Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
Showing posts with label strike. Show all posts
Showing posts with label strike. Show all posts
2.6.17
குற்றவாளியாகும் பாண்டியன் கிராம வங்கி நிர்வாகம்!
Pandyan Grama Bank-ல் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்த நமது போராட்டங்களும், இயக்கங்களும் 2009ம் ஆண்டில் துவங்கியது. தற்காலிக ஊழியர்களின் மாநாடு, செயற்குழு உறுப்பினர்களின் உண்ணாவிரதம், போலீஸ் கெடுபிடி, பத்திரிகைகளில் செய்தி, சஸ்பென்ஷன்கள், தலைமையலுவலக முற்றுகை, தொழில் தகராறுச் சட்டத்தின் பிரகாரம் தொழில் தாவா, லேபர் கோர்ட்டில் சாட்சியம், சாதகமான தீர்ப்பு என நகர்ந்த நாட்கள் எல்லாம் மகத்தானவை. வரலாற்றில் மறக்க முடியாதவை.
19.2.15
Circular 2/2015 dated 17.2.2015
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
நமது சங்கத்தின் பொதுச்செயலாளரும், AIRRBEAவின் Joint Secretaryயுமான தோழர்.மாதவராஜ் அதிகமாக லீவு எடுத்துவிட்டார் என்று சார்ஜ் ஷீட் கொடுக்கப்பட்டு இருந்ததும், அதை கண்டித்து நாம் எதிர்ப்பு தெரிவித்ததும் தோழர்களுக்குத் தெரியும்.

5.1.15
All India Strike on 6th Jan 2015 deferred
கிராம வங்கிகளை தனியார் மயமாக்க மத்தியில் பி.ஜே.பி அரசு ,முடிவு செய்ததை நமது அகில இந்திய சங்கம் AIRRBEA எதிர்த்து போராட்டங்களையும், இயக்கங்களையும் அறிவித்து இருந்தது.
13.11.14
PGB நிர்வாகத்தின் கெடுபிடிகளை மீறி நவம்பர் 12 வேலைநிறுத்தம் வெற்றி!
10 வது இருதரப்பு ஒப்பந்தப்படி, நியாயமான ஊதிய உயர்வு, 2012ம் ஆண்டு நவம்பர் மாதமே வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இரண்டு வருடங்கள் காலதாமதமாகியும், அரசும், IBAவும் சேர்ந்து இழுத்தடிக்கின்றன. இந்த தேசத்தில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் சலுகைகள் தாராளமாகக் கிடைக்கின்றன. உழைப்புக்கு உண்டான ஊதியத்தை பெறுவதற்கு மட்டும், உழைப்பாளர்கள் எப்போதுமே பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது.
11.11.14
நவம்பர் 12 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்!
வங்கித்துறையில் ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான ஊதிய விகிதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, IBAவுக்கும், சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படும். இதுவரை 9 இருதரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் மூலம், நாம் இன்று பெற்றுவரும் ஊதியமும், சலுகைகளும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றன.
12.2.14
வீர வணக்கம் தோழர்களே!
பிப்ரவர் 10, 11 தேதிகளில் நாடு முழுவதும் 48 மணி நேர வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. நியாயமான ஊதிய உயர்வுக்காகவும், வங்கித்துறையை சீரழிக்கும் சீர்திருத்தங்களை எதிர்த்தும் நடந்து முடிந்த வேலை நிறுத்தத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான அலுவலர்களும், ஊழியர்களும் பங்கேற்று இருக்கின்றனர். இதனால் 14 லட்சம் கோடி மதிப்புள்ள பண வர்த்தனைகள் முடங்கியிருக்கின்றன என பத்திரிகை செய்திகள் கூறுகின்றன. ஏ.டி.எம்களில் பணம் எடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
இவை யாவற்றுக்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் வலியப் போய் நடத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே முயற்சித்தன. அரசும், ஐ.பி.ஏ வும் பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பளிக்காமல் பிடிவாதம் பிடித்ததால்தான் வேலை நிறுத்தம் நடைபெற்றது.
இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், ` வங்கியின் லாபம் முழுவதையும் ஊதியங்களுக்குச் செலவிட முடியாது எனவும், அதன் ஒரு பகுதியை முதலீட்டிற்கு பயன்படுத்த வேண்டும்` என திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். எதோ லாபம் முழுவதையும் நாம் கேட்பது போல ஒரு பொய்யான பிரச்சாரத்தை செய்திருக்கிறார். நாம் நியாயமான ஊதிய உயர்வினைத்தான் கேட்கிறோம். இந்த நாட்டில் பெரு முதலாளிகள் வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை ஒழுங்காக திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்வதற்கு இவருக்கு துப்பில்லை. அப்படி செய்தாலே, வங்கிகளின் லாபம் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.
மத்திய அரசும், ஐ.பி.ஏவும் பிடிவாதம் தளர்த்தி நியாயமான ஊதிய உயர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. அப்படி இணக்கமான சூழல் ஏற்படவில்லையென்றால், சங்கங்கள் இன்னும் விரிவடைந்த, தீவீரமான போராட்டங்களுக்குத் தயாராகும். அதற்கும் மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும்.
நாடு முழுவதும் நடந்து முடிந்த இந்த வேலைநிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் இணைந்து கலந்து கொண்டனர். பண்டியன் கிராம வங்கியில் 233 கிளைகளில் 192 கிளைகளில் வங்கிச் சேவை நடைபெறவில்லை. வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட PGBEA, PGBOU, PGBOA தோழர்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறோம். நாளை நாம் பெறப் போகும் ஊதிய உயர்வில், நமது பங்கு இருக்கிறது என பெருமை கொள்வோம்.
வீர வணக்கம் தோழர்களே!
4.2.14
பிப்ரவரி 10, 11 இரண்டுநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
குறைந்த அளவே ஊதியம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள இந்திய வங்கிகள் சங்கத்தின் (ஐபிஏ) முடிவை எதிர்த்து வங்கி ஊழியர் அதிகாரிகள் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (யுஎப்பியு) பிப். 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்துக்கு அறைகூவல் விடுத்துள்ளது.இந்த வேலை நிறுத்தத்ஹ்டில் கிராம வங்கி ஊழியர்களும் அலுவலர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை குறித்து ஐபிஏ. க்கும் யுஎப்பியு-வுக்குமிடையே 5 சுற்றுப்பேச்சுவார்த்தை கள் நவம்பர் 2013 வரை நடைபெற்றுள்ளன. 18 டிசம்பர் 2013 ஒருநாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இம் மாதம் 20,21 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்தனர்.இதனையடுத்து ஜன. 13 அன்று மத்திய தொழிலாளர் ஆணையர் தலையீட்டின் பேரில் ஜன. 17 அன்று ஊதிய உயர்வுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், தொடக்க கட்ட உயர்வு 9.5 விழுக்காடு என்பதாக ஐபிஏ அறிவித்தது.
மேலும், இருவாரத்துக்கு ஒருமுறை ஊதிய பேச்சுவார்த்தையைத் தொடரலாம்; ஜூன் 2014க்கு முன்பே ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும் என்று உறுதியளித்தது. இதைத் தொடர்ந்து தொழிற் சங்கங்கள் வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டன.மீண்டும் ஜன.27 அன்று நடந்த பேச்சுவார்த்தையின் போது 0.5 விழுக்காடு மட்டுமே ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
இது ஊழியர், அதிகாரிகளை அவமானப்படுத்துவதாக அமைந்தது.இதற்கிடையில், 55 வயது நிறைந்த ஊழியர்களை அல்லது 30 ஆண்டு பணிபுரிந்த ஊழியர்களை பணியிலிருந்து நீக்கலாம் , மாநிலம் முழுவதும் ஊழியர்களை இடமாற்றம் செய்யலாம் ஊழியர் ‘திறன்’ அடிப்படையில் ஏற்றத் தாழ்வான ஊதிய அமைப்பு விகிதத்தை வங்கித்துறையில் அறிமுகப்படுத்தலாம் என்று நிர்வாகம் சார்பில் எதிர்க் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.
சுமூகப்பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்றிருந்த தொழிற்சங்கங்களை ஆவேசமடைய வைத்தன. வங்கி ஊழியர்களை பிரித்தாளும் சூழ்ச்சித் திட்டங்களை அமல்படுத்த, கூட்டமைப்பு சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த ஒப்பந்தத்தைக் காட்டிலும் இம்முறை வெறும் 10 விழுக்காடுதான் உயர்வு என்பதை ஏற்க இயலாது என்பதால் யுஎப்பியு கூட்டமைப்பின் 9 சங்கங்களும் பிப்.10ம் தேதி காலை 6 மணி முதல் 48 மணி நேர வேலை நிறுத்தத்துக்கான அறைகூவல் விடுத்துள்ளன.
இந்த வேலை நிறுத்தத்தில் பங்கு கொள்வது என அகில இந்திய அளவில் அனைத்து கிராம வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன. AIRRBEA இதனை நமக்குத் தெரிவித்துள்ளது. எனவே PGBEAவும், PGBOUவும் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்கின்றன.
6.1.14
PGBEA - PGBOU Circular dated 6.1.2014
சுற்றறிக்கை: 1/2014 நாள்: 6.1.2014
அருமைத் தோழர்களே!
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
போராட்ட அறைகூவலோடு துவங்குகிறது இந்த புத்தாண்டு.
வங்கித்துறையில் 9 வது இருதரப்பு ஒப்பந்தம் 31.10.2012 அன்றோடு முடிந்துவிட்ட நிலையில், 10வது இருதரப்பு ஒப்பந்தம் உருவாகி 1.11.2012 முதல் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்பட வேண்டும். ஆனால் ஒப்பந்தம் ஏற்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது IBA. இந்த நிலையில் வங்கித்துறையில் இருக்கும் அகில இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (United Forum of Banks Union) ஏற்கனவே டிசம்பர் 18ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தத்தை நாடு முழுவதும் நடத்தியிருந்தது. 10 வது இருதரப்பு ஒப்பந்தத்தை விரைவாக நடத்தி முடித்து, அனைத்து வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்குமான புதிய ஊதிய விகிதத்தை அறிவிக்க வேண்டும் என்றும், வங்கித்துறையில் சீர்த்திருத்தங்கள் என்னும் பெயரில் தனியார் மயமாக்குவதையும், அந்நிய முதலீடுகளை ஊக்குவிப்பதையும் மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்றும் UFBU முக்கிய கோரிக்கைகளாக முன்வைத்திருந்தது. இந்த வேலை நிறுத்தத்திற்குப் பிறகும், மத்திய அரசும், IBAவும் அசைந்து கொடுக்காத நிலையில், UFBU ஜனவரி 20 மற்றும் 21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு சென்ற டிசம்பர் இறுதியில் அறைகூவல் விடுத்திருந்தது.
வங்கித்துறையில் 10 வது இருதரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டு, புதிய ஊதிய விகிதம் அறிவிக்கப்பட்டால்தான், கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அந்தப் புதிய ஊதிய விகிதம் அமல் செய்யப்படும். இதுதான் முறையாக இருந்து வருகிறது. எனவே வங்கித்துறையில் ஊதிய உயர்வை உடனடியாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கையும் கூட. அதை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் போராடும்போது, கிராம வங்கி ஊழியர்கள் `யாருக்கோ வந்தது` என வேடிக்கை பார்க்க முடியாது. மேலும் இந்த வேலை நிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும் இணைந்து நிற்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுக்கும். வேலை நிறுத்தத்திற்காக UFBU சார்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் strike noticeல், கிராம வங்கிகளில் அரசின் பங்குகளை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த வேலைநிறுத்தத்தில் கிராம வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் கலந்து கொள்வது என்னும் யோசனை எழுந்தது.
அதன் அடிப்படையில் கிராம வங்கிகளில் இருக்கும் அகில இந்திய சங்கங்கள் (United Forum of RRB unions) அனைத்தும் ஒன்றிணைந்து இந்த வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்வது என முடிவு செய்து இருக்கின்றன. AIRRBEA, NFRRBE, NFRRBO, AIRRBOF, AIGBEA, AIGBOA, AIGBWO, AIGBEC, AIGBOC, NCRRBE ஆகிய அனைத்துச் சங்கங்களும் கூட்டாக கையெழுத்திட்டு strike noticeஐ 3.1.2014 அன்று மத்திய அரசுக்கு கொடுத்து இருக்கின்றன. எனவே, AIRRBEA, NFRRBE, NFRRBO அகிய சங்கங்களின் உறுப்புச் சங்கங்களாய் இருக்கும் PGBEAவும், PGBOUவும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்கின்றன. நம் வங்கியில் செயல்பட்டு வரும் சகோதரத் தொழிற்சங்கங்களையும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுத்திருக்கிறோம்.
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி UFRRBUஅறைகூவலின்படி கீழ்க்கண்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என தீர்மானித்திருக்கிறோம்.
1) அனைத்து ஊழியர்களும், அலுவலர்களும் தனித்தனியாக கையெழுத்திட்டு பிரதம மந்திரி திரு.மன்மோகன் சிங் அவர்களுக்கும், நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கும் கடிதம் அனுப்புவது. (அதற்கான படிவங்கள் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டு இருக்கின்றன.)
2) 10.1.2014 அன்று மாலை பாண்டியன் கிராம வங்கி தலைமையலுவலகம் முன்பாக ஆர்ப்பட்டம் நடத்துவது.
3) இந்த வேலை நிறுத்தத்தையொட்டி நகர் மையங்களில், வணிக வங்கி ஊழியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம், பேரணிகளில் கலந்து கொள்வது.
4) 17.1.2014 அன்று கோரிக்கைகளை விளக்கி பேட்ஜ்கள் அணிவது. (அதற்கான பேட்ஜ்கள் கிளைகளுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.)
5) ஜனவரி 20,21 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது.
Probation period ல் இருக்கும் புதிதாக பணிக்குச் சேர்ந்த தோழர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள வேண்டாம். வேலை நிறுத்தம் தவிர மற்ற போரட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பங்குபெறலாம்.
தோழர்களே!
இது நமது ஊதிய உயர்வுக்கான போராட்டம்.
இது இந்தியாவின் வங்கிகளை பாதுகாக்கும் போராட்டம்.
எனவே நாம் இதில் கலந்துகொள்கிறோம்.
போராடாமல் இங்கு எதுவும் சாத்தியமில்லை.
எந்தக் கதவும் தட்டாமல் தானாகவே திறப்பதில்லை.
தேசம் முழுவதும் வங்கி ஊழியர்கள் மத்தியில் எழுந்திருக்கும் ஆவேசம் நம்மையும் பற்றிக்கொள்ளட்டும்.
வாருங்கள், ஒரு மகத்தான காரியத்தைச் செய்ய சித்தமாவோம்.
ஜனவரி 20, 21 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
0000
நமது இரு சங்கங்களும் இணைந்து அக்டோபர் மாதத்தில் இந்த நிர்வாகத்திடம் கொடுத்த 26 கோரிக்கைகளில், Staff Housing Loan மற்றும் பெருமாள் மலை கிளைக்கு Hill and Fuel Allowance ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இடைவிடாமல் தொடர்ந்த நமது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.
அதேவேளையில் இன்னும் ஏராளமான கோரிக்கைகள் நிறைவேறாமல் இருக்கின்றன என்பது கசப்பான உண்மையாய் நீடிக்கிறது. கோரிக்கைகள் மீது, நமது இரு சங்கங்களும் தனித்தனியாக நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன.
பொருளாதாரக் கோரிக்கைகள் குறித்து ஐ.ஓ.பிக்கு எழுதி இருப்பதாகவும், பதில் வரவில்லையென்றும் வழக்கமான பதிலையே சொல்கிறது நிர்வாகம். இப்படியே வருடக்கணக்கில் காலதாமதம் செய்வது, ஊழியர் நலனில் இந்த நிர்வாகம் கையாளும் மெத்தனப் போக்கு என்றே நாம் கருதுகிறோம்.
கிளைகளில் பணிநெருக்கடியை குறைக்கும் தொழில்நுட்ப வசதிகளை இந்த நிர்வாகம் செய்யத் தயாராக இல்லை. NREGS மற்றும் OAP அக்கவுண்ட்களை கையாளுவதற்கான smart card கொடுக்கப்படவே இல்லை. ஒன்றரை வருடங்களாக வரும், வரும் என சொல்லப்படும் ATM வசதி வரவில்லை. ஆனால் புதிதாக Money Transfer பிஸினஸ் துவங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இருக்கின்ற குழப்பங்களை இங்கு சரி செய்யாமல், புதிதாக நமக்கு சுமைகளை ஏற்றும் வேலைகள் மட்டும் மும்முரமாக நடக்கின்றன.
நமது வங்கியின் தொலைபேசி வசதியும், நெட்வொர்க் வசதியும் BSNL மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் திடுமென Aircel தொலைபேசிகள் பல கிளைகளில் வைக்கப்பட்டு இருக்கின்றன. கேட்டால் BSNL சரியில்லை என்றும், Aircelல் கிளைகளுக்குள் பேசிக்கொண்டால் free என்றும், 'PGB welcome' என தானியங்கிக் குரல் அழைக்கும் வசதி Aircelல் இருப்பதாகவும் விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. இந்த வசதிகள் BSNLலிலும் உண்டு. மெல்ல மெல்ல அனைத்துக் கிளைகளிலும் Aircel ஐ புகுத்திவிட்டு, BSNLலிருந்து வெளியேற இருப்பதாகவும் தெரிய வருகிறது. நாம் இதனை கடுமையாக ஆட்சேபிக்கிறோம். வேண்டுமானால் BSNL நெட்வொர்க்கிற்கு Aircel ஒரு substitute ஆக இருக்கட்டும். அதற்காக ஒரு பொதுத்துறை நிறுவனமான BSNLலிருந்து விலகுவது என்பது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கிறோம்.
Universal sampo என்னும் தனியார் நிறுவனத்தோடு போட்ட medi claim ஒப்பந்தப்படி, நமது தோழர்களுக்கு வரவேண்டிய தொகை மாதக்கணக்கில் நிலுவையில் இருக்கிறது. மேலும் மிகவும் குறைவாகவே reimburse செய்யப்படுகிறது. அந்த தனியார் நிறுவனத்தின் செயல்பாடு சரியில்லை என பலமுறை சொல்லிவிட்டோம். நிர்வாகம் அதிலிருந்து வெளியேறாமல் இழுத்தடிக்கிறது. இந்த வங்கியில் கம்ப்யூட்டர்கள், மானிட்டர்கள், ஜெனரேட்டர்கள் பழுதடைந்து கிடக்கின்றன. அதனைச் சரிசெய்யுங்கள் என்றால், சோம்பல் முறிக்கிறது நிர்வாகம். இவைகளில் காட்டாத அக்கறையும், வேகமும் ஏன் Aircelஐக் கொண்டு வருவதில் இருக்க வேண்டும் என்பது புதிராக இருக்கிறது. இதுகுறித்து ஆராய்வோம்.
ஒழுங்கு நடவடிக்கைகளில், நிர்வாகம் கையாளும் முறை இரக்கமற்றதாகவும், அதீத காலதாமதாகவும் இருக்கிறது. சஸ்பென்ஷன் செய்துவிட்டு வருடக் கணக்கில் சார்ஜ் ஷீட் கொடுக்காமல் இருப்பது, சார்க் ஷீட் கொடுத்து பதில் பெற்ற பிறகு அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்படியே வைத்திருப்பது, என்கொயரி முடிந்து findings கொடுத்த பிறகு வருடக்கணக்கில் அப்படியே கிடப்பில் போட்டு வைத்திருப்பது என்பதே AIVDயின் வாடிக்கையாய் இருக்கிறது. ஒவ்வொரு ஃபைலிலும் ஒரு சக மனிதனின் வாழ்க்கை இருப்பதையும், காலதாமதமாகிற ஒவ்வொரு நாளும் அந்த மனிதர்கள் சித்திரவதை அனுபவிப்பதையும் AIVD உணர மறுக்கிறது. பல தோழர்களுக்கு ஓய்வுகாலச் சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டு எதிர்காலமே நிலைகுலைந்து போயிருப்பது குறித்து துளியும் கவலையற்று இருக்கிறது AIVD.
கோரிக்கைகள் பல நிறைவேறவில்லை. நமது பணி நெருக்கடிகள் தீர்க்கப்படவில்லை. ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் பெரும் அராஜகம் தொடர்கிறது. நிர்வாகம் இவைகளில் கவனம் செலுத்தி
சரிசெய்ய முன்வர வேண்டும். இவைகளில் மேலும் காலதாமதம் ஆகுமானால் நாம் இவைகளை மேல்மட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்றும், போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும் எச்சரிக்கிறோம்.
0000
வங்கியின் வணிகம் திருப்திகரமாக இல்லை என்றும், Advances குறைந்துகொண்டு இருக்கிறது என்றும் நிர்வாகம் கவலைப்படுகிறது. நாமும் கவலைப்படுகிறோம். வங்கியின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்று விரும்புகிறோம். ஆனால் இங்கு ஒரு சில விஷயங்களை சொல்லியாக வேண்டியிருக்கிறது. இத்தகைய சரிவுக்கு இந்த வங்கியின் ஊழியர்கள், அலுவலர்கள் யாரும் பொறுப்பல்ல. முழுக்க முழுக்க நிர்வாகத்தின் தவறான முடிவுகளும், மோசமான அணுகுமுறையுமே காரணம்.
கரடு தட்டிப் போனவர்கள், புதிய சிந்தனைகள் வற்றிப் போனவர்கள், ஊழியர்களையும் அலுவலர்களையும் எதிரிகளாக மட்டுமே பார்க்கிறவர்கள்தாம் தலைமையலுவலகத்தின் முக்கியப் பொறுப்பில் தொடர்ந்து இருக்கிறார்கள். தலைமையலுவலகத்தை புனரமையுங்கள் என்று அனைத்துச் சங்கங்களும் குரல்கொடுத்தும் செவி சாய்க்காமல் போனதன் விளைவுதான் இது.
ஒழுங்கு நடவடிக்கைகள் என்ற பெயரில் அலுவலர்களை மிரட்டுவது, ஓய்வுகாலச் சலுகைகளில் கைவைப்பது தொடருமானால், மெல்ல மெல்ல அலுவலர்கள் `ஏன் கடன் கொடுக்க வேண்டும், கையைச் சுட்டுக்கொள்ள வேண்டும்` என்கிற இயல்பான மனநிலைக்கு வந்துவிடுவார்கள் என எச்சரித்தோம். அதைக் கேட்காமல் போனதன் விளைவுதான் இது.
இந்த வங்கியில் உழைக்கிறவர்கள் நலன்கள் புறக்கணிக்கப்படுவதால் ஊழியர்களும், அலுவலர்களும் உற்சாகம் இழந்து போயிருக்கிறார்கள், அதைச் சரி செய்யும் நடவடிக்கைகள் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. அதன் விளைவுதான் இது.
இவைகளில் ஒரு மாற்றம் இல்லாத பட்சத்தில், வங்கியின் நிலைமை கவலைக்குரியதாகவே இருக்கும். நிர்வாகம் தனது தவறுகளை சரிசெய்து, ஒரு மாற்றத்தைக் கொண்டு வரத் துணியுமானல், PGBEAவும், PGBOUவும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம் என்பதையும் தெளிவுபடுத்தி கொள்கிறோம்.
தோழமையுடன்
(J.மாதவராஜ்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU

22.3.13
PGBEA - PGBOU circular 3/2013 dt 21.3.2013
சுற்றறிக்கை: 3/2013 நாள்: 21.3.2013
அருமைத் தோழர்களே!
“மார்ச் 30 அகில இந்திய வேலை நிறுத்தம்”
திட்டமிட்டபடி நடக்கும் என AIRRBEA அறிவித்துள்ளது.
இந்த வேலை நிறுத்தத்தின் பிரதான கோரிக்கையாகவும், முதல் கோரிக்கையாகவும் பென்ஷன் முன்வைக்கப்பட்டு இருக்கிறது. கம்ப்யூட்டர் இன்கிரிமெண்ட் வழங்கப்பட வேண்டும், தற்காலிக பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பதும், கிராம வங்கிகளுக்கு போதிய manpower நிச்சயிக்கப்பட வேண்டும், மாநில அளவிலான கிராம வங்கிகள் உருவாக்கப்பட்டு அவைகளை இணைத்து தேசீய கிராமப்புற வங்கி உருவாக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன.
பதினைந்து வருட நெடிய போராட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நாம் நிற்கிறோம். அதுதான் இந்த வேலை நிறுத்தத்தின் முக்கியத்துவம்.
வஞ்சகமும், சூதும், துரோகமும் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக நாம் நமது குரலை கடுமையாக உயர்த்தியாக வேண்டிய தருணம் இது. அதுதான் இந்த வேலை நிறுத்தத்தின் அர்த்தம்.
மாபெரும் இயக்கங்களின் மூலமாகத்தான் வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தையும், சலுகைகளையும் பெறுகிற நிலைக்கு நாம் வந்தடைந்தோம். அதையும் முழுமையாக அமல்படுத்தாமல், மத்திய அரசு செய்த கொடுமைகளில் ஒன்றுதான், வணிக வங்கியில் 1993ல் அமல்படுத்தப்பட்ட பென்ஷன் திட்டத்தை கிராம வங்கி ஊழியர்களுக்கு வழங்காமல் மறுத்தது.
இந்த சூழ்ச்சியை எதிர்த்து நாம் வாயை மூடிக்கொண்டு இருக்கவில்லை. கத்தியின்றி, ரத்தமின்றி காரியங்களை சாதித்துவிடலாம் என சத்தம் போடாமல் இருக்கவில்லை. தட்டாமலேயே கதவுகள் திறந்துவிடும் என அமைதி காக்கவில்லை.. ‘இது அநியாயம், இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது” என ஆவேசத்துடன் எழுந்து நின்றோம். அன்றிலிருந்து தொடர்ந்து இயக்கங்கள், தர்ணாக்கள், டெல்லி பேரணிகள் , நீதிமன்றங்களில் வழக்குகள் என பென்ஷனை பெறுவதற்கு நாம் மேற்கொண்ட முயற்சிகள் உயிர்த்துடிப்பு கொண்டவர்களின் மூச்சுக்காற்றிலும், மூளையிலும் நிறைந்தே இருக்கும்.
தொடர்ந்து போராடி போராடியே நாம் கர்நாடகா, இராஜஸ்தான் உயர்நீதிமன்றங்களில் நமக்கு சாதகமான தீர்ப்புகளைப் பெற்றோம். இதன் மூலமே, கிராம வங்கி ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்குவதற்கு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தினோம். இதன் விளைவாகத்தான், இப்போதைய ஜனாதிபதியும், அப்போதைய நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி அவர்கள் 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 20ம் தேதி, ‘கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்குவற்கான' நிதியமைச்சக ஃபைலில் கையெழுத்து இட்ட வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடந்தது. லட்சக்கணக்கான கிராம வங்கி ஊழியர்கள், அலுவலர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது.
நிதியமைச்சகத்தின் முடிவைத் தொடர்ந்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்க நபார்டு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. லாபம் ஈட்டிய கிராம வங்கிகளுக்கு மட்டுமே பென்ஷன் வழங்கவேண்டும் என்கிற அரசின் முடிவுக்கு எதிரானதாக இராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தீர்ப்பு இருந்தது. நபார்டின் நிலைபாடும் அதுவாகவே இருந்தது. இந்த முரண்பாடுகளிடையே பென்ஷன் திட்டம் அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இருப்பினும், நபார்டின் பரிந்துரைகளையடுத்து, நிதியமைச்சகம் கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் ஒரு பென்ஷன் திட்டத்தை எழுத்துபூர்வமாக ஏறத்தாழ உருவாக்கி வைத்திருந்தது. அதன் சிறப்பம்சங்களை நாம் தோழர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
சாதகமான சூழல்கள் ஒருபக்கம் உருவாகிக்கொண்டு இருக்கும்போதே, நிதியமைச்சகம் இன்னொரு பக்கம் இந்த பென்ஷன் திட்டத்தை முறியடிக்கும் சதி வேலைகளிலும் ஈடுபட்டு வந்தது. இராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டை செய்தது. நிதியமைச்சகத்தின் இந்த முடிவு பச்சை துரோகமானது. கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் பென்ஷன் வழங்க ஒப்புக்கொண்டு, கையெழுத்திட்டு, அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்த பிறகு, முடிவுகளிலிருந்து பின் வாங்குவது என்பது நேர்மையற்ற செயல்.
இதனை எதிர்த்து AIRRBEA ஒருபுறம் நீதிமன்றங்களில் நியாயம் கிடைப்பதற்கான வழிகளில் ஈடுபட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். ஏப்ரல் 29ம் தேதி அது ஹியரிங்குக்கு வருகிறது. அதே வேளையில், இன்னொருபுறம் கிராம வங்கி ஊழியர்களையும், அலுவலர்களையும் திரட்டி இந்த அரசுக்கு மேலும் நிர்ப்பந்தம் கொடுப்பதற்கான இயக்கங்களையும் அறிவித்து நாடெங்கிலும் ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது AIRRBEA.
பிப்ரவரி 5ம் தேதி நமது தலைமை அலுவலகத்தின் முன்பாக ஒருநாள் தர்ணா நடத்தியிருக்கிறோம். அதையடுத்து, பிப்ரவரி 25ம் தேதி, மாநிலத் தலைநகர் சென்னையில் நபார்டு அலுவலகத்தின் முன்பு தர்ணா நடத்தியிருக்கிறோம். பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கிகளில் உள்ள AIRRBEAவின் இணைப்புச் சங்கங்களின் சார்பில் 80க்கும் மேற்பட்ட தோழர்கள் தர்ணாவில் கலந்து கொண்டனர். BEFI-TN தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நபார்டு எம்ப்ளாயிஸ் யூனியன் தோழர்கள் மதிய உணவு தந்து, ஆதரவு தெரிவித்தனர். எழுச்சி மிக்க நமது போராட்டங்களில் ஒன்றாக அந்த போராட்டம் அமைந்திருந்தது.
இப்போது, மார்ச் 30 வேலை நிறுத்தம் செய்ய இருக்கிறோம். தோழர்களே! இது நம் எதிர்காலத்தை நம்பிக்கை நிறைந்ததாகவும், வெளிச்சம் கொண்டதாகவும் அமைத்துக்கொள்வதற்காக நாம் நடத்துகிற போராட்டம்.
இந்த வங்கியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துவிட்டு, பணி நிறைவு பெறுகிற நாளில், ‘நாளை என்ன செய்யப் போகிறோம்' என்ற கேள்வி ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்து நிலைகுலைய வைப்பதை பார்க்கிறோம். 'பென்ஷன் வந்துவிடும்' என்ற கனவோடும், எதிர்பார்ப்போடும் இங்கு நாட்களை கடத்தும் அவர்களின் முகங்கள் நினைவுக்கு வருகின்றன. நாம் சும்மா இருந்தால் எதிர்காலம் வெறுமையும், விரக்தியும் கொண்டதாக மாறிவிடும்.
எனவே, இந்த வேலைநிறுத்ததில் பங்குகொள்கிற ஒவ்வொருவரும், இந்த இருளை விரட்டுகிற ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
யாருக்கோ வந்தது என்றோ, யாராவது போராடி வாங்கிக் கொடுப்பார்கள் என்றோ இருக்கும் மனநிலையை தயவுசெய்து மாற்றிக்கொள்ளுங்கள்.
சங்க வித்தியாசம் கொண்டு, இந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கிற செயலில் ஈடுபட வேண்டாம் என மாற்று சங்கத்தினரை வேண்டுகிறோம். அது நமக்கு நாமே தோண்டிக்கொள்கிற குழியாகும்.
நாம் நமக்காகவும், நம் அனைவருக்காகவும் போராடுகிறோம். நாளை நாம் வாங்கப் போகும் பென்ஷனில், அதன் மூலம் கிடைக்கிற உணவில், உடையில், மரியாதையில் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களும் நிச்சயம் இருக்கும். அதில் உங்கள் பெயரும் இருப்பதை உறுதி செய்யுங்கள். அதுதான் சுயமரியாதைக்கான அர்த்தமாகும்.
வாருங்கள், மார்ச் 30 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
தோழமையுடன்
(M.சோலைமாணிக்கம்) (T.சங்கரலிங்கம்)
பொதுச்செயலாளர் - PGBEA பொதுச்செயலாளர் - PGBOU
21.8.12
ஆகஸ்ட் 22, 23 வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
ஆகஸ்ட் 22, 23 தேதிகளில் நாடு முழுவதும் உள்ள வணிக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இந்த வேலைநிறுத்தத்தில் பங்குபெறாவிட்டாலும் தார்மீக ஆதரவு அளிப்பதென AIRRBEA முடிவு செய்திருக்கிறது. ஆனால், வணிக வங்கி ஊழியர்கள் அவர்களுக்காக மட்டும் போராடவில்லை. நமக்கும், நாட்டுக்கும் சேர்த்து போராடுகிற ஒரு மகத்தான காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். BEFIயின் தமிழ்மாநில பொதுச்செயலாளர் தோழர்.சி.பி.கிருஷ்ணன் அவர்கள் இந்த வேலைநிறுத்தம் குறித்து எழுதியிருப்பதைப் படித்தால் இந்த உண்மை நமக்குப் புரியும். வேலை நிறுத்தம் வெல்லட்டும் என வாழ்த்துவோம்!
வங்கி ஊழியர்களின் தேசபக்தப் போராட்டம்
- தோழர்.சி.பி.கிருஷ்ணன்
மத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங்களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத்துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங்களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங்களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும். தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாக மாறிவிடும். பொதுத்துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது.
இவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனியார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடியாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையாளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாகும்
பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவதால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந்தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப்பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதைத் தாங்கி நிற்கும்.
போட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு அனுமதி தேவையில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறுமானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அதன் விளைவாக ஏராளமான கிளை மூடலும், பொது மக்களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும்.
இந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது. பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதகமானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என்பது அவசியமாகிறது.
மக்களுக்கான கடன் மறுக்கப்படும்
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர்களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன்னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரிமைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக்கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழகத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து
தற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற்கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சதவீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இதனால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.
ஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள் (Non Banking Financial Companies) வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.
ரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்
Basel III விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகளை தனியார் வங்கிகளாக மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. Basel III விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத்தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதியில் இறங்கியுள்ளனர்.
அத்துடன்
* ஊழியர் விரோத - அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக!
* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக!
* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான முன்னேற்றத்தை ஏற்படுத்துக!
* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர்களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந்தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக!
* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக!
* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக!
* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக!
* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப்படைக்காதே!
* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக!
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.
தகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத்திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.
எனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.
10.6.12
முன்னாள் PGBOAவின் தலைவர் தோழர்.பாலசுப்பிரமணியம் அவர்களின் வாழ்த்து!
ஜூன் 8ம் தேதி வேலை நிறுத்த நாளன்று, நாம் மதுரையில் நடத்திய கருத்தரங்கில் நமது வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்களும் கலந்துகொண்டார். PGBOA வின் தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் இருந்து வழி நடத்தியவர் அவர். பென்ஷனுக்காக நாம் நடத்தும் வேலைநிறுத்தத்தை வாழ்த்திப் பேசுமாறு அவரை அழைத்தோம்.
மிகுந்த நெகிழ்ச்சியோடும், மகிழ்வோடும் அதை ஏற்றுக்கொண்டு பேசியவர், அந்தக் கருத்தரங்கில் பதிவு செய்த வார்த்தைகள் மிக முக்கியமானவை. அர்த்தமுள்ளவை. தான் மாற்றுச் சங்கத்தின் தலைவராக இருந்த போதும், AIRRBEAதான் கிராம வங்கி ஊழியர்களுக்கு வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தைப் பெற்றுத் தந்தது என்பதை உணர்ந்தவன் என்றார். அரசின் அத்தனை சதிகளையும் சமரசமற்றுப் போராடி முறியடித்தது என கடந்தகாலத்தின் உண்மைகளை கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட தோழர்கள் ஆர்ப்பரிக்க, நேர்மையாக எடுத்துரைத்தார்.
தொடர்ந்து, பென்ஷனையும் AIRRBEAதான் கிராம வங்கி ஊழியர்களுக்குப் பெற்றுத் தரப் போகிறது என்பதையும் குறிப்பிட்டார். வேலைநிறுத்தத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு தனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார். கருத்தரங்கின் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.
அதன் வீடியோக் காட்சி இங்கு:
9.6.12
JUNE 8: Strike and Seminar
ஜூன் 8 ம் தேதி நமது வேலைநிறுத்தம் மிகுந்த எழுச்சியோடும் உணர்வு பூர்மாகவும் நடந்திருக்கிறது. தங்கள் எதிர்காலத்திற்கான வெளிச்சத்தை நோக்கி, தேசம் முழுவதும் AIRRBEA அறைகூவலின் பேரில் நடந்து முடிந்திருக்கிற இந்த வேலைநிறுத்தத்தில், பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி, புதுவை பாரதியார் கிராம வங்கியில் உள்ள நமது இணைப்புச் சங்கங்கள் பங்கேற்றன.
பாண்டியன் கிராம வங்கியில் , இந்த வேலைநிறுத்த நாளன்று , பெரும்பாலான கிராம வங்கிகளில் வணிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 90 கிளைகளில் முழுமையாக பணிகள் நடைபெறவில்லை. பேருக்கு ஒரு அலுவலரையும், ஊழியரையும் வைத்து, கிளைகளை திறந்து, ஒப்புக்கு சில transaction செய்த கிளைகளின் எண்ணிக்கை எழுபத்தைந்துக்கு மேலிருக்கும்.
PGBEA, PGBOU வின் உறுப்பினர்களில் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஏறத்தாழ முழுமையாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.Red salutes to comrades! வாழ்வதற்கான அர்த்தத்தை அறிந்தவர்கள் நாம். வணிக வங்கிக்கு இணையான பென்ஷன் வேண்டும் என கிராம வங்கி ஊழியர்கள் அனைவருக்குமாக போராடிய, மகத்தான மனிதர்களாய் நமது தோழர்கள் நிமிர்ந்து நிற்கும் நேரமிது. எந்தக் காரணங்கள் இருந்தபோதும், இந்த வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாத மற்றவர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய நேரமிது!
இந்த வேலை நிறுத்த நிறுத்த நாளன்று, மதுரையில் நடந்த கருத்தரங்கில், திரளான தோழர்கள் பங்கேற்றனர். தோழர். விக்கிரமன் (சி.ஐ.டி.யூ), தோழர். சி.பி.கிருஷ்ணன் (BEFI), தோழர். கிரிஜா (AIIEA) கலந்து கருத்துரையாற்றினர். உற்சாகத்துடன் கலந்து கொண்ட நமது தோழர்களை இங்கே பாருங்கள். எவ்வளவு உற்சாகமும், பெருமையுமாய் அவர்கள் முகங்கள் இருக்கின்றன.
(வேலைநிறுத்தம், கருத்தரங்கம் குறித்த விரிவான செய்திகள் நாளை...)
வீடியோ
ஆல்பம்!
6.6.12
PGBEA - PGBOU circular 8/2012 dt 04.06.2012
சுற்றறிக்கை எண்: 8/2012
நாள்: 4.6.2012
அருமைத் தோழர்களே!
வணக்கம்.
மெஸஞ்சர்களிலிருந்து எழுத்தர்களுக்கான பதவி உயர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதிக அளவில் சீனியாரிட்டிக்கு மதிப்பளிக்கப்பட்டு இருப்பதை முதலில் வரவேற்கிறோம். PGBEA, PGBOU சங்கங்களின் நிலைபாட்டினை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது அவசியம். இந்தப் பதவி உயர்வுக்கு, கல்வித்தகுதியாக 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என நிர்வாகம் சொல்லியது. அதனை நாம் மட்டுமே இங்கு கடுமையாக ஆட்சேபித்தோம். நிர்வாகத்திடம் நமது எதிர்ப்பைத் தெரிவித்தோம். நமது உறுதியால், நிர்வாகத்தின் முடிவு சரி செய்யப்பட்டது. அதன் விளைவாக தோழர்கள் பயனடைந்திருகிறார்கள், பதவி உயர்வு பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜூன் 8- அகில இந்திய வேலை நிறுத்தம்!
நமது அகில இந்திய சங்கம் AIRRBEAவின் அறைகூவலை ஏற்று, (1) பென்ஷன் , (2) தேசீய கிராமப்புற வங்கி, (3) வங்கி நிர்வாகக்குழுவில் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு இடம், (4) அனைத்து தற்காலிக ஊழியர்களையும் நிரந்தரமாக்குதல், (5) ஸ்பான்ஸர் வங்கி டெபுடேஷன் முறையை ரத்து செய்தல் ஆகிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. நடந்து முடிந்த நமது மண்டலக் கூட்டங்களில் இதன் முக்கியத்துவம் விளக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாகவும், அழுத்தமாகவும் சொல்ல வேண்டுமானால், இந்த வேலை நிறுத்தம் நமது எதிர்கால வாழ்வுக்கான போராட்டம்.
‘சம வேலைக்கு சம ஊதியம்’ என உரிமைக்குரல் எழுப்பி, பெரும் போராட்டங்கள் நடத்தி, வணிக வங்கிக்கு இணையான ஊதியத்தை நாம் இப்போது பெற்றிருக்கிறோம். ஆனால் இன்னும் அந்தக் கோரிக்கை முழுமை பெறாமல் இருக்கிறது. கிராம வங்கி ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் இணையான பென்ஷன் இன்னும் வழங்கப்படவில்லை. தொடர்ந்து பணி ஓய்வு பெறுகிற மற்றும் பெற இருக்கிற நம் தோழர்களின் எதிர்காலத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பென்ஷன் இன்று பூதாகரமாக எழுந்து நிற்கிறது. நமது குழந்தைகள் கல்வி கற்று ஓரளவுக்கு நல்ல நிலைமையிலிருந்தாலும், முதுமைக்காலத்தில் நமது கால்களில் நாமே சுயமாய் நிற்கவும், ஒரு மரியாதையைப் பெற்றுதரவும் பென்ஷன் நம் அனைவருக்கும் வேண்டியதிருக்கிறது.
நமது அகில இந்திய சங்கம் இதனைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து சாத்தியமான அனைத்து வழிகளிலும் போராடி வருகிறது. முதலில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, பென்ஷன் நமது உரிமையென்பதை நிலைநாட்டியது. நமது இயக்கங்களின் மூலம் அரசுக்கு நெருக்கடி கொடுத்து, கிராம வங்கிகளில் பென்ஷனை அமல்படுத்தும் சாத்தியங்களை உருவாக்கியது. அரசியல் கட்சிகளின் ஆதரவு பெற்று, பாரளுமன்றத்தில் பென்ஷனுக்கான நமது குரலை ஒலிக்கச் செய்தது. இப்போது அரசின் காலதாமதத்தை முறியடித்து, கிராம வங்கி ஊழியர்களுக்கும் அலுவலர்களுக்கும் விரைவில் பென்ஷனை வழங்கும் உத்தரவைப் பிறப்பிக்க போராட்டக் களத்தில் இறங்கியுள்ளது. அதற்கான நாள்தான் ஜுன் 8!
வேலை நிறுத்தத்திற்கான போஸ்டர்களும், துண்டுப்பிரசுரங்களும் கிளைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. போஸ்டர்களை பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டி வையுங்கள். பிரசுரங்களை அவர்களிடம் விநியோகியுங்கள்.
தோழர்களே!
‘ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்தம்’ கிராம வங்கிகளில் பணிபுரிகிற ஒவ்வொரு ஊழியருக்கும், அலுவலருக்குமான போராட்டம். நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்னும் கனவுகள் நிரம்பிய வேலைநிறுத்தம். இந்த வேலைநிறுத்தத்தில் நமது தோழர்கள் அனைவரும் உறுதியுடனும், உற்சாகத்துடனும் பங்கு பெறுவதன் முலமே நமக்கு பென்ஷன் கிடைக்கும் நாள் நெருங்கி வரும்!
இந்த வேலை நிறுத்தத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே நமது விருப்பம். உள்நோக்கங்கள் அற்று, இந்த வேலை நிறுத்தத்தின் நியாயத்தையும், அவசியத்தையும் உணர்ந்த மாற்றுச் சங்கத் தோழர்கள், தங்கள் ஆதரவுக்கரங்களை நீட்ட வேண்டும் என விரும்புகிறோம். தங்கள் தலைமையின் முடிவினால், இந்த வேலை நிறுத்ததில் பங்கேற்க முடியாத நிலைமையில் இருந்தாலும், ‘நமக்காக அவர்கள் வேலைநிறுத்தம் செய்யும் போது வங்கிக்கிளைகளை நாம் திறக்கிறோமே’ என அவர்களில் பலருக்கு மனசாட்சி உறுத்த வருத்தங்கள் இருக்கும் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் வேலைநிறுத்தத்தை முறியடிக்க நிர்வாகத்தோடு அவர்கள் கைகோர்த்து, கூட்டு சேர்ந்து நிற்க மாட்டர்கள் எனவும் நம்புகிறோம்.
அதேவேளையில் எந்தவித வருத்தங்களுமில்லாமல், மெனக்கெட்டு கிளைகளை இயக்கி யாராவது மார்தட்டிக் கொள்வார்களேயானால், அவர்கள் தங்கள் சாப்பாட்டிலும், தங்கள் எதிர்காலத்திலும் தாங்களே மண்ணள்ளிப் போட்டுக் கொள்ளும் முட்டாள்கள் மட்டுமல்ல. பென்ஷன் என்னும் நமது வாழ்வாதாரத்தைப் பறிக்கிற, வரலாறு ஒருபோதும் மன்னிக்காத துரோகிகளும் ஆவார்கள்.
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதில் கடைப்பிடிக்க வேண்டியவைகளை நமது சங்கங்கள் முடிவு செய்து இருக்கின்றன. வேலை நிறுத்தத்தை முறையாகவும், முழுமையாகவும் நடத்துவதற்கே இந்த ஏற்பாடுகள்.
1) புதிதாக பணிக்குச் சேர்ந்து, Probationary perioid-ல் இருக்கும் தோழர்களுக்கு இந்த வேலைநிறுத்தத்தில் பங்கு பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
2) முன்னரே முறையாக தெரிவிக்கப்பட்டு, 5 மணிக்குள் கிளைகளுக்கு வந்து key registerல் கையெழுத்துப் போட்டு சாவி வாங்க யாராவது வந்தால் மட்டுமே Keyகளை ஒப்படையுங்கள். 5 மணிக்குப் பிறகோ, கிளைகளுக்கு வெளியேவோ சாவி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டால் மறுத்து விடுங்கள்.
3) வேலைநிறுத்தம் முடிந்து 9.6.2012 அன்று தங்கள் கிளைகளில் keyஐப் பெறும்போது, அலுவலர்கள் jewel packetகளை முறையாக count செய்து வாங்குங்கள். அதுபோல எழுத்தர்கள் cash check செய்து key வாங்குங்கள்.
4) வேலைநிறுத்தத்தில் பங்கு பெறும் ஊழியர்களும், அலுவலர்களும் தங்கள் paswordகளை மாற்றிக் கொள்ளுங்கள். அதை யாரிடமும் கொடுத்துவிட வேண்டாம்.
இவை யாவும் வங்கி விதிகளுக்குட்பட்டவைகளே! இதில் எந்த சமரசமும் வேண்டாம். இவைகளை மீறச் சொல்லி நெருக்கடிகளும், மிரட்டல்களும் மேலிருந்து வரலாம். உடனடியாக சங்கத் தலைமையை தொடர்பு கொள்ளுங்கள்.
தோழர்களே!
ஜுன் 8ம் தேதி வேலை நிறுத்ததை வெற்றிகரமாக்கி, அனைவரும் மதுரைக்கு வந்துவிடுங்கள். அன்று வடக்கு மாசி வீதியில், சொக்கநாதர் திருமண மண்டபத்தில் ‘கிராம வங்கிகளின் எதிர்காலம்’ குறித்து ஒருநாள் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. தோழர்கள் விக்கிரமன் (CITU), சி.பி.கிருஷ்ணன் (BEFI), கிரிஜா (AIIEA) மற்றும் நமது சங்கத்தலைவர்கள் பங்கேற்கிறார்கள். சமீபத்தில் பணி ஓய்வு பெற்ற தோழர்களை அழைத்து மரியாதை செய்யவும் இருக்கிறோம். அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். இந்தக் கருத்தரங்கத்தில் தோழர்கள் கலந்து கொள்ளும் எண்ணிக்கையும், எழுச்சியுமே வேலைநிறுத்தத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும்.
வாருங்கள், வாருங்கள் தோழர்களே!
நமக்கான வாழ்வில் ஒளியேற்றுவோம், வாருங்கள்!
தோழமையுடன்
5.8.11
இன்று அகில இந்திய வேலைநிறுத்தம்!
ஊதியம், பொருளாதார கோரிக்கைகளைத் தாண்டி, தேசம் காக்கவும், வங்கித் துறையை காக்கவும் இதோ நாடு முழுவதும் பலலட்சம் ஊழியர்கள் முன்வந்து இருக்கின்றனர். பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளுக்கு சாதகமாக மட்டுமே செயல்படுகிற மத்திய அரசுக்கு வங்கி ஊழியர்கள் விருத்துள்ள எச்சரிக்கைஇது.
*பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்தும்,
*பென்ஷன் நிதியையும் தனியார்கள் கையாள அனுமதிக்கிற திட்டத்தை எதிர்த்தும்,
*இரு தரப்பு ஒப்பந்தங்களை காலாவதியாக்கும் சதிகளை எதிர்த்தும்,
* வங்கிகள் மற்றும் வங்கி ஊழியர்களின் நலன்களை குழிதோண்டி புதைக்கிற கண்டேவால் கமிட்டி அறிக்கையினை எதிர்த்தும்
இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. ஒரு 20 அம்சக் கோரிக்கைகளுடன் அறைகூவல் விடப்பட்டு இருக்கும் இந்த வேலை நிறுத்தத்தில், கிராம வங்கி ஊழியர்களுக்கும் பென்ஷன் வழங்க வேண்டும் எனற கோரிக்கையும் இணைக்கப்பட்டுள்ளது.
நமது எதிர்காலமும், வங்கிகளின் எதிர்காலமும், இந்த தேசத்தின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது இந்த வேலை நிறுத்தத்தில். மகத்தான ஒரு காரியத்தில் நாம் ஈடுபடுகிறோம். வெற்றி நமதே!
26.6.11
25.6.2011 - Nellai zonal meeting
EA, OU சப் கமிட்டியில் முடிவெடுத்தபடி, 25.6.2011 அன்று திருநெல்வேலியில் வட்டாரக்கூட்டம் நடைபெற்றது. ஜூலை 7 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான இந்த விளக்கக் கூட்டத்தில் PGBOU பொதுச்செயலாலர் தோழர்.சங்கரலிங்கமும், PGBEA தலைவர் தோழர்.மாதவராஜூம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
உறுப்பினர் விவாதங்களில், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கு குறித்து தோழர்கள் பேசினர். கடுமையான வேலைப்பளுவிலும், ஆள் பற்றாக்குறையிலும் தினந்தோறும் தாங்கள் படும் அவலங்களை தோழர்கள் எடுத்துரைத்தனர். தொடர்ந்து பேசிய தோழர். மாதவராஜ், நிர்வாகம், நாம் முன்வைத்த computer increment, News Paper allowance, compliment போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றாத நிர்வாகம், மாறாக, ஊழியர்கள் படும் கஷ்டங்களை கொஞ்சம்கூட உணர மறுப்பதையும் எடுத்துரைத்தார். ‘எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு.” என்பதை சுட்டிக்காட்டினார்.

23.6.11
22.6.2011 - தலைமையலுவலகம் முன்பாக வாயிற்கூட்டம்!
திட்டமிட்டபடி, 22.6.2011 மாலை 6 மணிக்கு தலைமையலுவலகம் முன்பு நமது PGBEA, PGBOU சங்கங்களின் வாயிற்கூட்டம் நடந்தது.
ஜூலை 7 ம்தேதி, அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கான, இந்த வாயிற்கூட்டத்துக்கும், IR சர்க்குலர் போட்டு நிர்வாகம் ‘wage cut' என்று சட்ட விரோதமாக மிரட்டிய போதிலும், கடுமையான ஆள் பற்றாக்குறையும் பணிச்சுமையும் மிக்க நெருக்கடியிலும், 80க்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்தனர்.
PGBOU தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் கோஷங்கள் முழக்கி, தலைமையேற்று நடத்தினார். ஊழல் மிகுந்த காங்கிரஸ் அரசு வங்கித்துறையை தனியார் மயமாக்க துடிப்பதையும், அதற்கான சட்ட திருத்த மசோதக்களை கொண்டு வருவதையும் சுட்டிக்காட்டினார். வங்கித்துறையில் இனி, இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் ஊதிய உயர்வு இல்லாமல் செய்ய கண்டேவால் கமிட்டி அறிக்கையின் அம்சங்கள் இருப்பதை விளக்கி, ஆபத்துக்களை தெளிவுபடுத்தினார். PGBEA உதவிப்பொதுச்செயலாளர், வங்கித்துறையில் ஒரு புதிய தலைமுறை வர இருக்கும் சூழலில், அரசு, deunionise பண்ண முயற்சிப்பதை நாம் அனுமதிக்கக் கூடாது என அறைகூவல் விடுத்தார். PGBOU பொதுச்செயலாளர். தோழர்.சங்கரலிங்கம், நமது ஒற்றுமையாலும், உறுதியாலும் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் என்றார்.
இந்தியன் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் , காமராஜர் மாவட்டத் தலைவர்.தோழர்.மாரிக்கனி, அகில இந்திய அளவிலான வேலை நிறுத்தத்தின் 20 அம்சக் கோரிக்கைகளை விளக்கினார். இறுதியாக PGBEA தலைவர்.தோழர்.மாதவராஜ் நிறைவுரையாற்றினார். வங்கித்துறையில் 7 லட்சம் பணியிடங்கள் இருப்பதையும், அரசும், நிர்வாகங்களும் outsourcing மூலமாகவும், Business correspondents மூலமாகவும் அதனை சரிசெய்து, உழைப்புச்சுரண்டல் செய்ய முயற்சிப்பதை அம்பலப்படுத்தினார். working hours ஐ கூட்ட அரசு திட்டமிடுவதையும் சாடினார். பெற்ற உரிமைகளையும், சலுகைகளையும் நாம் இழந்து போகக்கூடாது , அதற்காகவே இந்த வேலைநிறுத்தம் என்பதை எடுத்துரைத்தார்.
கோஷங்கள் முழங்க, வாயிற்கூட்டம், எழுச்சியோடு.... நிறைவடைந்தது.
பார்க்க: புகைப்படங்கள்
ஜூலை 7- வேலை நிறுத்தம்!
ஜூன் 15 அன்று பாண்டியன் கிராம வங்கி ஊழியர்கள் சங்கம் (Pandyan Grama Bank Employees Association) மற்றும் பாண்டியன் கிராம வங்கி ஆபிஸர்ஸ் யூனியன் (Pandyan Grama Bank Officers Union) சப் கமிட்டி கூடியது.
ஜூலை 7ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தம் குறித்த விவாதிக்கப்பட்டது.
அகில இந்திய அளவில், AIBEA, NCBE, AIBOC, BEFI ஆகிய சங்கங்கள், வங்கித்துறையையும், வங்கி ஊழியர்களின் எதிர்காலத்தையும் பாதுகாக்க இந்த ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
நமது அகில இந்திய கிராமப்புற வங்கி ஊழியர்கள் சங்கம் (All India Regional Rural Bank Employees Association), தனக்குரிய சமூக தொலை நோக்குப் பார்வையுடன் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. எனவே நாமும் ஜூலை 7ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். நமது சங்க சுற்றறிக்கையில் தெளிவாக சொல்லியிருக்கிறோம்.
22.6.2011 அன்று தலைமையலுவலகம் முன்பாக இந்த வேலைநிறுத்தம் குறித்து மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
25.6.2011 அன்று திருநெல்வேலியிலும், 30.6.2011 அன்று மதுரையிலும் நமது இரு சங்கங்களின் சார்பில் உறுப்பினர்கள் சந்திப்பும் நடத்த இருக்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)