Showing posts with label New recruitees. Show all posts
Showing posts with label New recruitees. Show all posts

8.10.14

Posting of First Batch of New Clericals on 8.10.2014


2013ம் ஆண்டிற்குரிய கிளரிக்கல் புதிய பணி நியமனம் நடந்து முடிந்திருக்கிறது. அதன் முதல் batch ஆக 34 பேர் 7.10.2014 அன்று தலைமையலுவலகத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். அதில் 27 பேர் வந்திருந்தனர். இரண்டு நாள் பயற்சிக்குப் பிறகு அவர்களுக்குரிய கிளைகள் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அந்த அட்டவணையை கீழே தந்திருக்கிறோம்.

2.3.14

Two graduation increments to New Office Assistants


2013ம் ஆண்டு புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு  மிக ரகசியமாக பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் ஒரு அநீதியை இழைத்தது. அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய இரண்டு graduation incrementகள் (ரூ.400 +  ரூ.400)  குறைக்கப்பட்டு, ரூ.8000/-த்திற்கு பதிலாக ரூ..7200/-ஆக அடிப்படை ஊதியம் குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த புதிய தோழர்களுக்காக  graduation increment வாங்கித்தர கடுமையாக முயற்சித்து வந்தோம். 

கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி ஒவ்வொருமுறை  வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் IBAவுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் ஏற்படும்போதெல்லாம் . மத்திய அரசு கிராம வங்கி ஊழியர்களுக்கும் அந்த இருதரப்பு ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். அதன்படி, 24.7.2010ம் ஆண்டு மத்திய அரசு 9 வது இருதரப்பு ஒப்பந்தப்படி கிராம வங்கி ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசாணை பிறப்பித்தது. ஆனால்  11.2.2013ம் தேதி நபார்டு திடுமென கிராம வங்கி சேர்மன்களுக்கு தன் இஷ்டத்திற்கு ஒரு கடிதம் எழுதி graduation incrementஐ நிறுத்த ஏற்பாடு செய்தது. நிர்வாகத்திடம் பேசினோம். நபார்டு 11.2.2013 தேதியிட்டா கடிதத்தில். அனைத்து கிராம வங்கிகளுக்கும் ”இவ்விஷயத்தை நிதியமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும், நிதியமைச்சகத்திலிருந்து பதில் வரும் வரை கிராம வங்கி நிர்வாகங்கள் காத்திருக்க வேண்டும்’ என எழுதியிருப்பதை காட்டியது. கிரம வங்கி நிர்வாகங்களும் நபார்டை கைகாட்டிவிட்டு தங்களுக்கு இதில் பொறுப்பில்லை என நழுவிக்கொள்ளலாம்.

இது கிராம வங்கி நிர்வாகங்கள், நபார்டு, நிதியமைச்சகம் ஆகிய அனைவரின் குள்ளநரித்தனமான வேலை. இப்படி ஒரு கடிதத்தை எழுதிவிட்டு, அதைக் காரனம் காட்டி புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கெல்லாம் இந்த இரண்டு இன்கிரிமெண்ட்கலை நிறுத்திவிடலாம் என்னும் சூழ்ச்சி இது
PGBEA இவ்விஷயத்தில் தொடர்ந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அகில இந்திய சங்கத்தின் பார்வைக்கு கொண்டு சென்று, நிதியமைச்சகத்தோடு தொடர்பு கொள்ள வைத்தோம். தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நபார்டு, நிதியமைச்சகத்திலிருந்து  RTI Act மூலம் கேட்டு வாங்கி சேகரித்தோம்.

இறுதியாக , சென்னை ஹைகோர்ட்டு மதுரை கிளையில்  PGBEA சார்பில் வழக்குத் தொடர்ந்தோம். நபார்டு எழுதிய கடிதம் செல்லாது எனவும், PGB நிர்வாகம் உடனடியாக  2013ல் வங்கியில் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கும் இரண்டு இன்கிரிமெண்ட்கள் கொடுக்க வேண்டும் எனவும் வழக்குத் தொடர்ந்திருக்கிறோம். 25.2.2014ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. PGB, NABARD, Govt of Indiaவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றன. நபார்டு தரப்பில், சொல்வதற்கு எந்தவித காரணமும், முகாந்திரமும் இல்லாததால், இவ்வழக்கு மிக விரைவில் நமக்கு சாதகமாக முடிவாகும்.

அதுவரை புதிதாக பணிக்குச் சேர்ந்த Office Assistantகள் ஓவ்வொரு மாதமும் basic pay ரூ.800 + அதற்குரிய DAவையும் மாதாமாதம் RDயில் போட்டு வைத்திருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள். 2013ல் பணிக்குச் சேர்ந்த அனைத்து Office Assistant களுக்கு மட்டுமல்ல, இனி இந்த வங்கியில் பணிக்குச் சேரவிருக்கிற அனைத்து புதிய Office Assistant களுக்கும் இரண்டு graduation incrementகள் உறுதி செய்யப்படுகிறது.

PGBEA எப்போதும் தோழர்களுக்காக துணை நிற்கும். தோழர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும்!

23.9.13

Office Assistants Postings and transfers on 21.9.2013


19.9.2013 அன்று,  நமது பாண்டியன் கிராம வங்கியில்  7  Office Assistantகள் (clerical) பணிக்குச் சேர்ந்தனர். 19, 20, 21 ஆகிய தேதிகளில் மதுரையில் வைத்து அவர்களுக்கு டிரெயினிங் கொடுக்கப்பட்டது. இன்று கீழ்க்கண்ட கிளைகளில் அவர்கள் பணிக்குச் சேர்ந்திருக்கின்றனர். இதனையொட்டி இரண்டு கிளரிக்கல் தோழர்களுக்கு டிரான்ஸ்பர்கள் போடப்பட்டு இருக்கின்றனர். அவை வருமாறு:

Postings


S.No
Seniority
Name
Branch
1
1485
Muthuraj Mahalingam L
Chitharkottai
2
1486
Venkatesh O R
Athikarai
3
1487
Pragaspathy P R
T U Mangai
4
1488
Jeya Rajarajeswari
Cholapuram
5
1489
Maheswari
Rajapalayam
6
1490
Keerthana S Y
Thuvanrangurichi
7
1491
rajam
Nattarasankottai


Transfers

1
Leela
cholapuram
Rajapalayam
2
Radhakrishnan
T.U.Mangai
Watrap

8.8.13

புதிதாக பணிக்குச் சேர்ந்த கிளரிக்கல் தோழர்களுக்கு பயிலரங்கம்!



ஏற்கனவே 4.8.2013 அன்று 
புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்களுக்கு
நடத்துவதாக இருந்து 
மீண்டும்....


பயிலரங்கம்


நாள்
15.8.2013, வியாழன்


இடம்
பரணி ஒட்டல், ஏசி ஹால்,
திருநெல்வேலி ஜங்ஷன்


நேரம்
காலை 10 மனி முதல்
பிற்பகல் 2 மணி வரை



தலைமை தாங்க
தோழர். சங்கரசீனிவாசன்
தலைவர், PGBEA



துவக்கி வைக்க
தோழர்.சோலைமாணிக்கம்
பொதுச்செயலாளர், AIRRBEA- TN and Puduvai



அனுபவங்களை முன் வைக்க
தோழர். சந்தானசெல்வம், கீழக்கரை
(பணிக்கு சேர்ந்த ஆண்டு 2011)


தோழர். ராமலஷ்மி, ஸ்ரீவைகுண்டம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு, 2008)


தோழர். அருண் பிரகாஷ் சிங், வி.எம்.சத்திரம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 2004)


தோழர்.சுகுமார், தருவைக்குளம்
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 1989)


தோழர்.சோமசுந்தரம், ஆறுமுகனேரி
(பணிக்குச் சேர்ந்த ஆண்டு 1981)



கேள்விகளை முன்வைக்க
புதிய தோழர்கள்



தொகுத்து விளக்கமளிக்க
தோழர்.மாதவராஜ்,
பொதுச்செயலாளர், PGBEA



நன்றி சொல்ல
தோழர்.வரலஷ்மி
உதவிப்பொதுச்செயலாளர், PGBEA

புதிய தோழர்கள் அனைவரும் வாருங்கள்!
பார்க்கும் வேலைகளில் தெளிவைப் பெறவும்,
பாதுகாப்பான பணிச்சூழலை அமைத்துக்கொள்ளவும்
நாம் சேர்ந்து உரையாடுவோம் வாருங்கள்.

3.8.13

பயிலரங்கம் ஒத்திவைக்கப்படுகிறது!

நாளை (4.8.2013)ம் தேதி, புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்காக நாம் பயிலரங்கம் ஒன்று நடத்துவதாக இருந்தது. அதே 4ம் தேதி, நமது பாண்டியன் கிராம வங்கியின் சார்பில், வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் பங்குபெறும் கிரிக்கெட் விளையாட்டு நடக்க இருப்பதை தெரிவித்து, இந்த ‘பயிலரங்கத்தை’ இன்னொரு தேதியில் நடத்தலாமா என்று நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒத்திவைக்கப்படுகிறது. அடுத்து பயிலரங்கம் நடத்தப்படும் தேதி, நேரம் குறித்து விரைவில் PGBEAவிலிருந்து அறிவிப்புகள் வெளியாகும். அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

இந்த பயிலரங்கம் குறித்து சுவாரசியமான ஒரு செய்தி:

நாம் எது நடத்தினாலும், போட்டிக்கு உடனடியாக அதுபோல ஒன்றை நடத்துவதை PGBWUஇப்போது வழக்கமாகவும் வாடிக்கையாகவும் கொண்டுள்ளது. அதுபோல நாம் பயிலரங்கம் நடத்துவது என முடிவு செய்து, புதிய தோழர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைத்திருந்தோம். அவ்வளவுதான்.  சிலிர்த்து எழுந்த PGBWU, அதே 4ம் தேதி தாங்களும் புதிய தோழர்கள் அழைத்து எதாவது செய்ய வேண்டும் என திட்டமிட்டனர். புதிய தோழர்களை வீடு வீடாக  கார்களில் சென்று சந்தித்து, டிரெய்னிங்கின்போது லாட்ஜ்களில் தங்கவைத்து, உணவு வரை ஏற்பாடு செய்து இதுவரை இரண்டரை லட்சம் செய்திருக்கிறோம்,  பத்தாயிரம் ருபாய்ச் செலவில் பயிலரங்கம் நடத்தி PGBEA அவர்களுக்கு நாலு நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும் என கொந்தளித்தனர்.  ஆனால் அவர்களுக்கு எதாவது தெரிந்தால்தானே மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ‘பயிலரங்கம்’ போல ஒன்றை நடத்த முடியும். இந்தச் சிக்கலில் தவித்தவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்று  'get to-gether' ஒன்று நடத்தப் போவதாக அறிவித்தனர்.

இதனை கேள்விப்பட்ட PGBEA உதவித்தலைவர் தோழர்.சுப்பிரமணியன் (பழைய பேட்டை) அவர்கள், PGBWUவின் தலைவர்களில் ஒருவரைப் பார்த்து இப்படி கேட்டாராம்:

“ஆமாம்ப்பா, நாங்க மெஸஞ்சர் தோழர்களுக்கு பிரமோஷன் கிளாஸ் நடத்துனா, போட்டியா நாங்களும் நடத்துறோம்னு வர்றீங்க. நாங்க புதுசா சேர்ந்தவங்களுக்கு training class  நடத்துனா, போட்டியா நாங்க ‘get together' நடத்துவோம்னு வர்றீங்க. சரி. நாளைக்கு சில கோரிக்கைகளை முன்வைத்து ஒரு ஆர்ப்பாட்டமோ, தர்ணாவோ நாங்க நடத்துவோம். அப்பமும் போட்டிக்கு இப்படி வருவீங்களா?”


இதற்கு என்ன பதில் அவரால் சொல்ல முடியும்?