5.8.13

PGB Cricket!

நம்மிடம் இருந்து பிறந்த சிறுபொறி, நேற்றைய தினத்தை பாண்டியன் கிராம வங்கியில் ஒரு பசுமையான நாளாக உருவாக்கியிருந்தது.

பாண்டியன் கிராம வங்கியில், ஒரு குதூகலமான, உற்சாகமான சூழலை உருவாக்குவதற்கு நாம் நிர்வாகத்திடம் சில யோசனைகள் சொன்னோம். அதில் ஒன்று, கிரிக்கெட் டீம்கள் ஆரம்பித்து, இங்கு பணிபுரிபவர்களை விளையாட வைப்பது. நமது சிந்தனையை உள்வாங்கிக்கொண்ட நிர்வாகம் சரியாக ஒரு வாரத்திற்குள் அதனை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.

கிரிக்கெட் விளையாட விரும்புகிறவர்கள் தங்கள் பெயரை பதியலாம் என அழைப்பு விடுக்கவும், ஏறத்தாழ 56 ஊழியர்களும், அலுவலர்களும் தங்கள் பெயர்களை பதிய, தலைமையலுவலகத்திற்கு வேகமும், ஆர்வமும் பற்றிக்கொண்டது

நிர்வாகம் உடனடியாக பணிகளைத் துவக்க, இதோ நேற்று திருநெல்வேலியில், பேட்டை இந்துக் கல்லூரியில், நான்கு டீம்கள் கலந்துகொண்ட இரண்டு 16/16 மேட்கள் நடந்து முடிந்திருக்கின்றன.

மைதானம் முழுவதும் காற்றோடும், இளம் வெயிலோடும் நம் தோழர்கள் நிறைந்திருந்தனர்.

2008க்குப் பிறகு இந்த வங்கியில் பணிக்குச் சேர்ந்த இளைஞர்களின் கொண்டாட்டம் இது. இவர்களின் துடிப்பு சீனியர்களையும் பற்றிக்கொண்டது.

நேற்றைய தினம், ’உலக நண்பர்கள் தினம்’. நட்பை கிரிக்கெட்டின் மூலம் பரிமாறிக்கொண்டார்கள்.

இதுபோன்ற நிகழ்வுகள் நெருக்கத்தையும், தோழமையையும் மேலும் வளர்ப்பதாகவே நாம் கருதுகிறோம்.

பங்கு கொண்ட அனைவரையும், பார்வையாளர்களையும் PGBEAவும், PGBOUவும் வாழ்த்துகின்றன. பாராட்டுகின்றன.

கிரிக்கெட் விளையாட்டின் சில காட்சிகள்:










































3 comments:

  1. வாழ்த்துக்கள் அனைவருக்குமாய்/

    ReplyDelete
  2. its a remarkable comeback by white team after blue team scoring 50+ runs in just 3 overs. but failed to win a match. a nail biting game. looks like india vs pak match. Congratulations to all players who participated in this first ever PGB cricket match. Well batting arun anna!!

    ReplyDelete

Comrades! Please share your views here!