Showing posts with label pgbfamily. Show all posts
Showing posts with label pgbfamily. Show all posts
11.6.14
PGBEA News - 11.06.2014
Results of Officers recruitment:
பாண்டியன் கிராம வங்கியில் scale I ஆபிஸர்களுக்கான இண்டர்வியூ நடந்து முடிந்திருந்தது. அதன் முடிவுகள் நேற்று வங்கியின் வெப்சைட்டில் வெப்சைட்டில் www.pandyangramabank.in ல் வெளியிடப்பட்டு இருக்கிறது. கீழ்கண்ட இந்த லிங்க்கில் போய் பார்க்கலாம்:
16.5.14
தோழர்.பார்த்தசாரதியின் மறைவுக்கு அஞ்சலி!
நம்ப முடியவில்லை. எப்போதும் கலகலப்பும், கணீரென்ற குரலும், களங்கமற்ற நட்போடும், உற்சாகமுமாய் இருந்த அற்புதமான தோழர் பார்த்தாசாரதி உயிருடன் இல்லை என்னும் செய்தி வலிகொண்டதாக இருக்கிறது.
சத்திரப்பட்டி கிளையில் மேலாளராக பணியாற்றி வந்த தோழர்.பார்த்தசாரதி ராஜபாளையத்தில் ஒரு அறை எடுத்து தங்கியிருந்தார். 13.5.2014 அன்று காலையில் தங்கியிருந்த அறைக்கதவை பூட்டிக் கிளம்பி, வங்கிக்குப் புறப்படுகிற வேளையில் அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கிறது. மருத்துவ உதவி ஏற்பாடு செய்வதற்குள் அவர் இறந்துவிட்டதாக தெரிய வருகிறது. அவருக்கு வயது 55.
நமது வங்கிக்கும், நமது சங்கத்துக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மிகப் பெரும் இழப்பு இது. நமது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர்.பார்த்தசாரதிக்கு சுகர் கிடையாது. பிரஷர் கிடையாது. எந்த நோய்க்கான முகாந்திரமும் கிடையாது. அப்படிப்பட்டவர் திடுமென இறந்து போயிருக்கிறார்.
சத்திரப்பட்டி நமது வங்கியின் பெரிய கிளைகளில் ஒன்று. எப்போதும் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாயிருக்கும். NREGS அக்கவுண்டு வைத்திருப்பவர்கள் வேறு. அப்படியொரு கிளையில் அடிஷனல் ஆபிஸர் கிடையாது. கடந்த ஆறு மாத காலமாக நமது சங்கம் இதுகுறித்து நிர்வாகத்துடன் பேசி வந்தோம். ’அடிஷனல் ஆபிஸர் போடுகிறோம், போடுகிறோம்’ என்று சொன்ன நிர்வாகம் கடைசி வரை போடவில்லை.
நிர்வாகம் இதனை மனிதாபிமானத்துடன் அணுகியிருந்தால், கொடுத்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றி இருந்தால் இன்று தோழர்.பார்த்தசாரதி நம்மோடு இருந்திருப்பார். அவரது மகளுக்கு திருமணம், மகனுக்கு நல்ல கல்வி என அவரது கடமைகளை சிறப்பாக செய்திருப்பார். 80, 90 வயதுக்கும் மேலாக வாழ்ந்திருப்பார்.
கொதிக்கிறது நெஞ்சம்.
21.1.14
தோழர்.சோலை மாணிக்கம் மலர் வெளியீடு!
தோழர்.சோலைமாணிக்கம் பணி ஓய்வையொட்டி, அவரைப்பற்றிய மலர் ஒன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.
வரும் ஞாயிறு 26.1.2014 அன்று காலை 10 மணிக்கு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க (TNGEA) கட்டிடடத்தில்,மலர் வெளியிடப்படுகிறது. (பெரியார் பஸ் நிலையம், இறங்கி காலேஜ் ஹவுஸ் வழியாக வரவேண்டும்).
BEFI-TN மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் வெளியிட, CITU மாநிலச் செயலாளரும், சி.பி.எம் மதுரை மாவட்ட செயலாளருமான தோழர் விக்கிரமன் மலரைப் பெற்றுக் கொள்கிறார்.
நமது தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
26.11.13
தோழர் சோலை மாணிக்கம் பணி நிறைவு விழா காட்சிகள்
பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டது. அவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது. அந்தக் காட்சிகள் இங்கே:
கரிசல்குயில் திருவுடையான் அவர்களின் இசையோடு ஆரம்பம்
தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும், திருமதி சோலைமாணிக்கம் அவர்களையும் மேடைக்கு அழைத்து அமர வைத்த காட்சி
தோழர்.சங்கரசீனிவாசனின் தலைமையுரை
தோழர்.சங்கரலிங்கம் பேசுகிறார்
மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்
தோழர்.சேகர் கௌரவிக்கிறார்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்
தோழர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்து
நம் தோழர்கள்...
BEFI மாவட்டத் தலைவர் தோழர்.மாரிக்கனி
பாண்டியன் கிராம வங்கி சிவகங்கை மண்டல மேலாளர்
திரு.சங்கிலிப்பாண்டி வாழ்த்து
women subcommittee செயலாளர் தோழர்.சிவகாமி வாழ்த்து
PGB Thrift Soceirty தலைவர், தோழர்.ஸ்ரீரமச்சந்திரன் வாழ்த்து
பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர்
தோழர்.சுரேஷ் வாழ்த்து
பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் பொதுசெயலாளர்
தோழர்.ஸ்ரீனிவாசமூர்த்தி வாழ்த்து
நமது அன்புக்குரிய அட்வகேட் கீதா அவர்களின் வாழ்த்து
IOBSA தலைவர் தோழர்.பாலச்சந்திரன் வழ்த்து
AIRRBEA தலைவர் தோழர்.ராஜீவன் வழ்த்து
AIRRBEA Joint Secretry தோழர். மதனன்
AIRRBEA Vice president தோழர்.நாகபூஷன்ராவ் இருவருக்கும் நடுவில்
தோழர்.சோலைமாணிக்கம்
தோழர்.மாதவராஜ் தனது நினைவுகளிலிருந்து...
நமது தோழர்கள்
உணர்ச்சிப் பெருக்கோடு தோழர் அண்டோ கால்பர்ட்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள்
தோழர்கள் சுரேஷ்பாபு, ஞானதேசிகன் ஆகியோரோடு...
தோழர்.பிச்சுக்கிருஷ்ணன் கவிதையோடு...
தோழர்.முத்துவிஜயன் வாழ்த்து
பல்லவன் கிராம வங்கித் தோழர்களோடு
தோழர்கள் தொடர்ந்து வந்து கௌரவிக்கிறார்கள்....
தோழர்.சோலைமாணிக்கம் ஏற்புரையில்..
Workers Unity
Zindabad!
PGBEA செயற்குழு சார்பில் தோழர்.சந்தானசெல்வம்
கடிகாரம் அளிக்கிறார்...
தோழர்.சோலைமாணிக்கம் தன் குடும்பத்தாரோடு...
தோழர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கும்
நமது தோழர்.சோலைமாணிக்கம்!
25.9.13
அஞ்சலி: தோழர்.தங்கவேலு (அக்கநாயக்கன்பட்டி) காலமாகிவிட்டார்!
அக்கநாயக்கன்பட்டி கிளை மேலாளராக பணிபுரிந்து வந்த அருமைத் தோழர். தங்கவேலு அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார்.
பிரியமாகவும், நட்பாகவும் பழகக்கூடிய அந்த அமைதியான மனிதரின்
நினைவுகள் அலைக்கழிக்கின்றன.அவரது இறுதிச்சடங்கு, திருநெல்வேலி ஆலங்குளம் அருகே உள்ள கழுநீர்க்குளம் கிராமத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
தோழர்.தங்கவேலு அவர்களின் மறைவிற்கு அஞ்சலியை நமது PGBEAவும், PGBOUவும் செலுத்துகின்றன. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆறுதலைத் தெரிவிக்கின்றன.
18.6.13
நமது PGBEA வலைத்தளம் வழங்கும் இரண்டு காலண்டர்கள்!
நமது வலைத்தளத்தின் மேலே "PGBEA' என இருக்கும் logoவுக்குக் கீழே, Home, About us, union Diary, Download, gallery, Family Events, transfers என பகுதிகள் வகைப்படுத்தப்படு இருப்பதை பார்த்திருப்பீர்கள். அவைகளை கிளிக் செய்தால், அந்தந்த பகுதிகளில், இருக்கும் பதிவுகளைப் படிக்க முடியும்.
அதில் இருக்கும் 'union Diary' மற்றும் 'Family events' தான், நாம் புதிதாக அறிமுகம் செய்திருக்கும் அந்த இரண்டு காலண்டர்கள்.
Union Diaryயில் நமது சங்கத்தின், அகில இந்திய சங்கத்தின் நடவடிக்கைகள் நாட்கள் வாரியாக தொகுக்கப்பட்டு இருக்கும். அவைகளில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நிகழ்வுகளை ‘கிளிக்’ செய்தால், அந்த நிகழ்வு குறித்த தகவல்களையும், விபரங்களையும் காணலாம்.
நமது சங்க வரலாற்றின், முக்கிய நாட்களை ஆரம்ப காலத்திலிருந்து தொகுப்பதற்கான திட்டங்கள் இருக்கின்றன.
அடுத்தது...
Family Events என்னும் காலண்டர். இதில் திருமணங்கள், பிறந்த நாட்கள், பணி ஓய்வு நாட்கள், பணி நிறைவு விழாக்கள் போன்ற ’PGBEAN' குடும்ப நிகழ்வுகளை 18.6.2013 முதல் தொகுக்க ஆரம்பித்திருக்கிறோம்.
இது போல விபரங்களை, தகவல்களை தோழர்கள் pgbea.vnr@gmail முகவரிக்கு தெரிவித்தால், அந்த குறிப்பிட்ட தேதியில் பதிய முடியும். 18.6.2013 க்கு முந்தைய தேதிகள் பற்றிய தகவல்களையும் தரலாம். தாங்களே கூட பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய விரும்புகிறவர்கள் தங்கள் இ-மெயில் (gmail ஆக இருத்தல் வேண்டும்) முகவரி தந்தால், அவர்கள் எப்படி தாங்களே தகவல்களை இந்த காலண்டரில் பதிவு செய்வது என்பதை தெரிவிக்கிறோம்.
இவற்றை மொத்தமாக திரும்பிப் பார்க்கும்போது, PGB என்னும் குடும்பத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய குறிப்புகளாய் அவை காணக் கிடைக்கும்.
எனவே- இந்த இரண்டும் காலண்டர்கள் மட்டுமல்ல; நமது பொக்கிஷங்கள்!
6.3.13
PGB Retitrement Functions - jan 2013
ஜனவரி 2013ல் தோழர்கள் N.T.கோபாலகிருஷ்ணன் (SM - AIVD), M.பெருமாள் (manager - srivilliputhur), M.முனியாண்டி (Asst.manager, T.U.Mangai), D.லெஸ்லி ராஜ்குமார் (Asst.manager, muthukulathur), P.V.லஷ்மி (Asst.Manager, Ilayangudi) பணி ஓய்வு பெற்றார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் பாராட்டுவிழா நடத்துவதென PGBEA, PGBOU இரு சங்கங்களும் திட்டமிட்டன. மதுரையில் 29.1.2013, செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணிக்கு, ஸ்ரீ சொக்கநாதர் திருமணமண்டபத்தில் (வடக்கு மாசி வீதி) நடைபெற்றது. அதன் காட்சிகள்:
Subscribe to:
Posts (Atom)





























































