Showing posts with label cir2011. Show all posts
Showing posts with label cir2011. Show all posts

21.9.11

PGBOU Circular 15.9.2011



பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்

(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)

------------------------------------------------------------------------------
website: www.pgbea.net    email:  pgbea.vnr@gmail.com, gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------

சிறப்புச்சுற்றறிக்கை எண் : 1/2011 நாள்: 15.9.2011


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

“வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது. சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன், முருங்கை மரத்தை வெட்டி தரையிறக்க கிளம்பிவிட்டான்...” சின்ன வயதில் அம்புலிமாமாவில் படித்த கதையின் கடைசி வரி இது.
திட்டமிடல் துறையின் சமீபத்திய சர்க்குலர் (எண்:22/2011-2012, தேதி: 30.08.2011) படித்தபின்பு மேற்சொன்ன வரிகளே ஞாபகத்துக்கு வருகிறது.

ஒவ்வொருமுறை நிர்வாகம் மாறும்போதும், அரசால் அனுமதிக்கப்பட்ட சனி மதியம், ஞாயிறு ஆகிய ஓய்வு நாட்களில் மேனேஜர்ஸ் மீட்டிங் போடுவதும், சற்றும் ஓய்வு என்பதே  இல்லாமல் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அதை நாம் தடுத்து நிறுத்துவதும் வரலாறு.

இவ்வளவுக்குப் பிறகும், சனிக்கிழமை மதியம், ஞாயிறு முற்பகலிலும் கட்டாயமாக (should) டெப்பாசிட் கேன்வாசிங்குக்கு செல்ல வேண்டும் என திட்டமிடல் துறை சுற்றறிக்கை வாயிலாக நம்மைக் கட்டாயப்படுத்துகிறது.

பாண்டியன் கிராம வங்கி எங்களின் வங்கி. எங்களின் உழைப்பால் உயர்ந்த வங்கி. எல்லா வேலை நாட்களிலும் இந்த வங்கிக்காக இரவுபகல் பாராமல் உழைக்கிறோம். நாம் உழைக்காமல், மந்திரத்தில் ஒன்றும் 5000 கோடி வணிகம் வரவில்லை.

இன்னும் சொல்லப்போனால், மணியைப் பார்த்து வேலை பார்க்கும் கலாச்சாரம் நமது வங்கியில் கிடையாது. எந்த நேரமும், வங்கிக்காக உழைப்பவர்கள் நாம். பலமுறை மேனேஜர்ஸ் மீட்டிங் இரவு 9 மணிக்கு மேல் நடந்தபோதும் கூட நாம் முகம் சுளிப்பதில்லை. நம்மை வழிநடத்தவும், ஆலோசனை கூறவும் வங்கி அதிகாரிகள் நம்மைத் தேடி வருகிறார்கள், எப்போதாவது வருகிற அவர்களுக்காக ஒருநாள் நெடுநேரம் காத்திருப்பதில் தவறு இல்லையென நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்கிறோம். ஒருவேளை அதுதான் நாம் செய்த முதல் தவறோ எனத் திரும்பிப் பார்க்கிற சூழ்நிலையை திட்டமிடல்துறையின் சுற்றறிக்கை உருவாக்கியுள்ளது என்றால், அதுதான் உண்மை.

இத்தருணத்தில், நிர்வாகத்திற்கு நமது வேண்டுகோள்.
அரசால் அனுமதிக்கப்பட்ட ஓய்வு நாட்களில் வேலைசெய்யுமாறு கட்டாயப்படுத்துவதை பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் கொள்கை ரீதியாக கடுமையாக எதிர்க்கிறது.

உழைக்கும் வர்க்கத்திற்கு ஓய்வு அனுமதிக்கப்படுவதன் நோக்கமே, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் வேலை செய்யத்தான் என்பதை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஓய்வற்ற வேலைப்பளு மனச்சோர்வை உருவாக்கும். எனவே மனச்சோர்வை உண்டாக்கும் நடவடிக்கைகள் எந்த வகையிலும் வங்கிக்கு பெருமை சேர்க்காது.

இது சம்பந்தமாக நிர்வாகத்திற்கு எழுதிய கடிதத்தின் நகல் இத்துடன் இனைக்கப்படுகிறது.

தோழமையுடன்



   
(T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBOU
------------------------------------------------------------------------------------

Pandyan Grama Bank Officers Union
(144/KMR) (affi: AIRRBEA & NFRRBO)
C.O colony, Near collectorate, Virudhunagar

To

The General Manager (A)
Pandyan Grama Bank
Administrative Office
Virudhunagar

Respected Sir,

Compelling PGBIANs to work on Government declared holidays - Our protest -reg

we refer to Planning Department Circular no22/2011-12 dated 30.8.2011 compelling all urban and semi urban branches should go for deposit canvassing in the afternoon of all saturdays and forenoon of all sundays. In this regard, we submit to state the following for your kind perusal and favourable consideration.

1.Recently our bank has crossed Rs.5000 crore business due to the hard work and sincere efforts of all PGBIANs in deposit canvassing and promoting PGB products on all working days.

2.As in the yester years, we assure you sir, our PGBIANs will certainly gear up our hard work doubly to achieve the target fixed for the year 2011-2012. We will also motivate our members by way of conducting periodical meetings and issuing circulars.

3. Most of PGBIANs working at far-away branches are having the oppurtunity to visit their home town/family only on saturday night and sunday forenoon. In this circumstances, compelling the PGBIANs to serve on saturday afternoon and sunday will morally frustrate them.

4.Hence, we register our strong protest for compelling  the urban and semi urban branches to work/canvass deposit/promote pGB product on declared Govt. holidays.

Thanking You,

Yours faithfully

(T.Sankaralingam)
General Secretary

-----------------------------------------------------------------------------------

15.9.11

PGBEA - PGBOU circular 15.9.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)
------------------------------------------------------------------------------
website: www.pgbea.net    email:  pgbea.vnr@gmail.com. gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------

சுற்றறிக்கை எண் : 7/2011                              நாள்: 15.9.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.



கடந்த சில தினங்களாக, பரமக்குடியை மையப்படுத்தி தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பதற்றமும், அச்சமும் மக்களிடையே காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில், நமது வங்கியின் கிளைகளே பெரும்பாலும் இருக்கின்றன. வணிகம் அதிகரித்து, வாடிக்கையாளர்களை நம் பக்கம் கொண்டுவர வேண்டிய சூழலில், இது போன்ற நிகழ்வுகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். நமது தோழர்கள் பணிக்குச் செல்வதிலும், பணிபுரிவதிலும் சிரமங்கள் இருக்கும். சமுக அக்கறை கொண்ட நம் சங்கங்கள் இந்த விஷயத்தை கவலையோடு பார்க்க வேண்டி இருக்கிறது.


இங்கு ஒவ்வொரு சமூகமும் அவரவர்களுக்கான ஒரு தலைவரை முன்னிறுத்தி, தங்களது அடையாளமாகவும், உருவமாகவும் போற்றுவது நடக்கிறது. பெருந்திரளாய் ஓரிடத்தில் கூடி அன்னாரது பிறந்தநாளை ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் வழக்கமாகியிருக்கிறது. இதுபோன்றுதான் தாழ்த்தப்பட்ட மக்கள், மறைந்த தங்கள் தலைவர் இமானுவேல் சேகரன் அவர்களுக்கு 11.9.2011 அன்று குருபூஜை நடத்திட ஏற்பாடு செய்து வந்தனர். இதை சீர்குலைக்கும் வகையில் அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. 9.11.2011 அன்று ஒரு தாழ்த்தப்பட்ட சிறுவன் படுகொலை செய்யப்படுகிறான். அதையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்திற்குச் செல்ல தடைவிதித்து ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். நிகழ்ச்சிக்கு வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன.  தாங்கள் உற்சாகத்துடன் நடத்தத் திட்டமிட்டிருந்த குருபூஜையின் கோலாகலங்கள் கலைந்து போக, தாழ்த்தப்பட்ட மக்களிடையே இயல்பாக ஆத்திரம் ஏற்படுகிறது.  சிலர் பரமக்குடியில் மறியல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். காவல்துறைக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழு பேர் கொலை செய்யப்படுகின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைத்து, உயிரிழப்புகளை ஏற்படுத்தி, சமூகப்பதற்றம் ஏற்பட காரணமாயிருந்தது தமிழக அரசின் காவல்துறையே. தாழ்த்தப்பட்ட மக்கள் அணிதிரள்வதையும், பெருந்திரளாய் கூடுவதையும் பொறுக்க முடியாத ஆதிக்க மனோபாவம் இதற்குள் ஓளிந்திருக்கிறது. இந்தப் புரிதலோடு சமுக நல்லிணக்கத்திற்காகவும், மக்களிடையே அமைதி திரும்பவும் நாம் குரல் கொடுப்போம்.


அகில இந்திய தர்ணா!


திட்டமிட்டபடி, செப்டம்பர் 6ம்தேதி நமது தர்ண எழுச்சியோடு நடந்து இருக்கிறது. இன்றைக்கு இருக்கும் ஆள் பற்றாக்குறையிலும், பணி நிலைமைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்ட இந்தப் போராட்டம் நமது உறுதியையும், சமரசமற்ற முயற்சியையும் உணர்த்தியிருக்கிறது.


பென்ஷன், வணிக வங்கிக்கு இணையான அலவன்சுகள், தற்காலிக பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும், வங்கியின் நிர்வாகக்குழுவில் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் பிரதிநிதிகள் வேண்டும் என்கிற கோரிக்கைகள் கோஷங்களாக எழும்பி இருக்கின்றன. இதேநாளில் தேசம் முழுவதும் அனைத்து கிராம வங்கிகளின் தலைமையலுவலகங்கள் முன்பாகவும் இதே போன்று குரல்கள் எதிரொலித்திருக்கின்றன. போராட்டம் இல்லாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை. நமக்கான, நம் எதிர்காலத்துக்கான போராட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தோழர்களையும் PGBEAவும், PGBOUவும் பெருமையுடன் பார்க்கிறது.


‘நெட்வொர்க் ஃபெயிலியர்’:


கிளைகளில் அடிக்கடி ‘நெட்வொர்க் ஃபெயிலியர்’ என்று கணினிகள் இயங்காமல் நின்றுவிடுகின்றன. அதனால் வங்கிப்பணிகள் ஸ்தம்பித்துவிடுகின்றன. வாடிக்கையாளர்களின் எரிச்சலுக்கும், கோபங்களுக்கும் நேரிடையாக நாமே பதில்சொல்லவும், ஆளாகவும் வேண்டி இருக்கிறது. நிர்வாகத்துடன் இதுகுறித்து நம் சங்கங்கள் பலமுறை பேசியிருக்கின்றன. மாற்று ஏற்பாடுகள் செய்கிறோம் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். 


சமீபத்தில், 12.9.2011 அன்று முழுவதும ‘நெட்வொர்க் ஃபெயிலியர்’ ஆகிவிட்டது. விரைவில் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடனும், வங்கிப்பணிகள் தடைபட்டுவிடக்கூடாது என்ற ஈடுபாட்டுடனும் கிளைகளில் பணிபுரியும் நம் தோழர்கள் வரவு செலவுகளை செய்து இருக்கின்றனர். இந்த நடைமுறை தேவையற்றது என்ற போதும், நம் தோழர்கள் வங்கி மீது கொண்ட அக்கறையென்றே எவரும் புரிந்துகொள்ள முடியும். ஆனால், எப்போது சரியாகும், கிளைகளில் என்ன செய்ய வேண்டும் என்று எந்த அறிவிப்பையும், ஆலோசனைகளையும் தராமல் பலத்த மௌனத்தில் இருந்தது நிர்வாகம். கிளைகளில் இருந்து கேட்டால் மட்டுமே எதாவது பதில் சொல்வது என்ற நிலை சரியல்ல. பொறுப்பானவர்களின் செயலுமல்ல.


இந்த நிலைமையில், ஒருசில இடங்களில் வங்கிப்பணி அன்றைய தினம் முழுமையடையவில்லை என நிர்வாகத்திற்கு கோபம் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறது. முழுத் தவறையும் தன் மீது வைத்துக்கொண்டு ஊழியர்களையும், அலுவலர்களையும் இவ்விஷயத்தில் குறை சொல்வது அழகல்ல, ஆரோக்கியமானதல்ல.


சாட்டிலைட் கிளைகள்:


நிர்வாகம் அங்கங்கே சாட்டிலைட் கிளைகளை இயக்க ஆரம்பித்திருக்கிறது. வங்கியின் வளர்ச்சியில் இவையெல்லாம் முக்கியமானவை என்ற போதிலும், இது குறித்து முறையான அறிவிப்பும், சர்க்குலர்களும் இன்றுவரை இல்லையென்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது. கிளைகளிலிருந்து இந்த சாட்டிலைட் கிளைகளுக்கு என்று ஒரு ஆபிஸர் அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று பணியாற்ற வேண்டியிருக்கிறது. அவருடைய பணித்தன்மைகள் எத்தகையவை, பொறுப்புகள் என்ன வகையானவை, அவருக்குரிய சலுகைகள் என்னென்ன என்று எந்த வரையறையும் இல்லை. தங்கள் கைக்காசைப் போட்டு அவர்கள் சென்றுவர வேண்டி இருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்தவும், முறைப்படுத்தவும் வேண்டும் என்பதே நமது வேண்டுகோளாகி இருக்கிறது.


டிரான்ஸ்பர்கள்:


எழுத்தர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும், பாதிக்கப்பட்ட தோழர்களுக்கும் சாதகமான டிரான்ஸ்பர்கள் போடுவதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டு மாதங்கள் பலவாகிவிட்டன. ‘இன்று போடுகிறோம்’, ‘நாளை போடுகிறோம்’ என இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவ்வப்போது நிர்வாகக் காரணங்கள் என்று சொல்லி போடப்படும் டிரான்ஸ்பர்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. இவ்விஷயத்தில் மேலும் காலதாமதம் செய்யாமல், ஒப்புக்கொண்ட டிரான்ஸ்பர்களை போட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


வங்கியின் வணிகமும், ஊழியர்களின் மனோநிலையும்:


நமது வங்கியின் டெபாசிட்டை விரைவாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நமது cd ratio கடுமையாக உயர்ந்திருக்கிறது. அதை சரிசெய்யவும், வங்கியை பலப்படுத்தவும் வேண்டிய நெருக்கடி நம் அனைவருக்கும் ஏற்பட்டு இருகிறது. இதை நாம் உணர்ந்து பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில், நிர்வாகத்தின் நடவடிக்கைகள், அதற்கு உறுதுணையாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டும். ஆனால் எதிர்மறையாக இருக்கிறது. சம்பளப்படித்தம் செய்வதில் வேகமாக இருக்கும் நிர்வாகம், நியாயமாக தர வேண்டிய LTC, hospitalization expenses reimbursement, sanction of leave, joining time, TTA, TA  போன்ற பல விஷயங்களில் மெத்தனமாகவும், அலட்சியமாகவும் இருக்கிறது. இன்னும் நமக்கு வரவேண்டிய computer increment, newspaper allowance உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குவதில் எந்த முனைப்பும் இல்லை. அதிருப்தியான மனநிலையில், உத்வேகமும், உற்சாகமும் இழந்து போவதுதான் மனித இயல்பு. இதனை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நிர்வாகத்தையேச் சாரும்.


தோழமையுடன்

      
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU


30.8.11

PGBEA - PGBOU circular 28.8.2011

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)
------------------------------------------------------------------------------
website: www.pgbea.net    email:  pgbea.vnr@gmail.com. gspgbou@gmail.com
------------------------------------------------------------------------------

சுற்றறிக்கை எண் : 6/2011                              நாள்: 28.8.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசும், அமைச்சர்களும்,  உயர் அதிகாரிகளும் செய்யும் முறைகேடுகளால் தேசத்தின் வளமும், வருமானமும் சூறையாடப்படுகிறது. சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மலிந்து போன ஒரு சமூகத்தில் ஊழல் என்பது வேகமாகப் பரவும் தொற்றுநோயாய் இருக்கிறது. தாராளமயத்தாலும், உலகமயத்தாலும் ஊழல் இந்த நாட்டில் தலைவிரித்து தாண்டவமாடும் என எப்போதும் நாம் சொல்லி வந்திருக்கிறோம். அதுதான் நடந்திருக்கிறது. சமீபமாய் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் ஊழல்கள் அனைத்தும், இந்த நாட்டின் பெருமுதலாளிகளுக்குக் காட்டிய சலுகைகளாய் இருக்கின்றன. லட்சம் கோடிகள் என அவை வாயைப் பிளந்து தேசத்தையே விழுங்க முயற்சிக்கின்றன.

இந்தப் பின்னணியில்தான் ஊழல் குறித்த ஒரு பெரும் உரையாடலை அன்னா ஹசாரே துவக்கி வைத்திருக்கிறார். தேசமே ஊழலுக்கு எதிராக வெப்பமடைந்து இருக்கிறது.  13 நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் ஒரு வலுவான லோக்பால் சட்டம் உருவாக வழி கிடைத்திருக்கிறது. ஆனால், சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. அந்தச் சட்டத்தை அமல்படுத்தும் அரசும் அமைப்பும் அதற்குரிய நேர்மையும், வலிமையும் கொண்டவையாய் இருக்க வேண்டும். அதுதான் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.


புதிய பணிநியமனம்

புதிய அலுவலர்களும், ஊழியர்களும் நம் வங்கியில் பணிக்குச் சேர்ந்து இருக்கின்றனர். புதிய காற்றாக, இளம் ரத்தமாக அவர்களின் வருகை இருக்கிறது. பெரும் ஆள் பற்றாக்குறையால் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நாம் இப்போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறோம். புதிய தோழர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டியதும், அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டியதும் இருக்கிறது. நமது அடுத்த தலைமுறை அவர்கள். நமது வங்கியையும், நமது சங்கத்தையும் அவர்களே இனி வழிநடத்தப் போகிறவர்கள். இந்தப் புரிதல் அவசியமானது.  அவர்களுக்கு வேலைகளை கற்றுக்கொடுக்கும் நாம், அவர்களுக்கான உரிமைகள் மற்றும் சலுகைகளையும் கற்றுத் தரவேண்டும்.

அவர்கள் மிகவும் வயது குறைந்தவர்கள்தான். நம்மில் பலருடைய குழந்தைகள் வயதுடையவர்கள்தான். அதனாலேயே  அவர்கள் பேரைச் சொல்லி அழைக்கவும், உரிமையோடு ஒருமையில் பேசவும் நம்மில் சிலருக்குத் தோன்றலாம். அது சரியான நடைமுறையல்ல என்று நமது சங்கம் கருதுகிறது. ‘சார்’, ‘மேடம்’ என மரியாதையுடன் அவர்களை அழைப்பதும், பழகுவதுமே நாகரீகமாக இருக்கும்.


Travelling Allowance

கிளைமேலாளர்களுக்கு சாங்ஷன் செய்ய power குறித்து புதிதாக ஒரு சர்க்குலர் வந்திருக்கிறது. அதில் குழப்பங்களும், முரண்பாடுகளும் இருக்கின்றன. குறிப்பாக,  TAசாங்ஷன் செய்ய அளித்திருக்கும் powerமிகக் குறைவாக இருக்கிறது. FUNDS TAகூட அவர்கள் சாங்ஷன் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கிறது. நிர்வாகம் இதனைச் சரிசெய்ய வேண்டும்.

Deputation சென்றால், அந்த deputation நாட்களுக்குரிய TA மட்டுமே சாங்ஷன் செய்யப்படுவதை ஏற்கனவே நாம் சேர்மன் அவர்களிடமே பேசி இருக்கிறோம். சாவி வாங்கவும், கொடுக்கவுமான அதற்கு முன்னும் பின்னுமான காலத்துக்கும் வழங்கப்படுவதுதான் சரியான நடைமுறை எனச் சொல்லி இருக்கிறோம். அதனைச் சரிசெய்வதாக நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும் இன்னும் சில வட்டார மேலாளர்கள் தானடித்த மூப்பாக, deputationக்குரிய நாட்களுக்கு மட்டுமே TA சாங்ஷன் செய்கிறார்கள். உடனடியாக இந்த வழக்கம் களையப்பட வேண்டும்.


Transfers

இந்த மாதத்தின் ஆரம்பத்தில், அலுவலர்களுக்கும், மெஸஞ்சர்த் தோழர்களுக்கும் போட்ட டிரான்ஸ்பர்களில் பெரும்பாலும் சாதகமாகவே இருந்தன. சில பாதிப்புகள் இருக்கின்றன. அவைகள் குறித்து சங்கம் நிர்வாகத்துடன் பேசிவருகிறது. மேலும், இன்னும் ஒரு சில நாட்களில் கிளரிக்கல் தோழர்களுக்கும், அலுவலர்த் தோழர்களுக்கும் டிரான்ஸ்பர்கள் இருக்கும். பாதிப்புகளைச் சரிசெய்ய நாம் லிஸ்ட் கொடுத்து பேசி வருகிறோம்.

இந்த வங்கியில் ஒரு டிரான்ஸ்பர் பாலிசி என்பது இப்போது இல்லாமல் இருக்கிறது. வணிக வங்கியில் உள்ளதுபோல், ஒரு பாலிசி உருவாக்க வேண்டும் என நமது சங்கங்களின் செயற்குழுக்கள் முடிவு செய்திருக்கின்றன. விரைவில் அதுகுறித்தும் நாம் முன் முயற்சி எடுப்போம்.


வலுப்பெறும் தொழிற்சங்க இயக்கம்!

PGBOAவின் செயல்பாடுகள் மற்றும், நடவடிக்கைகளை விமர்சனம் செய்து, அந்தச் சங்கத்திலிருந்து முக்கியமான தோழர்கள் பலரும் இப்போது PGBOUவில் நாள் தோறும் இணைந்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும்  வாழ்த்தி வரவேற்போம். PGBOAவின் முக்கியத் தலைவரும், AIRRBOF, AIBOC போன்ற அகில இந்திய சங்கங்களில் பொறுப்பு வகித்தவருமான தோழர்.T.கிருஷ்ணன் அவர்களும் நமது சங்கத்தில் இணைந்திருக்கிறார்.  தொழிற்சங்கங்களில் முன்னணித் தலைவர்களாயிருந்த தோழர்கள் சிதம்பரம், சண்முகம் ஆகியோரும் இணைந்திருக்கின்றனர். பாண்டியன் கிராம வங்கி தொழிற்சங்க இயக்கத்தில் இது ஒரு முக்கிய நிகழ்வு. இதன் மூலம் எண்ணிக்கையில் PGBOU மிகப்பெரும்பான்மை கொண்டதாகியிருக்கிறது. நமது உறுதியும், ஒற்றுமையும் மேலும் வலுப்படுகிறது.


செப்டம்பர் 6 தர்ணா!




முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இயக்கம் நடத்துவதென நமது அகில இந்திய சங்கம் AIRRBEA  முடிவு செய்திருக்கிறது.
பென்ஷன் குறித்த வழக்கில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்.  இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே பென்ஷன் வழங்கப்பட்டுவிடும் என அரசு தரப்பில் நம்மிடம் உறுதிமொழியும் தரப்பட்டது. சாதகமான நிலைமைகள் இருந்துவந்த போதிலும், காரியங்கள் காலதாமதமாகவே நடந்து வருகின்றன.
Newspaper allowance, loans  போன்றவை ஐ.ஓ.பியில் உள்ளது போல நமக்கு இல்லை. இதுபோல தேசம் முழுவதும் வணிக வங்கிக்கு இணையான அலவன்சுகள் மற்றும் சலுகைகளை கிராம வங்கிகளுக்கு வழங்குவதில் முரண்பாடுகள் தொடர்ந்து நிலவுகின்றன. பல ஸ்பான்ஸர் வங்கிகள் இதில் மிக மோசமாக நடந்துகொள்கின்றன.

கிராம வங்கிகளில் தினக்கூலியாகவும், ஒப்பந்தம் மூலமாகவும் பணிபுரிகிறவர்கள் மற்றும் பகுதி நேர ஊழியர்களாக பணிபுரிகிறவர்களை அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும் எனவும் AIRRBEA கோரிக்கை வைத்து இருக்கிறது.

ஏறத்தாழ அனைத்து கிராம வங்கிகளிலும் நமது AIRRBEA இணைப்புச் சங்கங்களே பெரும்பான்மையானவையாக இருக்கின்றன. அவர்களின் பிரதிநிதிகள், வங்கியின் நிர்வாகக்குழு இயக்குனர்களாக இருக்க வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கை. இவைகளை உள்ளடக்கியக் கோரிக்கைகளாக-

1) PARITY OF SUPERANNUATION BENEFITS/OTHER ALLOWANCES/BENEFITS/SERVICE CONDITIONS.
2) REGULARIZATION/ABSORPTION/PROMOTION OF ALL DAILY WAGED/PART TIME/CASUAL MESSENGERS/SWEEPERS/WORKERS
3)REPRESENTATION OF WORKMAN/OFFICERS IN THE BOARD OF MANAGEMENT OF RRB.

ஆகியவற்றை முன்வைத்து, செபடம்பர் 6ம் தேதி ஒருநாள் தர்ணா போராட்டம் தலைமையலுவலகம் முன்பாக நடத்த AIRRBEAஅறைகூவல் விடுத்திருக்கிறது. அதன்படி நாம் நமது தலைமையலுவலகம் முன்பாக நடத்த இருக்கிறோம். திரளாக தோழர்கள் வந்து பங்கேற்கும்படி அழைக்கிறோம்.

செப்டம்பர் 6!
நமது கோஷங்களால் நிறையட்டும்!
வாருங்கள்!

தோழமையுடன்

   
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

2.8.11

PGBEA - PGBOU circular 1.8.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)


_________________________________________________________
website: www.pgbea.net    email: gspgbou@gmail.com , pgbea.vnr@gmail.com
_________________________________________________________

சுற்றறிக்கை எண் : 4/2011                                          நாள்: 14.7.2011

அருமைத் தோழர்களே!




வணக்கம்.


ஆகஸ்ட் 3ம் தேதி நமது வங்கியில் புதிதாகப் பணிநியமனம் செய்யப்பட்ட ஆபிஸர்களும், ஆபிஸ் அசிஸ்டெண்ட்களும் பணியில் சேர இருக்கின்றனர்.   புதிய ஆபிஸர்களுக்கு கிளைகளில் ஒரு மாதம்  training  என்றும், புதிய Office assistant களுக்கு தலைமையலுவலகத்தில் வைத்து  இரண்டு Batchகளாக  training கொடுத்த பிறகு கிளைகளில் posting செய்யப்படுவர் என்றும் சொல்லப்படுகிறது. புழுக்கங்களும்,நெருக்கடிகளும் வாட்டுகின்ற ஒரு முக்கிய தருணத்தில் அவர்கள் புதிய காற்றாக வருகின்றனர்.  ஒரு தலைமுறை இடைவெளி விட்டு,இளம் ரத்தமாக வருகின்றனர். இந்தச் செய்தி நம் அனைவருக்கும், உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தருகிறது. அவர்களை வாழ்த்துவோம். வரவேற்போம். நமது அனுபவமும், அவர்களின் ஆற்றலும் இந்த வங்கிக்கும், நமது இயக்கத்திற்கும் வலிமை சேர்க்கும்.


மேலாளர்கள் கூட்டத்தில் நாம்!


மண்டலவாரியாக சமீபத்தில் நடந்த மேலாளர்கள் கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளையும் ஆலோசனைகூற நிர்வாகம் அழைத்திருந்தது. இது ஒரு ஆரோக்கியமான நடைமுறையாகவே நாம் கருதுகிறோம்.  சேர்மன் அவர்கள்,  நடந்து முடிந்த காலாண்டு (ஏப்ரல் - ஜூன் 2011) கணக்கில், நமது டெப்பாசிட் குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அதன் விளைவுகளையும், தாக்கங்களையும் எடுத்துரைத்தார்.  Advancesல் jewel loanகளே அதிகமாய் இருப்பதையும், 86 சதவீதமாக இருக்கும் அதனை 75 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது நமக்கு இலக்கு என்பதையும் எடுத்துரைத்தார். இதன் அர்த்தம் நகைக்கடனை குறைக்க வேண்டும் என்பதல்ல, மற்ற கடன்களை, குறிப்பாக easy loan போன்றவைகளை அதிகரிக்க வேண்டும் என்பதே என தனது நிலைபாட்டை தெளிவு படுத்தினார்.  Branch managerகள் வெளியே செல்ல வேண்டும், canvass  செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.


நம் தரப்பில் பேசும்போது, இதுபோன்ற கூட்டங்களில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு தோன்றியதற்கு,  சேர்மனுக்கு நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்தோம்.  இந்தக் கூட்டம் one way traffic போல இருப்பதாகவும், வெளிப்படையான உரையாடல்கள் தேவை என்பதையும் நம் தரப்பில் சுட்டிக்காட்டினோம். Managerகளே ground levelல் பணிபுரிந்து அதன் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர்கள் என்றும், இலக்குகளை விஞ்ஞான பூர்வமாக வடிவமைக்க வேண்டியவர்கள் நிர்வாகம் என்றும், இந்த இருமுனைகளும் சந்தித்து தீர்வு கண்டு, மேலும் முன்னேறும் இடமாக managers மீட்டிங் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.  பணிநிறைவின் போது எப்போதோ கொடுத்த கடன்களை காரணம் காட்டி, ஓய்வூதியத் தொகைகளை பிடித்தம் செய்வதால்,  அலுவலர்கள் மத்தியில் ஒரு பயம் விதைக்கப்படுவதையும் எடுத்துச் சொன்னோம். நிர்வாகத்தரப்பில் transparencyயும்,  impartialityயும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டோம்.  இந்த குறிப்பிட்ட காலாண்டில் ஆள் பற்றாக்குறையாலும்,  பணி நெருக்கடியாலுமே வாடிக்கையாளர் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதையும் அதுவே, வங்கியின் வளர்ச்சிக்கு தடைகல்லாக இருந்ததையும், புதிய Recruitment மூலம் அந்த நெருக்கடி ஒரளவுக்கு தீர்ந்து போக இருப்பதால், நாம் இலக்குகளை அடைய சாத்தியங்கள் அதிகமாகி இருக்கின்றன எனவும் நம்பிக்கை தெரிவித்தோம்.


டிரான்ஸ்பர்கள்:


திறக்கப்பட்ட புதிய கிளைகளில் தோழர்கள் கலைச்செல்வன் (புதுக்கோட்டை), தங்கராஜ் (சிங்கம்புணரி), சந்திரசேகர் (காரைக்குடி) ஆகியோரை மாறுதல் செய்தது சரியல்ல என்றும், அவைகளை மாற்றித்தர வேண்டுமெனவும் நாம் வலியுறுத்தி வந்தோம்.  டிரான்ஸ்பர் கமிட்டியில் பேசினோம். “அவர்கள் புதியகிளையில் ஜாய்ன் பண்ணச் சொல்லுங்கள். டிரான்ஸ்பர்களை மாற்றித் தருகிறோம்”என்றார் சேர்மன். நமது தோழர்களும் அதுபோலவே ஜாய்ன் செய்தனர். சொன்ன மாதிரி, இப்போது அந்த மூன்று தோழர்களுக்குமே அவரவர்களின் பழைய கிளைகளுக்கு நிர்வாகம் டிரான்ஸ்பர்களை மாற்றித் தந்திருக்கிறது. சேர்மன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


புதிய கிளரிக்கல் தோழர்களுக்கு டிரெயினிங் முடிந்ததும்,  அவர்களுக்கு கிளைகள் ஒதுக்கப்பட்டு மாறுதல் செய்யப்படுவார்கள். அதுசமயம் ஏற்கனவே பாதிப்புகளுக்குள்ளான அனைத்து டிரான்ஸ்பர்களும், மெஸஞ்சரிலிருந்து கிளரிக்கலாக பதவி உயர்வு பெற்றதையொட்டி தொலைதூரங்களுக்கு போடப்பட்ட டிரான்ஸ்பர்களும் சரிசெய்யப்படும் என நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது. மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறோம்.


ஆகஸ்ட் 5ம் தேதி அகில இந்திய வேலைநிறுத்தம்:


ஏற்கனவே ஜூல7ம் தேதி நடக்க இருந்த நமது அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தம், பாராளுமன்றக் கூட்டத்தொடரையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு இருந்ததைத் தெரியப்படுத்தி இருந்தோம்.  திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 5ம் தேதி, வங்கித்துறையின் எதிர்காலம் கருதியும், வங்கிஊழியர்கள் நலன் கருதியும் நாம் இப்போது அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ள இருக்கிறோம்.  இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களின் மிக முக்கிய கோரிக்கையான பென்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. ‘பென்ஷனுக்காக எந்தவித தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம்’என வெறும் வார்த்தைகளால் சர்க்குலர் போட்டுவிட்டு, இந்த வேலைநிறுத்ததில் கலந்துகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் நாமல்ல. 


வங்கித்துறையை தனியாருக்கு வார்க்கும் அரசின் முயற்சிகளை எதிர்க்கிற போராட்டம் இது. இருதரப்பு ஊதிய ஒப்பந்தங்களை காலாவதியாக்கும் சதிகளுக்கு எதிரான போராட்டம் இது. Business coreespondents என்னும் பேரில் outsourcing  செய்து பெரும் உழைப்புச் சுரண்டலுக்கு துணைபோகும் சூழ்ச்சிகளுக்கு எதிரான போராட்டம் இது. லாபத்தோடு பென்ஷனையும் சம்பந்தப்படுத்தி, வங்கி ஊழியர்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிற அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் இது. மேலும் பணி நேரத்தை அதிகரித்து, வங்கி ஊழியர்களின் முதுகெலும்பை முறிக்கிற கொடுமைக்கு எதிரான போராட்டம் இது.


பெற்றதை நாம் ஒருபோதும் நாம் இழந்திடலாகாது. வாருங்கள் தோழர்களே! மகத்தான இந்த காரியத்தில் நாம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.


ஆகஸ்ட் 5ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்ததை வெற்றிகரமக்குவோம்.


தோழமையுடன்


(M.சோலைமாணிக்கம்)                                                 (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA                            பொதுச்செயலாளர் - PGBOU

15.7.11

PGBEA - PGBOU circular 14.7.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)

_________________________________________________________
website: www.pgbea.net    email: gs@pgbea.net , pgbea.vnr@gmail.com
_________________________________________________________

சுற்றறிக்கை எண் : 4/2011                                          நாள்: 14.7.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. இன்னும் குழந்தைகளுக்கு தாங்கள் எதைப் படிக்கப் போகிறோம் எனத்  தெரியாமல் இருக்கிறார்கள். முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வித்திட்டத்தை, முடக்கிவிட்டு இருக்கிறது இந்த அரசு.  அது தகுதியற்றதாக இருக்கிறது என காரணம் சொல்கிறது. ஏற்கனவே இருக்கும் ஒன்றின் குறைகளைக் களைந்து, அதை மேலும் சிறப்புள்ளதாக்குவதே நேர்மையான செயல்.  அதை விடுத்து, ‘எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஆத்திரத்தாலும், ஆணவத்தாலும் முடிவெடுப்பது நல்ல அரசாங்கமாக இருக்க முடியாது. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களில் குறைகள் இருந்திருக்கலாம். ஆனால் பல ஆண்டுகளாக, பழங்குப்பையாக இருந்த கல்வி முறைக்கு புதிய இரத்தமும், புதிய முகமும் கொடுத்தது சமச்சீர் கல்வி முறை. அதை மறுக்க முடியாது.

நமது வங்கியில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது பெரும் சுமையாக இருக்கிறது.  ஆள் பற்றக்குறையால் பெரும்  மன அழுத்தங்களுக்கும், உடல் சோர்வுகளுக்கும் தோழர்கள் ஆளாகிறார்கள். வங்கி நிர்வாகம் இதனைக் கருத்தில் கொள்ளாமல், தனது வேலைகள் மட்டும் நடந்தால் சரியென்பது போலிருக்கிறது. இதனை பிரதிபலித்து PGBEA தனது விமர்சனங்களை முன்வைத்தது. நிர்வாகத்தரப்பில் பேச்சுவார்த்தைக்கு 8.7.2011 அன்று PGBEAவுக்கும், PGBOUவுக்கும் ஒதுக்கப்பட்டது. அவைகளை அறியத் தருகிறோம்:

PGBEAவுடன் பேச்சுவார்த்தை:

1. Computer Increment, Newspaper Allowance உள்ளிட்ட அலவன்சுகள் குறித்து சேர்மன் ஐ.ஓ.பிக்கு நேரில் சென்று பேசியதாகவும், Computer increment குறித்த அரசாணையில் ஐ.ஒ.பி நிர்வாகம் சில சந்தேகங்கள் எழுப்பி இருப்பதாகவும், அவை clarify செய்யப்பட்டவுடன், நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவைகளை விரைவில் நமக்கு வாங்கித்தருவதற்கு தானே முழுப் பொறுப்பையும் ஏற்பதாகவும் உறுதியளித்தார்.

2. Complimentஐ நமது வங்கியின் போர்டு நிராகரித்து விட்டதையும், தான் செய்த முயற்சிகளையும் எடுத்துரைத்தார். நாம் நமது வங்கியின் லாபத்தில் 5 சதவீதத்தை இதுபோன்ற staff welfare fundக்கு ஒதுக்கலாமே என யோசனை தெரிவித்தோம். சேர்மன் உடனே அந்த யோசனையை வரவேற்றதோடு, ஐ.ஓ.பியில் இந்த நடைமுறை இருப்பதாகவும், தான் அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.

3. பல கிராம வங்கிகளிலும், சில வணிக வங்கிகளிலும் one time measure ஆக, அங்கு temporary ஆக பணிபுரிபவர்களை நிரந்தரமாக்கியிருப்பதையும், நமது வங்கியியிலும் அது போன்ற நடைமுறைகளை சாத்தியமாக்கிட வேண்டும் எனவும் சொன்னோம். தனக்கும் இதில் சம்மதம் உண்டு என்றும், அனுமதிக்கப்பட்ட வழிகளில் முயற்சிப்பதாக சேர்மன் அவர்கள் தெரிவித்தார். இதுபோன்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு நமது ஒப்புதல் எப்போதும் உண்டு என்றதோடு, இந்த நல்ல காரியம் பல குடும்பங்களில் விளக்கேற்றும் என்றும் தெரிவித்திருக்கிறோம்.

4. Deputation ஏற்பாடு செய்யப்படாமல் போனது, உடல்நலம் சுகவீனமுற்றது போன்ற காரணங்களால் சென்ற block yearல் LTC செல்ல முடியாமல் போனவர்களுக்கு, time extend செய்து , LTC செல்ல அனுமதிக்க வேண்டும் என்றோம். அவை ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய நியாயமான காரணங்களாய் இருந்தால் அனுமதிக்கிறோம் என்றிருக்கிறார் சேர்மன்.

5. நமது வங்கியில் பணிச்சூழல் பல வகையிலும் கெட்டுப் போய் உள்ளது. அதில் முக்கியமானது, கிளைகளில் computer, printer எல்லாம் காலாவதியாகியும், இன்னும் நாம் அதை வைத்து தினமும் போராடுவதும், அன்றாட வேலைகளை முடிக்க முடியாமல் திண்டாடுவதும் ஆகும். அவைகள் அனைத்திற்கும் புதியவைகளை replace செய்ய வங்கியின் போர்டு இப்போது அனுமதித்து இருப்பதாகவும், விரைவில் அவை யாவும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன் உறுதியளித்தார்.

6. புதிய பணி நியமனம் இந்த மாதம் ஜூலை 18ம் தேதி வாக்கில் போர்டில் வைத்து இறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.  அதையொட்டிய டிரான்ஸ்பர்களில், அனைத்து பாதிப்புகளும் சரி செய்யப்படும் எனவும் சேர்மன உறுதியளித்தார்.

8.புதிதாக திறக்கப்பட்ட கிளைகளுக்கு, நமது தோழர்களை டிரான்ஸ்பர்கள் செய்திருந்ததை நாம் கடுமையாக எதிர்த்திருந்தோம். சுற்றறிக்கையில் தெரிவித்திருந்தோம். நமது தோழர்கள் மெடிக்கல் லீவில் சென்றிருந்தனர். தன்னுடன் PGBEA பேசியிருந்தால், இப்படியொரு நெருக்கடி ஏற்பட்டு இருக்காது எனவும், தான் அதனை முதலிலேயே சரி செய்திருப்பேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சங்கத்தின் எதிர்ப்பு தனக்கு வருத்தமளிப்பதாகவும் வெளிப்படையாகச் சொன்னார். தொடர்ந்து எங்கள் தோழர்கள் பாதிக்கப்படுவது எங்களுக்கு வருத்தமளிக்கிறது என நம் நிலையை நாம் விளக்கினோம். GM(o), PAD-SM ஆகியோருடன் பேசி இணக்கமாக இந்தப் பிரச்சினையை முடித்துக் கொள்ளுங்கள் என்றார் சேர்மன். நாம் சம்மதித்திருக்கிறோம்.

இந்தப் பேச்சுவார்த்தையில், நாம் united India medical claim ல் உள்ள குறைபாடுகளைச் சொன்னோம். அவைகள் சரி செய்யப்பட்டு improved claim procedure ஒன்று நமது போர்டில் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், நமது வங்கியின் வணிகத்தில், அட்வான்ஸில் 90 சதவீதம் நகைக்கடனாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். சேர்மன் தனது ஆதங்கத்தை வெளிப்படையாகச் சொன்னதோடு, இந்நிலையை மாற்ற தான் தயாராக இருப்பதாகவும், அதற்கு நமது ஒத்துழைப்பு வேண்டும் எனவும் கூறினார். நாம் இவ்விஷயத்தில் அவரோடும், வங்கியோடும் முழுமையாக இருப்போம் எனவும் உறுதி கூறினோம்.

PGBOUவுடன் பேச்சுவார்த்தை:

1. வங்கியின் மொத்தக் கடனில் நகைக்கடன் மட்டுமே 86.5 சதவீதம் இருக்கிறது.  நல்லதொரு வங்கியின் தன்மையாக இது நிச்சயம் இருக்க முடியாது. பன்முகங்களோடு வங்கியின் செயல்பாடுகள் இருப்பதே அதன் ஆரோக்கியத்திற்கான அம்சமாகும். இதனை கவலையோடு வலியுறுத்தினோம். சேர்மனும் இதே கருத்துடன் இருந்தார். நகைக்கடனை குறைத்து, மற்ற கடன்களை அதிகப்படுத்த திட்டமிருப்பதாக தெரிவித்தார். நடப்பு ஆண்டில் வங்கியின் மொத்தக்கடன் அளவில் நகைக்கடன் அளவை 75 சதவீதத்திற்கு குறைக்க இலக்கு நிர்ணயித்திருப்பதாகவும் தெரிவித்தார். நாம் சில யோசனைகளை முன்வைத்திருக்கிறோம். மேலாளர்களுக்கு பவர் அதிகமாக்குவது, JLG லோன்களுக்கு இன்சூரன்சு பிடிப்பதை தவிர்ப்பது, இப்போது R.M எல்லாம் scale IV என்பதால் அனைத்து மண்டலங்களுக்கும் ஜீப் வழங்கி அவர்களது mobilityஐ விரிவாக்குவது, ஒவ்வொரு மண்டலமும் சில கிராமங்களை adopt  செய்வது போன்றவை அதில் அடங்கும். சேர்மன் இவைகளை வரவேற்றதோடு, ஆராய்வதாகவும் தெரிவித்தார்.

2. ஏற்கனவே பல தோழர்கள் மாறுதல்களில் பாதிப்படைந்துள்ள நிலையில், நிர்வாகம் இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்ட டிரான்ஸ்பர்களில் மேலும் பல தோழர்கள் பாதிப்புகளுக்குள்ளாகியிருக்கின்றனர். இதனை மிகுந்த வலியுடன் எடுத்துச் சொன்னோம். இவைகள் சரி செய்யப்படுவதே வங்கியின் வளர்ச்சிக்கு உதவும் என்றோம். நிர்வாகம் சரிசெய்து தருவதாக உறுதியளித்துள்ளது.

3.யுனைட்டெட் இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் நமக்கு ரூ.75000/- வரை claim செய்துகொள்ள வசதி இருக்கிறது. அதற்கு மேல் ஆகும் தொகைக்கும்,  இன்சூரன்ஸ் கம்பெனி மறுக்கும் claim களுக்கும் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. இதனைக் கடந்த ஒரு வருடமாக நாம் நிர்வாகத்துடன் பேசி வருகிறோம். இப்போது ரூ.75000/-த்திற்கு மேல் ஆகும் தொகைக்கும், இன்சூரன்சு கம்பெனி மறுக்கும் தொகைக்கும் நமது வங்கியே claim settle செய்வதாக ஒரு முறையை Board meetingல் வைத்து ஒப்புதல் வாங்கியிருக்கிறது நிர்வாகம். நமது சங்கம் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறது.  தலைமையலுவலகத்திலிருந்து இது குறித்து சர்க்குலர்கள் வெளியானவுடன், பாதிக்கப்பட்ட தோழர்கள், உரிய பேப்பர்களையும், பில்களையும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

4. டிரான்ஸ்பர்களில் சென்றுள்ள பல தோழர்களுக்கு Joining Time  மற்றும் Lumpsum கிடைக்கவில்லை. Family shift  செய்திருக்க வேண்டும் எனவும், தங்குமிடத்திற்கு evidence  காட்ட வேண்டும் எனவும் நிர்வாகம் வலியுறுத்தி வந்தது. நாம் இது குறித்து சேர்மனிடம் விரிவாகப் பேசினோம். நாம் ஏற்கனவே பெற்று வந்த சலுகை இது என்பதையும் எடுத்துரைத்தோம். புரிந்துகொண்ட சேர்மன் நிவர்த்தி செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.

5. பணி ஓய்வு பெறும் தோழர்கள் தொடர்ச்சியாக அவதிக்குள்ளாகின்றனர். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற அனைவரிடமும் எதாவது காரணம் காட்டி பணம் பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது. இது வருத்தத்திற்குரிய செய்தி. சேர்மனிடம் விரிவாக பேசினோம். சம்பந்தப்பட்ட  அலுவலர்கள் ஃபைல்கள் குறித்து 6 மாதத்திற்கு முன்பே ஆராய்ந்து, குறைகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என சேர்மன் உறுதியளித்தார்.

6. நாளுக்கு நாள்  கிளைகளும், ஊழியர்களும் நகைக்கடன்களில் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதால் purity and weight காட்டும் இயந்திரத்தை நிர்வாகச் செலவில் வாங்க வேண்டும் என நாம் கோரிக்கை வைத்தோம். நிர்வாகத்திற்கு கடிதம் அளித்திருந்தோம். நமது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நிர்வாகம்,  முதலில் test-ற்காக ஒரு இயந்திரத்தை import செய்ய ஆர்டர் கொடுத்திருக்கிறது.

7. கடந்த ஆண்டிற்குரிய பதவி உயர்வு நடந்து முடிந்திருக்கிறது. நடப்பு ஆண்டில் அளிக்க வேண்டிய பதவி உயர்வுகளுக்கான காரியங்களை உடனடியாகத் துவக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். அதுகுறித்து ஏற்கனவே PADக்கு பணித்துவிட்டதாக சேர்மன் தெரிவித்தார். 25 scale IIIக்கான இடங்கள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கிறோம்.

PGBEAவுடனான  பேச்சுவார்த்தையின் இடையே சேர்மன் அவர்கள் சொன்ன வாக்கியம் மிக முக்கியமானது மட்டுமல்ல, அற்புதமானதும் கூட. “We are not opposite parties. We are coailtion parties" என்பதே அது. நிச்சயமாக நாம் இதனை வரவேற்கிறோம். இதன் அர்த்தமும், பரிமாணங்களும் உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமானால், நாமும், நமது வங்கியும் சிகரங்களைத் தொட முடியும். ஆனால் நடைமுறைப்படுத்துவது எப்போதும் நிர்வாகத்தின் கைகளிலேயே இருக்கிறது. கடந்தகால அனுபவங்கள் அதனை கசப்பாகவே நமக்கு தந்திருக்கிறது. இதனையும் சேர்த்து நிர்வாகம் புரிந்து கொண்டால் எல்லாம் சரியாகும்.

ஆகஸ்ட் 5 வேலை நிறுத்தம்:

ஜூலை 7ம் தேதி அகில இந்திய ஒருநாள் வேலைநிறுத்தத்தையொட்டி தலைமையலுவலகம் முன்பாக 22.6.2011 அன்று நாம் நடத்திய வாயிற்கூட்டம் உற்சாகமளிப்பதாகவும், எழுச்சி மிக்கதாகவும் இருந்தது.  அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான, இந்த வாயிற்கூட்டத்துக்கும், IR  சர்க்குலர் போட்டு நிர்வாகம் ‘wage cut'  என்று சட்ட விரோதமாக மிரட்டிய போதிலும், கடுமையான ஆள் பற்றாக்குறையும் பணிச்சுமையும் மிக்க நெருக்கடியிலும், 80க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து நாம் 25.6.2011 அன்று நெல்லையிலும், 30.6.2011 அன்று மதுரையிலும், வேலை நிறுத்ததிற்கான தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தியும் இருந்தோம். இந்த நிலையில் ஜூன் 7ம் தேதி வேலை நிறுத்தம் ஆகஸ்ட் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செய்தி வந்தது. எஸ்.எம்.எஸ் மூலமும், நமது PGBEA website மூலமும் தோழர்களுக்கு தகவலை தெரியப்படுத்தினோம். பாராளுமன்றக் கூட்டத்தொடரையொட்டி வேலை நிறுத்தம் நடப்பது கவனம் அளிப்பதாகவும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் இருக்கும் என்பதால்தான் இந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்படுள்ளது.   கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் இப்போது இணைக்கப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் 5ம் தேதிக்கு தயாராவோம்.

PGBEA வெப்சைட்

நமது PGBEA வெப்சைட் www.pgbea.net  ஆரம்பிக்கப்பட்டு இருப்பதை தோழர்களுக்குத் தெரியப்படுத்தி இருந்தோம்.  தினமும் சராசரியாக 150 பேர் படித்து வருகின்றனர் என்பது உற்சாகமாக இருக்கிறது. நேர்த்தியாகவும் தேர்ந்த தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக அகில இந்தியத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். சங்க செய்திகள், சமூகக் கட்டுரைகள், அகில இந்தியச் செய்திகள், சுற்றறிக்கைகள் என பல பகுதிகளில் உடனுக்குடன் விஷயங்களை தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.  இப்போது நமக்குத் தேவையான  staff circulars, loan applications  எல்லாம் அப்லோட் செய்யப்பட்டு வருகின்றன. தோழர்கள் தங்கள் கிளை அனுபவங்களை, சங்கச் செய்திகளை இந்த வெப்சைட்டில் பகிர்ந்துகொள்ளலாம். gs@pgbea.net  அல்லது pgbea.vnr@gmail.com என்ற இ-மெயிலுக்கு எழுதுங்கள். இந்த வருடம் பத்தாம் வகுப்புத் தேர்வில் 400க்கு மேலும் , பிளஸ் டூ தேர்வில் 1000த்திற்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றிருக்கும் நமது பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள்/அலுவலர்களின் குழந்தைகளைப் பற்றிய செய்திகளை நமது வெப்சைட்டில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம். குழந்தைகளின் போட்டோ, படித்த பள்ளி, எடுத்த மதிப்பெண்கள் குறித்த விபரங்களை இ-மெயில் மூலமாகவே கடிதம் மூலமாகவோ தெரியப்படுத்த வேண்டுகிறோம்.

Computer increment:

வங்கித்துறையில் கம்யூட்டரை புகுத்துவதற்காக, தொழிற்சங்கங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையின்படி, அனைத்து அலுவலர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒரு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட்டது. அதையே கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். அரசு அதை மறுத்துவந்த நிலையில் நமது அகில இந்திய சங்கம் AIRRBEA வழக்குத் தொடர்ந்தது. தீர்ப்பு நமக்கு சாதகமாக வந்திருக்கிறது என்பதை ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தோம். (இதற்கிடையில்  100 சதவீதம் CBS  ஆன கிராமவங்கிகளுக்கு கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கலாம் என அரசு ஒரு ஆணையை  இந்த வருடம் மார்ச் மாதத்தில் பிறப்பித்தது. அதையும் நமது வங்கி நிர்வாகம் அமல்படுத்தவில்லை.)  இப்போது நமது அகில இந்திய சங்கம் AIRRBEA,   கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்க மறுப்பது சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தி அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் சம்பந்தப்பட்ட கிராம வங்கி சேர்மன்களுக்கு கடிதம் அனுப்புமாறும் அறைகூவல் விடுத்திருக்கிறது. அதற்கான model letterஐ இணைத்திருக்கிறோம். அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் நகலெடுத்து  நமது வங்கிச் சேர்மனுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம்.

தோழர்களே!

தொடர்ந்து இயங்குவோம். பேசுவோம். சந்திப்போம்.


தோழமையுடன்

   
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU


* தோழர்.சுப்புராஜ் பணி ஓய்வு பெற்றத் தொடர்ந்து, கந்தவர்க்கோட்டை கிளை மேலாளரான தோழர்.A.ஆறுமுகப்பெருமாள் நமது சங்கத்தின் உதவிப்பொருளாளராக, PGBOU செயற்குழு தேர்தெடுத்திருக்கிறது. அவருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.

* சேர்மனுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, 14.7.2011 அன்று  நிர்வாகத் தரப்பில் அமைக்கப்பட்ட, டிரான்ஸ்பர் கமிட்டியுடன் (GM-O, PAD-SM, AIVD-SM)   PGBEAவும், PGBOU வும் பேச்சுவார்த்தை நடத்தின. பாதிக்கப்பட்ட தோழர்களுக்கு மாறுதல்கள் மாற்றித்தர வேண்டுமென வலியுறுத்தி இருக்கிறோம்.

28.6.11

EA சர்க்குலர் 28.6.2011

சுற்றறிக்கை எண் : 2/2011 நாள்: 28.6.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

நமது பொறுமை, நிதானம் எல்லாவற்றையும் இந்த நிர்வாகம் அளவுக்கு மீறி சோதித்துக்கொண்டு இருக்கிறது. கடுமையான ஆள் பற்றாக்குறையிலும், பணிச்சுமையிலும் தவித்துக்கொண்டு இங்கு பணிபுரிந்தாலும், நமக்கு குறைந்தபட்ச மரியாதை கூட கிடையாது என்று சொல்கிறது நிர்வாகம். குளறுபடிகள் மற்றும் கோளாறுகளுக்கு மொத்த உருவமாய்த் திகழும் இந்த நிர்வாகம், இங்கு ஊழியர்களை பாடாய் படுத்திக்கொண்டு இருக்கிறது. வங்கியின் வளர்ச்சியின் மீதான அக்கறையாலும்,  ‘எதற்கெடுத்தாலும் சண்டை போடுபவர்கள்' என்று பழி சொல்ல ஒரு கூட்டம் காத்துக் கிடப்பதாலும், நாமும் நிறையவே பொறுமையாக இருந்து பார்த்துவிட்டோம். பேச்சு வார்த்தைகள் மூலமாக முடிந்தவரை விவகாரங்களை சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் கடைப்பிடித்த அமைதியை கொஞ்சம் கூட இந்த நிர்வாகம் மதிக்கவில்லை.

கம்யூட்டர் அலவன்சு இதர கிராம வங்கிகளில் கொடுத்து மாதங்கள் பலவாகிவிட்டன. இங்கு அதற்கான முயற்சிகளையே நிர்வாகத்தரப்பில் காணோம். ‘காம்ப்ளிமண்ட்' இந்த வருடமாவது தருவார்கள் என எதிர்பார்த்தோம். அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. இப்படி இன்னும் பல சலுகைகளைச் சொல்ல முடியும். எந்தவிதமான பொருளாதாரக் கோரிக்கைகளையும் இந்த நிர்வாகம் நிறைவேற்றித் தரவில்லை.

பதவி உயர்வும், புதிய பணிநியமனமும் ஒரே நேரத்தில் நடந்திருந்தால் இங்கு பெரிய அளவுக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்காது. அதிலும் சரியான திட்டமிடுதல் இல்லாமல் கடந்த மூன்று மாதங்களாக வங்கியே நிலைகுலையுமளவுக்கு கிளரிக்கல் பற்றாக்குறை தாண்டவமாடுகிறது. உடல்நலமில்லையென்றாலும், நெருங்கிய உறவினர்களுக்கு நலல்து கெட்டது என்றாலும் அதற்கெல்லாம் செல்ல முடியாமல் அனைவரும் புழுங்கிக்கொண்டு இருக்கின்றனர். தனக்குரிய லீவினை எடுக்க முடியாமல், எல்.டி.சி செல்ல முடியாமல் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். சங்கங்கள் தானாக முயற்சி எடுத்து அங்குமிங்கும் பேசி, தொலைதூர மாவட்டங்களுக்கு டெபுடேஷன் ஏற்பாடு செய்தால், ‘லீவு நாட்களுக்கு' அலவன்சு கிடையாது என்று கெடுபடி மட்டும் கொடிகட்டி பறக்கிறது.

இந்த நிலையில். நிர்வாகம் இன்னொரு புறம் கிளைகளை திறந்துகொண்டே இருக்கிறது. இருக்கிற கிளைகளிலேயே, ஆள் பற்றாக்குறையால் வாடிக்கையாளர் சேவை செய்ய முடியாமல் திண்டாட, புதிய கிளைகளை திறப்பது என்ன வகையான நிர்வாகம் என்று தெரியவில்லை. போதிய மனித சக்தியோடு கிளைகளை திறப்பதை நாம் எப்போதுமே வரவேற்கிறோம். ஆனால், ஆட்களே இல்லாமல் நமது நிர்வாகம் மந்திரத்தில் மாங்காய் பறிக்க முயல்வதைத்தான் நாம் எதிர்க்கிறோம்.

இப்படி, அதிரடியாக திறக்கப்படும் கிளைகளுக்கு, அதிரடியாக மாறுதல் உத்தரவுகளையும் பிறப்பித்துக்கொண்டே இருக்கிறது நிர்வாகம். சென்ற வெள்ளிக்கிழமை 24.6.2011 அன்று காரைக்குடி, புதுக்கோட்டை, சிங்கம்புணரி போன்ற அதிக வணிகம் உள்ள கிளைகளையெல்லாம் இப்போது ‘சிங்கிள் மேன்' கிளைகளாக்கி விட்டு இருக்கிறது. அங்கு பணிபுரியும் நமது தோழர்களை தானடித்த மூப்பாய் புதிய கிளைகளுக்கு தூக்கி வீசியிருக்கிறது. நாம் இதனை கடுமையாக எதிர்த்தோம். நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், வேண்டுமானால் இரண்டு மாதங்களுக்கு யாரையாவது டெபுடேஷன் போட்டு கிளைகளை நடத்துங்கள் என்றும்  சம்பந்தப்பட்ட ஆர்.எம்மிடமும், பணியாளர்துறை எஸ்.எம்மிடமும் பேசினோம். தொடர்ந்து டெபுடேஷன்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆனால், இன்று 28.6.2011 அன்று திடீரென்று, டெபுடேஷன்களை கேன்சல் செய்துவிட்டு, ஏற்கனவே போட்ட டிரான்ஸ்பர்களின்படி, நம் தோழர்களை  உடனே ரிலீவ் செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறது நிர்வாகம். கேஷ் பார்த்துக்கொண்டு இருந்த தோழரை, பாதியில் அப்படியே நிறுத்தி, மாறுதல் செய்யுமாறு உயர் இடத்தில் இருந்து கடுமையான ஆணை வேறு! என்ன அராஜகம் இது. ஒரு விதியும், முறையும், குறைந்த பட்ச நாகரீகமும் கூட கிடையாதா? இது என்ன பொதுத்துறை வங்கியா, அல்லது யாருடைய தனிப்பட்ட சொத்தா?

Yes.... it is the last straw on the camel's back. இனி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. நடக்கும் காட்டு தர்பாரை முழுமையாக அம்பலப்படுத்தும் வேளை நெருங்கியிருக்கிறது. இனியும் பொறுக்க முடியாது, நமக்கு இழைக்கப்படும் அநியாயங்களுக்கு எதிராக கிளர்ந்தெழும் தருணம் வந்திருக்கிறது.

எதற்கெடுத்தாலும் ‘system ' ‘system'  என்றும், தனக்கு systemதான் முக்கியம், அதை யாராவது மீறினால் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்றும் வாய்க்கு வாய் நமது சேர்மன் அவர்கள் சொல்வார். இங்கு எல்லாம் system  படிதான் நடக்கிறதோ? எல்லா systemகளையும் மீறுவதும், மீற வைப்பதும், சிதைப்பதும் நிர்வாகமே. CBSல் ஆயிரம் கோளாறுகள். எத்தனை டம்மி passwordகள். customer IDயில் எத்தனை சமாளிப்புகள். TXN  இல்லாமலேயே pass பண்ண நிர்வாகமே தூண்டுவது, யாருடைய passwordஐயும் யாரும் பயன்படுத்துவது என எவ்வளவு எவ்வளவு இருக்கிறது. இங்கெல்லாம் சேர்மன் system பற்றி பேச மாட்டார்.

டிரான்ஸ்பர்களில் எல்லாம் systemபடிதான் நடக்கிறதோ? வேண்டியவர்களுக்கு, அவர்கள் விரும்புகிறவரை மாற்றி மாற்றி டிரான்ஸ்பர்கள். பக்கத்திலேயே டிரான்ஸ்பர்கள். ஆனால்  மற்றவர்களுக்கு? அவர்கள் மனிதர்கள் இல்லையா? பிரமோஷனில் என்ன system  கடைப்படிக்கப்படுகிறது?  ஒழுங்கு நடவடிக்கைகளில் என்ன system  கடைப்பிடிக்கப்படுகிறது?

இனி, நாம் இங்கு எது system  என்று சொல்லித் தருவோம். விரைவில் நமது சங்க செயற்குழு கூடி அதற்கான பாடத்திட்டங்களை முடிவு செய்யும்.

சந்திப்போம்.


தோழமையுடன்
   
(M.சோலைமாணிக்கம்)  
பொதுச்செயலாளர் - PGBEA

24.6.11

EA - OU சர்க்குலர் 17.6.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு: AIRRBEA, NFRRBE & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு: AIRRBEA & NFRRBO)


சுற்றறிக்கை எண் : 3/2011 நாள்: 17.6.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

எழுத்தர்களுக்கும், அலுவலர்களுக்கும் புதிய பணிநியமனத்திற்கான நேர்முகத்தேர்வு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மிகவிரைவில் அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டு கிளைகளில் புதியவர்களை பணியில் அமர்த்துவதில் நிர்வாகம் துரிதமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. சங்கம் இதனை வரவேற்கிறது.

கடுமையான ஆள் பற்றாக்குறையால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியையும், சிரமங்களையும், இந்தப் புதிய பணிநியமனங்கள் மூலம் ஓரளவுக்கு சரிசெய்ய முடியும். வங்கியில் புது ரத்தம் பரவ, நமது சேவைகளும் பணிகளும் சிறப்புறும். சங்கமும் பலமடையும். நம்பிக்கைகள் தெரிகின்றன. புதிய தலைமுறையை சங்கம் வரவேற்கிறது.

இந்த வங்கியில் முதன்முறையாக, நான்காம் நிலை (Scale IV) அலுவலர்களுக்கான நேர்முகத்தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. வெற்றி பெறும் தோழர்களை  சங்கம் வரவேற்கிறது.

வங்கிச் சேர்மனுடன் சந்திப்பு:

சென்ற சுற்றறிக்கையில் நாம் சில பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் குறிப்பிட்டு இருந்தோம். அவைகள் குறித்து நமது வங்கியின் சேர்மன் அவர்களுடன்  PGBEA பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.

1. ஆள் பற்றாக்குறை, லீவு, டெபுடேஷன் பிரச்சினைகளை புதிய பணி நியமனங்களே நிவர்த்தி செய்யும் எனவும், ஜூன் இறுதியில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜூலை முதல் வாரத்தில் அவர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என உறுதியளித்தார் சேர்மன்.

2. கடைநிலை ஊழியரிலிருந்து எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழர்களுக்கும், ஏற்கனவே மாறுதல்களில் பாதிப்புகள் கொண்டவர்களுக்கும், புதிய பணி நியமனங்களில் சாதகமான மாறுதல்கள் இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

3. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட், Newspaper allwowance களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும், ஸ்பான்ஸர் வங்கியில் தொடர்பு கொண்டு மிகவிரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட்டிற்கான அரசாணையை மீண்டும் நாம் நிர்வாகத்திற்கு கொடுத்திருக்கிறோம். இதுநாள் வரையில் நிர்வாகம் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது.

4. அனைவருக்கும் compliment  கொடுப்பது சம்பந்தமாக, வங்கியின் நிர்வாகக்குழுவிற்கு அஜெண்டா கொண்டு செல்வதாக சேர்மன் சொல்லியிருந்தார். ஆனால் நிர்வாகக்குழுவில் சாதகமான முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

5. அரசானையின்படி, புதிய கடைநிலை ஊழியர்களை employment exchange மூலம் நியமனம் செய்யப் போவதாக சேர்மன் சொல்லியிருந்தார். நாம் நம் வங்கியில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து, அனுபவம் பெற்றிருக்கும் temporary staffகளை அந்தப் பணிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் எடுக்கலாம் என கோரிக்கை வைத்தோம். அரசானையைத் தான் மீற முடியாது எனவும், ஏதேனும் வழிகள் இருந்தால், நிர்வாகக்குழு மற்றும் ஸ்பான்ஸர் வங்கியைக் கலந்து கொண்டு முயற்சிக்கிறேன் எனவும் சேர்மன் தெரிவித்தார். சில யோசனகள் சொல்லி இருக்கிறோம். தொடர்ந்து முயற்சிகள் செய்து வருகிறோம்.

6. இதற்கிடையில் சமீபத்திய  அலுவலர் மாறுதல்களில் மீண்டும் குளறுபடிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஏற்கனவே தொலைதூரக் கிளைகளில் பணிபுரியும் தோழர்களுக்கு இந்த முறையும் பாதிப்புகள் சரி செய்து தரப்படவில்லை. நிர்வாகத்திடம் PGBOU  இதுகுறித்து விரைவில் பேசி சரி செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஜூன் 22 ஆர்ப்பாட்டமும், ஜூலை 7 வேலை நிறுத்தமும்:

சீர்திருத்தங்கள் என்ற பெயரில் வங்கித்துறையை சீரழிக்கவும், தனியார் மயப்படுத்தவும் அரசு தீவீரமாக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இனி வங்கித்துறையில் இருதரப்பு ஒப்பந்தங்களே இல்லாமல் செய்யவும் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. கடைநிலை ஊழியர்களை முழுமையாக இல்லாமல் செய்யவும், எழுத்தர்களை குறைக்கவும் கூட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதான் நிலைமை என்றால், நம் எதிர்காலம் நிச்சய்மற்றதாகவும், கேல்விக்குறியாகவும் ஆகிவிடக் கூடும். இதனை எதிர்த்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் மத்தியில் உருவாகி வருகிற எதிர்ப்பின் ஒரு பகுதியாக நாமும் ஜூன் 22ம் தேதி நாம் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதையும் அறிவித்து இருந்தோம்.

அதன்படி, வருகிற புதன்கிழனை ஜூன் 22ம் தேதி மாலை 6 மணிக்கு நமது தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். தோழர்கள் திரளாக வந்து கலந்துகொண்டு, தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டுமென்று வேண்டுகிறோம்.

இப்போது இந்தப் போராட்டம் மேலும் தீவீரமடைந்து இருக்கிறது. அகில இந்திய அளவில் BEFI, NCBE, AIBEA, AIBOC, INBEF போன்ற சங்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதென முடிவு செய்து அறைகூவல் விடுத்திருக்கின்றன. நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கிறது. எனவே நாம் இந்த ஜூலை 7ம் தேதி வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுகிறோம்.

தோழர்களே!
இந்த வேலைநிறுத்தம் நமது எதிர்காலத்தையும், வங்கித்துறையையும் பாதுகாக்கும் முக்கியமான ஒரு நடவடிக்கை. விளக்குகளை ஊதி அணைக்க அரசு முயல்கிறது. இருக்கிற வெளிச்சத்தை அணையாமல், நாம் அரண் போல நிற்க வேண்டியிருக்கிறது. தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் ஓரணியில் திரண்டு நிற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க வேலைநிறுத்தம் இது. எப்போதும் போல் நாம் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.

வேலைநிறுத்தத்தை விளக்கி, திருநெல்வேலியில் 25.6.2011 மாலையிலும், மதுரையில் 30.6.2011 மாலையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. சங்கமிப்போம். சங்கமாயிருப்போம்.

தோழர்களே!
ஜூன் 22ம் தேதி ஆர்ப்பாட்டம்!
ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தம்!!

வாருங்கள்! அணி திரள்வோம்.

தோழமையுடன்
      
(M.சோலைமாணிக்கம்)   (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

EA & OU சர்க்குலர் 25.5.2011


பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு AIRRBEA & BEFI)
பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன்
(144/KMR) (இணைப்பு AIRRBEA)

சுற்றறிக்கை எண் : 2 நாள்: 25.5.2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

வங்கியில் நிலவும் சூழல்களையும், பிரச்சினைகளையும்  ஆராய்வதற்கும் எதிர்கொள்வதற்கும் நமது இரு சங்கங்களின் சப் கமிட்டி கடந்த 23.5.2011 அன்று கூடியது. ஆக்கபூர்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்குப் பிறகு, தெளிவான பார்வைகளுடன் வழிமுறைகள் திட்டமிடப்ப்பட்டன.

1. பிரமோஷன் நடந்து முடிந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. பெருமளவுக்கு கிளரிக்கல் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. 205 கிளைகளுக்கு, 250 கிளரிக்கல் எப்படி போதும்? ஏறத்தாழ 180 கிளைகள் single man கிளைகளாக இயங்க வேண்டிய நிலையில் இருக்கின்றன. இதனால் வங்கியில் ஒரு அசாதாரணச் சூழலும், நெருக்கடியும் உருவாகியிருக்கிறது. கிளரிக்கல் தோழர்கள் ஒரு ஆத்திர அவசரத்துக்குக் கூட லீவு எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். லீவு எடுத்தால் டெபுடேஷன் ஏற்பாடு செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. தினம் தினம்  தலைமையலுவலகம், வட்டார அலுவலகம், சங்கங்கள் எல்லோருக்கும் இதுவே முக்கிய அலுவலாக மாறிப்போயிருக்கிறது. கிளையில் பணிகள் தாமதமாகின்றன, வணிகம் பாதிக்கப்படுகிறது. ஊழியர்கள மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.  இந்த நிலைமைக்கு பொறுப்பேற்று, நிர்வாகம் புதிய பணி நியமனத்தை போர்க்கால அடிப்படையில் துரிதப்படுத்த வேண்டும் என இரு சங்கங்களும் வலியுறுத்துகின்றன.

2. கடந்த ஒரு வருடமாகவே, பணியாளர் துறையில் பணிகள் மிக மந்தமாகவும், ஊழியர் பிரச்சினைகள் காலதாமதம் செய்யப்பட்டும் நடைபெற்று வருகின்றன.  எல்.டி.சி  போன்ற சலுகைப் பெறுவதற்குக் கூட இங்கு பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருக்கிறது. கடைநிலை ஊழியர்களாயிருந்து எழுத்தர்களாக பதிவி உயர்வு பெற்றவர்களை கண்டம் விட்டு கண்டம் போல தொலைதூரத்துக்கு விரட்டியடிக்கப்பட்டு இருக்கின்றனர். டிரான்ஸ்பர்களில் பாரபட்சம்  தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.  GM(A)வின்  அணுகுமுறையும், நடவடிக்கைகளுமே இவை யாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது. மாற்றுச் சங்கத்தினருக்குத் தேவையானவற்றை சிரமேற்கொண்டு செய்கிறார். ஆனால் நமக்கு சேர்மன் ஒப்புக்கொண்ட டிரான்ஸ்பர்களைக் கூட இவர் போடுவதில்லை.  அப்படி என்ன அவர்களோடு அவருக்கு உறவு என்பது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வந்து கொண்டு இருக்கிறது. GM(A)வைப் பற்றி பலமுறைகள்  வங்கியின் சேர்மன் அவர்களிடம் புகார் செய்திருக்கிறோம். ஆனாலும், அவர் திருந்துகிறவராயில்லை. அவரால் ஏற்பட்டு இருக்கக்கூடிய குழப்பங்களும், பாதிப்புகளும் சரிசெய்யப்பட வேண்டும். இல்லையென்றால் அவருக்கு எதிரான நடவடிக்கைகளில் இரு சங்கங்களும் சேர்ந்து ஈடுபட வேண்டிய அவசியம் நேரும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

3. பொருளாதாரக் கோரிக்கைகள் பல இங்கு நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நூறு சதவீதம் CBS  ஆன கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் கொடுக்கப்பட வேண்டும் என  மார்ச் மாதத்திலேயே அரசாணை வந்து விட்டது. ஏப்ரல் போய், மே மாதமும் முடியப் போகிறது. இன்னும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் நமக்கு வழங்கப்படவில்லை. பல கிராம வங்கிகளில் ஊழியர்களும் அலுவலர்களும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் பெற்றுவிட்ட நிலையில், நாம் இன்னும் பெறாமல் இருப்பது அதிருப்தியளிக்கிறது. இதுபோல மேலும் பல கோரிக்கைகள்  நிலுவையில் இருக்கின்றன. அவைகளில்  சிலவற்றை இப்போது முன்வைக்கிறோம். நிர்வாகம் உடனடியாக இவைகளை நிறைவேற்ற  வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
a. Computer increment to all
b. Newspaper allowance to all 
c. Compliment to all
d. Enhancemant of LTC facilities
e. Reimbursement of fuel expenses

4. மத்திய அரசின்  தொழிலாளர் விரோதப் போக்கு இக்காலக் கட்டத்தில் எந்த நியதிகளும், நியாயங்களுமற்று துரிதப்படுத்தப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதாவும், பென்சன் நிதி மசோதாவும் அப்படிப்பட்டவையாகவே இருக்கின்றன.

வங்கிச் சட்ட திருத்த மசோதாவின் மூலம் அந்நிய தனியார் வங்கிகள் இந்திய வங்கித் துறைய ஆக்கிரமிக்கும். இதனால் சாதாரண மனிதர்களுக்கான வங்கியாக இனி செயல்பட முடியாத நிலை ஏற்படும். பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடும், தனியார்களுக்கேப் போய்விடும்.

புதிய பென்சன் நிதியம் ஒழுங்கமைப்பு மசோதாவின் மூலம், சந்தை நிலைமைக்கு ஏற்ப ஓய்வூதியம் வழங்க ஏற்பாடு செய்யப்படும். அதாவது லாபம் வந்தால் மட்டுமே பென்சன் அல்லது பட்டை நாமம்தான்.

இவைகளோடு கிராம வங்கிகளை தனியாருக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளும் நடந்து கொண்டு இருக்கின்றன. மேலும் கண்டேல்வால் கமிட்டி பரிந்துரையின் படி, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு சம்பளம், வங்கிகளுக்குள்ளேயே ஊழியர்களுக்கும் வித்தியாசமான ஊதிய நிர்ணயம், கடைநிலை ஊழியர்கள் என்ற பகுதியினரையே இல்லாமல் ஆக்குவது, எழுத்தர்களை அலுவலர்களில் பாதியாகக் குறைப்பது என நடவடிக்கைகளைத் துவக்கவும் மத்திய அரசு தயாராகி வருகிறது. இவைகள் நம்மையும் பாதிக்கும் எனத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.

இந்த இரு மசோதாக்களை எதிர்த்து BEFI  நாடு முழுவதும் இயக்கம் நடத்த முடிவு செய்துள்ளது. வணிக வங்கியில் உள்ள பிற சங்கங்களும் இணைந்து போராட்டம் நடத்தவும் தயாராகி வருகின்றன. நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவும் இந்த இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொள்வது என அறைகூவல் விடுத்திருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் 22ம் தேதி, நமது தலைமையலுவலகத்தில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த நமது சங்கங்கள் இணைந்து முடிவு செய்திருக்கின்றன. இது நமது இருப்பைத் தக்க வைத்துக்கொள்ளவும், எதிர்காலம் குறித்த கவலையுடனும் நடத்தும் போராட்டம். அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தருணம் இது. தயாராவோம் அணிவகுக்க.....

தோழமையுடன்

EA சர்க்குலர் 1.5.2011

பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம்
(360/RMD) (இணைப்பு:AIRRBEA &BEFI)
விருதுநகர்

சுற்றறிக்கை எண்: 3/2011

அருமைத் தோழர்களே!

வணக்கம்.

சென்ற ஆண்டுக் கணக்கின் விபரங்கள், உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன.
நிர்ணயித்த இலக்கான 5000 கோடி வணிகத்தைத் தொட முடியவில்லையென்றாலும்
வங்கியின் வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருக்கிறது. ஏறத்தாழ 70கோடியை
வங்கியின் லாபம் தொட்டு நிற்கிறது.  கடுமையான ஆள் பற்றாக்குறை,
சிக்கல்கள் தந்த  சி.பி.எஸ் சூழல் எல்லாவற்ரையும்ம் இதனை சாதிக்க
முடிந்திருக்கிறதென்றால், அது பாண்டியன் கிராம வங்கியின் ஊழியர்கள்
மற்றும் அலுவலர்களின் உழைப்பும், வங்கியின் மீது இருக்கிற அக்கறையுமே
முதற்காரணமாகிறது. அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நமது சங்கம்
வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

வங்கியில் பிரமோஷன்களை விரைவாக நடத்தி, முடிவுகளை காலதாமதமின்றி அறிவித்த
நிர்வாகத்தை நிச்சயம் நாம் பாராட்டலாம்.   பொதுவாக பிரமோஷன்களில் இதுவரை
இல்லாத அளவுக்கு சீனியர்கள் பதவி உயர்வு பெற்றிருப்பதும் நல்ல விஷயமே.
அதே வேளையில், மெஸஞ்சர்களிலிருந்து கிளரிக்கல் பிரமோஷனில்,
சீனியாரிட்டியில் முதலிரண்டு இடம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்
படாதது உறுத்துகிறது. இந்தை பிரமோஷன்களில் இதுபோன்ற குறைகள்
கரும்புள்ளிகளாக நீடிக்கின்றன.

மிகக் குறைவாக ஊதியம் வாங்கிக்கொண்டு, மெஸஞ்சர்களாயிருந்து எழுத்தர்களாக
பதவி உயர்வு பெற்றவர்களை இரண்டு மாவட்டங்கள் தள்ளி, தொலைதூரத்திற்கு
மாறுதல் அளித்துவிட்டு, அதிகச் சம்பளம் பெறுகிற ஸ்கேல் திரி அலுவலர்களில்
சிலருக்கு மிக அருகிலேயே மாறுதல் போடப்பட்டு இருப்பது சரியில்லாத
நடைமுறை. இதுபோன்ற குறைகள் பணிச்சூழலையும், பணிகள் செய்வதிலிருக்கும்
ஆர்வத்தையும் பாதிக்கும். பொதுவாகவே, இங்கு சிலருக்கு எல்லாம் அவர்கள்
விருப்பபடியே  எல்லாம் நடக்கின்றன. அவை மிக வெளிப்படையாகவும்
இருக்கின்றன. நிர்வாகம் இந்தப் போக்கை மாற்றிக்கொண்டு அனைவருக்கும்
பொதுவானதாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.
வேண்டுகோள் விடுக்கிறோம்.

அடுத்து, புதிதாக எழுத்தரகப் பதவி உயர்வு பெற்றவர்களை, அதிக வணிகம் உள்ள
கிளைகளில் கேஷ் பார்க்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கிரது. பெரும்
சிரமத்திற்கிடையில், அவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கிளைகளில் அந்த
ஊழியர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என
விரும்புகிறோம்.

சமீபத்தில் போடப்பட்ட கிளரிக்கல்  டிரான்ஸ்பர்களில், பாரபட்சங்கள்
இருந்தன. அவற்றை சேர்மனிடம் எடுத்துரைத்தோம். உடனடியாக சிலவற்றையும்,
பிதிய பணிநியமனத்தின்போது மற்றவற்றையும் சரிசெய்து தருவதாக
உறுதியளித்திருக்கிறார்.

இந்த நிதியாண்டில் அதிக லாபம் ஈட்டியதற்காகவும், சி.பி.எஸ் நூறு சதவீதம்
ஆனதற்காகவும், ஊழியர்கள் அனைவருக்கும் cash reward ஆக, ரூ.5000/-
தோழர்களுக்கு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தோம்.  வரும் மே9ம்தேதி
நடக்கும் வங்கி நிர்வாகக்குழு கூட்டத்தில் வைத்து cash reward  கொடுக்க
முயற்சிப்பதாய் சேர்மன் கூறினார்.

100 சதவீதம் சி.பி.எஸ் ஆன வங்கிகளில், அனைவருக்கும் கம்ப்யூட்டர்
இன்கிரிமெண்ட் கொடுக்க வேண்டும் என  அரசு ஆணைப் பிரப்பித்து இருக்கிறது.
வணீக வங்கியில் உள்ளதுபோல ,  restrospective effective ஆக கொடுக்க
வேண்டும் என்பதே நமது நமது நிலைபாடு. இருந்தாலும், இப்போதைக்கு அரசு
ஆணைப் பிறப்பித்திருப்பதை இங்கும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை
வைத்திருக்கிறோம். அதுகுறித்து நபார்டிலிருந்து கடிதம் வந்தவுடன்
தருகிறோம் என சேர்மன் உறுதியளித்திருக்கிறார். மிக விரைவில் நம்
அனைவருக்கும் கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் கிடைக்கும்.

நடந்து முடிந்த பிரமோஷனையொட்டி, கிளரிக்கல் எண்ணிக்கை கணிசமாய்க்
குறைந்திருக்கிறது. இங்கு ஒன்றிரண்டு கிளைகளைத் தவிர, அனைத்துக்
கிளைகளும்  single man  கிளைகளாகி விட்டன. பெரும் ஆள் பற்றாக்குறை
தாண்டவமாடுகிறது. லீவு, டெபுடேஷன் முதற்கொண்டு அனைத்துமே
சிரமமாயிருக்கிறது. நிர்வாகம் மிக விரைவாக பணிநியமனம் நடத்தி, இந்த
இக்கட்டான இந்தச் சூழலை சரிசெய்ய வேண்டும்.

தோழர்களே!
அதிக பணிச்சுமை, மன அழுத்தம், தொலைதூர மாறுதல் எல்லாம் அலைக்கழிக்கும்
ஒரு சோதனையான காலம் இது.  எல்லாவற்றையும் விரைவில் சரி செய்ய முனைவோம்.
ஆரோக்கியத்தை பேணுங்கள். நம்பிக்கையோடு இருங்கள்.

தோழமையுடன்

(மெ.சோலைமாணிக்கம்)
பொதுச்செயலாளர்

23.6.11

EA - OU சர்க்குலர் 22.3.2011


அருமைத் தோழர்களே!

வணக்கம்.

முதலில் உங்கள் அனைவருக்கும் உற்சாகமான செய்தி.
கர்நாடகா ஹைகோர்ட்டில்,  ‘சம வேலைக்கு சம் ஊதியம்' என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் நமது அகில இந்திய சங்கம் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வந்திருக்கிறது.
“வணிக வங்கி ஊழியர்களுக்கு இணையான பென்ஷன் கிராம வங்கி ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்”
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலான நமது போராட்டம் இப்போது வெற்றியின் விளிம்பில் வந்து நிறுத்தியிருக்கிறது. நமது மாநட்டில் தோழர்.முகர்ஜி இதுகுறித்து நம்பிக்கையோடு சொன்ன வார்த்தைகள் இதோ நிஜமாகி இருக்கின்றன.  
அது மட்டுமல்ல, அத்தோடு நமக்கு உரிய ‘கம்யூட்டர் இன்கிரிமெண்ட்”டும் வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு சொல்லி இருக்கிறது. ஊழியர்கள், அலுவலர்கள்  அனைவருக்கும் கம்யூட்டர் இன்கிரிமெண்ட் உண்டு.
இவ்விரண்டையும், அரசு ஆறுமாத காலத்துக்குள் அமல்படுத்த வேண்டுமென என தீர்ப்பு கால வரையறையும் செய்திருக்கிறது.
இக்காரியம் நமது AIRRBEAவால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.
நம்பிக்கை மிகுந்த இந்த தகவலோடு நாம் நமது மாநாட்டுச் செய்திகளை பார்ப்போம்.
இன்னும் அந்த எழுச்சி மிக்க தருணங்களே நமக்குள் நிறைந்திருக்கின்றன. பிப்ரவரி, 12, 13 தேதிகளில் நடந்த நமது மாநாடுகள்,  நம் தொழிறசங்க வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயம் என்பதை, மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருமே உணர்ந்திருந்தார்கள்.  மாற்றங்களை நோக்கி  மிகச் சரியான திசையில் நாம் பயணிக்கிறோம் என்பதை உறுதிசெய்த மாநாடுகளாக இவை இருந்தன.

பெண் ஊழியர், அலுவலர் மாநாடு:

பிப்ரவரி 12ம் தேதி காலையில், நமது சங்கங்களின் உறுப்பினர்களாக இருக்கும் பெண் தோழர்களின் மாநாடு நடைபெற்றது. அன்றை தினம் வங்கிக்கு விடுமுறை இல்லாத போதும், வங்கியில் நிலவும் கடுமையான ஆள்பற்றாக்குறையை மீறியும், முப்பது பெண் தோழர்கள் மாநாட்டுக்கு வந்திருந்தனர். மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசிய PGBEA  தலைவர் தோழர்.மாதவராஜ்,  இத்தனை வருட தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பிறகு, இப்படியொரு மாநாட்டை நடத்த இப்போதுதான் முடிந்திருக்கிறது என்பதை சுயவிமர்சனமாக முன்வைத்தார். அதே நேரம், நமது சங்கங்கள் எப்போதுமே, பெண்களின் பிரச்சினைகளை உணர்ந்தே செயல்பட்டு வந்தது என்பதை நினைவுபடுத்தினார்.  கிளைகளில் கழிப்பிடங்களைத் திறக்க வேண்டும் என்று இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு கோரிக்கை வைத்து போராடியதிலிருந்து, இன்று மாறுதல்களில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது வரை நம் இரு சங்கங்களின்  செயல்பாடுகளை சுட்டிக்காட்டினார். இருந்தபோதும், பெண்களுக்கான பிரச்சினைகளை அவர்களே பேசுவதும், முன்வைப்பதுமே இன்னும்  அழுத்தமானதும் அர்த்தமுள்ளதும் ஆகும் என மாநாட்டின் அவசியம் குறித்துப் பேசினார். 

தொடர்ந்து பங்கேற்ற பெண் ஊழியர்களும், அலுவலர்களும் தாங்கள் கிளைகளில் சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசினர்.  மெல்ல மெல்ல எழுந்த அவர்களின் குரல்கள் பிறகு வெப்பத்தோடு பற்றியதை மாநாட்டு அரங்கம் கண்டது. அவைகளை தொகுத்தும், விளக்கமளித்தும்  தோழர்.பிரேமலதா (கனரா வங்கி), BEFI-TN சார்பில் அவர்கள் பேசினார்கள். பெண் ஊழியர்கள் இன்றைய காலக்கட்டத்தில் சந்திக்கும் பிரச்சினைகளையும், அவற்றை எப்படி எதிகொள்வது என்பதையும் பல நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களின் மூலம் தெளிவாக்கினார்.  இறுதியாக தோழர்.கிருஷ்ணன் ( BEFI -TN  மாநிலச் செயலாளர்) அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.

நம் வங்கியில் பணிபுரியும் பெண் உழியர்கள் மற்றும் அலுவலர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்ப்பதற்கான வழிமுறைகளை ஆராயவும் பெண் ஊழியர்களுக்கான சப்-கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. அதன் கன்வீனராக,  தோழர். சிவகாமி (  பாப்பாக்குடி ) அவர்களும், உறுப்பினர்களாக தோழர்.வசந்தா ( எட்டையபுரம் ), தோழர்.புஷ்பராணி (புதுக்குடி ), தோழர். சித்திரகவிதா ( அரசரடி ), தோழர்.சுகப்பிரியா ( விருதுநகர்) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  அவ்வப்போது இந்த சப்-கமிட்டி கூடி, விவாதித்து, நிலைமைகளை ஆராயும்.  பெண் ஊழியர்களும், அலுவலர்களும், இந்த சப்-கமிட்டியை தொடர்புகொண்டு தங்கள் நமது தொழிற்சங்க வரலாற்றில் இது ஒரு மைல்கல்.

பொது மாநாடு:

பிப்ரவரி 12ம் தேதி மாலையில் PGBEA  தலைவர், தோழர்.மாதவராஜ் கொடியேற்றி வைக்க, கோஷங்களோடு  மாநாடு களை கட்டியது. அருமைத் தோழர். பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவரங்கத்தில் PGBEAவின் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. தோழர்.கிருஷ்ணன் ( BEFI -TN  மாநிலச் செயலாளர்)  நமது கடந்த கால போரட்டங்களை நினைவுகூர்ந்து, வங்கித்துறை இன்று சந்திக்கும் சவால்களையும் தெளிவுபடுத்தினார். அவுட்சோர்சிங் குறித்த தெளிவும், அந்த தற்காலிக  நிரந்தரமாக்கும் உறுதியும் சங்கங்களுக்கு இன்றைக்கு வேண்டு இருக்கிறது என நமக்கு இருக்கும் கடமையை சுட்டிக்காட்டினார். அத்துடன் அன்றைய மாநாட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.

அடுத்த நாள், பிப்ரவரி 13ம் தேதி காலை பொது மாநாடு துவங்கியது. அரங்கம் கொள்ளாமல் தோழர்கள் திரண்டு இருந்தனர். பார்த்து, சிரித்து, அரட்டையடித்து, ஒரே உற்சாகக்குரல்கள் எங்கும் மலர்ந்திருந்தன. பொது மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய தோழர்.போஸ் பாண்டியன் , எந்தச் சூழலில் இந்த மாநாடு நடைபெறுகிறது என்பதையும்,  தீரமிக்க  போராட்டங்களுக்குப் பிறகு திரண்டு நிற்பதையும் எடுத்துரைத்தார். அடுத்து பேசிய தோழர். தமிழ்ச்செல்வன் ““ஒரு தொழிற்சங்க மாநாட்டில், எழுத்தாளனை ஏன் பேச அழைத்தீர்கள்?” என்ற கேள்வியுடன் துவங்கி, அதற்கு பதிலும் அவரேச் சொல்வதாக மொத்தப் பேச்சும் இருந்தது. “நம்முடைய நிலத்த யாரோ ஒருத்தன் வந்து  culture செய்வதை நாம் அனுமதிப்போமா? வெட்டுக்குத்து, பஞ்சாயத்து என அவ்வளவு அலப்பரை செய்வோம். ஆனா நம்ம மூளைய மட்டும் காலகாலமா எவன் எவனோ cultureசெய்றானே, அதுபத்தி யோசிக்கவாவது செய்றோமா?” என்ற அவரது உரை கலாச்சாரம் குறித்த பல கேள்விகளை தொழிற்சங்க அரங்கத்தில் எழுப்புவதாய் அமைந்திருந்தது. புதுவை பாரதியார் கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்திலிருந்து வந்திருந்த தோழர் செந்தமிழ்ச்செல்வன் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். 

அடுத்து நமது அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர்.திலிப் குமார் முகர் ஜி பலத்த கரவொலிகளுக்கிடையில் பேச ஆரம்பித்தார்.  BEFI-TN  செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் அவர்கள் மிக அற்புதமாக அவரது பேச்சை மொழியாக்கம் செய்தார். AIRRBEA என்னும் நமது அகில இந்திய சங்கம், கிராம வங்கி ஊழியர்களின் வாழ்வில் எப்படி இரண்டறக் கலந்து இருக்கிறது என்பதை நிலைநிறுத்துவதாக தோழர்.முகர்ஜியின் உரை இருந்தது. சமவேலைக்கு சம ஊதியம் என்னும் கோரிக்கையை வென்றெடுத்தது,  அதில் இருந்த அனாமலிகளைச் சரிசெய்தது, பிரமோஷன்களில் முன்னேற்றம் காணப் போராடியது என நீண்ட வரலாற்றில், நாம் இப்போது எங்கே இருக்கிறோம் என்பதை உணர்த்தியது. கிராம வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனக்களுக்கு தாரை வார்க்க அரசு செய்யும் முயற்சிகளைக் குறிப்பிட்டு, நாம் அதனை முறியடிப்போம் என சூளுரைத்தார். ‘தேசீய கிராமப்புற வங்கி' என்பதுதான் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பதையும், அதை முன்னெடுத்துச் செல்ல அவசியத்தையும் எடுத்துரைத்தார். 

இறுதியாக பென்ஷன் குறித்து நாம் தொடர்ந்த வழக்கினையும், அதைத் தொடர்ந்து அரசோடு நாம் நடத்திய பேச்சு வார்த்தைகளையும், அரசுக்கெதிராக நாம் நடத்திய போராட்டங்கலையும் விவரித்தார். இப்போது, ‘பென்ஷன் கொடுத்தே ஆக வேண்டும்' என்னும் நிலைமை அரசுக்கு ஏற்பட்டு இருப்பதையும், அதற்கான வழிமுறைகளை ஆராயும் கட்டத்திற்கு அரசு இறங்கி வந்திருப்பதையும் ஒவ்வொன்றாக விளக்கினார். அதற்கான நிதி 9000 கோடி தேவைப்படுவதையும், கையிருப்பில் 2000 கோடி இருப்பதையும், இன்னும் 7000 கோடிக்கு என்ன செய்வது என்று அரசு நம்மிடம் யோசனைகள் கேட்பதையும் தெரிவித்தார். நாம் ‘சம வேலைக்கு சம ஊதியம்' அமல் செய்யப்பட்ட 1992ம்  வருடத்திலிருந்து, பென்ஷன் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதையும், அரசு 1995ம் ஆண்டிலிருந்து  தருவதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் சொல்லி, “இன்னும் அதிக பட்சம் மூன்று மாதங்களுக்குள் பென்ஷன் கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைக்கும்” என உறுதிபடத் தெரிவித்தார். வந்திருந்தவர்களின் உற்சாக கரவொலிகள் அடங்க வெகுநேரம் பிடித்தது.

அத்துடன் பொது மாநாடு நிறைவடைந்தது.  நம்பிக்கையில் நிறைந்து நின்ற நம் தோழர்கள், அற்புதமான மதிய உணவை ரசித்தனர்.

பிரதிநிதிகள் மாநாடு:

மதியத்திற்கு மேல்  PGBOU, PGBEA வின் பிரதிநிதிகள் மாநாடு தனித்தனியே நடந்தது.  PGBOUவின் பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரையாற்றினார்.  PGBOU  உறுப்பினர்களின் சந்தாத்தொகை ரூ 100/லிருந்து ரூ.150/ஆகவும், PGBEA  உறுப்பினர்களின் சந்தாத் தொகை ரூ 50/-லிருந்து ரூ.100/ஆகவும் இம்மாநாடுகளில் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

இரண்டு சங்கங்களின் பிரதிநிதிகள் மாநாட்டிலும் பொதுச்செயலாளர் அறிக்கைகளும், வரவு செலவு அறிக்கைகளும் வைக்கப்பட்டன. தோழர்கள் ஆக்க பூர்வமான விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்குப் பிறகு இரண்டு சங்கங்களின் புதிய செயற்குழுக்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

PGBOU புதிய செயற்குழு:

1.President : தோழர். போஸ்பாண்டியன் (விருதுநகர்)
2.Vice president :    ” ”  . விஸ்வநாதன் (சிங்கம்புனரி)    
3.General Secretary :   ” ”     . சங்கரலிங்கம் (வட்டார அலுவலகம், தூத்துக்குடி)
4. Joint Secxretary :   ” ”  . சுல்பிஹர் அலி (கடமலைக்குண்டு)
5. treasurer :   ” ”  . பெருமாள் சாமி (கல்குறிச்சி)
6. Asst.Trearurer :   ” ”  . சுப்புராஜ் (தலைமையலுவலகம்)
7. EC member :    ” ”  . சாமுவேல் ஜோதிக்குமார் ( ஒத்தக்கடை)
8. ” ”  :    ” ”  . சண்முகநாதன் (வள்ளியூர்)
9. ” ”  :    ” ”  . நடராஜன் (வட்டார அலுவலகம், 
திருநெல்வேலி)
10. ” ”  :     ” ”  .நரேன் (மானாமதுரை)
11. ” ”  :     ” ”  . முத்துக்கருப்பன் ( புளியால்)

PGBEA புதிய செயற்குழு:

1.President : தோழர். மாதவராஜ் (சாத்தூர்)
2.Vice president :    ” ”  . சங்கர் (சங்கரலிங்கபுரம் ) 
3.Vice president :    ” ”  . அருண் பிரசாத் சிங் (வி.எம்.சத்திரம்)     
4.General Secretary :   ” ”     . சோலைமாணிக்கம் (விருதுநகர்)
5. DGS :   ” ”  . காமராஜ் (ஏழாயிரம் பண்ணை)
6. AGS :   ” ”  . சுப்பிரமணியன்(பழைய பேட்டை)
7. AGS :   ” ”  . அண்டோ கால்பட்(பசுவந்தனை)
8. treasurer :   ” ”  . சுந்தர வடிவேல்(டி.யூ.மங்கை)
9. Asst.Trearurer :   ” ”  . அருளானந்தம்(பரமக்குடி)
10. EC member :    ” ”  . சட்டையப்பன்( வள்ளியூர்)
11. ” ”  :    ” ”  . ராஜேந்திரன் (திருமங்கலம்)
12. ” ”  :    ” ”  . பாலசுப்பிரமணியன்(பாரதிநகர்)
13. ” ”  :     ” ”  .நாசர் (எஸ்.வி.கரை)
14. ” ”  :     ” ”  . சுப்புலட்சுமி ( சிவகாசி)
15. ” ”  :     ” ”  .புஷ்பராணி ( புதுக்குடி)
16. ” ”  :     ” ”  . சிவகாமி ( பாப்பாக்குடி)
17. ” ”  :     ” ”  . சந்திரசேகர்( காரைக்குடி)
18. ” ”  :     ” ”  . ராஜமனோஹர் ( ஏர்வாடி-R)
19. ” ”  :     ” ”  . சக்திவேல் ( பேரையூர்)


முதன் முறையாக நமது சங்க செயற்குழுவில் மூன்று பெண் தோழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றனர். புதிதாக பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களில் மூன்று தோழர்களும், சங்க செயற்குழ்வில் இணைக்கப்பட்டு இருக்கின்றனர். இதுவும் இம்மாநாட்டின் புதிய அத்தியாயங்கள்.

AIRRBEA-TN மாநில மாநாடு:

மாலை ஐந்து மணி அளவில், நமது மாநில மாநாடு நடைபெற்றது. இப்போது புதுவையிலிருந்தும்  கிராம வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு அங்குள்ள் சங்கம் நம்மோடு இணைக்கப்பட்டு இருப்பதால், இனி AIRRBEA - TN and Pondicherry  என சங்கம் விரிக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. இப்போது நமது மாநில அமைப்பில்  6  உறுப்புச் சங்கங்கள் இருக்கின்றன. புதிதாக மாநிலக்குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. தோழர். பாரதி கிருஷ்ணகுமார் நிறைவுரையாற்றினார்.
புதிய மாநிலக்குழு:

1.President : தோழர். பிச்சைமுத்து (Pandyan GBOU)
2.Vice president :    ” ”  .செல்வகுமார் திலகராஜ் (Pandyan GBOU ) 
3.Vice president :    ” ”  . சிவராமன்(Puduvai barathiyar GBOU)     
4.General Secretary :   ” ”     . சோலைமாணிக்கம் (Pandyan GBEA)
5. JGS :   ” ”  . காமராஜ் (Pandyan GBEA)
6. JGS :   ” ”  . சுரேஷ்(Pallavan GBEU)
8. treasurer :   ” ”  . சாமுவேல் ஜோதிக்குமார்(Pandyan GBOU)
9. Asst.Trearurer :   ” ”  . சீனிவாசன்(Pallavan GBEU)
10. EC member :    ” ”  . மாதவராஜ்( Pandyan GBEA)
11. ” ”  :    ” ”  . சங்கரலிங்கம் (Pandyan GBOU)
12. ” ”  :    ” ”  . விஸ்வநாதன் (Pandyan GBOU)
13. ” ”  :     ” ”  .கணேசன்  (Pandyan GBOU)
14. ” ”  :     ” ”  . சுப்பிரமணியன் ( Pandyan GBEA)
15. ” ”  :     ” ”  .அண்டோ கால்பட்( Pandyan GBEA)
16. ” ”  :     ” ”  . அருண் பிரசாத் சிங் (Pandyan GBEA)
17. ” ”  :     ” ”  . சிவசங்கரன்(Pallavan GBOU)
18. ” ”  :     ” ”  . மஹேஸ்வரன்( Pallavan GBOU)
19. ” ”  :     ” ”  . ஸ்ரீனிவாச மூர்த்தி (Pallavan GBOU)
19. ” ”  :     ” ”  . ரவீந்திரன்((puthuvai barathiar GBEU)
19. ” ”  :     ” ”  . சசிக்குமார்((puthuvai barathiar GBEU)
19. ” ”  :     ” ”  . செந்தமிழ்ச்செல்வன்(puthuvai barathiar 
GBEU) 
19. ” ”  :     ” ”  . முருகன் (puthuvai barathiar GBOU)
19. ” ”  :     ” ”  . விஜய் ஜெயந்திநாதன் (puthuvai barathiar 
GBOU)
19. ” ”  :     ” ”  . சிவராமன் (puthuvai barathiar GBOU)

தோழர்களே!

மிகுந்த நம்பிக்கைக்குரிய செய்திகள் இந்த நேரத்தில் வந்திருக்கின்றன. நம் எதிர்காலத்தை உத்திரவாதப்படுத்தும் நிலைமை உருவாகி இருக்கிறது. மாற்றங்களை நோக்கிய நமது பயணம் தொடர்கிறது.  நம் சங்கங்களின் நடவடிக்கைகள்  செயல் ஊக்கம் பெறுகின்றன.
இந்த நாள் நமது நாள்.
இனி வரும் நாட்களும் நமது நாட்களே!!

தோழமையுடன்

(M.சோலைமாணீக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU