10.1.12

ராமநாதபுரம் மாவட்டக் கூட்டம் - 9.1.2012



நமது PGBEA, PGBOU சங்கங்களின் இராமநாதபுரம் வட்டாரக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. மொத்தம் கலந்துகொண்ட 35  தோழர்களில் 12 பேர் புதிதாக பணிக்குச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இந்தக் கூட்டத்தின் சிறப்பான விஷயம்.

PGBEAவின் பொருளாளர் தோழர்.சுந்தரவடிவேலு தலைமை தாங்கினார். PGBOUவின் தலைவர் தோழர்.போஸ் பாண்டியன் வட்டாரக் கூட்டத்தின் நோக்கம், நமது செயல்பாடுகள், நாம் செய்ய வேண்டியவைகளை விளக்கி முதலில் பேசினார்.  அகில இந்திய அளவில், amalgamation மற்றும் பென்ஷன் குறித்த தகவல்களை எடுத்துரைத்தார். 10.1.2012 அன்று டெல்லியில் Banking Secretary, ஸ்பான்ஸர் வங்கி உயரதிகாரிகளோடு amlagamation பற்றி பேச இருப்பதையும் அதில் CBS soultion  முக்கிய அஜெண்டாவாக இருப்பதையும் தெரிவித்தார். நமது பணியில் நேர்கிற நெருக்கடிகளையும், அதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் சுட்டிக் காட்டினார்.



தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த தோழர்கள் தங்களது சந்தேகங்களையும், பிரச்சினைகளையும் தெரிவித்தனர். பணி ஓய்வு நேரத்தில் நிர்வாகம் செய்கிற கெடுபிடிகள் குறித்து கடும் அதிருப்தி அவர்களது பேச்சில் வெளிப்பட்டது. Net connectivity  இல்லாமல் போனால், நேரம் காலமில்லாமல் வேலை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுவதையும், Recovery, satellite branch சென்றால் கூட நிர்வாகம் TA தர மறுப்பதையும், சர்க்குலர்கள் refer  செய்ய சிரமங்கள் ஏற்படுவதையும் பலரும் தெரிவித்தனர். நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தியும், விமர்சனங்களும் வெளிப்பட்டன.

அவைகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், எதிர்கொள்ள வேண்டிய நாட்களை விளக்கியும் பேசினார் PGBEAவின் தலைவர் தோழர் மாதவராஜ். தோழர்கள் தெரிவித்திருக்கும் பல பிரச்சினைகளை சங்கத் தலைமை கோரிக்கைகளாக முன்வைத்திருப்பதை சுட்டிக்காட்டி, நிர்வாகம் நமது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர முன்வராவிட்டால், நாம் போராட்டங்களில் இறங்க வேண்டி வரும் என தெளிவு படுத்தினார். இந்த நிர்வாகம் ஊழியர்களின் கோரிக்கைகளின் பால் காட்டும் அக்கறையை விட, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதில்தான் அதிக ஆர்வமாயிருக்கிறது என்பதை சொல்லத் தவறவில்லை. 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரத் தூக்கம் என்பதுதான் உழைக்கும் மக்களின் வாழ்வினை அர்த்தமுள்ளதாக்கும், ஆரோக்கியமுள்ளதாக்கும் என்பதை விளக்கினார். எனவே வங்கிக்காக நேரம் காலம் தெரியாமல் உழைக்காமல், உடல் பொருள் ஆவியை கொடுக்காமல், வாழ்வின் அழகான பகுதிகளை ரசிக்க முன்வருவோம் என்று சொன்னதை வந்திருந்த தோழர்கள் வரவேற்றனர். புதிய தோழர்களுக்கு, நாம் வங்கிப் பணிகளைச் சொல்லித் தருவதோடு நமது கடந்தகால வரலாறு, நாம் ஒவ்வொரு கோரிக்கைகளையும் வென்றெடுக்க நடத்திய வீரமிக்க போராட்டங்கள், நமது சங்கத்தின் பாரம்பரியம் எல்லாவற்றையும் கற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.



PGBOUவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர்.சண்முகம் வாழ்த்திப் பேசினார். மிகுந்த உற்சாகமாகவும், எழுச்சியாகவும் இராமநாதபுர வட்டாரக் கூட்டம் நடந்து முடிந்தது. வரும் 2012 எப்படியிருக்கும் என்பதற்கு, கட்டியம் கூறுவதாக இருந்தது.

2 comments:

  1. சிவகங்கை,காரைக்குடி வட்டாரக்கூட்டங்கள் எப்பொழுது?

    ReplyDelete
  2. தோழர் மெய்யப்பன்!

    பிப்ரவரியில் நடத்துவோம்.

    ReplyDelete

Comrades! Please share your views here!