச்சி குறித்த சிந்தனைகளில், திட்டங்களில் ஊழியர்கள் நலனையும் கருத்தில் கொள்வார் என எதிர்பார்க்கிறோம். பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் அவரை வாழ்த்தி வரவேற்கிறது.

பல்வேறு விஷயங்கள் நிர்வகத்திடம் பேச வேண்டி இருந்தன. நேற்று நமது வங்கியின் பொதுமேலாளரை சந்தித்துப் பேசினோம்.

1. Drought Relief Loan:  ஐந்து வருடத்திற்கும் குறைவான சர்வீஸ் உள்ளவர்களுக்கு Drought relief Loan-ன் முழுக் கடன் தொகை கொடுக்கப்படாமல், சர்வீசுக்கு ஏற்றாற் போல் குறைக்கப்பட்டு வந்தது. நாம் முழுத்தொகை கொடுக்க வேண்டும், instalment தொகையை வேண்டுமானால் கூட்டிக் கொள்ளுங்கள் என நிர்வாகத்திடம் பேசி வந்தோம். மேலும் சில மாதங்களுக்கு முன்பு கிளரிக்கலிலிருந்து, ஆபிசராக பதவியேற்று,  இன்னமும் கிளரிக்கலாகவே இருக்கும் தோழர்களுக்கு Drough Relief Loanம் - கிளரிக்கலுக்கு உள்ளது போல ரூ.50000/- கொடுப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது. நாம் ரூ.75,000/- கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். நேற்று நடந்த பேச்சுவார்த்தையின் போது, நிர்வாகம் இந்த இரண்டு விஷயங்களிலும்  நமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிவித்தார். நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.

2. சில தோழர்களுக்கு லீவு எடுத்ததற்கு  சம்பளப்படித்தம் செய்யப்பட்டு இருந்தது. மேலசெவல் கிளையில் பணிபுரியும் தோழர்.செல்வராஜ் இம்மாதம் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு ரொம்ப காலமாக லீவு ஒழுங்குபடுத்தப்படாமல் இருந்து வருகிறது. தொடர் விடுப்பில் சென்றிருந்த ஒரு தோழர் மீண்டும் பணியில் சேர அனுமதிக்கப்படவில்லை. கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்ற தோழர்.புதியம்பூ ராஜா அவர்களை ஒருவருடம் முடிந்த பிறகும்  கன்பர்ம் செய்யாமல் இருந்தது நிர்வாகம். நாம் இவைகள் குறித்து பேசினோம். அனைத்துப் பிரச்சினைகளிலும் ஓரிரு நாட்களில் சாதகமான முடிவுகள் எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

3. Transfers:  இந்த வருடத்திற்கான பொது மாறுதல்கள் இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஏப்ரல் மாதம் பேசும்போது, clerical recruitment-உடன் சேர்த்து போடுகிறோம், அரசு recruitmentக்கு அனுமதி வழங்கவில்லை  என்றது நிர்வாகம்.  மே  மாதம் இறுதியில், அரசு ஒப்புக்கொண்டு விட்டதாகவும், உடனடியாக சங்கத்தின் சார்பில் டிரான்ஸ்பர் லிஸ்ட் கொடுங்கள் என்றது நிர்வாகம். நாம் 1.6.2013 அன்று நம் சங்கத்தின் சார்பில் லிஸ்ட் கொடுத்தோம். ஆனால் ஜூன் மாதங்களில் நடந்து முடிந்த recruitment-உடன் நிர்வாகம் சொன்னது போல டிரான்ஸ்பர் போடப்படவில்லை. தொலைதூரங்களில் அவதிப்படும் நம் தோழர்கள் தங்கள் வேதனைகளை ஒவ்வொரு நாளும் தெரிவித்து வந்தனர். நாம் நிர்வாகத்திடம் சென்று, அனைவருக்கும் உடனடியாக டிரான்ஸ்பர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம். பொதுமேலாளர், சேர்மன் இருவரையும் சந்தித்துப் பேசினோம். இப்போது clerical -ல்  waiting list வெளியிடும்போது, தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களின் பாதிப்புகளை சரி செய்வதாக நிர்வாகம் சொல்லி வருகிறது. ஜூலை 6ம் தேதிதான்  waiting listலிருந்து புதிய கிளரிக்கல் அப்பாயிண்ட்மெண்ட்டிற்கான லிஸ்ட்  இறுதிபடுத்தப்பட  வேண்டிய நாள். ஆனாலும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. நாம் பொது மேலாளரிடம் நம் வருத்தங்களை தெரிவித்தோம். அதற்கான பணிகள் நடந்துகொண்டு இருப்பதாகவும், இந்த வார இறுதிக்குள், பெரும்பாலும் மாறுதல்கள் இருக்கும் எனவும் பொதுமேலாளர் தெரிவித்தார்.

Graduation increment and original certificates to new Clericals:

ஆடிக்கு ஒரு சர்க்குலர், அமாவாசைக்கு ஒரு சர்க்குலர் போடும் PGBWU சங்கம் சமீப காலமாக வேக வேகமாக உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதவும், சர்க்குலர்கள் போடுவதுமாக இருக்கிறது.

நாம் புதிய தோழர்களுக்கு graduation increments கொடுக்காமல், குறைத்து ஊதிய நிர்ணயம் செய்து இருப்பதை அம்பலப்படுத்தி, அதுகுறித்து பிரச்சினைகள் எழுப்பிய உடனே, அதுவரை பேசாமல் இருந்த PGBWU  சட்டென்று விழித்துக்கொண்டு, உடனே  தாங்களும் அப்பிரச்சினை குறித்து பேசுவதாக புதிய தோழர்களுக்கு கடிதம் எழுதியது.

மெஸஞ்சர்த் தோழர்களுக்கு நாம் பதவி உயர்வுக்கு வகுப்புகள் நடத்துகிறோம், கலந்துகொள்ளுங்கள்  என அந்தத் தோழர்களுக்கு  அழைப்பு விடுத்து கடிதம் எழுதியிருந்தோம். அடுத்த நாளே நாங்களும் அதே நாட்களில்  பயிற்சி வகுப்பு நடத்துகிறோம்  வாருங்கள் என  கடிதம் எழுதியது PGBWU.

புதிய தோழர்களின் அப்பாயிண்ட்மெண்ட்டின் போது  original certificateகளை வாங்கிய நிர்வாகம் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதை சமீபத்தில் அறிந்தோம். இது முற்றிலும் தவறான நடவடிக்கை என்பதை நாம் இணையதளத்தில் எழுதினோம். சம்பந்தப்பட்ட தோழர்களுக்கு கடிதம் எழுதி, original certificateகளை விரைவில் வாங்கித் தருவோம் என நம்பிக்கையளித்திருந்தோம். அடுத்த நாளே, நாங்கள் உங்களுக்கு வாங்கித் தருகிறோம் என PGBWU கடிதம் எழுதியது.

நம்மால், PGBWUவும் ஒரு தொழிற்சங்கமாக செயல்பட முயற்சிகள் செய்வது ஒரு பக்கம் சந்தோஷமாயிருந்தாலும், பிரச்சினைகள் குறித்த அடிப்படை அறிவும், தெளிவும் இல்லாமல் அவர்கள் இவ்விஷயங்களில் தலையிடுவது ஆபத்தானதாகவும் படுகிறது.

நபார்டிலிருந்து வந்த கடிதத்தை PGBWU தலைவர்களுக்கு நமது நிர்வாகம் காட்டியதாம். நிர்வாகம் பதிலுக்கு நபார்டுக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும், விரைவில் கிடைத்துவிடும் என்று நிர்வாகத்தரப்பில் சொல்லப்பட்டதாம். அதை அப்படியே தங்கள் சுற்றறிக்கையில் இவர்கள் எழுதுவார்களாம். புதிய தோழர்கள் இனி இரண்டு இன்கிரிமெண்ட் குறித்து கவலைப்படாமல் அவர்கள் பாட்டுக்கு வேலை பார்க்கலாமாம். என்னய்யா ஜீபூம்பா வேலை இது!

24.7.2010ம் தேதி, மத்திய அரசு ஒரு ஆணை வெளியிடுகிறது. அதில் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும்  ஒன்பதாவது இருதரப்பு ஒப்பந்தம் வழங்குவதற்கான ஒப்புதல் இருக்கிறது. அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டு இருக்கிறது:
“Pay scales and Dearness allowances of RRB employees as on 1.11.2007 would be equal to the corresponding categories of employees of the nationalised commercial banks. Pay for the purpose of DA, HRA and superannuation benefits shall mean basic pay, stagnation increments, specail pay,  graduation pay, professional qualification pay and officiating pay, if any."

இந்த அரசு ஆணையை குறிப்பிட்டுத்தான் நமது வங்கியில்  PAD/31/2010-11 எண்ணுள்ள சர்க்குலர் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்டு, நம் வங்கியில் உள்ள அனைவருக்கும் 9வது இருதரப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. 2008, 2011ம் ஆண்டு இங்கு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay வாக இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்கப்பட்டு வந்தன. இப்போது 2013ம் ஆண்டு பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்  எப்படி கொடுக்காமல் இருக்க முடியும் என்பதுதான் நமது கேள்வி. மத்திய அரசிலிருந்து 24.7.2010ம் தேதி வெளியிடப்பட்ட அரசு ஆணையை மீறி, இன்னொரு ஆணை வெளியிடப்பட்டதாக எந்த அறிகுறியுமில்லை. நம் வங்கியிலும் 21.9.2010ம் தேதி வெளியிடப்பட்ட சர்க்குலரை மீறி இதுகுறித்து வேறு சர்க்குலர்கள் வெளியாகவில்லை. பிறகு எப்படி இந்த நிர்வாகத்தால் முறையான அறிவிப்பு இல்லாமல் திடுமென graduation payவை நிறுத்த முடியும்? இங்கே இடையில் நபார்டு எங்கே வரும், எப்படி வரும்? மத்திய அரசின் ஆணையை விட , ஒரு நபார்டின் கடிதத்திற்கு சக்தி அதிகமா? இந்தக் கேள்விகளைத் தானே நாம் எழுப்புகிறோம்.

சரி. அந்த நபார்டு கடிதத்தில் என்ன இருக்கிறது? ‘graduation pay குறித்து சில கிராம வங்கி நிர்வாகங்கள் விளக்கங்கள் கேட்டு வருவதாகவும், அதுகுறித்து நபார்டு ஆராய்ந்து வருவதாகவும், அதுவரை காத்திருங்கள்' என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டு இருக்கிறது.  இதற்கு ஏன் graduation payவை நிறுத்த வேண்டும். மற்ற கிராம வங்கி நிர்வாகங்கள் நபார்டின் இந்தக் கடிதத்தை கண்டு கொள்ளாமால், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு graduation pay கொடுத்திருக்கிறார்களே! நம் வங்கியில் மட்டும் ஏன் கொடுக்கவில்லை? இந்தக் கேள்வியைத்தானே நாம் எழுப்புகிறோம்.

இதுபோலத்தான் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் original certificateகளை வாங்கி வைத்துக்கொண்டு இந்த நிர்வாகம் இன்னமும் கொடுக்காமல் இருப்பதுவும். PGBWUவிலிருந்து நிர்வாகத்தை சந்தித்துப் பேசினார்களாம். அடுத்த பயிற்சி வகுப்பின்போது நிர்வாகம் அனைவரும் திருப்பிக்கொடுக்கிறோம் என்றதாம். அதை அப்படியே சர்க்குலரில் போட்டுவிட்டு, ‘இனி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் அனைவரும் கவலைப்படாமல் அவர்கள் வேலையைப் பார்க்கலாம்” என அருள்வாக்கு வேறு.

இந்தப் பிரச்சினையில் இருக்கிற தார்மீக நெறிகள் குறித்தும், அடிப்படை உரிமைகள் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு நிறுவனத்தில்  original certificate களை கொடுக்காமல் வைத்துக்கொண்டால், அந்த நிறுவனம் அந்த ஊழியர்களை  bonded labor ஆக நடத்துகிறது என்பதுதான் சட்டரீதியான விளக்கமாகும். பெருத்த அநியாயம் என்னவென்றால், இந்த original certificateகளை  வாங்கி வைத்துக்கொண்ட நிர்வாகம், அதற்கான acknowledgementஐக்கூட புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கவில்லை. இதுவா முறை?

நாம் இப்போதும் சொல்கிறோம். ஒருநாள் கூட நிர்வாகம் இந்த original certificateகளை தங்களிடம் வைத்திருக்க உரிமையில்லை. அதிகாரமில்லை. சட்ட ரிதியாக அனுமதியுமில்லை. எல்லாவற்றையும் புரிந்துகொண்டு நிர்வாகம் இதனை சரிசெய்யும் என விரும்புகிறோம். நிர்வாகத்திற்கு தர்மசங்கடங்கள் எதையும் நாங்கள் கொடுக்க விரும்பவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது செயற்குழுக் கூட்டமும் முடிவுகளும்:

அகில இந்தியச் செய்திகள், BEFIயின் நடவடிக்கைகள், மாநாடு குறித்த பரீசீலனைகள் என பல அஜெண்டாக்களில் விவாதங்கள் நடந்தன. அவைகளில் முக்கிய முடிவுகளை இங்கு அறிவிக்கிறோம்.

பணிச்சுமையும், பணி நெருக்கடிகளும்:

ஏறத்தாழ அனைத்துத் தோழர்களும் பங்கெடுத்த அர்த்தமுள்ள, ஆரோக்கியமான விவாதமாக இருந்தது. புதிய தோழர்களின் பார்வையில் இருந்த தெளிவும், நுட்பமும் வெளிப்பட்டது. அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிப்பட்டன. தலைமையலுவலகத்தில் இருக்கும் பணிச்சூழல், ஒரே கிளையில் 10 business corespondent இருப்பது, கோடிக்கணக்கில் பணத்தை இரு பெண் ஊழியர்கள் மட்டும் பல கீ.மீ பயணம் செய்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்,கேஷ் பார்த்துக்கொண்டு NRGES அக்கவுண்டுகளுக்கு Batch posting போட வேண்டிய நிர்ப்பந்தம், Jewel loan திருப்புவதற்கு ஒருநாளைக்கு 250க்கும் மேற்பட்ட நோட்டிஸ் அனுப்ப வேண்டிய நிர்ப்பந்தம் என பல்வேறு விஷயங்கள் முன்வைக்கப்பட்டன. புதிதாக பணிக்கு ஒருபக்கம் ஆளெடுத்தாலும், புதிய புதிய பணிகள் கிளைகளில் கூடி, ஆள் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகமாவதும் உணரப்பட்டது. நிர்வாகம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் வங்கியின் வணிகம் குறித்து மட்டுமே அக்கறை செலுத்துவது சரியல்ல என்பதும் புரிந்தது. இந்நிலையில் நாம் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள, முதலில், அவரவர்க்கான ‘Duties and responsibilities'ஐ வரையறுத்து நிர்வாகம் சர்க்குலர்கள் வெளியிட வலியுறுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மாறுதல்கள்:

மாறுதல்களில் நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள், நிர்வாகம் காலதாமதம் செய்யும் போக்கு அனைத்தும் விவாதிக்கப்பட்டது.  தொலைதூரங்களில் அவதிப்படும் தோழர்களுக்கும், பாதிக்கப்பட்ட தோழர்களுக்கும் உடனடியாக மாறுதல்கள் செய்ய வலியுறுத்துவது, இல்லையென்றால், உடனடியாக, எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அதே வேளையில், இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களின் அடிப்படையில் முறையான ஒரு டிரான்ஸ்பர் பாலிசியை வரையறுக்க வேண்டும் என்னும் கோரிக்கை வைத்து, நிர்வாகத்தை வலியுறுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. நம் தரப்பில் ஒரு பாலிசியை முன்வைப்பதற்கு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தோழர்கள் சங்கர சீனிவாசன், மாதவராஜ், சோமசுந்தரம், சுப்பிரமணியன், கோபால் சுப்பிரமணியன் ஆகியோர் இருப்பார்கள்.

கோரிக்கைகள்:

கீழ்கண்ட கோரிக்கை சாசனம் ஒன்றை உருவாக்கி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது.

பொருளாதரக் கோரிக்கைகள்:-

1)புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு இரண்டு graduation இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும்.
2) Transport Allowance  வணிக வங்கிகளில் உள்ளது போல ரூ.225/-, 275/- கொடுக்க வேண்டும்.
3) வணிக வங்கிகளில் உள்ளது போல Housing Loan வழங்க வேண்டும்.
4) வணிக வங்கிகளில் உள்ளது போல வாகனக் கடன் வழங்க வேண்டும்.
5) இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் உள்ளது போல, Petrol reimbursement, House maintenance allowance வழங்க வேண்டும்.
6) LFC/LTC  ஸ்பான்ஸர் வங்கியில் உள்ளது போல உயர்த்தப்பட வேண்டும்.
7) 5 மணிக்குப் பிறகு வேலை பார்ப்பதற்கு Overtime allowance வழங்கப்பட வேண்டும்.
8) 2012, 2013 வருடக்கணக்கையொட்டி லீவு நாட்களில் வேலை பார்த்த தினங்களுக்கு compensatory allowance வழங்க வேண்டும்.
9) 2008ம் வருடம் பணியில் சேர்ந்த office Assistantகளுக்கு probation period -ல், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் அலவன்சு வழங்க வேண்டும்.
10) 2008ம் வருடம் பணிக்குச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு maternity leaveக்குரிய salary வழங்கப்பட வேண்டும்.  அவர்களுக்கு தவறுதலாக probation period extend செய்யப்பட்டதும் சரிசெய்யப்பட வேண்டும்.
11) தற்காலிக கடைநிலை ஊழியர்களின்  தினசரி ஊதியம், நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தில் 1:30 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
12) Local chargesஐ கூட்ட வேண்டும்
13) Sweeping chargesஐ கூட்ட வேண்டும்.

கொள்கை ரீதியான கோரிக்கைகள்:

14) கிளரிக்கல், மெஸஞ்சர்த் தோழர்களின் Duties and responsibilities வரையறுத்து சர்க்குலர் வெளியிட வேண்டும்.
15) வணிக வங்கியில் இருதரப்பு ஒப்பந்தகளில் சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளடக்கி ஒரு முறையான Transfer policy வரையறுக்கப்பட வேண்டும்.
16) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் வாங்கி வைத்திருக்கும் ஒரிஜினல் சர்டிபிகேட்களை உடனடியாக நிர்வாகம் அவரவர்களிடம் திருப்பி கொடுக்க வேண்டும்.
17) ஒரு கிளர்க்/கேஷியர், ஒரு நாளைக்கு அதிக பட்சமாக எத்தனை வவுச்சர்கள் / டிரான்சாக்ஷன்கள் Post செய்ய வேண்டும் என்பதை விஞ்ஞான பூர்வமாக வரையறுக்க வேண்டும்.

அடிப்படை வசதிக்கான கோரிக்கைகள்:

18) புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கும், புதிதாக திறந்த கிளைகளுக்கும் Ready Referenceஆக முக்கிய பழைய சர்க்குலர்களை தொகுத்து வெளியிட வேண்டும்.
19) அனைத்துக் கிளைகளிலும் ஏ.சி வசதி செய்யப்பட வேண்டும்.
20அனைத்துக் கிளைகளிலும், பெண் ஊழியர்களுக்கு என்று தனி கழிப்பிடங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
21 தலைமையலுவலகத்தில் பெண் ஊழியர்/அலுவலர் பிரச்சினைகளை முன்வைத்து பேசுவதற்கு, அரசு விதிப்படி, உடனடியாக Women cell அமைக்கப்பட வேண்டும்.
22 பழுதான பிரிண்டர்கள், கவுண்டிங் மெஷின்கள், கள்ள நோட்டு கண்டு பிடிக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் அனைத்தும் புனரமைக்கப்பட வேண்டும்.

Regional Committee:

சங்கத்தின் நடவடிக்கைகளை பரவலாகக் கொண்டு செல்ல நான்கு Regional committee கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி: 

1. தோழர்.சுகுமார், தருவைக்குளம் (கன்வீனர்)
2. தோழர். சோமசுந்தரம், ஆறுமுகனேரி
3. தோழர். கனகராஜ், எட்டையபுரம் ரோடு
4. தோழர்.அருளானந்தம், பொட்டகவயல்
5. தோழர். சதீஷ் , பழையகாயல்
6. தோழர்.சந்தான செல்வம், கீழக்கரை
7. தோழர். காளிராஜன் , முதுகுளத்தூர்

விருதுநகர்:

1. தோழர். ராஜ்குமார், காரியாப்பட்டி (கன்வீனர்)
2. தோழர். சங்கர், சங்கரலிங்கபுரம்
3. தோழர்.சுப்பிரமணியன், எம்.ரெட்டியாப்பட்டி
4.தோழர்.ராமநாதன், கீழடி
5.தோழர்.ராஜா கார்த்திகேயன், கன்னிவாடி
6. தோழர்.கணேசன், திருத்தங்கல்
7.தோழர்.சமுத்திரக்கனி, ராஜபாளையம்.

சிவகங்கை: 

1. தோழர்.கலைசெல்வன், புதுக்கோட்டை (கன்வீனர்)
2. தோழர்.சுவாமிநாதன், தேவகோட்டை
3. தோழர்.அழகப்பன், திருவாடனை
4. தோழர்.வைரவன், அன்னவாசல்
5. தோழர்.வெள்ளைச்சாமி, கல்லுப்பட்டி
6. தோழர்.பழனியப்பன், ராயவரம்
7. தோழர்.வள்ளியப்பன், பெருமாள்மலை.

திருநெல்வேலி:

1. தோழர்.அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம் (கன்வீனர்)
2. தோழர். சுப்பிரமணியன், பழைய பேட்டை
3. தோழர். மகரபூஷணம்
4. தோழர்.ராஜமனோஹர், அம்பாசமுத்திரம்
5. தோழர்.சகிதாராமன், வள்ளியூர்
6. தோழர்.ஓ.சண்முகம், ராதாபுரம்
7. தோழர். செல்வகுமரேசன், பரப்பாடி.

வங்கியில் நிலவும் மந்த நிலையும், 
ஊழியர்கள்  அலுவலர்களின் மனோநிலையும்:

பொதுமேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது மிகுந்த வருத்தத்துடன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டார். நடந்து முடிந்த clerical to officers  பதவி உயர்வில் மொத்தம் 103 இடங்களுக்கு, 13 பேரே எழுத்துத் தேர்வில் கலந்துகொண்டதையும், இது ஆரோக்கியமான நிலைமை இல்லையே என ஆதங்கப்பட்டார். நாமும் அதே கருத்தைத்தான் தெரிவித்தோம். இதுகுறித்து நமது எண்ணங்களை பகிர்ந்துகொண்டோம்.

ஆபிஸர் பதவி என்பது கிளரிக்கலாக பணிபுரியும் பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு  பொருளாதார ரீதியான உயர்வு மட்டும் காரணமில்லை, சமூக ரீதியான அந்தஸ்தும் முக்கியமான காரணம். இந்த ஆபிஸர் பதவிக்கு இதே வங்கியில் எவ்வளவோ போட்டிகள் நடந்திருக்கின்றன. நாலு பேர் தன்னை ‘கிளர்க்' எனச் சொல்வதை விட, ‘ஆபிஸர்' எனச் சொல்லும்போது கிடைக்கும் மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏங்கிய மனோபாவம் அது. ஒருமுறை கிளர்க் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “நமக்காக இல்லை என்றாலும், நம் குழந்தைகளுகாகவாது ஆபிஸர் ஆகணும். அவர்களது திருமண அழைப்பிதழில் தன் தந்தை ஆபிஸர் என குறிப்பிட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார். இப்பேர்ப்பட்ட ஆபிஸர் பதவி வேண்டாமென்று பலரும் இன்று ஒதுங்கி நிற்க என்ன காரணம்?

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறவருக்கு, அந்த வேலை மீது ஒரு பற்றும், பிடிப்பும் இருக்கும். அந்த வேலை தரும் ஆத்ம சுகம், திருப்தி, அந்த வேலை மூலம் தன் வாழ்வில் மேலும் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை என எதோ ஒருவகையில், அந்த ஊழியருக்கு வேலை பார்ப்பதற்கான உந்துசக்தி ஒன்று இருக்கும். இந்த உந்துசக்தி அவரின் வளர்ச்சிக்கு மட்டுமில்லை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது. வேலைபார்ப்பதில் ஈடுபாட்டையும், திறனையும் வளர்ப்பதற்கு இந்த உந்துசக்தியே அடிப்படையாகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு என்பதெல்லாம் அந்த உந்துசக்தியின் சில வடிவங்கள் அல்லது அடையாளங்களாய் இருக்கின்றன. ஆபிஸர் பதவி வேண்டாமென்று புறக்கணிப்பதன் மூலம், பலருக்கும் இந்த வங்கியில் உந்துசக்தியாக எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது. ஒருவகையான வெறுமையின்  குறியீடாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிற விஷயமாகவும் இருக்கிறது.

“என்ன வேலை பார்த்து என்ன?”, “ இருக்கிற வரைக்கும், இப்படியே இருந்து எந்த பொல்லாப்பும் இல்லாம சீக்கிரம் ரிடையர் ஆயிரணும்”, “முழுசா என் கிராஜுவிட்டியை நான் வீட்டுக்கு கொண்டு போக முடியுமான்னு தெரியல..” “லோன் கொடுத்தாலும் தப்பு, கொடுக்கலன்னாலும் தப்பு...”  “பிராஞ்ச்சில் என்ன நடக்குமோ, எது நடக்குமோன்னு  தினம்தினம் கழிக்க வேண்டியிருக்கு..”, “வேலை பாக்குறவங்களுக்கு என்ன  மரியாதை இருக்கு?” இப்படியான குரல்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் பின்னணியில் நாம் மேலே குறிப்பிட்ட ‘வெறுமை'க்கான அர்த்தங்கள் விளங்குகின்றன.

இந்த வங்கியில் பணிபுரிகிற ஊழியர்களையும், அலுவலர்களையும் motivate செய்வதற்கு பதிலாக இந்த நிர்வாகம் அவர்களை terroriseசெய்து கொண்டு இருக்கிறது. Friendlyயான சூழல் இல்லை. எல்லாமும் எல்லோரும் நெகடிவ்வாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், வெறுமைதான் சூழும். இதனால் வங்கியின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கி விடும்.

புதியவர்கள் நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற சூழலில், இங்கு ஏற்கனவே  வேலை பார்ப்பவர்கள்  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தால்தான், அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். புதியவர்களுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

சகலத்தையும் அடைத்துக்கொண்டு, இறுகிப்போய் இருக்கிற போக்குகளை விட்டொழித்து தலைமையலுவலகம் தன்னை புனரமைத்துக் கொள்ளாவிடில், நிலைமை இன்னும் மோசமாகும்.  நட்பும், பிரியமுமாய் மனம் இருந்தால்தான் உறவுகள் விரிவடையும். உந்துசக்திகள் ஏற்படும். இல்லையென்றால் யாருக்கோ வந்ததாய் ஒரு பிடிப்பற்ற, விட்டுப்போன மனோபாவாங்களே தலைதூக்கும். மரங்கள் துளிர்க்கும் இடங்களில் வெறுமை சூழ்வதில்லை. இதை எச்சரிக்கையாக மட்டுமில்லை, மிகுந்த வருத்தத்தோடும் சொல்லிக் கொள்கிறோம்.

ஒரு சந்தோஷமான, உற்சாகமான மனநிலையை இங்கு பணிபுரிகிறவர்களுக்கு ஏற்படுத்துவது குறித்து தீவீரமாக யோசிக்க வேண்டிய நேரமிது.

தோழமையுடன்


(J.மாதவராஜ்)
பொதுச்செயலாளர்

17.7.13

Pandyan Grama Bank is keeping the original certificates of Officers and employees!



பாண்டியன் கிராம வங்கியில் இந்த வருடம் நூற்றுக்கும் மேற்பட்ட   Office Assistantகளும் officerகளும் பணிக்குச் சேர்ந்திருக்கின்றனர்.

அவர்கள் அனைவரையும் தலைமையலுவலகத்திற்கு வரச்சொல்லி, Record verification செய்தபிறகு, பணிக்குச் சேர அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

Record verification என்பதை, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் நிர்வாகத்திடம் கொடுத்திருந்த ஜெராக்ஸ் நகல்களை, அதன் ஒரிஜனல் சான்றிதழ்களோடு verify செய்வது என்று நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அத்தோடு original certificateகளை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். இதுவரை இதுதான் வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது.

ஒருவேளை மேற்கொண்டு குறிப்பிட்ட சான்றிதழில் எதேனும் சந்தேகங்களோ, குழப்பங்களோ இருப்பின் அந்த ஜெராக்ஸ் நகலையே சம்பந்தப்பட்ட துறைக்கு/ அதிகாரிக்கு அனுப்பி verify செய்துகொள்ளலாம். அதற்கு original certificate  தேவை இல்லை.

ஆனால், இந்த வருடம்  வழக்கத்துக்கு மாறாக புதிதாக பணிக்குச் சேர்ந்த அனைவரிடமும், மேற்கொண்டு verify செய்ய வேண்டி இருப்பதாகவும், அதுவரை original certificate -ஐத் திருப்பித்தர முடியாது என சொல்லி இருக்கிறது நிர்வாகம். இது முற்றிலும் தவறான நடவடிக்கை. லாயர்களிடம் விசாரித்தபோது “It is a bad practice", என்றும், “it is against fundamental right" என்றும் சொல்கிறார்கள்.

இதில் பெருத்த அநியாயம் என்னவென்றால், இந்த original cerificateகளை  வாங்கி வைத்துக்கொண்ட நிர்வாகம், அதற்கான acknowledgementஐக்கூட புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கவில்லை. இதுதான் இவர்களிடம் காணப்படும் ஒழுங்கும், நாகரீகமும்!

எப்போது verification முடியும், எப்போது இந்த original cerificatesகிடைக்கும் என்று எந்த திட்டவட்டமான பதிலும் நிர்வாகத்தரப்பில் இல்லை.

பாண்டியன் கிராம வங்கி ஒரு ஒரு பொதுத்துறை நிறுவனம்.  இங்கு original certificate களை கொடுக்காமல் வைத்துக்கொள்வதற்கு ‘புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களை’ bonded labour ஆக நடத்த முயல்கிறது என்பதுதான் சட்டரீதியான அர்த்தமாகும்.

இந்த நிர்வாகம் செய்யும் குளறுபடிகளுக்கும், மோசடிகளுக்கும் வர வர அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது.

புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் எதுவும் கேள்வி கேட்க மாட்டார்கள். எங்கே தங்கள் வேலைக்கு ஆபத்து வந்துவிடுமோ என இயல்பாக பயம் கொண்டு இருப்பார்கள். அதையே சாக்காக வைத்துக்கொண்டு நிர்வாகம், அவர்களுக்கு குறைவான ஊதியம் ஒரு பக்கம் நிர்ணயிக்கிறது. இன்னொரு பக்கம் original certificateகளை வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்காமல் அலைக்கழிக்கிறது. ஆனால் அவர்கள் சார்பாக கேள்வி கேட்கவும், அநியாயங்களைத் தட்டிக் கேட்கவும் இங்கே PGBEA, PGBOU என்னும் சங்கங்கள் இருக்கின்றன.

ஒருவருடைய original certificate என்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. தனிப்பட்ட சொத்து. எதன் பொருட்டும் வேறு யாரும் அவைகளை தங்கள் பொறுப்பில் வைத்துக்கொள்ள அதிகாரம் கிடையாது. அது கிரிமினல் குற்றம்.

எல்லாவற்றையும் புரிந்துகொண்டு, நிர்வாகம்  original certificateகளை புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களிடம் உடனடியாக திருப்பிக்கொடுக்கும் என நம்புகிறோம்!!

16.7.13

Clerks to Officers promotion: ஒரு எச்சரிக்கையும் சில வருத்தங்களும்!



இந்த வருடம்  கிளரிக்கலிலிருந்து ஆபிஸராக பதவி உயர்வு பெற 110 இடங்கள் நிர்ணயிக்கப்பட்டதும், அதற்கு 96 பேரே (நார்மல் சேனல் மற்றும் ஃபாஸ்ட் டிராக் சேனலை சேர்த்து) தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டதும் பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவருக்கும் தெரியும்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 14ம் தேதி நடந்த பதவி உயர்வுக்கான எழுத்துத் தேர்வில் அந்த 96 பேரில் எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் என்பது பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். மொத்தம் 13 பேரே கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

அதிர்ச்சியான தகவல் மட்டுமல்லை இது. பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் அனைவரும் கவலையும், கவனமும் கொள்ள வேண்டிய மோசமான நிலைமை இது.

பொதுவாக ஆபிஸர் பதவி என்பது கிளரிக்கலாக பணிபுரியும் பலருக்கும் கனவாக இருக்கும். அதற்கு  பொருளாதார ரீதியான உயர்வு மட்டும் காரணமில்லை, சமூக ரீதியான அந்தஸ்தும் முக்கியமான காரணம். இந்த ஆபிஸர் பதவிக்கு இதே வங்கியில் எவ்வளவோ போட்டிகள் நடந்திருக்கின்றன. நாலு பேர் தன்னை ‘கிளர்க்’ எனச் சொல்வதை விட, ‘ஆபிஸர்’ எனச் சொல்லும்போது கிடைக்கும் மரியாதைக்கும், மதிப்புக்கும் ஏங்கிய மனோபாவம் அது. ஒருமுறை கிளர்க் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, “நமக்காக இல்லை என்றாலும், நம் குழந்தைகளுகாகவாது ஆபிஸர் ஆகணும். அவர்களது திருமண அழைப்பிதழில் தன் தந்தை ஆபிஸர் என குறிப்பிட வேண்டும் என குழந்தைகள் விரும்புகிறார்கள்” எனச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

இப்பேர்ப்பட்ட ஆபிஸர் பதவி வேண்டாமென்று பலரும் இன்று ஒதுங்கி நிற்க என்ன காரணம்?

கேள்விப்பட்டதிலிருந்து சிந்தனைகள் இதுகுறித்தே சுற்றி வருகின்றன.

ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறவருக்கு, அந்த வேலை மீது ஒரு பற்றும், பிடிப்பும் இருக்கும். அந்த வேலை தரும் ஆத்ம சுகம், திருப்தி, அந்த வேலை மூலம் தன் வாழ்வில் மேலும் முன்னேற முடியும் என்னும் நம்பிக்கை என எதோ ஒருவகையில், அந்த ஊழியருக்கு வேலை பார்ப்பதற்கான உந்துசக்தி ஒன்று இருக்கும். இந்த உந்துசக்தி அவரின் வளர்ச்சிக்கு மட்டுமில்லை, அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் காரணமாகிறது. வேலைபார்ப்பதில் ஈடுபாட்டையும், திறனையும் வளர்ப்பதற்கு இந்த உந்துசக்தியே அடிப்படையாகிறது. ஊதிய உயர்வு பதவி உயர்வு என்பதெல்லாம் அந்த உந்துசக்தியின் சில வடிவங்கள் அல்லது அடையாளங்களாய் இருக்கின்றன.

ஆபிஸர் பதவி வேண்டாமென்று புறக்கணிப்பதன் மூலம், பலருக்கும் இந்த வங்கியில் உந்துசக்தியாக எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டு இருக்கிறது. ஒருவகையான வெறுமையின்  குறியீடாகவே இதனை புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. அதுதான் நம்மை கவலை கொள்ள வைக்கிற விஷயமாகவும் இருக்கிறது.

”என்ன வேலை பார்த்து என்ன?”, “ இருக்கிற வரைக்கும், இப்படியே இருந்து எந்த பொல்லாப்பும் இல்லாம சீக்கிரம் ரிடையர் ஆயிரணும்”, “முழுசா என் கிராஜுவிட்டியை நான் வீட்டுக்கு கொண்டு போக முடியுமான்னு தெரியல..” “லோன் கொடுத்தாலும் தப்பு, கொடுக்கலன்னாலும் தப்பு...”  “பிராஞ்ச்சில் என்ன நடக்குமோ, எது நடக்குமோன்னு  தினம்தினம் கழிக்க வேண்டியிருக்கு..”, “வேலை பாக்குறவங்களுக்கு என்ன  மரியாதை இருக்கு?” இப்படியான குரல்களை அடிக்கடி கேட்க முடிகிறது. இதன் பின்னணியில் நாம் மேலே குறிப்பிட்ட ‘வெறுமை’க்கான அர்த்தங்கள் விளங்குகின்றன.

சமீப காலங்களாக தலைமையலுவலகம்  ஊழியர்களையும், அலுவலர்களையும் நடத்துகிற விதம்  கடும் விமர்சனத்துக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது.  பழிவாங்கும் உணர்வுகளும், குற்றம் மட்டுமே காண்கிற போக்குகளுமே மேலோங்கிக் கொண்டு இருக்கின்றன.  ஊழியர்கள் நலனில் அக்கறையற்ற தன்மையும் காலதாமதமும் பலராலும் விமர்சிக்கப்படுகின்றன.

இந்த வங்கியில் பணிபுரிகிற ஊழியர்களையும், அலுவலர்களையும் motivate செய்வதற்கு பதிலாக இந்த நிர்வாகம் அவர்களை terroriseசெய்து கொண்டு இருக்கிறது. Friendlyயான சூழல் இல்லை. எல்லாமும் எல்லோரும் நெகடிவ்வாகவே பார்க்கப்படுகின்றனர். இந்த நிலையில், வெறுமைதான் சூழும். இதனால் வங்கியின் வளர்ச்சியும் கேள்விக்குறியாக்கி விடும்.

புதியவர்கள் நம் வங்கியில் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிற சூழலில், இங்கு ஏற்கனவே  வேலை பார்ப்பவர்கள்  சந்தோஷமாகவும், உற்சாகமாகவும் இருந்தால்தான், அது ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். புதியவர்களுக்கு தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும். இங்கு நிலைமை அப்படியா இருக்கிறது?

சகலத்தையும் அடைத்துக்கொண்டு, இறுகிப்போய் இருக்கிற போக்குகளை விட்டொழித்து தலைமையலுவலகம் தன்னை புனரமைத்துக் கொள்ளாவிடில், நிலைமை இன்னும் மோசமாகும்.  நட்பும், பிரியமுமாய் மனம் இருந்தால்தான் உறவுகள் விரிவடையும். உந்துசக்திகள் ஏற்படும். இல்லையென்றால் யாருக்கோ வந்ததாய் ஒரு பிடிப்பற்ற, விட்டுப்போன மனோபாவாங்களே தலைதூக்கும். மரங்கள் துளிர்க்கும் இடங்களில் வெறுமை சூழ்வதில்லை. இதை எச்சரிக்கையாக மட்டுமில்லை, மிகுந்த வருத்தத்தோடும் சொல்லிக் கொள்கிறோம்.