Showing posts with label functions. Show all posts
Showing posts with label functions. Show all posts

21.1.14

தோழர்.சோலை மாணிக்கம் மலர் வெளியீடு!


தோழர்.சோலைமாணிக்கம் பணி ஓய்வையொட்டி, அவரைப்பற்றிய மலர் ஒன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தோம்.

வரும் ஞாயிறு 26.1.2014 அன்று காலை 10 மணிக்கு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் அமைந்திருக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க  (TNGEA) கட்டிடடத்தில்,மலர் வெளியிடப்படுகிறது. (பெரியார் பஸ் நிலையம், இறங்கி காலேஜ் ஹவுஸ்  வழியாக வரவேண்டும்).

BEFI-TN மாநிலப் பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் வெளியிட, CITU மாநிலச் செயலாளரும்,  சி.பி.எம்  மதுரை மாவட்ட செயலாளருமான தோழர் விக்கிரமன் மலரைப் பெற்றுக் கொள்கிறார்.

நமது தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

26.11.13

தோழர் சோலை மாணிக்கம் பணி நிறைவு விழா காட்சிகள்

பாண்டியன் கிராம வங்கியின் வரலாற்றில், 24.11.2013 எனும் நாள், நெகிழ்ச்சியும், அன்பும், தோழமையும் நிறைந்த ஒரு அற்புத நாளாக நினைவில் நிறைந்திருக்கிறது. தோழர்.சோலைமாணிக்கத்தின் பணி நிறைவு விழா, ஒரு குடும்ப விழாவாகவும், தொழிற்சங்கத்தின் திருவிழாவாகவும் அமைந்துவிட்டது.  அவர் இந்த வங்கியில் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தங்களை  எல்லோருக்கும் அழகாகவும் சரியாகவும் சொல்லியிருக்கிறது. அந்தக் காட்சிகள் இங்கே:

கரிசல்குயில் திருவுடையான் அவர்களின் இசையோடு ஆரம்பம்

தோழர்.சோலைமாணிக்கம் அவர்களையும்,  திருமதி சோலைமாணிக்கம் அவர்களையும் மேடைக்கு அழைத்து அமர வைத்த காட்சி

தோழர்.சங்கரசீனிவாசனின் தலைமையுரை

தோழர்.சங்கரலிங்கம் பேசுகிறார்

மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் 
தோழர்.சேகர் கௌரவிக்கிறார்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர்
 தோழர்.பாலசுப்பிரமணியன் வாழ்த்து

நம் தோழர்கள்...

BEFI மாவட்டத் தலைவர் தோழர்.மாரிக்கனி

பாண்டியன் கிராம வங்கி சிவகங்கை மண்டல மேலாளர்
திரு.சங்கிலிப்பாண்டி வாழ்த்து

women subcommittee செயலாளர் தோழர்.சிவகாமி வாழ்த்து

PGB Thrift Soceirty  தலைவர், தோழர்.ஸ்ரீரமச்சந்திரன் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர்
தோழர்.சுரேஷ் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் பொதுசெயலாளர்
தோழர்.ஸ்ரீனிவாசமூர்த்தி வாழ்த்து

நமது அன்புக்குரிய அட்வகேட் கீதா அவர்களின் வாழ்த்து

IOBSA தலைவர் தோழர்.பாலச்சந்திரன் வழ்த்து

AIRRBEA தலைவர் தோழர்.ராஜீவன் வழ்த்து

AIRRBEA  Joint Secretry  தோழர். மதனன்
AIRRBEA Vice president  தோழர்.நாகபூஷன்ராவ் இருவருக்கும் நடுவில்
தோழர்.சோலைமாணிக்கம்

தோழர்.மாதவராஜ் தனது நினைவுகளிலிருந்து...

நமது தோழர்கள்

உணர்ச்சிப் பெருக்கோடு தோழர் அண்டோ கால்பர்ட்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தலைவர்கள்

தோழர்கள் சுரேஷ்பாபு, ஞானதேசிகன் ஆகியோரோடு...

தோழர்.பிச்சுக்கிருஷ்ணன் கவிதையோடு...

தோழர்.முத்துவிஜயன் வாழ்த்து

பல்லவன் கிராம வங்கித் தோழர்களோடு

தோழர்கள் தொடர்ந்து வந்து கௌரவிக்கிறார்கள்....

தோழர்.சோலைமாணிக்கம் ஏற்புரையில்..

Workers Unity
Zindabad!

PGBEA செயற்குழு சார்பில் தோழர்.சந்தானசெல்வம்
கடிகாரம் அளிக்கிறார்...

தோழர்.சோலைமாணிக்கம் தன் குடும்பத்தாரோடு...

தோழர்களின் மனங்களில் உயர்ந்து நிற்கும் 
நமது தோழர்.சோலைமாணிக்கம்!




14.6.12

Meeting for Retired PGB Staff



இன்று பாண்டியன் கிராம வங்கி, நவீன காலத்தின் மாற்றங்களோடு தன்னைப் பொருத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் இதன் அடித்தளமாகவும், வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாகவும் இந்த வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். நிர்வாக இயந்திரம் அந்த அனுபவங்களை பதிவு செய்து வைத்திருக்கிறதோ இல்லையோ, நாம் அவைகளை பத்திரமாக வைத்திருக்கிறோம்.


இந்த வங்கியிலிருந்து அவர்கள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து ஏறத்தாழ, இதன் தொடர் கண்ணியிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். மறக்கவே முடியாத நாட்களிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு விடுகிறார்கள். வாழ்வின் ஒட்டத்தில் நடக்கிற வலி மிகுந்த யதார்த்தமாக இது இருக்கலாம். ஆனால் நம் உறவுகளையும், தொடர்புகளையும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள முடியும்.


கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் சாத்தியமாக இருக்கிற, இந்த கணத்தில் அப்படியொரு அவசியம் இருப்பதாக உணர்கிறோம். ஓய்வு பெற்ற தோழர்களை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பாக்க வேண்டும் என நமதுஅகில இந்திய சங்கம் AIRRBEA நமக்கு அறிவுறுத்தியிருக்கிறது. நாளை பென்ஷன் அமல்செய்யப்படும் போது எழும் அவர்களது பிரச்சினைகளை represent  செய்ய அவர்களுக்கு ஒரு சங்கம் தேவை. அதுமட்டுமல்ல, நம்மோடு நல்லது கெட்டதுகளில் பங்குபெறும் ஒரு PGBEAN ஆக, அவர்கள் தொடர்ந்து பயணிக்கவும் முடியும்.


இந்த பின்னணியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறோம். நமது வங்கியில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற அத்தனைத் தோழர்களையும் ஓரிடத்தில் சங்கமிக்க வைத்து, சங்கமாக்குவது என்னும் உயர்ந்த நோக்கத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம். 15.06.2012, வெள்ளிக்கிழமை அன்று விருதுநகரில் உள்ள நமது சங்க அலுவலகத்தில் காலை 12 மணிக்கு கூட்டம் துவங்குகிறது. சிறிதுநேரம் மனம் விட்டுப் பேசி, மதிய உணவருந்தி, முறையாக கூட்டத்தை 3 மணிக்கு துவக்கி 6 மணிக்குள் முடிப்பது என திட்டமிடப்பட்டு இருக்கிறது.


இதுவரை பணி ஓய்வு பெற்ற 100க்கும் மேற்பட்ட தோழர்களில் ஏறத்தாழ 70 தோழர்களை தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசியிருக்கிறோம். முகவரி பெற்று அழைப்பிதழ்கள் அனுப்பி இருக்கிறோம். மிகுந்த நெகிழ்வோடும், சந்தோஷத்தோடும் அவர்கள் வருவதாக உறுதியளித்து இருக்கிறார்கள்.

இன்னும் சிலரது தொலைபேசி எண்களும், முகவரிகளும் கிடைக்காமல் இருக்கின்றன. நமது தோழர்கள் தங்களுக்குத் தெரிந்த, ஓய்வு பெற்ற தோழர்களுக்கு இந்தக் கூட்டம் பற்றி தெரிவித்து, அவர்களையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்படி கேட்டுக் கொள்கிறோம்.

கடந்துபோன காலங்களின் பசுமையான நினைவுகளோடு, கூட்டம் பற்றிய சிந்த்னைகள் எழுந்துகொண்டு இருக்கின்றன.

2.2.12

Our All India GS mukherjee delivers!


These are the vedio clips of the speech of our com.D.K.Mukherjee, Secretary general, AIRRBEA, in the meeting arranged by our PGBEA and PGBOU at Pallathur on 29.01.2012. He mainly narrates the issues of amalgamations of RRBs and pension to RRB employees.

You can see him full of enthusiasm and energy. Realities are putforth. Hopes are lightened.  Jokes are sparked. The attempts of AIRRBOF are exposed. That is it.

We can be proud of raising slogans "AIRRBEA - ZINDABAD, LONGLIVE - D.K.MUKHERJEE"

(Since the vedio is recorded in mobile, the audio may be in low quality. Plese turn your volume of system to high.)





31.1.12

தோழர் முகர்ஜியின் வருகையும் ஐ.ஓ.பி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும்


PGBEA பொதுச்செயலாளர் தோழர்.சோலைமாணிக்கம் அவர்களின் மகள் திருமணத்தையொட்டி நமது அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர். D.K.முகர்ஜி பள்ளத்தூருக்கு 28.1.2012 இரவு வந்தார். அதுசமயம் மணமக்களை வாழ்த்த நமது வங்கியின் சேர்மன், மற்றும் பொதுமேலாளர்களும் வந்திருந்தனர். அவர்களுடன் கிராம வங்கிகளின் இன்றைய நிலைமை குறித்து தோழர்.முகர்ஜி பேசிக்கொண்டு இருந்தார். அது ஒரு இனிய சந்திப்பாக இருந்ததாக தோழர்.முகர்ஜி நம்மிடம் குறிப்பிட்டார்.

அடுத்த நாள் 29.1.2012 அன்று காலை திருமணம் முடிந்த பிறகு, திரளாக வந்திருந்த பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கித் தோழர்களுக்கான ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அவர்களிடையே  தோழர்.முகர்ஜி amalgamation மற்றும் pension குறித்து விரிவாகப் பேசினார். அதன் புகைப்பட மற்றும் வீடியோக் காட்சிகளை விரைவில் நமது இனையத்தளத்தில் வெளியிடுகிறோம்.




30.01.2012 அன்று 3 மணிக்கு இந்தியன் ஒவர்சீஸ் வங்கி பொதுமேலாளர் திரு.மிஸ்ரா அவர்களோடும், 4 மணிக்கு இந்தியன் வங்கி பொதுமேலாளருடன் சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.  நமது தரப்பில் PGBOU தலைவர் தோழர்.போஸ்பாண்டியனும், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜும் கலந்துகொண்டனர். தோழர். ஆனந்த ரெட்டி தலைமையில் சித்தூரிலிருந்து தோழர்கள் வந்திருந்தனர். பல்லவன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உதவிப்பொதுச் செயலாளர் தோழர். பரிதி ராஜன் வந்திருந்தார்.

 ஒரு அவசர வேலை நியமித்தம் திரு.மிஸ்ரா அவர்கள் பூனாவுக்குச் செல்ல வேண்டியிருந்ததால், AGM    திரு.ஞானசம்பந்தம் அவர்களுடன் பேசுமாறு சொல்லிச் சென்றிருந்தார். அவருடன் நமது staff issues ஐ கவனிக்கும் அதிகாரியும் உடனிருந்தார்.

பேச்சுவார்த்தை விபரங்கள்:

1. Festival Advance இங்கே இருவகையாக  கொடுக்கப்படுகின்றன. இந்த வங்கியில் ஏற்கனவே பணியாற்றி வருபவர்களுக்கு  ஒரு மாத ஊதியமும், புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களுக்கு மிகக் குறைவாக  ரூ.10000 என்றும் Fixed amountஆக மட்டுமே  கொடுக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்த முரண்பாடு களையப்பட்டு இருக்கிறது. புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை Festival Advance ஆக கொடுக்க நமது போர்டில் முடிவு செய்யப்பட்டு, அது ஐ.ஓ.பியில் இறுதியும் செய்யப்பட்டு விட்டது.

2. 2010ம் ஆண்டிற்கான புதிய பணிநியமனங்களும், பதவி உயர்வுகளும் மட்டுமே நடந்து முடிந்திருக்கின்றன. அதிலும் புதிய பணி நியமனங்களில் பலர் வேறு வேலைக்குச் சென்று கொண்டு இருக்கின்றனர். அந்தக் காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், மேலும் 2011ம் ஆண்டிற்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான பதவி உயர்வுகளும், புதிய பணிநியமனங்களும் நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் புதிய கிளைகள் திறப்பதில் ஆள் பற்றாக்குறையால் சிரமங்கள் ஏற்படும் என தெரிவித்தோம்.  அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வுக்கான vacancies ஐ.ஓ.பியில் இறுதிசெய்யப்பட்டு ஓரிருநாட்களில் அறிவிக்கப்பட்டுவிடும் என உறுதியளிக்கப்பட்டது.

2. Temporary employeesஐ நிரந்தரமாக்க பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம் அதன் போர்டு  மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டு இருப்பதை பாராட்டி வரவேற்றோம். இப்போது அந்த முடிவை  ஐ.ஓ.பிக்கு approvalக்கு அனுப்பி இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அதற்கு ஐ.ஓ.பியிலிருந்து நபார்டுக்கு அனுப்பி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே சில கிராம வங்கிகளில் தற்காலிக உழியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டு இருப்பதையும், நபார்டு இதுகுறித்து வெளியிட்டுள்ள சர்க்குலரையும் நமது அகில இந்திய பொதுச்செயலாளர் தோழர்.முகர்ஜி சுட்டிக்காட்டினார். அந்த ஆவணங்களைத் தந்தால் துரிதமாக இந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும் என ஐ.ஓ.பி தரப்பில் சொல்லப்பட்டது. ஒரிரு நாட்களில் அனுப்பி வைப்பதாக தோழர்.முகர்ஜி சொன்னார். மேலும் நபார்டில்  இதுகுறித்து தான் பேசுவதாகவும் தெரிவித்தார்.

3. ஐ.ஓ.பியில் உள்ளது போல் Halting allowance  வழங்கப்பட்டாலும் பெருநகரங்களில் தங்குகிறவர்களுக்கு lodging expenses ஐ.ஓ.பியில் உள்ளதுபோல் வழங்கப்படவில்லை என்பதை விளக்கினோம். இந்தக் குறைகள் நிர்வர்த்தி செய்யப்படுவதற்கான  வழிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

4. நம் வங்கியில் முறையான Transfer Policy இல்லாமல் இருக்கிறது. இதனால் பல குழப்பங்களும் குறைகளும் ஏற்படுகின்றன.  இவைகளை எடுத்துரைத்தோம். ஒரு முறையான  transfer policy வரையறுக்கப்பட வேண்டும் என்பதை கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

5. Newspaper allowance  அனைவருக்கும் உடனடியாக வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

6. Disciplinary Proceedingsல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் வருடக்கணக்கில் சார்ஜ்ஷீட்கள்  கொடுக்கப்படாமல் நிர்வாகம் தாமதம் செய்வதை எடுத்துரைத்தோம். அதற்கான time frame வரையறுக்கப்பட்டு, இனி முறைபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஐ.ஓ.பியில் உள்ளது போல Reimbursement of fuel expenses, joining time leave  வழங்கப்பட வேண்டும் என்பதையும் பேசியிருக்கிறோம். ஒவ்வொரு சலுகையாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

ஐ.ஒ.பி  AGMமும், நமது வங்கியின் இயக்குனருமான திரு.ஞானசம்பந்தம் அவர்கள் தோழர்.முகர்ஜியை சந்தித்ததை மிகவும் சந்தோஷமான விஷயமாகக் குறிப்பிட்டார்.  அவரது அனுபவத்திலிருந்தும், பக்குவத்திலிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். ஒரு பயனுள்ள சந்திப்பாக அமைந்திருந்தது.

ஐ.ஓ.பி உயரதிகாரிகளை சந்தித்த பிறகு தோழர்.முகர்ஜி இந்தியன் வங்கி பொதுமேலாளரை சந்தித்துப் பேசச் சென்றார்.  75 வயதில் அவர் கிராம வங்கி ஊழியர்களுக்காகவும், அலுவலர்களுக்காகவும் ஓடிக்கொண்டு இருந்தார்.