Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
Showing posts with label Pandyan Grama Bank. Show all posts
Showing posts with label Pandyan Grama Bank. Show all posts
2.6.17
குற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்!
Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
20.7.13
தற்காலிக ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!
பாண்டியன் கிராம வங்கியில் தற்காலிகமாக பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என நம் சங்கம் தொடர்ந்து கோரிக்கை வைத்து, போராடியது. சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது. லேபர் கமிஷனர் முன்பு நமது சங்கம் தொழில் தாவா ஏற்படுத்தியது. விசாரணை நடைபெற்று வந்தது.
தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரம் செய்ய பாண்டியன் கிராம வங்கி நிர்வாகக்குழுவில் முடிவு செய்து, ஸ்பான்ஸர் வங்கியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அங்குள்ள ஐ.ஓ.பி எம்பளாயிஸ் யூனியனின் ஊழல் மற்றும் முறைகேடுகளால், இங்குள்ள தற்காலிக கடைநிலை ஊழியர்களை நிரந்தரம் செய்வதில் பின்னடைவு ஏற்பட்டது.
எனவே லேபர் கமிஷனர் முன்னிலையில் நடந்த விசாரணை ஃபெயிலியர் ஆகியது. இனி, டிரியூப்னலில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும். அங்கு நிச்சயம் தற்காலிக கடைநிலை ஊழியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.
இந்த நிலையில், தற்காலிக கடைநிலை ஊழியர்களின் தினசரி ஊதியத்தை ரூ.175/-லிருந்து ரூ.300/-க்கு உயர்த்த வேண்டும் என PGBEA கோரிக்கை வைத்தது. நிர்வாகத்திடம் பேசி வந்தது. ரூ.300/-ஆக இல்லையென்றாலும், ஒரளவுக்கு உயர்த்துவதாக நிர்வாகம் நம்மிடம் ஒப்புக்கொண்டது.
ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், இப்போது தற்காலிக கடைநிலை ஊழியர்களின் தினசரி ஊதியத்தை ரூ.225/-ஆக நிர்வாகம் உயர்த்தியுள்ளது. இன்று, கிளைகளுக்கு வட்டார அலுவலகங்களில் இருந்து வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகத்தின் இந்நடவடிக்கையை PGBEAவும், PGBOUவும் பாராட்டுகின்றன. நேரம் காலம் இல்லாமல் வேலை பார்க்கும், அந்த ஊழியர்களுக்கு இது ஆறுதலாய் இருக்கும்.
அவர்களின் பணியை PGBயில் நிரந்தரப்படுத்தும் முயற்சியில், PGBEA தொடர்ந்து ஈடுபடும். வெற்றி பெறும்.
1.6.12
IBPS: Online application from 1.6.2012 for Regional Rural Banks Recruitment 2012
We have already informed that Institute of Banking personnel selection (IBPS) is going to conduct the common Written Exam for the recruitment for Regional Rural Banks (RRBs) for the year 2012 and also the salary structure and promotional opportunities in Regional Rural Banks.
From 01.06.2012, Candidates can apply online from IBPS website.
The links are:
- The complete details can be viewed or downloaded from here.
- Read How to apply for officer cadre
- Read How to apply for Office Assistants cadre
- Clear your Doubts to apply for officer cadre
- Clear your doubts to apply for Ofice Assistant cadre
- To apply online from 01.06.2012, visit IBPS website.
8.2.12
Pandyan Grama Bank Promotions for the year 2011
Vacncies for promotions for the year 2011 to each cadre are announced by Pandyan Grama Bank as follows:
office Assistants - 17
Officer I - 106
Officer II - 104
Officer III - 31
Officer IV - 10
We come to know that the written exam for the above promotions will be most probably on 11-3-2012.
Likewise, the vacancies for Recruitment for the year 2011 are also almost finalised. We come to know the figures as follows:
Office Assistants : Nearly 70 (shortfall for the year 2010 is not included)
officers - Nearly 120 (shortfall for the year 2010 included)
The date, venue and other details of Recruitment are yet to be decided. Sources say that it may be in the month of April 2012.
This time, our Pandyan Grama bank Employees Association and Pandyan Grama bank Officers Union are planning to publish the exam materials and study papers in our website apart from conducting coaching class.
24.1.12
Stay Oder: jewel appraiser's case
பாண்டியன் கிராம வங்கியில் அப்ரைசர்களிடம் லட்சக்கணக்கில் டெபாசிட் வசூலிக்க நிர்வாகம் முடிவெடுத்து சர்க்குலர் வெளியிட்டு இருந்தது. அதற்கு கண்டனம் தெரிவித்து, ‘என்ன பாவம் செய்தார்கள் அப்ரைசர்கள்’ என அதுகுறித்து நமது தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.
இப்போது அவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. சி.ஐ.டி.யூ வில் இணைந்திருக்கும் பாண்டியன் கிராம வங்கியில் உள்ள அப்ரைசர்கள் சங்கமானது, தங்கள் அப்ரைசர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுத்தது. டெபாசிட்டைக் கட்ட முடியாத அப்ரைசர்களை, வெளியேற்றிவிட்டு குறிப்பிட்ட டெபாசிட்டைக் கட்டக் கூடிய புது அப்ரைசர்களை நியமிக்க வேண்டும் எனனும் நிர்வாகத்தின் சர்க்குலரைத் தடை செய்யக் கோரியது. அப்ரைசர்கள் சங்கத்தின் தலைவரான சி.ஐ.டி.யூ தோழர் பிச்சை சார்பில் ரிட் பெட்டிஷன் தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் உள்ள நியாயம் உணர்ந்த நீதிமன்றம், இருக்கும் அப்ரைசர்கள் யாரையும் வெளியேற்றக் கூடாது என நிர்வாகத்தின் சர்க்குலருக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
( View/ Download )
இதன் மூலம் டெபாசிட் கட்ட முடியாத அப்ரைசர்கள் யாரையும் நிர்வாகம் வெளியேற்றிவிட முடியாது என்பது உறுதியாகி இருக்கிறது எனவும் அப்ரைசர்கள் தோழர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை எனவும் இவ்வழக்கை நடத்திய வழக்கறிஞர் தோழர்.கீதா அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
11.1.12
என்ன பாவம் செய்தார்கள் PGB அப்ரைசர்கள்?
இன்று நிர்வாகத்திலிருந்து ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. சமீப காலமாக, அங்குமிங்குமாக நகைக்கடன்களில் பல அசம்பாவிதங்கள் நடக்கிறதாம். அதற்கு அப்ரைசர்கள் காரணமாக இருந்திருக்கிறார்களாம். எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகளை எதிர்கொள்ள அப்ரைசர்களை லட்சக்கணக்கில் வங்கியில் டெபாசிட் போட்டுவைக்க நிர்வாகம் முடிவு செய்திருக்கிறதாம். A,B,C,D என கிளைகளின் வணிக அடிப்படையில் தரவாரியாக பிரித்து, 3 லட்சம், 4 லட்சம், 5 லட்சம் என ஒவ்வொரு அப்ரைசரும் டெப்பாசிட் போட வேண்டுமாம்.
அதாவது வங்கியின் பாதுகாப்பு கருதியே நிர்வாகம் இந்த முடிவு எடுத்திருக்கிறதாம். டெப்பாசிட்டை இப்படியாவது கூட்டலாம் என்பதற்காக அல்ல என்பதை நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக நம்புவோமாக!
இந்த வங்கியில் அப்ரைசர்கள் வங்கிக்காக எவ்வளவு இழக்கிறார்கள் என்பதை கணக்குப் பார்த்தால், நாறிப் போகும். இந்த வங்கி அவர்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும். வங்கியின் சார்பில் கொடுக்க வேண்டிய எடை பார்க்கும் மெஷினை அப்ரைசர்களையே வாங்கச் சொன்னதிலிருந்து இந்த அநியாயம் ஆரம்பித்தது. தற்காலிக ஊழியர்களுக்கு அவர்களை ஊதியம் கொடுக்க நிர்ப்பந்தித்து, வளர்ந்து, இன்று லட்சக்கணக்கில் டெப்பாசிட் போட வேண்டிய கட்டாயத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. எந்த வங்கியிலும் நடைபெறாத கொடுமை இது.
அப்ரைசர்கள் என்போர் தற்காலிக ஊழியர்கள். ஒப்பந்த முறைத் தொழிலாளர்கள் என அந்த சர்க்குலரின் ஆரம்பத்தில் ஒரு அச்சுறுத்தல். டெப்பாசிட் போட முடியாதவர்களை வெளியேற்றி புதிய அப்ரைசர்கள் போடுவது என சர்க்குலரின் முடிவில் ஒரு கெடு. எதிர்த்து அப்ரைசர்கள் எதுவும் பேச முடியாதபடி, செய்ய முடியாதபடி அவர்களை அடிமைகள் போல நடத்துகிறது நிர்வாகம். கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற, ஈவிரக்கமற்ற நடவடிக்கை இது. காலையிலிருந்து மாறி மாறி தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன. பேசும் தோழர்களின் குரல்கள் உடைந்து போயிருக்கின்றன. என்ன பாவம் செய்தார்கள் PGB அப்ரைசர்கள்?
நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு PGBEAவும், PGBOUவும் தங்களது கண்டனங்களை தெரிவிக்கின்றன.
4.7.11
முப்பது இஞ்ச் டிரான்ஸ்பரின் பின்னணி!
மெஸஞ்சரிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கு கண்டம் விட்டு கண்டம் போல தொலைதூரங்களுக்கு டிரான்ஸ்பர் போடப்பட்டு இருக்கிறது. அருகிலேயே டிரான்ஸ்பர் செய்ய வாய்ப்பிருந்தும், அவர்களுக்கு, பதவி உயர்வு பெற்றதற்கு தண்டனை போல இந்தக் கொடுமையை நிர்வாகம் இழைத்திருக்கிறது.
அதுபோலவே, கிளரிக்கலிருந்து ஆபிஸர்களாய் ஆனவர்களையும், ஆபிஸர்களில் ஸ்கேல் ஒன்றிலிருந்து இரண்டுக்கு பதவி உயர்வு பெற்றவர்களையும் ஒரு கை பார்த்திருக்கிறது நிர்வாகம்.
ஆனால், ஆபிஸர்களில் ஸ்கேல் இரண்டிலிருந்து மூன்றுக்கு டிரான்ஸ்பர் ஆனவர்களில் சிலருக்கு அருகருகே டிரான்ஸ்பர் போட்டு அழகு பார்த்திருக்கிறது. அதில் ஒருவருக்கு முப்பது இஞ்ச் தூரத்தில் டிரான்ஸ்பர் போட்டு சாதனை நிகழ்த்தியிருக்கிறது நிர்வாகம்!
நமது தொழிற்சங்கங்கள் பேசியபோது, "ஒன்றிரண்டு டிரான்ஸ்பர்கள் நிர்வாக வசதிக்காக போடக்கூடாதா?" என நிர்வாகம் சொல்லியது. அப்படி அந்த முப்பது இஞ்ச் டிரான்ஸ்பரால் என்ன நிர்வாக வசதி என்று குழப்பமாகவே இருந்தது. இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது.
சமீபத்தில் காரியாப்பட்டியில் mobile banking மற்றும் business correspondent ஐ துவக்கி வைக்கும் நிகழ்ச்சியொன்றை ரிசர்வ் வங்கி உயரதிகாரியை வைத்து நமது நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதற்கு வருகை புரிந்த வி.ஐ.பிக்களை வரவேற்க அந்த முப்பது இஞ்ச் டிரான்ஸ்பர்க்காரர்தான் முன்னின்று ஏற்பாடுகள் செய்திருக்கிறார். இந்தியாவுக்கு வந்த புஷ்ஷுக்குக் கூட இந்திய அரசாங்கம் இப்படியெல்லாம் மலர் தூவி மரியாதை செய்திருக்காது. செண்டா மேளம், "நீங்க நல்லாயிருக்கணும் நாடு முன்னேற..." இதயக்கனி பாட்டு எல்லாம் ஒலிக்க மகளிர் குழு பெண்களை வரிசையாக நிற்க வைத்து சிவப்புக்கம்பளத்தில் நடந்து வரும் வி.ஐ.பிக்கள் மீது மலர் தூவச் செய்திருக்கிறார். அந்தக் காட்சியைப் பார்த்து பெருமையில் பூரித்துச் சிரிக்கிறார் பாருங்கள்:
நமக்குச் சிரிப்பு வரவில்லை. அவமானமாக இருக்கிறது. ஒரு சிலரை மரியாதை செய்கிறோம் என்று பெண்களை இழிவு படுத்தும் காரியம் இது என்றே நினைக்கிறோம். இந்தக் காரியத்தைச் செய்வதற்கு பெண்கள்தானா கிடைத்தார்கள்.
அந்தப் பெண்களின் ஏழ்மையும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையும் தானே இப்படிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. வசதியானவர்களை இப்படிக் கொண்டு வந்து இவர்களால் நிறுத்த முடியுமா? அப்படியெனில், வறுமையில் உழல்பவர்கள் மீது இவர்களுக்கு இருக்கும் பார்வை இதுதானா? இதுதான் வங்கியின் மகிழ்வுடன் கூடிய மலர்முக சேவையா? வாழ்க்கை நிலைமையை உயர்த்திக்கொள்ள வங்கியை நாடி வருபவர்களை இப்படியா பயன்படுத்துவது? கிராம வங்கிகளின் நோக்கத்தையே சீர்குலைக்கும் நடவடிக்கை இது என நாம் கருதுகிறோம்.
அந்தக் காலத்து ராஜாக்களுக்கு இதுபோன்ற மரியாதைகள் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் இது ஜனநாயகக் காலம். இங்கு மனிதர்கள் அனைவரும் சமம் என்கிறது அரசியலமைப்புச் சட்டம். அந்த ஜனநாயகத்தைப் போற்றும் செயலா இது?
இப்போதுதான் தெரிகிறது. பெரியகுளம் கிளை திறப்பு விழாவிலும் இதுபோன்று காரியங்கள் நடந்ததாம். அதற்கும் ஏற்பாடு செய்ததும் அவர்தானாம்.
அருவருப்பான இந்தக் கலாச்சாரத்தை நாம் எதிர்க்கிறோம். ஆனால் நிர்வாகம் மதிக்கிறது. அதற்காகத்தான் அவருக்கு பதவி உயர்வும், கூடவே முப்பது இஞ்ச்சில் 'நிர்வாக வசதிக்காக' ஒரு டிரான்ஸ்பரும் கொடுத்து இருக்கிறது போலும்!

30.6.11
Scale IV பதவி உயர்வு
1. K.S.சங்கரநாராயணன் SM, PDSD, H.O
2. செல்வராஜ், RM, இராமநாதபுரம்
3.நெடுஞ்செழியன், RM, திருநெல்வேலி
4. தெய்வநாயகம், RO, தூத்துக்குடி
5. N.T.கோமதிநாயகம், SM, Advances, HO
6. ஞானப்பிரகாசம், RM, விருதுநகர்
7.சங்கிலிப்பாண்டி, SM, கீழவெளிவீதி
ஆகியோர் நமது வங்கியில் முதன்முறையாக Scale IV அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள்.
அனைவருக்கும் PGBEA தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதே வேளையில், 12 இடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்பட்டு, 7 பேர் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது சரியான நடைமுறை இல்லை எனவும் கருதுகிறது.

28.6.11
Mobile banking என்ற பேரில் அவுட்சோர்சிங்!
26.6.2011 அன்று பாண்டியன் கிராம வங்கியில் நடமாடும் வங்கி (mobile banking) திட்ட துவக்க விழா காரியப்பட்டியில் நடந்து முடிந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குனர் திரு. கருப்பசாமி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் திரு.மிஸ்ரா, பாண்டியன் கிராம வங்கியின் சேர்மன் திரு.நடராஜன் ஆகியோர் கலந்துகொண்டு இருக்கின்றனர். ரிசர்வ் வங்கியின் ‘அனைவருக்கும் வங்கிச் சேவை’ என்னும் திட்டத்தின் கீழ் நடமாடும் வங்கி துவங்கப்படுவதாகவும், வாரம் ஒரு முறை கிராமங்களுக்கு நடமாடும் வங்கி குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று, பண பரிவர்த்தனை போன்ற நடவடிக்கைகளை செய்யும். நடமாடும் வங்கி சேவை மூலம் பயண நேரம், செலவு, காத்திருப்பது உள்ளிட்ட சிரமங்களை போக்க இந்த சேவை உதவும் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
இந்த Mobile banking பாண்டியன் கிராம வங்கியில் மட்டுமில்லை, அனைத்து வணிக வங்கியிலும் அறிமுகப்படுத்துவதற்கு அரசும், நிர்வாகங்களும் துடித்துக்கொண்டு இருக்கின்றன. வங்கித்துறையில் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில், வங்கியின் நிரந்தரப் பணிகளில் (permanent jobs) அவுட்சோர்சிங் இருக்ககூடாது என்பதும், வங்கித்துறைக்கு அப்பாற்பட்ட information and technology போன்ற நடவடிக்கைகளுக்கு அவுட்சோர்சிங் செய்துகொள்ளலாம் என்பதே ஒப்புக்கொள்ளப்பட்ட ஷரத்தாக இருக்கிறது. ஆனால் இங்கே Mobile banking என்ற பேரில் சேமிப்பு, பண பட்டுவாடா போன்ற வங்கிச்சேவையின் நிரந்தரப்பணிகளை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.
அதாவது Mobile banking என்ற பேரில் அவுட்சோர்சிங் நடத்தவும், பெரும் உழைப்புச் சுரண்டல் செய்யவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. நாம் இதனை அனுமதிக்க முடியாது. வரும் ஜூலை 7ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இதுவும் ஒரு கோரிக்கையாக இருக்கிறது. Mobile bankingக்கு குறைந்த ஊதியத்தில் அவுட்சோர்சிங் என்று ஆட்களை நியமிக்காமல், நிரந்தரப்பணிக்குரிய ஊதியத்துடன், நிரந்தரஊழியர்களையே நியமிக்க வேண்டும் என்பதே நமது நிலைபாடு!

26.6.11
எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் நிர்வாகம்!
புதிதாக திறக்கப் போகும் கிளைகளுக்கு காரைக்குடி, புதுக்கோட்டை, சிங்கம்புனரி போன்ற கிளைகளிலிருந்து 5 கிளரிக்கல் தோழர்களுக்கு நிர்வாகம் 24.6.2011 அன்று 5 கிளரிக்கல் தோழர்களுக்கு மாறுதல் உத்தரவுகள் பிரப்பித்து இருந்தது.
நமது சர்க்குலரில் ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி, வங்கியே கடுமையான ஆள் பற்றாக்குறையில் தவித்துக்கொண்டு இருக்க, நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருக்கிறது. காரைக்கடி, புதுக்கோட்டை போன்ற கிளைகளில் இனி கிளியரிங் செல்வதற்குக்கூட கிளரிக்கல் இருக்க மாட்டார்கள். நாம் நிர்வாகத்தின் தவறான நடைமுறையைக் கடுமையாக விமர்சனம் செய்தோம். புதிதாக திறக்கப் போகும் கிளைகளுக்காக, ஏற்கனவே இருக்கிற கிளைகளை பாதிப்படையச் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினோம்.
மேலும், தன் இஷ்டத்துக்கு நம் தோழர்களை மாறுதல் செய்து, கடுமையான வேலைப்பளுவை திணிக்கும் போக்கை நாம் அனுமதிக்கமுடியாது என்பதையும் தெளிவுபடுத்தினோ. நிர்வாகம் இப்போது, மாறுதல் உத்தரவுகளை நீக்கிவிட்டு, டெபுடேஷன் ஏற்பாடுகள் செய்வதாக கேள்விப்படுகிறோம்.
புதிய பணிநியமன வேலைகளை துரிதப்டுத்தி, தேவையான மனித சக்தியை வைத்துக்கொண்டு, புதிய கிளைகளை திறப்பதே நல்ல நிர்வாகமாக இருக்க முடியும் என்பதையும் சொல்லிக்கொள்கிறோம்.

Subscribe to:
Posts (Atom)